Puttalam Online
kids

பெரியவர் சொல்லை தட்டாதவன் வாழ்வு பெறுவான்

  • 14 April 2013
  • 712 views

பெரியவர் சொல்லை தட்டாதவன் வாழ்வு பெறுவான்

indexஓர் ஊரில் ஒரு வயது முதிர்ந்த பெரியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரேயொரு மகன் இருந்தான். ஒரு பிள்ளை என்பதால் அவர்கள் மிகவும் பாசமாக வளர்த்து வந்தனர். அவன் கேட்கின்ற அனைத்தையும் உடனே வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அப்பிள்ளை வளர்ந்து பெரியவனாகிய போதிலும் அவனது அநாவசிய செலவு பழக்கம் அவனை விட்டுப் போகவே இல்லை. அதனால் அவனது தந்தை மிகவும் கவலை அடைந்தார்.

ஒரு நாள் அவனை அழைத்து மகனே! பக்கத்து ஊரில் எனக்குத் தெரிந்த பணக்கார நண்பர் ஒருவர் இருக்கின்றார். நீ அவரிடம் போ. அவர் சொல்கின்றவற்றை செய்துவா என்றார்.

அடுத்த நாள் அவன் பக்கத்து ஊருக்கு சென்றான். ஆ! எவ்வளவு பெரிய நகரம். மாடி மனைகள், பெரிய கடைத் தெருக்கள், அழகிய பூங்காக்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றது. நான் இருக்கும் கிராமத்தில் எப்போதும் அமைதியே நிலவும். ஓலையிலான வீடுகள், சிறிய சிறிய கடைகள், என்று நினைத்துக் கொண்டே சென்றான். அந்நண்பரின் வீடும் வந்தது. அவன் வருவதை அறிந்த அவர் அவனை வரவேற்று உபசரித்ததன் பின்னர் தன்னிடம் வேலை செய்ய முடியுமா எனக் கேட்டார். அதற்கு அவன் மறுப்புத் தெரிவிக்காது ஆம் என கூறினான்.

அதற்கு அம்முதலாளி தனக்குச் சொந்தமான வியாபாரத் தளத்தில் பொறுப்பான ஒரு வேலையை வழங்கினார். அவன் தனக்கு கிடைத்த வேலையை பெருமனதோடு ஏற்று அதனை திருப்திகரமாக செய்து வந்தான்.

அம்முதலாளியும் அவனது திறமையைக் கண்டு பூரிப்படைந்ததோடு திருப்தியான சம்பளத்தையும் வழங்கிவந்தார். தன்  உழைப்புக்கு கிடைத்த ஊதியத்தை பக்குவமாக சேமித்து வந்த அவன் சில வருடங்களின் பின் தன் ஊருக்கு திரும்பியதோடு அவனும் ஒரு தொழிலை செய்ய தொடங்கினான்.

(M.A. Fathima Afkha- Puttalam)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All