Puttalam Online
interviews

சுதந்திரத்தின் பின்னர் எமது பிரச்சினைகளை மூத்த சகோதரர்களானசிங்கள மக்களோடு கதைத்து, தீர்த்துக் கொள்ள முடியும் -ரீ.பீஜாயா

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் youngasia தொலைகாட்சி திரிமான  நிகழ்ச்சியில் நாரத என்ற ஊடகவியாலரின் கேள்விகளுக்கு வழங்கிய கேள்விகளுக்கு அறிவுபூர்வமான பதில்கள்.

தமிழாக்கம்: புத்தளம் – எம்.எல்.ஹாஜா சஹாப்தீன்

Imthiyaz Bakeer Markar

வணக்கம்,

நாங்கள் இப்போது ‘த்ரிமான’ என்ற நிகழ்ச்சியை ஆரம்பிக்க உள்ளோம்.  இன்று நாங்கள் த்ரிமான நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது முன்னால் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களை.

முஸ்லிம் மக்களைப் பற்றி மற்றைய மக்களுக்கு சில இடங்களில் புரிந்துணர்வமின்மை இதற்கான தீர்வுகளை காண நீங்கள் கையாள விரும்பும் வழி வகைகள் பற்றி பதில்களை எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் பேருவளையை பகுதியின் பிரதிநிதி முஸ்லிம் மக்கள் மட்டும் அல்ல. மற்றைய எல்லா இன மக்களும் உங்களுக்கு வாக்களிக்கிறார்கள். முஸ்லிம்களை பொறுத்தவரை பெருவலையின் முக்கியத்துவம் எவ்வாறானது?

Mosque பேருவளை முஸ்லிம் மக்களுக்கு முக்கியமாவது, பேருவளை அரேபியர்களின் முதலாவது குடியேற்றமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இது சம்பந்தமாக அரசாங்கம் முத்திரையொன்றினையும் வெளியிட்டுள்ளது. இலங்கையின் முதலாவது முஸ்லிம் மஸ்ஜித் அமைந்திருப்பதும் பேருவளையில்தான். அந்த மஸ்ஜிதுக்கு செல்லும் பாதை கூட “அராபி பார” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த அராபி பார என்ற பாதைக்கு பிரவேசிக்கும் வழி ஷேஹ் ஜமால்தீன் வீதி என்று அழைக்கப்படுகிறது. ஷேஹ் ஜமால்தீன் பஹ்ஜவி என்பவர் அரேபியாவில் இருந்து அரச குடும்பத்தின் பிரச்சினை காரணமாக நாடு கடத்தப்பட்ட இளவரசன் இவர் தான் பெருவலையின் முதல் குடியேற்ற வாசி.

‘கிரா சந்தேசய’ போன்ற சிங்கள காவியங்களின் கவிதைகளில்கூட அரேபிய வர்த்தகர்களைப் பற்றி, முஸ்லிம் பெண்களைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் கடந்த கால வரலாற்று தொடர்புகளைப் பார்க்கும்போது பேருவளை மிக முக்கியமானதொரு திருப்பு முனை மற்றும் முக்கியமான நிலையமாக திகழ்கின்றது.

எங்களுக்குத் தெரியும் அரேபிய வர்த்தகர்கள் இவ்வாறு குடியேறி இலங்கைப் பெண்களை திருமணம் செய்துகொண்டார்கள் என்றுதான் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். அவ்வாறிருந்து பல தலைமுறையாக முன்னோக்கி வரும்போது அவர்கள் தானாகவே இலங்கையராக மாறியுள்ளனர்.

இப்போது பல்வேறு செயற்பாடுகளினால் சிறு சிறு புரிந்துணர்வின்மைகள் ஏற்பட்டுள்ளன . ஒன்று ஹலால் சம்பந்தமாக. மற்றையது உலகத்தில் ஏற்பட்டுள்ள உடை முஸ்லிம் பெண்களின் உடை சம்பந்தமாக மற்றது முஸ்லிம்களின் செயல்பாடுகள் கொஞ்சம் பலம் வாய்ந்ததாக முன்னேறுவது போலவும் உலகத்தில் பார்த்தால் தெரிகிறது. .அவர்கள் நாட்டின் ஏனைய மக்களோடு மிக நன்றாக இருந்தனர். இங்கு இலங்கையில் செயல்படுகின்ற சில குழுக்கள் இருக்கின்றன. அதில்தான் இந்த சந்தேகம் வருகிறது. சாதாரண முஸ்லிம் மக்கள் பற்றி இந்த சந்தேகம் வருவதில்லை. என்ன இதற்கான காரணம் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?

இதற்கான பிரதான காரணம் புரிந்துணர்வின்மை என்று நான் நினைக்கின்றேன். வரலாற்றை எடுத்துக் T.B.Jayahகொண்டால் வரலாற்றின் எல்லா சந்தர்ப்பங்களின்போதும் நாட்டின் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினரோடு இருந்துள்ளார்கள். எனது தந்தையை நினைவுகூர்ந்தால் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது அவர் ஒரு புறத்தில் தந்தைவழியில் அரேபிய பிறப்பையும் தாய் வழியில் சிங்கள பிறப்பையும் பற்றி பெருமை கொண்டார்.

எனக்கு ஞாபகமிருக்கிறது திரு. ராசிக் மரிக்கார் என்று அவரது உறவுக்கார சகோதரரொருவர் இருந்தார். அவர் பேருவளையின் நகர முதல்வராகினார். எனது தந்தை அவரோடு சேர்ந்து தமிழில் ‘ ஏன் சிங்களம்’ என்று புத்தகமொன்றை வெளியிட்டார் . அந்த புத்தகத்தை வெளியிட்டதன் பின்னர் தமிழ் பத்திரிகைளில் எனது தந்தையைப் பற்றி செய்திகள் பிரசுரிப்பதை அக்கால கட்டத்தில் தடை செய்திருந்தார்கள். அவ்வாறான புரட்சிகரமான கருத்துகள் அவருடையவை.

அந் நாட்களில் நான் நினைக்கிறேன் ‘ நாங்கள் இனத்தால் சிங்களவர்கள், சமயத்தால் இஸ்லாம்’ என்று. அதன் மூலம் தெரிகிறது தனது உரிமைகள் பற்றி பெருமிதமொன்று அவரிடமிருந்தது. கடந்த வரலாற்றினிலும், சமீபத்திய வரலாற்றினிலும் இவை எல்லாவற்றின்போதும் எமது முஸ்லிம் தலைவர்கள் தனிமைப்படவில்லை. இந்த நாட்டின் பெரும்பான்மையோடுதான் எல்லா சந்தர்ப்பங்களின்போதும் எல்லா நிலைப்பாட்டையும் எடுத்துள்ளார்கள்.

ஒரு தீர்க்கமான சந்தர்ப்பம் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது., இந்த நாட்டின் சுதந்திரம் பற்றிய பிரச்சினை. அந்த பிரச்சினையின்போது ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாப்பதுகளிலே.. 45, 44, 46 போன்றதுகளில். அரச கழகம் இருக்கும்போது ரீ.பீ. ஜாயா அவர்கள், டாக்டர் கலீல் அவர்கள், மொகமட் மாகான் மாக்கார் அவர்கள், சேர் ராசிக் பரீத் அவர்கள் இந்த நான்கு பேரும்தான் அரச கழகத்தில் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தினார்கள்.

சுதந்திரத்தைப் பற்றி தீர்க்கமான சந்தர்ப்பமொன்றுக்கு முகம் கொடுத்திருக்கும்போது எமது மக்களிடையே பேதங்களை ஏற்படுத்தி சுதந்திரத்தை தாமதமாக்க ஏகாதிபத்தியவாதிகள் முயற்சித்தார்கள். அந்த உத்திகளுக்கு இரையாகிய சில சிறுபான்மை இன மக்களின் பிரதிநிதிகள் ஐம்பதுக்கு ஐம்பது நிபந்தனைகளுக்கு உடன்பட்டால்தான் நாங்கள் சுதந்திரத்திற்கு சார்பாக செயல்படுவோம் என்று சொன்னார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில் எனக்கு ஞாபகமுள்ளவாறு நான் வாசித்திருக்கிறேன் 1945 ஜனவரி மாதம் பாராளுமன்ற நூலகத்தில் ஹன்சாட்டில் உள்ளது ரீ.பீஜாயா அவர்கள் ஆற்றிய வரலாற்று ரீதியிலான பிரகடனம், அவர் சொன்னார் “எங்களுக்கு கவலைகள் இருக்கின்றன, எங்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன, எங்களது சுதந்திரத்தின் பின்னர் எமது மூத்த சகோதரர்களாக உள்ள சிங்கள மக்களோடு அவற்றைக் கதைத்து, தீர்த்துக் கொள்ள முடியும்.”

சுதந்திரம், மற்ற பிரச்சினைகளை விடவும் உரிமைகளை விடவும் முதன்மையானது. அரசியல் சுதந்திரத்தின் முன்னால் எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்க இந்த நாட்டின் முஸ்லிம் மக்கள் தயாராக இல்லை. நாடு பூராவும் இருக்கின்ற சகல முஸ்லிம் அமைப்புகளோடும் பேசி அவர்களது அனுமதியுடன் தான் நான் கூறுகிறேன், நிபந்தனையற்ற விதத்தில் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்த நாட்டு முஸ்லிம்கள் உள்ளார்கள்.

அந்த உரையின் பின்னர் ஏ. ரத்நாயக்கா அவாகள் உரையாற்றி இருந்தார். திரு ரத்நாயக்கா அவாகள் கூறுகிறார், ரீ.பீ.ஜாயா அவர்கள் கடந்த பல வருடங்களாக அரச கழக அமர்வுகளின்போது அவர்கள் எடுத்திருக்கின்ற நிலைப்பாடானது இந்த நாட்டு சிறுபான்மை மக்களது பிரதிநிதியாக இருக்கின்ற உறுப்பினர்களுக்கு சிறந்ததொரு முன்மாதிரியாக உள்ளது என்று. ரத்நாயக்க அவர்கள் கூறுகிறார்கள் நானும் அவ்வாறான ஒருவன். நாங்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்ட மக்கள். நாங்கள் அடக்குமுறைக்கு , அடிமைத்துவத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்கள். அதே போன்று சபையிலுள்ள சகல சிறுபான்மைப் பிரதிநிதிகளிடமும் வேண்டிக் கொள்கின்றேன் நான், ரீ.பீ.ஜாயா அவாகளது சிறந்த முன்மாதிரிரியைப் இந்த தீர்க்கமான தருணத்தில் பின்பற்றுங்கள்.

அதற்குப் பிறகு டொமீனியன் நிலை இலங்கைக்கு வழங்குவது சம்பந்தமான பிரேரணை அரச கழகத்தில் சமர்பிக்கப்பட்ட போது ரீ.பீ.ஜாயா அவர்கள் இதே நிலைப்பாட்டில் இருந்து உரையற்றினார். அதன் பிறகு உரையாற்றியது திரு எஸ். டப்ளிவ். ஆர். டீ. பண்டாரநாயக்கா அவர்கள். அவர் சொன்னார், ரீ.பீ.ஜாயா அவர்கள் இந்த தீர்க்கமான தருணத்தில் எடுத்த நிலைப்பாட்டை நாங்கள் மறக்க மாட்டோம் என்று கூறினார். பீகன் விளக்கைப் போன்று எங்களுக்கு ஒளி தருகிறார். இந்த நாட்டு முஸ்லிம் மக்களது ரீ.பீ.ஜாயா அவர்கள் எடுத்த நிலைப்பாடு இது தான்.

கடந்த இனப்பிரச்சினை இருந்த போது தமிழ் பேசும் மக்களோடு ஒன்றாக வசித்த மக்கள் இந்த நாட்டு முஸ்லிம் மக்கள். இந்த நாட்டின் இறைமை பற்றி திடமான நிலைப்பாட்டில் இருந்தனர். அதனால்தான் காத்தான்குடியில் முஸ்லிம்களின் மஸ்ஜிதில் பிரச்சினை ஏற்பட்டது.. அதனால்தான் பள்ளியகொடல்லயில் பிரச்சினை வந்தது. வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் உடுத்திய உடையோடு வெளியேற வேண்டி ஏற்பட்டது.

அன்றும் சொன்னார்கள் முஸ்லிம் மக்கள் ஒதுங்கப் பார்க்கிறார்கள், தனிமைப்படப் பார்க்கிறார்கள், பிரிந்துவிடப் பார்க்கிறார்கள், ஜிஹாத் போன்ற அமைப்புகள் இருக்கின்றன என்று கூறினார்கள். அப்படிப்பட்ட அமைப்புகள் இருந்திருந்தால் அவை இது போன்ற தீர்க்கமான தருணங்களிலே வெளி இறங்கியிருக்க வேண்டும்.

LMT சஞ்சிகையின் ஆசிரியர் சொல்கிறார் “இன ரீதியிலான மோதலில் இருந்து நாங்கள் பாடம் படிக்கக் கூடிய சந்தர்ப்பமொன்று இருக்குமேயானால் அதற்கான சந்தர்ப்பம் இதுதான்” அதன் பிறகு அவர் சொல்கிறார் வெளிநாட்டிலுள்ள இளைஞர் பிரதிநிதியொருவர் சொல்கிறார். நான் எனது பெற்றோர்களையிட்டும் பயப்படுகிறேன். நான் எனது குடும்பத்தையிட்டும் பயப்படுகிறேன். நான் எனது அயலவர்களையிட்டும் பயப்படுகிறேன். நான் வாழ்ந்தது பௌத்த சூழலில், நான் சென்றது பௌத்த பாடசாலைக்கு, ஆனால் எனது வாழ்க்கையில் ஒருபோதும் இவ்வாறான அச்சம் கொள்கின்ற ஒரு சந்தர்ப்பத்திற்கு முகம் கொடுத்ததே இல்லை என்று. ஆசிரியர் வினவுகிறார் இந்த ஒரு சூழல் நாட்டில் உருவாகியிருப்பது ஏன்? இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் யார்?

ஹலால் பிரச்சினையும் ஏனையவையும் ஊடகங்களினதும், ஏனையோரினதும் இரையாகக் கொண்டு இந்த நிலைமை உருவாகியிருக்கிறதா?

இந்த பிரச்சினைபற்றி நான் நினைக்கிறேன் நீங்கள் உட்பட அனைவரும், வெளிவாரியாக அல்ல திரையை விலக்கி ஆழமாக சென்று ஆராய்ந்து, விசாரித்து இந்த பிரச்சினையை கையாள வேண்டி உள்ளது.

ஆம் இப்போது நீங்கள் இந்த விடயம் பற்றி குறிப்பிட்டீர்கள். ரீ.பீ.ஜாயா அவாகளது செயல்பாடுகள் பற்றி எங்களுக்கு விளக்கினீர்கள். அவரை தேசிய வீரராக மதிக்கிறார்கள் நாட்டில். அவருடைய செயல்பாடுகளை இன்னும் முஸ்லிம் தலைவர்கள் வழிபடுகிறார்களா? அவர்கள் அவ்வாறு செயல்படுபவர்களாக உள்ளனரா? இல்லாமல் தற்போது அது சற்று மாறி பல்வேறு குழுக்கள் உருவாகி உள்ளனவா? சற்று தீவிரவாதமாக செயல்படுகின்றவர்கள் முஸ்லிம் தலைவர்களுள் உள்ளனரா? என்ன உங்களது கருத்து?

தீவிரவாதம் என்பது என்ன? இதற்கு வரைவிலக்கணம் தேவை. இந்த நாட்டின் இறைமைக்கு, சுயாதிபத்தியத்திற்கு பாதிப்பான பின்னணி இருக்குமாயின் அது தீவிரவாத வேலைத்திட்டம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வரலாற்றில் கண்ணுற்றுள்ளோம் கே.எம்.பீ. ராசரத்தினம் அவர்களது கட்சி, மக்கள் விடுதலை முன்னணியை நாங்கள் கண்டோம், முஸ்லிம் காங்கிரசின் பிறப்பை நாங்கள் கண்டோம். ஏன் இவ்வாறானவை இந்த நாட்டில் நடைபெறுகின்றன. இவற்றை வெளிவாரியாக எடுக்கக் கூடாது. காரணத்தை விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த நாட்டின் பெரும்பான்மையினர் இந்த நாட்டின் தேசிய அரசியல் கட்சிகளோடு இருந்தனர்.

அது போன்றே சிறுபான்மையினரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்கள் இருந்தார்கள். ஒரு காலம் இருந்தது, 1951 அல்லது 52 ஆம் ஆண்டு தேர்தலின்போது கூட்டணி கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் அவர்களை தோல்வியுறச் செய்து, ஐக்கிய தேசிய கட்சியின் அபேட்சகர் நல்லையாவை மக்கள் பாராளுமன்றுக்கு அனுப்பினார்கள். அதுதான் எமது வரலாறு. ஏன் இவ்வாறான நிலைமைகள் மாற்றமடைந்தன?

எனக்கு ஞாபகம் இருக்கிறது நான் பல்கலைக்கழக மாணவனாக இருக்கும்போது நான் தந்தையாரோடு மன்னார் இடைத் தேர்தலுக்கு போயிருக்கிறேன் 1972 லாயிருக்கலாம். ரஹீம் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டார். அங்கு. 50 % விடவும் தமிழர்கள். அதனை விடவும் குறைவாக முஸ்லிம்கள். தமிழர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து கூட்டணி கட்சி அபேட்சகரைத் தோல்வியுறச் செய்து ரஹீம் அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள்.

இன்று அந்த நிலைமை எமக்கு இல்லை. நாங்கள் எவ்வாறு இந்த நிலைமையை மீண்டும் ஏற்படுத்துவது? தேசிய அரசியல் கட்சிகள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும். சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும்.

எனக்கு திரு டட்லி சேனாநாயக்க அவர்களை ஞாபகம் வருகிறது. அவர் 65 ஆம் ஆண்டு கூட்டணி கட்சியோடு சேர்ந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபித்தார். அப்போது அவர், தமிழ் குடிமகன் ஒருவர், அரசாங்கத்தோடு கடிதப் பரிமாற்றம் செய்கின்றபோது தான் பேசுகின்ற மொழியில் கடிதமொன்றை எழுதவும், அதற்கு பதிலை தமிழால் பெறவும் உரிமம் வழங்குகின்ற தமிழ் மொழிக் கொள்கை ஒழுங்கு விதிகள் சட்ட மூலத்தை 1966 ல் டட்லி சேனாநாயக்க அவர்கள் அறிமுகப் படுத்தினார்.

அதுபோன்றே மாவட்ட ரீதியாக அதிகாரிகளின் நிர்வாக முறைமையை இல்லாமலாக்கி அந்த மாவட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கு நிர்வாகத்தை கையளிக்கும் சட்டவிதிகளைக் கொண்டு வந்தார்.

சமசமாஜ கட்சி கொல்வின் ஆர். டீ சில்வா அவர்கள் ஒரு முறை சொன்னார் ‘இரண்டு மொழிகளாயின் ஒரு நாடு, ஒரு மொழியாயின் இரண்டு நாடுகள்’ என. அப்படிச் சொல்லிய, அப்படி இருந்த சமசமாஜ கட்சி 1966 ல் தமிழ் மொழி ஒழுங்கு விதிச் சட்ட மூலத்தின் போது டட்லி சேனாநாயக்க அரசாங்கத்தை கவிழ்க்க, தமிழ் மொழி சட்ட மூலத்திற்கும், மாவட்ட நிர்வாக முறைமை சட்ட மூலத்திற்கும் எதிராக ஊர்வலம் சென்றார்கள்.

1966 ல் அந்த ஊர்வலத்தில் தம்பரான ஹிமியின் உயிர் பறிக்கப்பட்டது. ஏன் இப்படி ஏற்பட்டது? இன்று மாவட்ட சபைகள் மட்டுமல்ல மாகாண சபைகள் கொடுத்தும் திருப்தியுறச் செய்ய முடியாத நிலைமை தோன்றியுள்ளது. ஏன் இப்படி ஏற்பட்டது? அரசியலில் ஈடுபட்டவர்கள் ஒரு வித போக்கில் செயல்பட்டார்கள். அரச அதிகாரத்திற்காக, நிலைகொள்வதற்காக கொள்கைகளை மறந்து தீர்மானங்களை எடுத்தார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, சம்பிக ரணவக்க அவர்களது ஹெல உறுமய போன்றன பற்றி கதைப்பதற்கு முன்னால் முஸ்லிம் காங்கிரஸை எடுத்துக் கொண்டால் இது தோன்றியது கிழக்கு மாகாணத்திலிருந்து. ஏன் இது தோன்றியது? தேசிய அரசியல் கட்சிகள் அந்த மக்களது நம்பிக்கையைப் பெற வேண்டும். 65 ல் தமிழ் மொழி சட்ட மூலத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக டட்லி சேனாநாயக்க அவர்களால் இந்த நம்பிக்கையை பெற இயலாமலாகி விட்டது

.உள்ளுராட்சி அமைச்சராக இருந்த திருச்செல்வம் அவாகள் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். கூட்டணிக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறியது. இன்றும்கூட உயிரோடு இருக்கின்ற ஒரு ஊடகவியலாளர் திரு அமிர்தலிங்கம் அவர்களிடம் வெளியே வந்ததன் பிறகு கேட்டாராம், ‘ இப்ப நீங்களெல்லோரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறி விட்டீர்கள். இப்ப டட்லி சேனாநாயக்கவின் அரசு தோற்றுவிடும் அல்லவா?’ அமிர்தலிங்கம் அவர்கள் அளித்துள்ள அதற்கு ‘இந்த தீவிரவாத போக்கில் அகப்பட்டு இதனை நடைமுறைப்படுத்த டட்லி சேனாநாயக்க அவர்களால் இயலாமல் போய் விட்டது. ஆனாலும் டட்லி சேனாநாயக்க ஒரு நல்ல பௌத்த தலைவர். எங்களுக்கு அவரைப் பற்றிய நம்பிக்கை உண்டு. எனவே நாங்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் அவரது அரசாங்கத்தை கவிழ்க்க நாங்கள் முயற்சிக்க மாட்டோம். தீவிரப் போக்கில் இந்த நாட்டை இட்டுச் செல்ல இடமளிக்க முடியாததால் டட்லி சேனாநாயக்க அவர்கள் 5 வருட காலம் ஆட்சி செய்தார்.

கூட்டணி அரசாங்கத்தின் பங்காளியாக இல்லாவிட்டாலும் அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்கட்சியினருக்கு உதவவில்லை. அவ்வாறான பௌத்த தலைவர்கள் இந்த நாட்டில் இருந்தார்கள். சிறுபான்மை மக்களது நம்பிக்கையை வென்றவர்கள். இதுதான் எமக்குத் தேவைப்படுவது. புரிந்துணர்வு, விளங்கிக் கொள்ளல், ஒருவரையொருவர் கண்ணியப் படுத்திக் கொள்ளல். பலதரப்பட்ட நிலைப்பாடுகளிலும் உள்ள ஒற்றுமைதான் இந்நாட்டிற்கு உள்ள பலம். அதைத்தான் நாங்கள் ஏற்படுத்த வேண்டும். எங்கள் நடைமுறைகளால், உடைகளால், உணவு வகைகளால் எங்களுக்கிடையே வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், அந்த வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த வித்தியாசங்களுக்குள்ளால் நாங்கள் பலமாக ஒற்றுமைப்பட வேண்டி உள்ளது. அது ஒரு சுமையல்ல. அதனை ஒரு வளமாக கருத வேண்டும். இன்றைய உலகத்தில் வெற்றிகரமான நாடுகள் இவற்றை வளமாக அமைத்துக் கொண்டதால் இன்று பொரளாதாரத்தில் ஆச்சரியகரமான சாதனைகளை நிகழ்த்துகின்றன. இதுதான் நாங்கள் கற்க வேண்டிய படிப்பினை

முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தோன்றியது பற்றி நீங்கள் கதைத்ததால்தான் நான் கேட்கிறேன். நாம் அறிவோம் முஸ்லிம் தலைவர்கள் தேசிய கட்சிகளில் அரசியல் செய்தார்கள். நான் சொன்னது போல உங்களைப் போன்றவர்களுக்கு எல்லோரும் வாக்களிக்கிறார்கள். ஏன் அப்படியான நிலைமையொன்று இருக்கும்போது இவ்வாறான இன அடிப்படையிலான கட்சிகள் உருவாக அடிப்படையான காரணங்கள்? வரலாற்று ரீதியாக ஏதாவது அநியாயங்களுக்கு முஸ்லிம் மக்கள் உள்ளாகுகிறார்களா? வரப்பிரசாதங்கள் ஏதும் மறுக்கப்படுகின்றனவா? இவ்வாறானவை நடைபெறுகின்றனவா? அதனால்தானா இவ்வாறனவை தோன்றுகின்றனவா?

தேசிய அரசியல் கட்சிகளிலே உள்ளக சோசலிஷம் இல்லாதது பிரச்சினையாக உள்ளதென்று நான் நினைக்கிறேன். எனவே இயல்பான தலைவரொருவருக்கு அவற்றில் இடமில்லை. கிழக்கு மாகாணத்திலே இயல்பான தலைவர்களுக்குப் பதிலாக உயர்மட்ட தலைவர்களுக்கு ஆமாம் சாமி போடுகின்ற தலைவர்கள் உருவாகியதால், முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் உருவாகி இருக்கலாம் என நான் நம்புகின்றேன். தேசிய கட்சிகள் மூலமாக அவர்களது பிரச்சினைகள் பேசப்படவில்லை. ஆனால் இன ரீதியிலான கட்சி முறைக்கு செல்வது தவறென அஷ்ரப் அவர்கள் பிறிதொரு காலத்தில் விளங்கிக்கொண்டார் என நான் நம்புகின்றேன். அதனால் தான் அவர் முஸ்லிம் காங்கிரஸுக்குப் பதிலாக தேசிய ஒருமைப்பாட்டு முன்னணி என்று கட்சியொன்று அமைத்துக் கொண்டு புதிய பிரவேசத்திற்கு முயற்சித்தார்.

நான் நினைக்கிறேன் இன ரீதியிலான கட்சிகள் மட்டுமல்ல அந்த உரிமை உள்ள நாம் எல்லோருமே அதன்பால் ஈர்க்கப்படக் கூடாது. நான் நினைக்கிறேன் இன ரீதியிலான அரசியல் மட்டுமல்ல எமது பாடசாலை மாணவர்களிடையேயிருந்தே ஸ்ரீலங்கன் என்ற உணர்வை ஊட்டக்கூடிய வகையில் இன ரிதியிலான பாடசாலைகளைக்கூட இல்லாமலாக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

அண்மையில் சர்வதேச வலையமைப்பின் ஊடாக சீடீ ஒன்றை  நான் செவிமடுத்தேன். ஜனாதிபதி அவர்களின் போக்கினால் கொள்கை ரீதியிலான மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளதாக. அவரது மகன் நாமல் ராஜபக்ஷ அவர்கள் நல்லிணக்கம் தொடர்பாக கதிர்காமர் நிலையத்தில் நடந்த இளைஞர் கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார் ‘ பௌத்த முஸ்லிம், கத்தோலிக்க, இந்து என்ற பாடசாலைகளுக்குப் பதிலாக தேசிய பாடசாலைகளை உருவாக்க வேண்டும்’. இலங்கையன் என்ற உணர்வை எமது பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே உணர்த்தப்பட வேண்டும் என்று அவர் சொல்லுகிறார். நாங்கள் இதுபோன்ற கூற்றுகளை எப்போதும் கேட்டு வருகிறோம். இவற்றை சொற்களோடு மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். இது பற்றி பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனம் செலுத்தப்படுமானால் எமது எதிர்காலத்திற்கு நல்லது என எண்ணுகிறேன். அது தூர நோக்குடையது என எண்ணுகிறேன்.

நாங்கள் காண்கிறோம் இக்காலத்தில் பர்தா பாவனை, முகத்தை மூடி உடை அணிதல் போன்றவை சம்பந்தமாக உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்புகின்றன. சில இடங்களில் இவற்றைத் தடை செய்துள்ளார்கள். சில இடங்களில் இவற்றை அணியாத முஸ்லிம் பெண்கள்கூட இதனை புதிதாக அணியத் தலைப்பட்டுள்ளார்கள். இப்படியான ஒரு செயல்பாடும் காணப்படுகிறது. இப்படியான செயல்பாடுகள் ஏற்படுவது ஏன்? இதனோடு சில புரிந்துணர்வின்மைகளும் மற்றைய இனத்தவர்களுக்கிடையே ஏற்பட்டு வருவதாக நான் உணர்கிறேன். எனக்குத் தெரியாது நான் சொல்வது உண்மையா பொய்யா என்று? இந்த விடயத்தை உங்களால் விளக்க முடியுமா?

இதனை தேவையற்ற கேள்வியாக நான் கருகிறேன். காரணம் நான் சின்ன வயதில் கண்டிருக்கிறேன் கிராமப் பகுதிகளிலே உள்ள முஸ்லிம் தாய்மார்கள் வாகனத்தில் போகும் போதும் திரை போட்டு மறைத்துக் கொண்டு போனார்கள். அப்படியொரு காலம் இருந்தது. காரணம் வெட்கம், பயம். பெண்ணொருத்தி மணிக்கட்டு வரை மூடிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தலைமயிர் தெரியாதவாறு உடை அணிய வேண்டும்.

கமியூனிச ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் இஸ்லாமிய உலகை இலக்காகக் கொண்ட தாக்குதல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் காணுகின்றோம். ஆப்கனிஸ்தானில் காணுகிறோம். பாகிஸ்தானில் காணுகிறோம். லிபியாவில் நாங்கள் அதனைக் கண்டோம். சிரியாவில் அதனை காணுகிறோம். நாடுகள் துண்டு துண்டாக உடைந்து போகின்றன. சோசலிஷத்தை இறக்குமதி செய்கிறார்கள். மேற்குலக நாடுகளின் தாக்கத்தின் பிரதிபலன் அது. இது யுத்தமயப்படுத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல ஊடகமயப்படுத்தப்பட்ட தாக்குதலும்தான். பிரச்சார ரீதியிலான தாக்குதல் ஒன்றும் உள்ளது. நாசிவாதம், கம்யுனிஸ்ட்வாதம், பெசிஸ்ட்வாதம் போன்றவை ஐரோப்பாவிலேதான் தோன்றின. அவர்கள் எங்களோடு சோசலிஷம் பேசுகிறார்கள். நாங்கள் மறக்கக்கூடாது இது சோசலிஷத்தோடு தொலை நோக்கு தொடர்பான பிரச்சினை. ஒவ்வொருவருக்கு தான் அணியும் ஆடை சம்பந்தமாக, தான் சாப்பிட விரும்புகின்ற விலக்கப்பட்டவைகள் உண்டல்லவா? இது பௌத்தர்களுக்கும் உள்ளது இஸ்லாத்தில் முஸ்லிம்களுக்கும் உண்டு. இப்ப எனக்குத் தெரியும் நான் ஆனந்தாவில் படித்தேன். கவிரத்ன அவர்கள் ஆனந்தாவில் படித்தவர். எச்.என்.ஏ சேனாரத்ன எங்கள் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர். அவர்கள். சஜித் ப்ரேமதாச அவர்கள். அவரது வீட்டுக்கு விருந்துக்குப் போனால் சொல்வார் ‘இம்தியாஸ் பயமில்லாமல் சாப்பிடுங்கள். இது ஹலால். இது இப்படி’ என்றெல்லாம் சொல்வார். என்ன? விளங்குதல், புரிந்து கொள்ளல், கண்ணியப்படுத்தல். இதுதான் எமக்கு தேவை. சந்தேகமோ, புரிந்துணர்வின்மையோ அல்ல.

உடைகளில் கூட. உலகத்தில் சில நாடுகளில் தீவிரவாத சில கட்சிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. நெதர்லாந்தில் வைவரி கட்சி. இலங்கையில் இருந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் இப்ப அவுஸ்திரேலியாவில் கட்சியொன்றை உருவாக்கி இருக்கிறார். அந்த கலாசாரத்திற்குள் வர வேண்டும். இல்லாவிட்டால் இங்கே இருக்க முடியாது என்று. மற்ற சமயத்தவர்களுக்கு தடைகளை விதிக்கின்ற கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். இதன் பின்னால் இருக்கின்ற நிகழ்ச்சி நிரல் என்ன? அவற்றை செயல்படுத்துபவர்கள் யார்? வெளித் தோற்றத்தில் பார்க்கமல் சிந்திக்க வேண்டும். இத்தாலியில் இந்த பிரச்சினை வந்தபோது இத்தாலியின் அமைச்சரொருவர் சொன்னார், ‘நாங்கள் பர்தாவை தடை செய்ய வேண்டுமாக இருந்தால், நாங்கள் கன்னியாஸ்திரிகளின் உடையையும் மாற்ற வேண்டும். அதுவும் ஹிஜாபைப் போன்ற தலைமயிர் தெரியாதவாறு தலை மூடப்பட்டிருக்கிறது’ என்று.

எம்மிடம் சோசலிஷ தொலை நோக்கொன்று இருக்க வேண்டும். விரிவான பார்வையொன்று இருக்க வேண்டும். உடை ஒவ்வொருவரது தெரிவு. நாங்கள் அவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும். இவையல்ல எங்களுக்கிருக்கின்ற பிரதான பிரச்சினைகள். ஒற்றுமைகள் என்ன எம்மிடையே இருக்கின்ற? நாங்கள் சொல்வோமே பௌத்த தர்மத்திலாகட்டும், இஸ்லாத்திலாகட்டும், இந்து தர்மத்திலாகட்டும் நாங்கள் கெசினோ (சூதாட்டத்திற்குப்) போகக் கூடாது, நாங்கள் மதுபான நிலையத்திற்குப் போகக் கூடாது. விபச்சார நிலையத்திற்கு போகக் கூடாது, பாதாள உலகத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. ஏன் எங்களால் இவற்றில் ஒன்று சேர முடியாதுள்ளது? எங்களிடமுள்ள அடிப்படையிலான வேற்றுமைகளை விட ஒற்றுமைகள் அதிகம். நாங்கள் வேற்றுமைகளை தேடித் தேடிப் போய் சிக்கல்களை உண்டாக்க முயலுகின்றோம். இது எமது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என நான் நம்புகிறேன். எனவே எமது எதிர்கால சந்ததியினரிதும், இந்த நாட்டின் எதிர்காலத்தினதும் பொருட்டு இதனை விடவும் விரிவாகவும், பண்புசார் ரீதியாகவும் நாங்கள் பார்க்க வேண்டி உள்ளது.

ஹலால் என்பது முன்னைய காலங்கள் பூராவும் இருந்தனவே? புதிதாக வந்த ஒன்றல்லவே? இது ஒரேயடியாக எல்லா உணவு வகைகளிலும் இந்த குறியீட்டை வைப்பது இந்த விடயம் சம்பந்தமாகத்தான் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் இருந்தவாறு முஸ்லிம் மக்கள் இதனை சாதாரணமாக கடைப்பிடித்து வந்தது போல் இருந்தால் பிரச்சினை இல்லை என்றுதான் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற குழுக்கள் சொல்கின்றன. உங்களது கருத்து என்ன?

ஹலால் பிரச்சினை ஏதோவொரு இணக்கப்பாட்டில் தீர்க்கப்பட்டுள்ளது தானே? நான் சொல்வது என்னவென்றால் இது முஸ்லிம்களின் தேவை. மற்றவர்கள் இதனைப் பார்க்கும் முறை தவறொன்று இருந்தால் இவற்றை மோசமான முறையில் கீழ் நோக்கி சமூகத்திற்கு சென்றடைய விடாது மேசையொன்றைச் சுற்றி இருந்து, கலந்துரையாடி, பெல்லன்வில விமலரதன தேரோ, களனி மஹிந்த சங்கரக்கித தேரோ, இத்தேபான தேரோ போன்ற மகா சங்கத்தினரோடு வர்த்தக சபையும் நடுநிலை வகித்து, கலந்துரையாடி பிரச்சினையை தீர்த்துக் கொண்டுள்ளார்கள். ஒரு அடி முன்னால் போவோம், ஒரு அடி பின்னோக்கிப் போவோம். இது நல்லது. இப்படித்தான் செய்ய வேண்டும். இப்படி இல்லாமல் இந்தப் பிரச்சினையை சமூகத்தினுள்ளே – குரோதம் ஏற்படக் கூடிய வகையில், ஆத்திரமூட்டும் வகையில் எடுத்துச்செல்லக்கூடாது.

மஸ்ஜித் ஒன்றுக்குச் சென்று அந்த மிருகமொன்றின் படத்தைப் போட்டுள்ளார்கள். ஹலால் என்று எழுதியுள்ளார்கள். ஊர்வலமாகப் போகும் போது கொடியொன்றிலே ஒரு பிராணியின் படத்தைப் போட்டு, அல்லாஹ் என்று இறைவனின் பெயரை போட்டுள்ளார்கள், இவை பகைமையை வளர்க்கின்ற வேலைகள், ஆத்திரமூட்டும் வேலைகள். நாங்கள் அந்த நிலைமைக்கு செல்லக் கூடாது. எங்களுக்குள்ளே பிரச்சினைகள் இருக்கலாம். எங்களுக்குள்ளே இணங்க முடியாதவை இருக்கலாம். அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்தவர்களுடைய கடமை இவற்றை முற்ற விடாது மத்திக்குக் கொண்டு வந்து, இவற்றைத் தீர்த்துக் கொள்ள மேடையொன்றை தயார்படுத்த வேண்டும். சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டும்.

அரசியல் பலம், அதிகாரத்தில் நிலைகொள்ளலுக்காக இந்த நாட்டை இவ்வாறு பகைமையையும், குரோதத்தையும் விதைக்க இடமளித்து சும்மா இருந்தால் பிரச்சினைகள் தோன்றும்.

நல்ல உதாரணமொன்று; தேசிய ஒருமைப்பாட்டு சபையில் சமல் மென்டிஸ் என்ற ஒரு அன்பர். இருக்கிறார் அவர் ஒரு நாள் எங்களோடு கதைத்துக் கொண்டிருக்கும் போது கூறினார், அவருடைய வீட்டுக்கு குடும்ப நண்பர்கள் வருவார்களாம். அவர்களோடு வரும் மூன்றரை வயது பிள்ளை வீட்டுக்கு வந்தால் முன்னால் இருக்கும் கடைக்குச் சென்று ஏதாவது வாங்கிக் கொடுப்பாராம் சமல் மென்டிஸ் அவர்கள். அன்றும் வந்ததும் வழமைபோல கேட்டாராம் ‘வாருங்கள் போய் அந்த கடையில் ஏதாவது வாங்கி வருவோம்’ என்று. அப்படிச் சொன்னதும் அந்த பிள்ளை கூறியதாம் ‘அங்கிள் எனக்கு அந்த கடைக்குப் போக முடியாது அது முஸ்லிம் கடை’ என்று. யார் மகள் அவ்வாறு சொன்னது?’ என்று சமல் மென்டிஸ் கேட்ட போது ‘அதை அக்கா சொன்னா’ என்று சொல்லிச்சாம். அக்காவுக்கு வயது ஆறரை.. அக்காவுக்கு இதனை யார் சொன்னது என்று கேட்டபோது ‘எலகியுசன் வகுப்பில் சொல்லித் தந்தார்கள்’ என்று கூறியதாம். எந்தளவு தூரம் சென்றுள்ளது இது? எமது நாட்டின் எதிர்காலத்திற்கு உகந்ததா இது? உலகத்தார் எங்களை எப்படிப் பார்ப்பார்கள்? எங்களால் தனிமைப்பட்டு வாழ முடியுமா? இதுதான் பிரச்சினை. பிரச்சினைகள் உண்டு. சிக்கலான இடங்கள் இருக்கின்றன. தீர்த்துக் கொள்ள மேடையொன்று அவசியம்.

எங்களது பொறுப்பாளிகள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஹலால் முடிந்ததும் உடையை எடுக்கிறார்கள். அது முடிந்ததும் வேறொன்று. எங்கே நாங்கள் எடுத்துக் கொண்டு போக முற்படுகிறோம்? உலகம் எங்களை எப்படி நோக்கும்? எனவே நான் நினைக்கிறேன் நாங்கள் இதனை விடவும் அறிவுபூர்வமாக, பரந்த அளவில், சோசலிஷ முறைப்படி, முரண்பாடுகளை சுமையாக கொள்ளாமல் முரண்பாடுகளை பலமாக மாற்றிக் கொள்ள நாங்கள் பரந்த அளவில் சிந்திக்க வேண்டி உள்ளது.

நீங்கள் சொல்வது எல்லா இன மக்களிடையேயும் எல்லை மீறி செயல்படுகின்ற குழுக்கள் இருக்கலாம் என்றா?

எல்லா இடங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள்.  நிர்வாகிகளைப் பாருங்கள். சில நிர்வாகிகள் தமது பெற்றோரை சிறை வைத்திருந்தார்கள் அரசியல் பலத்திற்காக. சிலர் சகோதரர்களைக் கொன்றார்கள். பெற்றோர்களைக் கொன்றார்கள். ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகளை அழித்தார்கள் சில நிர்வாகிகள். அதே போன்று இருந்தார்கள் அக்பர், தர்மாசோக போன்ற . இவ்வாறு கொடூரமான நிர்வாகிகள் இருந்தார்கள். அது போன்று சிறந்த நிர்வாகிகளும் இருந்திருக்கிறார்கள். பாதகமான பக்கங்களைப் பற்றி கதைத்து நாங்கள் பேதப்பட வேண்டியதில்லை. ஒற்றுமைகள் என்ன? ஒற்றுமைப்படக் கூடிய வழிகள் எவை? அதைப் பற்றித்தான், சகபண்புசார் பக்கமாகத்தான் நாம் கவனத்தை செலுத்த வேண்டும். அதற்குத்தான் வழிகாட்ட வேண்டும்.

உங்களுக்கு நல்லதொரு பின்னணி உள்ளது. நீங்கள் ஆனந்தா கல்லூரியிலே படித்தீர்கள். அத்தோடு சகல மக்களோடும் நீங்கள் அரசியல் செய்கிறீர்கள். இந்த அனுபவத்தின் ஊடாக உங்களிடம் உள்ள ஒற்றுமைப் பற்றிய கருத்துக்கள் என்ன? விசேஷமாக இப்ப இந்தப் பிரச்சினை இருப்பது முஸ்லிம்களுக்கும் மற்றைய இனத்தவருக்கும் இடையில். நாங்கள் எவ்வாறானவற்றில் இணையலாம்? பிரச்சினைகளைக் குறைத்துக் கொள்ளலாம்? ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யலாம்?

பௌத்த சமூகத்தைப் போல ஒன்றாக சேர்ந்து வாழக் கூடிய சமூகமொன்று இந்த முழு உலகத்திலும் இல்லை என்று நான் நம்புகிறேன். பெரும்பான்மை மற்றவர்களோடு ஆனந்தா கல்லூரியில் அதுதான் நான் பெற்ற மிகப் பெரிய அனுபவம். ஓரிருவர் இருக்கிறார்கள் கேலிக்காக ‘அடேய் தம்பியா’ என்று ஜோக் பண்ணுகிறவர்கள். அது ஐந்து வீதம் அளவாவது இல்லை. ஆனால் ஆனந்தா வித்தியாலயத்தில் மாணவர் விடுதியில் கனிஷ்ட பிரிவு மாணவர் அமைப்பின் தலைவர் பதவிக்கு என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். ஒரேயொரு முஸ்லிம் மாணவன் நான் மட்டுமே. பௌத்த பெரும்பான்மையினர் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். பௌத்த பிள்ளைகள். சிரேஷ்ட மாணவர் சங்க தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனந்தா மாணவர் விடுதியின் மாணவர் தலைவராக ஆசிரியர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். எனக்கு வித்தியாசம் விளங்கவில்லை பௌத்த ஆனந்தாவுக்குள்ளே நான் பிறத்தியான் என்று. என்னை ஏற்றுக் கொண்டார்கள். நான் சிங்கள விவாத குழுவில் தலைவனாக இருந்தேன். டேபல் டென்னிஸ் குழுவில் தலைவனாக இருந்தேன். ஹாக்கி குழுவின் தலைவனாக இருந்தேன். இன்னும் என்ன வேண்டும்?

உங்களுக்கு அதுபோன்ற அனுபவங்கள் உண்டு. ஆனால் முஸ்லிம் தலைவர்கள் உள் நோக்கங்களைக் கொண்டு செயல்படுகிறார்கள் என்று நீங்கள் சிந்திக்கவில்லையா?

அவ்வாறான நோக்கங்களைக் கொண்டு செயல்படுகின்றவர்கள் ஒரு இனத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. எல்லா இன மக்களிலும் இருக்கிறார்கள். அந்த விஷக் கிருமிகளை வெளிக்கிளம்பும் போதே அவற்றை நிறுத்திவிட வேண்டும். அதில்தான் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும். அந்த விஷக் கிருமிகள் வெளிக்கிளம்பும் போது அவற்றிற்கு சுதந்திரமாக திரிய விட்டால் அது பரந்து விடும் தொற்று நோய்கள் போல. நாங்கள் இப்படி சிந்திப்போம் வெள்ளை நிற சுவரொன்றில் கறுப்பு நிற கறையொன்று படிந்தால் அதிக கவனம் எதன்பால் செல்லும்? வெள்ளை நிற பக்கத்துக்கு அல்ல கறுப்பு நிற பக்கத்தக்கு அல்லவா? அது தான் தீவிரவாதம். இதனை மேலும் பரவ விடாது தடைசெய்து கொள்வது அறிவுள்ள சகலரதும் பொறுப்பாகும். அந்த பொறுப்பை நிறைவேற்றுமாறுதான் நாங்கள் கட்டாயப்படுத்த வேண்டும்.

நாங்கள் எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் கலந்துரையாட, தீர்த்தக் கொள்ளக் கூடிய சூழல் இந்த நாட்டில் உள்ளது அல்லவா?

இந்த சிறிய நாடு அதிர்ஷ்டமுள்ள நாடு. எமது அமைவு, எமக்கிருக்கின்ற வளங்கள், எமது மனிதர்களுக்குள்ள அறிவு மூலம் இந்த நாட்டை மறுபுறமாக திருப்பி விடலாம். நாங்கள் பாதகமான பக்கம் அல்ல சாதகமான பக்கம் பற்றி பரந்த அளவில் சிந்திக்க வேண்டும். சோசலிஷ முறையில் சிந்திக்க வேண்டும்.

நல்லது உங்களுக்கு மிகவுமே நன்றியுடைவர்களாயுள்ளோம்


One thought on “சுதந்திரத்தின் பின்னர் எமது பிரச்சினைகளை மூத்த சகோதரர்களானசிங்கள மக்களோடு கதைத்து, தீர்த்துக் கொள்ள முடியும் -ரீ.பீஜாயா

  1. Haja sahabdeen - puttalam says:

    சலாம். இதில் ”சோசலிஷம்” என்ற பதத்திtகுப்பதிலாக ”ஜனநாயகம்” endru மாற்றிக்கொள்ளுங்கள். அவசரமாக மொழி பெயர்த்ததில் தவறு நிகழ்ந்து விட்டது manniunkal.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All