Puttalam Online
puttalam-news

சிறுநீரக நோயாளிக்காக நீண்டன கிரிக்கட் கழகத்தின் கரங்கள்

(Hisham Hussain, Puttalam)

புத்தளம் ஹொரிபல் பவர் கிரிக்கட் கழகம் (Horrible Power Cricket Club) சிறுநீரகக் கோளாரினால் பாதிக்கப்பட்டுள்ள புத்தளம், 5 ஆம் குறுக்குத் தெரு, ஒழுங்கை 6, இல. 121 முகவரியில் வசிக்கும் சகோதரி சித்தி ரிஸானாவுக்கு ரூபா பத்தாயிரம் (10,000/=) நிதி அன்பளிப்பு செய்தது.

rizwan HPower

கழக அங்கத்தவர் 20 பேர் மத்தியில் சேகரிக்கப்பட்ட பணத்தை கழகத்தின் சார்பாக தலைவர் எம்.எஸ்.எம். சஹுமி, உப தலைவர் எம்.எம்..எம். முர்ஷித், அங்கத்தவர்களான எம்.ஆர்.எம். சபீக், எம். பஸ்ரின் ஆகியோர் ஒப்படைத்தனர். அதனை சகோதரி சித்தி ரிஸானாவின் கணவர் ஏ.ஜே.எம். ரிஸ்வான் ஏற்றுக்கொண்டார். 

உங்கள் உதவியை நாடுகின்றார்’ என்ற வேண்டுகோளொன்று பேஸ்புக்கில் (facebook) பிரசுரமாகியிருந்தது. எமது கழக அங்கத்தவர்களுடன் இது விடயமாக கலந்துரையாடினோம். கழக அங்கத்தவர் மத்தியில் நிதியை சேகரிப்பது என்றும் தீர்மானித்தோம். அதன் பிரகாரம் எங்களால் இயன்ற அளவு பணத்தைத் திரட்டினோம்” என எம்.எம்.எம். முர்ஷதித் கூறினார். இக் கழகத்தின் அங்கத்தவர்கள் குறைந்த வருமான தொழில் புரிவோரும், வர்த்தக நிலையங்களில் சிப்பந்திகளாக பணிபுரிவோரும் என்பது கவனிப்புக்குரியது.

சகோதரி சித்தி ரிஸானாவையும் அவர்களின் வீட்டின் நிலைமையையும் நேரில் பார்வையிட்ட போது, மிகவும் கவலையாக இருப்பதாகக் கூறிய முர்ஷித் ‘அனைவரும் தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். இந்த தாய் சீக்கிரம் சுகம் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும்’ என்றும் வேண்டிக்கொண்டார்.

வைத்திய பரிசோதனைகளுக்காகவும் இரத்தம் மாற்றுவதற்காகவும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு செல்வதற்கான போக்குவரத்து செலவுகளையும் மருந்துகளுக்கான செலவினங்களையும் தனது உழைப்பின் மூலம் சகோதரன் ஏ.ஜே.எம். ரிஸ்வான் மேற்கொண்டு வருகின்றார்.

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை காலம் தாமதிக்காமல் மேற்கொள்ள வேண்டும் என அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை வைத்தியர்கள் கூறியுள்ளனர். இச் சிகிச்சைக்காகவும் அதனைத் தொடர்ந்து மருத்துவ செலவினங்களுக்காகவும் சுமார் ஏழு இலட்சம் ( 700,000/= ) ரூபா தேவைப்படுகின்றது’ எனக் கூறும் ரிஸ்வான், தயாள மனம் படைத்த செல்வந்தர்களின் தாராள உதவியை எதிர்பார்க்கின்றார்.


3 thoughts on “சிறுநீரக நோயாளிக்காக நீண்டன கிரிக்கட் கழகத்தின் கரங்கள்

  1. munthasir says:

    பண உதவி இல்லாவிடினும் அந்த நபருக்காக இறைவனிடம் பரிந்துரை செய்ய முயற்சிப்போமாக .

  2. Mafrath says:

    நீ செலேவளிக்கும் பணத்தை இன்னொருவருக்காக பிறருக்கு கொடுத்து உதவி செய்தல் நீயும் பெரிய மனிதன்தான்

  3. Wasim Akram MAB says:

    உதவி செய்யும் பணம் சிறிதாக இருக்கலாம் ஆனால் உதவி செய்யும் உள்ளம் எப்போதுமே பெரிதுதான்.

    அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All