* தந்தை பெயர் அப்துல்லா

* தாயார் பெயர் ஆமினா உம்மா

* தந்தை, நபி (ஸல்) பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் காலமானார்கள்.

* தாயார், நபி (ஸல்) அவர்களின் ஆறாம் வயதில் இறந்தார்கள்.

* செவிலித்தாய் ஹலீமா நாயகியிடம் இரண்டு வருடங்கள் பால் குடித்து வளர்ந்தார்கள்.

* அப்துல்லா விட்டுச் சென்ற ஆஸ்திகள் :  ஐந்து ஒட்டகங்கள், சிறிய ஆட்டு மந்தை,

* நபி (ஸல்) அவர்கள் எட்டு வயது அடையும் முன்னர் தாய், தந்தை, பாட்டனார் ஆகியோரை இழந்து                                அநாதையாக நின்றார்.

* ஆயினும் தந்தை முகம் காணாத நபியை வளர்க்க பெரிய தந்தை அபூதாலிப் முன்வந்தார்.

* பெருமானாரின் 12 ஆம் வயதில் பெரிய தந்தையுடன் சிரியாவுக்கு வியாபாரத்துக்காகச் சென்ற சமயம் புஹைறா என்ற கிறிஸ்தவ பாதிரியின் சந்திப்பு கிடைத்தது.

* 25 வது வயதில் சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களின் வியாபார முகாமை யாளராக நேர்மையுடன் செயல்பட்டார்.

இளவயதிலே அல்அமீன் (நம்பிக்கைக்குரியவர்), அஸ்ஸாதிக் (உண்மையாளர்) எனும் சிறப்புப் பட்டங்களைப் பெற்றார்.

இப்படிப்பட்ட உயர் பண்பு மிக்கவரை தமது கணவராக்கிக் கொண்டார் சீமாட்டி கதீஜா. அப்போது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 40. நபி (ஸல்) அவர்களின் வயதோ 25.

* நபி (ஸல்) அவர்களின் 35 வது வயதில் கஃபாவைப் புதுப்பித்துக் கட்டும்போது நடுவராக இருந்து பணியாற்றினார்.

* நபி (ஸல்) அவர்களின் 40 வது வயதில் நூர் மலையின் ஹிராக் குகையில் அமரர் ஜிப்ரீல் (அலை) மூலம் நபித்துவம் கிடைக்கப் பெற்றது.

* நபித்துவத்தின் 10 வது ஆண்டு துயர வருடம்.

இவ்வருடத்தில் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் மரணம் எய்தினார்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் துனைவி கதீஜா (ரலி) அவர்கள் தமது 65 வது வயதில் மரணமானார்கள். (இன்னாலில்லாஹ்)

* நபித்துவத்தின் 13 ஆம் வருடம் மிஃராஜின் போது தொழுகை கடமையாக்கப்பட்டது.

* நபித்துவத்தின் 14 ஆம் ஆண்டு ஸபர் பிறை 27ல் பெருமானார் (ஸல்) இரவு நேரம் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் ஐந்து மைல் தூரம் நடந்து தவ்ர் மலைக் குகைக்கு வந்தார்கள். குகையில் இருவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய இரவுகள் தங்கியிருந்தனர்.

* குபாவில் ஹிஜ்ரி 1ம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 8ல் நபி (ஸல்) அவர்களும் ஆத்ம நண்பர் அபூபக்கர் (ரலி) அவர்களும் குபாவில் வந்து சேர்ந்தார்கள். குபாவில் சில நாட்கள் தங்கியபின் ஒரு மஸ்ஜிதைக் கட்டி மக்களை தொழ வைத்தார்கள். அதன்பின்

* நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆவின் பின் மதீனாவுக்கு வந்தார்கள். அதுவரை எஸ்ரிப் என்றிருந்த மதீனா (மதீனதுர் ரஸூல்) இறை தூதரின் பட்டணம் என்று அழைக்கப்பட்டது.

* நபி (ஸல்) அவர்கள் வருகையினால் மதீனாவில் எங்கு பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை.

* ஹிஜ்ரி – 2 ரமழான் பிறை 17ல் பத்று நடைபெற்றது. இந்த யுத்தத்தில் அபூஜஹீல் உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

* அதனைத் தொடர்ந்து உஹத், அகழ் போன்ற போர்கள் நடைபெற்றன.

* ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டில் சரித்திரப் பிரசித்திபெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்தது.

* ஹிஜ்ரி 8ஆம் வருடம் ரமழான் பிறை 17ல் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் மக்கா வெற்றி! நபி (ஸல்) அவர்களைச் சுற்றி முன்னும் பின்னும் முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் புடைசூழ அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் “சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்ற திருமறை வசனத்தை முழங்கிக் கொண்டிருந்தனர்.

* ஹிஜ்ரி 10 துல்ஹஜ் பிறை 8ல் ஹஜ்ஜதுல் விதா. அரபா மைதானத்தில் நமீரா எனும் இடத்தில் ‘கஸ்வா’ எனும் ஒட்டகத்தில் அமர்ந்தார்கள். அவ்விடத்தில் நபித் தோழர்கள் 1,24,000 முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு மத்தியில் பல விடயங்கள் பற்றி உருக்கமாகவும் சுருக்கமாகவும் உரை நிகழ்த்தினார்கள்.

* ஹிஜ்ரி 11 ரபியுல் அவ்வல் பிறை 12 திங்கட்கிழமை முற்பகல் நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு 63 வயது 4 நாட்கள் ஆகியிருந்தன.

இங்கே என்னை கவர்த விடயங்களில் ஒன்று, இந்த சகோதரர் கருத்தை வெளிப்படுத்திய விதம். எவ்வளவு எளிமையாகவும் அதே வேலையில் கருத்துக்கை தெளிவாகவும் பதிந்துள்ளார். நாங்களும் எங்கள் சகோதர சகோதரிகளுக்கும்,பிள்ளைகளுக்கும் இஸ்லாத்தை ஒரு பாடமாக படிப்பிப்பதை விட்டும் வாழ்கையில் ஒரு அங்கமாக எளிய முறையில் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக்கூறி இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடைந்த  வாழ்கையில் நாமும் பயணித்து இவர்களையும் வழிநடத்திச்செல்வோம். இறைவா எங்கள் அனைவரின் செயற்பாடுகளையும் போருந்திக்கொல்வாயாக.

A.W.M.Anshad.