பாசத்துடன் அரவணைத்து;
அன்பாக ஒட்டியுறவாடும்;
என்னருமைப் புத்தளத்தின்,
உப்புதரித்த வெண்மணலிலே…
முடிசூடா மன்னவன் காத்து நிற்கின்றான்!!!
நானும் அறிவேன்;
உன் காத்திருப்புக்கள் எதுவென…
சத்தியம் சொல்வேன்;
உலகுக்கே சொல்வேன்,
உரிமையோடு…
உனக்கருளிய உதிப்பினில்,
பக்குவமாய் காரியமாற்றி;
அணுகிவிட்ட வெற்றிகள் பலதுக்கு,
படைத்தவனின் புகழ் பாடுகின்றாய்…
அவன் ஏற்பினை வேண்டுகின்றாய்…
அல்ஹம்துலில்லாஹ்!!!
மக்களின் மாளிகையான,
உன் இதயத்துக்குள்ளே; தினமும்,
இன்பக் கூச்சல்கள் ஒலிக்கும்…
“Scotland Yard” கூட தேடியலைந்த ரகசியம்!!!
அதையும் நான் அறிவேன்…
மனதோடு மனம் பேசும் வித்தையை
நீ எனக்கு கற்றுத்தந்த போது,
“உனக்கும் எனக்கும் இருக்கும் ஒற்றுமை”;
எதுவென புரிந்து கொண்டேன்…
“மக்கள் களிப்பில் உன்னத திருப்தி”
உணர்வால் உணர்ந்த உணர்வாகும்;
அதுவே உந்தன் “இளமை ரகசியமாகும்”,
உன்முகமும் அதனை பிரதிபலிக்கும்!!!
இறைமை கொண்ட இரட்சகன்
நாட்டம் கொள்வானாக….
ஆலமரமாய் வளரும்;
மக்களுக்கான ஆட்சியினை,
ஆள வந்த உன் பக்கங்களுக்கு,
படைத்தவனே கட்டளையிடட்டும்…
நீண்டு வளரும் விழுதுகள் நாங்கள்;
தாங்கி நிற்குமாறு…
உன் சிந்தை எங்கே போகுதோ???
கூடவே வருவோம்,
எம்மையும் அழைத்துச் செல்…
பூத்துகுலுங்கும் புத்தளம்,
வடமேற்கில் உதித்தெழும்ப வேண்டும்;
உன் கற்பனையில் உருவாகும் திட்டங்களில்,
நாமும் நலவை காணவேண்டும்;
கூடவே வருவோம்,
எம்மையும் அழைத்துச் செல்…
“உப்பும், தேங்காயும் யப்பானுக்கு ஏற்றுமதி!!!”
“எண்ணைக் கப்பல் வருகைக்காக தவிக்கும்,
“Dutch Bay” பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலை!!!”
என்றே புதினச் செய்தி வழங்கும்,
பிராந்திய தொலைகாட்சி சேவை வேண்டும்!!!
இவற்றை பார்த்துக் கொண்டே,
ஹாஜிகளை தாங்கிய விமானங்கள்,
புத்தள மாநகரை வட்டமடித்து;
பாலவி விமான நிலையத்தில்,
தரையிறங்க வேண்டும்!!!
வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும்,
இவர்களை கூட்டிசெல்ல வந்தவர்கள்;
நம்மூரின் உணவு நிலையங்களில்,
சாரி சாரியாக கூட வேண்டும்!!!
வியாபாரம் வளர்ந்துவிட,
செல்வமும் மிகையாகப் பெருகி;
மூவேளையும் வயிறாரா உண்டுவிட்டு;
அவர்களது பிரார்த்தனைகளில்,
உன்னையும் சேர்க்க வேண்டும்!!!
உன் கனவுகள் பெரியது!!!
உன்னோடு நானும் காண்கின்றேன்,
உண்மை வடிவம் கொள்ள,
உயிரால் மனமுணர்கின்றேன்…
Mohamed Iflal
Event Management (undergrad)
Faculty of Communication, Media & Broadcasting,
Limkokwing University Creative Technology – Malaysia.
Share the post "கவிதை – முழு நேரத் தலைவனுக்கே, பணியாற்றத் துடிக்கின்றேன்!!!"
கவிதை காட்டிய முகங்கள்
கடல் கடந்து ஏன் சென்றாய், கல்வி கற்றி டவா? கன்னாபின்னா என்று கதை கவிதை கிறுக்கிடவா?
வேண்டாமே உன் waste டாகும் telent. கவலையில் சாஹுல் கலங்குகிறார்.
“பீபீ” யாய் முக்காடு போர்த்திட வெயிலின் கடுமை கொடுமையாகி, கவி ரசிக்க மனம் சலித்து போகும் சபுரா.
ஒட்டியிருந்து பெற்ற இன்பம் உனது, பக்கத்தில் இருந்து பட்ட துன்பம் எனது புரியமா உனக்கு காட்டமாய் கேட்கிறார் மகள்.
“,…வெற்றிகள் பத்துக்கும் படைத்தவன் புகழ் பாடுகிறாய், அவன் ஏற்பினை வேண்டுகிறாய்.” என்ற கவி வரிகள் கண்ணில் படாததால் தெய்வ குற்றம் செய்து விட்டாய் சொல்லிவிடு ” அஸ்த்தபருல்லா” ஜித்தாவில் இருந்து துள்ளி குதிக்கிறார் வஹாப்.
இத்தனையும் போதாது; உனக்கு கவிதை வருமா, கதை எழுதத்தான் தெரியுமா? குத்தும் கணையுடன் புவாது.
அத்தனை பேரும் மறந்திட்டார் நாம் அரசியல் அனாதைகள் என்பதை.
தத்து எடுத்து சிலகாலம், பராமரித்து சட்டப்படி உரிமைகோர சந்தர்ப்பம் கேட்க; பொறு உனக்கு படிபிக்கிறோம் பாடம் என புள்ளடி போட மறுத்தார் வெட்கம் இல்லாமல்.
அரசியல் பிச்சைக்காராகமுன் ஒரு தலைமை வேண்டும். தலைவன் வேண்டாமே நமக்கு.
அல்கைடாவுக்கு ஒரு தலைவன் அதனால் அகிலமும் எம்மை முறைத்துப் பார்க்கிறது.
முத்தமிழ் கொண்டவருக்கும் ஒரு தலைவன் அவனால் முற்றும் துறந்து விம்மி அழுகிறது பக்கத்தில் ஒரு இனம் .
நாளை கிழியப்போகும் கிழக்கிலே நாழு தலைவர்கள், தாங்காது நம் சமூகம். இனி வேண்டாம் தலைவர்கள் . ஆனால் வேண்டும் ஒரு தலைமை.
நமக்கு ஒன்றென்றால் தகப்பன் போல் தட்டிக் கேட்கும் ஒரு தலைமை,
நமக்கு குறை என்றால் அரவணைக்கும் தாய் போன்ற தலைமை.
நாம் குற்றங் கண்டால் தலை பணியும் தலைமை,
நமக்கிடையே பிரித்து பார்க்காத தலைமை,
பிரிந்திருப்போரை கூடிச் சேர்க்கும் தலைமை,
தூர நோக்கு கொண்ட தலைமை,
விலை போகா தலைமை,
விட்டுக் கொடுக்கா தலைமை,
வாழ்வோ சாவோ ஒன்றாய் செல்லத் துணியும் தலைமை வேண்டும்.
இப்லால் சொல்லிவிட்டான்.
இது உங்களின் சந்தர்ப்பம்,
கவி காட்டிய முகங்களே எங்கே உங்கள் தலைமை? ஓடி ஒழிந்து விட்டனரா? இன்னும் பிறக்கவே இல்லையா? நாம் பிச்சைக் காரராவது மட்டும் திண்ணம்.
பேரீச்சை பார்த்த பிச்சைக் காரனுக்கு, ” மாஷா அல்லாஹ்” என்ற மலைப்புக்குள் புதைத்த ஆயிரம் பகற்கனவுகள் ஏன் ?
Jezakkallahu Khaihr , nice one sir!!!
Once again my kind and clear request to Br.Iflal is “please do not follow the dirty politicians”. Hope you got my message!
“Indeed the people of Truth and the Sunnah do not follow anyone [unconditionally] except the messenger of Allaah SAW, the one who does not speak from his desires – it is only revelation revealed to him.”
[by Shaykh Ibn Taymiyyah, Majmoo’ah al-Fataawaa, vol 3, page 216, Daar Ibn Hazm Print, Trans: Aboo ‘Abdis-Salaam]
Rise as a leader in the way of Quran and Sunnah. We have seen only dirty politics most of the time in Puttalam. We don’t want a young good talent to be wasted by following the rubbish!!
Choice is yours bro…..
well said, we are giving a pen in your hand not a gun!!
தம்பி புத்தளம் மஹால்,
(செல்லமா) யாண்டா என்னை இழுத்து வய்க்கிறாய் ?
நம்ம இருவருடைய நோகமும் தம்பி இப்லாலை வழிக்கு வர வைப்பது.
இப்ப தம்பி வழிக்கி வந்துட்டு. இனி ஒழுங்கா படிக்கும், நேரத்தை வீணாக்காது.
தம்பிக்கு கவிதைக்கும் கதைக்கும் வித்தியாசம் விளங்கும், இதோடு விஷத்தை விட்டிடுவோம்.
ஹம்து லில்லாஹ் !!!
Iflal, Concentrate in your studies to become a great leader and guide our future generation. Iflal (in my observation) you are born with the leadership quality, which should be developed, Insha Allah, one day you will be a great leader.Truly, I am one of your fans and well-wishers.
Jezakallahu Khair
சகோதரா, எரிச்சல் எனக்கில்லை; அது சபூரா பீவிக்கு! கற்பனையென ஒத்துக்கொண்டதுக்கு நன்றி. கொடுத்தும் சோதிப்பான்; எடுத்தும் சோதிப்பான். இரண்டையும் அனுபவித்தவர் உங்கள் தலைவர். கட்டளையிட்டு பழக்கப்பட்டவர்; தலை குனிந்து கேட்கும் பொறுமை உள்ளவரை யாரும் தோளோடு தோள் நின்று தோழமை பாராட்டலாம். உங்களுக்கென ஏதும் அறிவினில் உதிக்க நீங்கள் இடம் கொடாதவரை யாவும் இனிப்பே. சீ சீ இந்த பழம் புளிககுமென உணர்ந்த ரகம் நாம். Good Luck !
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
இங்கே பலரது எதிர்மறையான கருத்துக்களையும் விமர்சங்களையும் அவதானிக்கின்றேன். மேலுள்ள ஆக்கம் குறிப்பிடும் நபருக்காகவா அல்லது உரைக்கப்பட்டிருக்கும் உண்மைகளுக்காகவா
அல்லது நன்றித் தெரிவித்து, எனது கற்பனைகளை இணைத்தமைகாகவா இத்தனை எதிர்ப்புகள் என்பதை நான் அறியேன். அறிந்துக் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை.
இனியும் விதண்டா வாதமும், பகுப்பறிவு வர்க்க வேறுபாடுமின்றி நமது தலைமத்துவங்களை பலப்படுத்தும் நோக்கிலே என்னுடைய முயற்சிகள் அமையப்பெற்றுள்ளது.
நன்மை பயக்கும் நலத்திட்டங்களும் , உயிரோட்டமான நிர்வாகமும், தொலை நோக்கான அபிவிருத்தியும், ஊரைக் காக்கும் மனதினையும் கொண்ட தலைமைத்துவத்தை பலப்படுத்தி, சமூகத்தின் உதிப்பை நோக்கிய பயணத்தில் எம்மோடு இணையுமாறு அனைவரையும் அன்பாக அழைக்கின்றேன்.
ஒற்றுமை மனப்பாங்கோடு அனைவரும் ஒன்றுப்பட்டு, சமகாலத்தில் நிலவுகின்ற, இன்னும் எம்மை எதிர்நோக்கும் பேரினவாத அடாவடித்தங்களில் இருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ள இன்றே முனைவோம்.
ஜெசால்க்கல்லாஹு கைஹ்ர்
Narrated Abu Bakr(rz)
A man praised another man in front of the Prophet . The Prophet said to him, “Woe to you, you have cut off your companion’s neck, you have cut off your companion’s neck,” repeating it several times and then added, “Whoever amongst you has to praise his brother should say, ‘I think that he is so and so, and Allah knows exactly the truth, and I do not confirm anybody’s good conduct before Allah, but I think him so and so,’ if he really knows what he says about him.”
Narrated Abu Musa Al Ashari
The Prophet heard someone praising another and exaggerating in his praise. The Prophet said, “You have ruined or cut the man’s back (by praising him so much).”
Narrated Miqdad ibn Amr
Allah’s Apostle (peace be upon him) commanded us that we should throw dust upon the faces of those who shower too much praise.
– there are also narrations about sahaba who threw dust when they saw some one praising
மனிதனுக்கு நன்றி கூறாதவன், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டன் என்று இஸ்லாம் போதிப்பதை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.
மேலே எனது கவிதையில் (கதையில்) நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஹதீஸ்களில் கூறப்படுவதான தவறினை நான் இழைத்திருந்தால், தயவுசெய்து எனக்கு சுட்டிக்காட்டவும்.
எங்களுடைய தவறுகளை அல்லாஹ்தான் மன்னிக்க போதுமானவான் .
In one word ” Asthaufirullahul Aleem”. Iflal, I am surprised to see the lyrics, being superfluous. What makes you to write it? Are you out of your mind? Your appreciation has gone to the extent of somewhat worshiping, which is demonstrated in your way of writing? There is a limit in appreciation when someone is appreciated or identified for remarkable achievements. I do hope you would mind the words and way of composition. In my feeling, the way of writing which is emerging from some sort of hallucination.
Once more ” Asthaufirullahul Aleem”.
அல்ஹம்துலில்லாஹ், நான் அல்லாஹ்வுக்கே சிரம் சாய்ப்பவனாக இருக்கின்றேன். என்னிலையிலும் நான் அவனுக்கு நிகராக, மனித பலத்தினை அதிகப்படுத்தியது கிடையாது.
அல்லாஹ்தான், யாவற்றையும் அறிந்தவன். அவனே தீர்ப்பு வழங்குபவன். உங்கள் கரிசனைக்கு நன்றிகள், அல்லா எனக்கும் உங்களுக்கம் நேர்வழியை காட்டுவானாக.
ஆமாம்,
இப்பொழுது புத்தளத்தில் அடிக்கிற வெயிலிலை இது வேறை எரிச்சலா இருக்குது.
உண்மைதான், ஊரின் நலன் காக்கும் நோக்கில் நடக்கும் அபிவிருத்திகள், நிகழ்ச்சிகள், அது தொடர்பிலான முயற்சிகளை நம்மில் சிலருக்கு கீர்டநித்துக் கொள்வது கடினம். அத்தோடு வெயில் வேற கொளுத்துது, இனி சொல்லவா வேண்டும்?
தம்பி நீங்கள் மலேசியா போனதிற்கு பதிலா தமிழ் நாட்டிலே அழகப்பா பல்கலை கலஹத்தில் தமிழ் ஸ்பெஷல் பண்ணி இருக்கலாம். கவிதை என்ற்றால் கதை சொல்வது அல்ல. உங்களுடைய இரண்டு கதைகளும் நல்லா இருக்குது. அல்லா ஒருவனுக்கெய் புகல்!!!
திறன்களை தந்து சோபிக்க செய்யும் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்… கேட்க சந்தோசம், தமிழில் கதையாவது எழுத முடியும் என்ற நம்பிக்கையை என்னில் விதைத்தமைக்கு நன்றிகள். ஜெசக்கல்லாஹு கைஹ்ர்.
இப்லால், தாங்க முடியவில்லை.
எரிச்சலாக இருக்கிறதோ???