Puttalam Online
puttalam-news

PUJA வின் மாதாந்த பொதுக்கூட்டம் புத்தளம் பொது நூலகத்தில்

  • 21 April 2013
  • 521 views

(ஆதிப் அஹ்மத்)

ffபுத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (PUJA ) மாதாந்த பொதுக்கூட்டம் இன்று மாலை புத்தளம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.

இக் கூட்டத்தின் போது புத்தளம் மாவட்ட ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் டுவிட்டர் (twitter) சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனையடுத்து புத்தளம் பெரிய பள்ளியின் உத்தியோகப்பூர்வமான இணையத்தளமான புத்தளம் ஒன்லைனின் இரண்டு வருட நிறைவினை முன்னிட்டு கௌரவிக்கப்பட்ட ஒன்றியத்தின் ஆலோசகர்களான மர்லின் மரிக்கார்,ஏ.எல். இர்பான் மற்றும் ஒன்றியத்தின் பொருளாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எஸ். புல்கி, ஒன்றியத்தின் உறுப்பினரும்,சிரேஸ்ட ஊடகவியலாளருமான வீர சொக்கன் ஆகியோருக்கு ஒன்றியத்தின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

ஒன்றியத்தின் சார்பில் மிக விரைவில் புத்தளம் மாவட்டதில் ஊடகங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பயிற்சி பட்டறை ஒன்றினை நடாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.
புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All