Puttalam Online
uncategorized

பூகோளப் பசுமைக்கு உயிர் நாடி நீர்

  • 23 March 2013
  • 891 views

நீர் தினத்தை முன்னிட்டு விழிப்புனர்வு கருத்தரங்கு

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு “பூகோளப் பசுமைக்கு நீர் உயிர் நாடி” எனும் தலைப்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று 20.03.2013 ஆம் திகதி பு/பாத்திமா முஸ்லிம்மகளிர் கல்லூரி மற்றும் பு/இந்து தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் நடைபெற்றது.

புத்தளம் Caring Hands நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் இலங்கை திறந்த பல்கலைக்கழக புத்தளம் நிலையத்தின் செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. அர்ஷத் அலி வளவாளராகக் கலந்து கொண்டார்.

இக்கருத்தரங்கில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயாதர வகுப்புகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

முற்றுமுழுதாக Multi Media மூலம் மேற்கொள்ளப்பட்ட இக்கருத்தரங்கு நீர் வளப் பாதுகாப்பு, குடிநீரின் முக்கியத்தும் சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள நீருக்கான நெருக்கடி, நீர் நெருக்கடியை சாதகமாக எதிர்கொள்ள வேண்டிய பொருத்தமான தீர்வுகள் போன்ற தலைப்புகளை உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC03959

DSC03953

DSC03908 DSC03909


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All