.jpg)
-எம்.என்.எம். ஹிஜாஸ்-
http://tamil.dailymirror.lk
சுமார் 20 இலட்சம் பெறுமதியான சட்ட விரோத வலைகளும்; மீன்பிடி உபகரணங்களும்; கல்பிட்டி களப்பு பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்பிட்டி கடற்படையினரும், நாரா நிறுவன அதிகாரிகளும் இணைந்து நேற்று சனிக்கிழமை நடத்திய சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்பிட்டி களப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இச் சுற்றிவளைப்பு பாலக்குடா வரை நடைப்பெற்றது.
இதன்போது 120 வலைக்கூடுகள், தங்கூசி வலை மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
இவ் உபகரணங்களினை பயன்படுத்தி இறால் பிடிப்பதன் மூலம் சிறிய மீன்களும் இவ் வலைக்குள் மாட்டிக்கொள்வதுடன் அவை வீசப்படுவதாக நாரா நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

