இலங்கையில் வளர்ந்து வரும் இனவிரோதம், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் உலகறியச்செய்யும் ஒரு முயற்சியாக நாளை மாலை லண்டன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அரசியல் களம் நேரடி ஒலிபரப்பினை இங்கே நேரடியாக ஒலிபரப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.
நிகழ்ச்சியில் பொது பல சேனா, அஸாத் சாலி, அப்துல் சத்தார் (குருணாகலை நகர சபை உறுப்பினர்) உட்பட பல முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். நிகழ்ச்சியில் நேயர்களும் இணைந்து கொள்ளலாம், வெளிநாடகளில் இருப்பவர்கள் இணைந்து கொள்ள “ஸ்கைப் மூலம்” ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது.
மேலும் பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகள் உறுதி செய்யப்பட்டதும் முழுமையான விபரங்களை இங்கே இணைத்துக்கொள்கிறோம்.
நிகழச்சியில் பொதுபலசேனாவிடமோ அல்லது அரசியல் தலைமைகளிடமோ உங்கள் கேள்விகளும் இணைத்துக்கொள்ளப்பட விரும்பினால் உங்கள் கேள்வியையும் அது யாரிடம் கேட்கப்பட வேண்டும் என்பதையும் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.
நிகழ்ச்சியை சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்பான் இக்பால் லண்டன் கலையகத்திலிருந்து தொகுத்து வழங்கவிருக்கிறார்.
உங்கள் நண்பர்களுடனும் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நாளைய தினம் குறித்த நேரத்திற்கு இதே பக்கத்தில் நீங்கள் வானொலியைக் கேட்கக் கூடியதான வசதி இணைக்கப்படும்.
சமூகத்தின் குரலை உலகம் எங்கும் கேட்கச் செய்வோம் !
Share the post "www.sonakar.com வழங்கும் அரசியல் களம் நேரடி ஒலிபரப்பு"