Puttalam Online
art-culture

கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும்

Hafsha Haleel

அபாமுக்கு இப்போதுத்தான் பதினெட்டு வயது. தாயும் தந்தையும் அதிகமாக அன்பை வைத்ததால் கையில் சற்று பணம் அதிகமாகவே புழக்கத்தில் இருந்தது. வயதுக்கு வந்துவிட்டால் சிகரட் குடிக்கனும்  பல விதமான கெட்டபாவனைகளை பாவித்தால்தான்  பெரியவர் என்ற எண்ணம். இந்த காலத்து இளைஞர்களுக்கு.

அது போல அபாமுக்கும் பணம் பத்தும் செய்கிற மாதிரி  அவனும் பல விதமான பழக்கங்களையும்  செய்ய ஆரம்பித்தான். தாய் தன் மகன் மேல வைத்த அன்பினால் நம்பிக்கையினால்  எதை யார் கூறினாலும் நம்புவது இல்லை. ஒன்று அன்பு அடுத்தது மகன்மேலுள்ள நம்பிக்கை. யாராவது மகனை பற்றி  கூறினால் போதும் அவர்களோடு  கீரியை போன்று சண்டைத்தான். அது குடும்பத்தினராக இருந்தாலும் சரி பக்கத்து விட்டாராக இருந்தாலும் சரி  எல்லோருடனும் பகைத்தான்.

இப்படியை பல வருடங்கள் மரைந்தது. ஒரு நாள் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. தொலைபேசியை கையிலெடுத்த அபாமின் தாய்க்கு அதிரச்சி காத்திருந்தது. மகன் நன்பர்கலோடு ஆற்றுக்கு போய் இருந்தபோது மது அருந்தியதால் கடுமையாக நோய் உற்று இருப்பதாகவும் நினைவு இழந்து வாந்தி எடுப்பதாகவும் அபாமின் நன்பர்கள் தொலைபேசியில் தெரிவித்தார்கள்.

இதைகேட்ட தாய் தனது கணவனுக்கு விடயத்தை கூறி இருவரும் புறப்படும் போதே மற்றுமொரு  தொலைபேசி அழைப்பு மகனை வைத்தியசாலைக்கு கொண்டு வந்துவிட்டதாகவும் இருவரும்  அழுது  புலம்பீயவாரு வைத்தியசாலைக்கு சென்றனர். மகனின் நன்பர்களின் உதவியோடு மகன் இருக்கும்  வாட்டை கண்டு பிடித்தனர். நினைவு இழந்த நிலையில்  மகனின் உடலிருந்து இரத்தத்தை கண்ட தாய் மயங்கி கீழே விழுத்தாள். சற்று நேரத்தின் பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து மகனை பார்த்த போது மகன் சுயநினைவுக்கு வந்து இருந்தான். மகனிடம்  இல்லை தன்மீதுதான் தவறு என்பதை உணர்ந்து மகனிடம்  அன்பாக பேச ஆரம்பித்தாள்.மகன் இதுக்கு பிறகு இப்படி செய்யமாட்டேன்டு  சத்தியம் பண்ணி குடுங்க என்று அன்புக்கட்டளை ஒன்று போட்டாள் அந்த தாய். என்னமோ கூறுவார்களே கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும் என்று அது போன்று மகனின் மனமும் திருந்தியது. அன்றில் இருந்து  புது பிரவியானான் அபாம் .


4 thoughts on “கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும்

  1. sarjoon says:

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………………………கரையும் கரையும் …சதை கரிச்சான் அவிச்சி குடிச்சா

  2. rana says:

    afra சொன்னதும் சரி தான்

  3. afra says:

    இந்தமாதிரி எத்தனையோ பாத்துட்டோம் . எவன் தான் திருந்துறான்?……………………………….!

  4. amra says:

    சிறந்த சிறுகதை ஆக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All