புத்தளப் பிரதேசம் வாழ் முஸ்லிம்களின் பண்பாட்டு கலாசார நிகழ்வுகளில் குறிப்பிட்டுக் கூறத்தக்க ஒன்று ‘ஈத் பெருநாள்’.

எமது பிரதேசத்தில் அருகி வரும் எமக்கே உரிய முன்மாதிரிமிக்க பண்பாட்டு கலாசார அம்சங்களை இலத்திரணியல் பதிவுகளாக பாதுகாப்பதுடன், பாரம்பரிய செறிவுமிக்க புத்தளத்தின் நாகரிகத்தை முழு உலகுக்கும் எடுத்துக்காட்டி எமது பிரதேசத்துக்கு பெருமை சேர்க்கும் நோக்கத்தில் இப் புகைப்படப் போட்டி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
உங்கள் கமராக் கண்களின் வழியே ‘க்ளிக்’ செய்த ஈத் பெருநாள் தினத்தின் நிகழ்வுகளை ‘புத்தளம் ஒன்லைன்’ குடும்பத்துடன் பகிர்ந்து கொண்டு, அவற்றை உலகறியச் செய்வதுடன் சிறந்த புகைப்படங்களுக்கு பெறுமதியான பரிசுகளையும் வெல்லுங்கள்.
தெரிவுசெய்யப்படும் முதல் மூன்று புகைப்படங்களுக்கு ‘புத்தளம் ஒன்லைன்’ ஏற்பாடு செய்யும் பொது நிகழ்வொன்றில் பரிசில்கள் வழங்கிவைக்கப்படும்.
போட்டி விதிமுறைகள்:
- பெருநாளைக்கு ஆயத்தமாகும் புத்தளம், பெருநாள் தினம், மைதான தொழுகை, பெருநாள் விளையாட்டுப் போட்டிகள் போன்றஇன்னும்பலஈத்நிகழ்வுகளைகருப்பொருளாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
- இஸ்லாமிய சன்மார்க்க ஒழுக்க நெறிகளுக்கு முரண் அல்லாத நிகழ்வுகளாக இருத்தல் வேண்டும்.
- புகைப்படங்கள் டிஜிட்டல் 640 x 480 pixel அளவு கொண்டதாக இருத்தல் வேண்டும் (தேவையேற்படின் ‘பிரிண்ட்’ போடுவதற்காக மூல (original) புகைப்படத்தை பாதுகாப்பாக வைக்கவும்).
- ஒருவர் ஐந்து (05) புகைப்படங்களை மாத்திரம் அனுப்பி வைக்க முடியும்.
- ஆண், பெண் இருபாலாரும் வயது வித்தியாசமின்றி இதில் கலந்து கொள்ளலாம்.
- புகைப்படம் பிடித்தவரின் பெயர், தபால் (வீட்டு) முகவரி, பால், தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம், மாணவராயின் கற்கும் பாடசாலை/ மத்ரஸா/ உயர் கல்வி நிலையத்தை தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்பிவைக்க வேண்டும்.
(தனது உண்மைப் பெயரை வெளியிட விரும்பாதோர் ‘புனைப்பெயர்’ (Nick Name) உபயோகிக்கலாம், எனினும் உண்மை பெயர் ‘புத்தளம் ஒன்லைன்’ நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தல் வேண்டும்). - புகைப்படங்கள் மின்னஞ்சல் மூலம் attachment file வடிவத்தில் இணைத்து அனுப்பிவைக்க வேண்டும்.
- முடிவு திகதிக்கு பிந்திக் கிடைக்கும் புகைப்படங்கள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.
- ‘புத்தளம் ஒன்லைன்’ நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது.
- கிடைக்கப்பெறும் புகைப்படங்கள் அனைத்துக்குமான காப்புரிமையை (Copyright) ‘புத்தளம் ஒன்லைன்’ கொண்டிருக்கும் என்பதுடன், அவற்றை பிரசுரிப்பதற்கு அல்லது எவ்வகையிலும் பயன்படுத்துவதற்கான உரிமையையும் கொண்டுள்ளது.
தெறிவு முறை :
‘புத்தளம் ஒன்லைன்’ நிர்வாகத்தினால் நியமிக்கப்படும் புகைப்படவியல் துறைசார்ந்த மூவரைக்கொண்ட நடுவர் குழுவினால் பரிசுக்குரிய புகைப்படங்கள் தெரிவு செய்யப்படும். நடுவர்களின் முடிவே இறுதியானது.
முடிவு திகதி : 2012. 08.31 வெள்ளிக்கிழமை - இரவு 10.00 மணி
அனுப்ப வேண்டிய முகவரி: puttalamonline@yahoo.com
மேலதிக விபரங்களுக்கு : 071 4249815 & 077 7484912


August 18, 2012 at 2:10 am
அன்புள்ள நிருவாகத்தினருக்கு,
உங்களின் சிறிய தவறை சுட்டிக்காட போய் நான் பெரிய தவறை செய்துள்ளேன்.
“நோன்பு பெருநாள் ” என்று அறபு மொழியில் சொல்வதில். ஈகைத் திரு நாள் , அதாவது ஈதுல் பித்ர் என்பதே அது என்பதை தாழ்மையுடன் அறியத்தருகிறேன். முன்னைய பதிவின் தவறுக்கு வருந்துகிறேன்.
August 18, 2012 at 12:08 pm
நன்றி, நீங்கள் கூறுவது இலக்கண வழக்கில் சரியானதே எனினும் மொழி வழக்கே இங்கு கையாடப்பட்டுள்ளது.
August 17, 2012 at 11:32 pm
அன்புள்ள ஓன்லைன் நிருவாகத்திற்கு,
‘ஈத் பெருநாள்’ என்ற சொற்களில் “ஈத்” என்ற அறபு சொல் ” பெருநாள்” என்ற தமிழ் சொல்லுக்கு ஒத்த கருத்துடையது. ஆகவே அது “பெருநாள் பெருநாள்” என்பதாக எனக்குப் படுகிறது. ஒன்றில் “ஈத்” என்று கூறுங்கள். அல்லது பெருநாள் என்று தனித்துக் கூறுங்கள். அல்லது “நோன்பு பெருநாள்” “ஈதுல் அத்ஹா” (சரியான உச்சரிப்போ தெரியாது) என்று கூறுங்கள்.