Puttalam Online
international-affairs

உலக சமாதானத் தினக் கொண்டாட்டம் : செம்டம்பர் 21

  • 20 September 2012
  • 757 views

(S.I.M.Akram)

முழு உலக சமூகமும் சமாதானம் இணக்கப்பாடு தொடர்பான முன்மாதிரியை எடுத்துக்காட்டுவதற்காக ஐக்கிய நாடுகளின் சபையினால் ஒவ்வொரு வருடமும் செம்டம்பர் 21 ஆந் திகதியை உலக சமாதானத் தினமாகப் பெயரிட்டுள்ளது.

ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஐக்கிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்களும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகளும் இவ்வருட உலக சமாதானத் தினத்தை “நிலையான எதிர்காலத்திற்கு நிலையான சமாதானம்” என்ற தொனிப் பொருளில் கொண்டாடுவதற்குத் தீர்மானித்தனர்.

எனவே, கல்வி அமைச்சும் உலக சமாதானத் தினத்தை பாடசாலை மட்டத்தில் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ளது. பாடசாலையில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கின்ற நிகழ்ச்சித் திட்டங்கள் கீழே விபரிக்கப்பட்டுள்ளன.

எனவே, இது தொடர்பாக சகல பாடசாலை அதிபர்களையும் அறிவுறுத்தி உலக சமாதானத் தினத்தை சிறப்பாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் மேலதி செயலாளர் திரு. ஏச்.யூ.பிரேமதிலக வேண்டிக்கொள்கின்றார்.

உலக சமாதானத் தின நிகழ்ச்சித் திட்டங்கள் மூன்று படி முறைகளில் நடைமுறைப்படுத்தப்படும்

1.    உலக சமாதானத் தினத் தொனிப்பொருளைக் குறிப்பிட்டு ஒரு பதாகையை காட்சிப்படுத்துதல்.
2.    பாடசாலை மாணவர்களால் மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் இணக்கப்பாட்டு உறுதி மொழியை வாசித்தல்.
3.    2012 – 2017 வரை 100 மில்லியன் மரக் கன்றுகளை பயிரிடும் திட்டத்திற்கமைய அனைத்து பாடசாலைகளிலும் இத்தினத்தில் மர நடுகை திட்டத்தை ஆரம்பித்தல்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All