Puttalam Online
international-affairs

இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்)வின் பார்வையில் அல்-அக்ஸா

  • 13 February 2013
  • 1,428 views

 மர்லின் மரிக்கார்

இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய அறிவியல் மேம்பாட்டுக்கு அயராது உழைத்த இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களின் 64வது நினைவு தினத்தின் நிமித்தம் இன்று (12.02.2013) இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

‘பலஸ்தீன், மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கொண்டி ருக்கும் புனித பூமி. அது சர்வ வல்லமை படைத்த அல்லாஹுத்த ஆலாவினால் அருள் பாலிக்கப்பட்டிருக்கும் நிலம். அதில் ஒரு அங்குலத்தையேனும் எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. இது இஸ்லாமிய பூமியின் இருதயம்.’

இந்த வைரம் மிக்க வரிகளின் சொந்தக்காரர் வேறு யாருமல்ல. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இஸ்லாமிய அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்கென அயராது உழைத்த இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களேயாவார்.

இஸ்லாமிய அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்காக அவர் தன் சிந்தனை, பேச்சு, எழுத்து மற்றும் செயற்பாடு என்பவற்றை உச்ச அளவில் பயன்படுத்தி இருக்கின்றார். அதனால் உலகளாவிய இஸ்லாமிய அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டின் தந்தையாக அவர் கருதப்படுகின்றார்.

எகிப்து நாட்டில் ஆழ்ந்த இஸ்லாமிய பற்றுமிக்க குடும்பமொன்றில் 1906 ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறந்த இஸ்லாமிய சூழலில் வளர்ந்தார். அதன் பயனாக சிறுபராயம் முதலே அவர் இஸ்லாமியப் பற்றுமிக்கவராகத் திகழ்ந்தார்.

எனினும் இதே காலப் பகுதியில் தான், அதாவது இருபதாம் நூற் றாண்டின் ஆரம்பப் பகுதியில் மனித வரலாற்றில் என்றுமே அழியாக கறைபடிந்த சில நிகழ்வுகள் இடம்பெற்றன. அவற்றில் முதலாம் உலகப் போர் அதனைத் தொடர்ந்து உலகில் சுமார் 13 நூற்றாண்டுகள் நிலைத்திருந்த இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சி, யூதர்களின் பலஸ்தீன நிலக் கபZகரம், அல்-அக்ஸா அமைந்திருக்கும் புனித பூமியை ஆக்கிரமிப்பதற்கான சதிகளும், சூழ்ச்சிகளும் போன்றன குறிப்பிடத்தக்கவை.

இச்சந்தர்ப்பத்தில் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்)அவர்கள் இவற்றை பார்த்தும் கேட்டும் வாழாவிருக்க விரும்பவில்லை. மாறாக இஸ்லாமிய உலகமும், முஸ்லிம்களும் இந்த நிலைமைக்கு முகம்கொடுப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்து அவர் ஆழ, அகலமாக சிந்தித்தார். தன் தோழர்களோடு சில சந்தர்ப்பங்களில் இரவு பகலாகக் கூட அவர் கலந்துரையாடினார்.

அப்போது தான் இஸ்லாமிய உலகின் வீழ்ச்சிக்கும், முஸ்லிம்களின் பலவீன நிலைக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் இஸ்லாமிய அறிவியலிலிருந்து தூரமாகியதே! என்பதை அவர் நன்கு அடையாளம் கண்டார். அந்தப் பின்புலத்தில் தான் அவர் இஸ்லாமிய அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்காக உழைக்கத் தொடங்கினார்.

அதனூடாகவே முஸ்லிம்களும், முஸ்லிம் உலகும் தன்மானத்தோடும், சுயகெளரவத்தோடும் வாழ முடியும் என அவர் நம்பினார். அதனைத் தவிர்க்க முடியாத பணியாகவும் அவர் கருதினார். அதனால் இப் பணிக்கென 1928 ஆம் ஆண்டில் தனியான அமைப் பொன்றையும் அவர் ஸ்தாபித்துக் கொண்டார். அதுவே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பாகும்.

இஸ்லாமிய அறிவியல் மற்றும் சிந்தனை மேம்பாட்டுக்கான பரந்துபட்ட நோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட இவ் வமைப்பில் பலஸ்தீன விவகாரங்களைக் கவனிக்கவெனத் தனியான பிரி வொன்றையும் அவர் உருவாக்கினார். அப்பிரிவினூடாகவே பலஸ்தீன் மற்றும் அல்-அக்ஸா விவகாரம் குறித்து விஷேட கவனம் செலுத்தப் பட்டன.

ஏனென்றால் பலஸ்தீன் என்பது அல்லாஹ்வினால் அருள் பாலிக் கப்பட்ட பூமி. அங்கேயே மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருக்கின்றது. அது உலகில் நிர்மாணிக்கப்பட்ட இரண் டாவது பள்ளிவாசல். அங்கு நிறை வேற்றப்படும் ஒவ்வொரு ரக்அத் தொழுகைக்கும் ஐநூறு நன்மைகள் கிடைக்கப்பெறும். இந்தப் பள்ளி வாசலில் பல இறைத் தூதர்கள் தொழுது இருக்கின்றார்கள். அவர்கள் பலஸ்தீனில் வாழ்ந்து இருக்கின்றார்கள். அவர்களது அடக்கஸ்தலங்களும் அங்குள்ளன.

அதேநேரம் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து இப்பள்ளிவாசலுக்கு இஸ்ராஃ பயணம் மேற்கொண்டிருக் கின்றார்கள். அன்னார் அங்கு நபி மார்களுக்குத் தலைமை தாங்கி (இமாமத்) தொழுவித்து இருக்கின் றார்கள். இங்கிருந்து தான் அன்னார் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் வைச் சந்திப்பதற்கான மிஃறாஜ் (விண்ணுலகம்) பயணத்தை ஆரம்பித் தார்கள். அப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு அன்னார் அங்கேயே திரும்பி வந்தார்கள். அதுவே முஸ்லிம்களின் தொழுகைக்கான முதல் கிப்லாவாகவும் விளங்கியது.

இவ்வாறு சிறப்புற்று மகத்துவம் மிக்கதாக விளங்கும் இந்த ஏகத்துவப் பூமியைத் தான் கபZகரம் செய்து யூதர்கள் இஸ்ரேலை உருவாக்கியுள் ளார்கள். இது மறைக்க முடியாத உண்மை.

முஸ்லிம்களின் அறிவியல் பலவீனத் தையும் இஸ்லாமிய கிலாபத் வீழ்ச் சியையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரித் தானியரும், யூதர்களும் சேர்ந்து சூழ்ச்சி செய்துதான் இந்த அல் அக்ஸாவையும் பலஸ்தீனையும் கபZகரம் செய்திருக்கின்றனர். அன்று தொட்டு யூதர்களின் பிடிக்குள் சிக்குண்டு இப்புனித பூமி கண்ணீர் சிந்திக்கொண்டி ருக்கின்றது. அதன் மீட்சிக்காக உழைப்பது பிரார்த்தனை செய்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை யாகும்.

அந்த அடிப்படையில் தான் இமாம் ஹஸனுல்பன்னா (ரஹ்) அவர்களும் அன்று செயற்பட் டார்கள். அல் அக்ஸாவினதும், பலஸ்தீனினதும் முக்கியத்துவத்தை யும் சிறப்பையும் மக்கள் மயப் படுத்துவதில் அவர் அதிக கவனம் செலுத்தினார். அதற்காக அவர் சொற்பொழிவுகளையும், கருத்தரங்குக ளையும், மாநாடுகளையும் அடிக்கடி நடத்தினார். அல் அக்ஸாவினதும், பலஸ்தீனினதும் முக்கியத்துவம் குறித்து பத்திரிகைகளிலும், சஞ்சிகை களிலும் அவர் தொடராக எழுதிவந்தார்.

இவ்வாறான நிலையில் 1939 ஆம் ஆண்டில் எகிப்தின் அன்றைய பிர தமராக இருந்த முஹம்மத் மஃமூத்திற்கு அவர், வரலாற்று முக்கியத்துவம் மிக்க கடிதமொன்றை எழுதினார். அக்கடிதத்தில் ‘பலஸ்தீன் ஒவ்வொரு முஸ்லிமினதும் தாயகம். அது இஸ்லாத்தின் பூமி. மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கொண்டிருக்கும் அப்பூமி அல்லாஹ்வினால் அருள்பாலிக்கப் பட்டிருக்கின்றது. அதனால் பலஸ்தீன விவகாரம் ஒவ்வொரு முஸ்லிமினதும் விவகாரமாக விளங்குகின்றது. அங்கு வாழும் மக்கள் எமது சகோதரர்களே. அவர்களுக்கு உதவுவதைத் தடுப்பது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் எதிரான செயற்பாடாகும்.’

‘பலஸ்தீன் என்பது முஸ்லிம் உம்மாவின் காயப்பட்ட ஓர் பகுதி. அக்காயம் உள்ளவரை முஸ்லிம் சமுதாயத்தினரால் செயற்றிறனுடன் இயங்க முடியாது. அதனால் பலஸ்தீனை (அல் அக்ஸாவை) மீட்பதற்காக உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையே!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் கிளையொன்றை பலஸ்தீனில் அமைப்பதற்கும் அவர் நடவடிக்கை எடுத்தார். அக்கிளை 1946 ஆம் ஆண்டில் ஜமால் ஹுசைனி தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.

என்றாலும் அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொடுத்து வந்த அழுத்தம் காரணமாகப் பலஸ்தீனை இரண்டாகப் பிரிப்பதற்கான தீர்மானத்தை அது வெளியிட்டது. இது 1947 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்றது. இதனை அறபுத் தலைவர்கள் எதிர்த்தனர்.

என்றாலும் இமாம் பன்னா (ரஹ்) அவர்கள் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான பெரும் மா நாடொன்றை ஏற்பாடு செய்தார். அம்மாநாட்டில் சவூதி அரேபியா, எகிப்து, சிரியா, சூடான் உள்ளிட்ட பல நாடுகளின் இஸ்லாமிய அறி ஞர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இம் மாநாட்டிலும் இமாம் பன்னா (ரஹ்) அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை யொன்றை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து பலஸ்தீனைப் பாதுகாப் பதற்கான உயர் சபையொன்றும் உருவாக்கப்பட்டது. அச்சபையில் இஸ்லாமிய அறிஞர்களும் உள்ளடக் கப்பட்டனர். இச்சபையின் ஊடாகப் பலஸ்தீனைப் பாதுகாப்பதற்கான பலவேலைத் திட்டங்கள் முன்னெ டுக்கப்பட்டன.

இவ்வாறான சூழ்நிலையில் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் திகதி நோன்பு பெருநாள் வந்தது. அத் தொழுகையின் பின்னர் அவர் பிரசங்கம் நிகழ்த்தினார். அப்பிரசங்கத்தில் ‘பலஸ்தீன் எமது தாயகத்தின் இதயம். அது எமது பூமியின் இதயத் துடிப்பு.

எம் மூலதனத்தின் சாரம். எம் கூட்டுச் சக்தியின் மத்திய கல். அதனை வேறொருவருக்குத் தாயகமாக மாறு வதை நாம் எவ்வாறு அங்கீகரிக்க முடியும்? அதுவும், எமக்கு (முஸ்லிம் களுக்கு) மிகக் கடுமையான எதிரி எனக் குர்ஆன் குறிப்பிடும் ஒரு நாடு (யூத நாடு) உருவாவதை நாம் எவ்வாறு ஏற்பது?’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அத்தோடு பலஸ்தீன் மீட்சிக்காக இடம்பெற்ற போராட்டத்திற்கும் கூட இவர் பங்களிப்பு செய்துள்ளார்.

இவ்வாறு பலஸ்தீன் மற்றும் அல்-அக்ஸா விவகாரத்திற்காக இறுதி மூச்சுவரை அயராது உழைத்தவர் தான் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) ஆவார். அவர் 1949 ஆம் ஆண்டு பெப்ர வரி மாதம் 12 ஆம் திகதி ஷஹீதானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹுத்த ஆலா அன்னாரின் தவறுகளையும், பிழைகளையும் மன்னித்து அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸ் சுவர்க்கத்தை வழங்குவானாக! ஆமீன்.

– Thinakaran –

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All