Puttalam Online
puttalam-news

புத்தளத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

  • 23 April 2013
  • 702 views

(அபூ முஸ்னா ,  M.H. Aathif ahmed,)
நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்காக புத்தளம் களப்பின் ஊடாக மின் கம்பங்கள் அமைக்கப்பட உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புத்தளம் மர்ஹூம் பிஸ்ருல் ஹாபி ஞாபகார்த்த மண்டபத்திற்கு முன்னால் உள்ள களப்பில் நூற்றுக்கணக்கான மீனவர்களும் பொது மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மர்ஹூம் பிஸ்ருல் ஹாபி மண்டபத்தில் அனைவருக்கும் என்றும் மின்சாரம் என்ற வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இடம்பெற்ற போதே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
புத்தளம் களப்பின் ஊடாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மின்கம்பங்களினால் தமது மீனவத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனை புத்தளத்தில் உள்ள மீனவச் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன் மீனவர்கள், மீனவக்குடும்பங்களின் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இயந்திர படகுகள் மற்றும் தோணிகளில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் பல்வேறு சுலோகங்களையும் தாங்கியிருந்ததைக் காணக் கூடியதாய் இருந்தது.
Protest 1 Protest 2 Protest 3 Protest 4 Protest 5 Protest SAM_0159 SAM_0171 SAM_0174 SAM_0180 SAM_0187 SAM_0189


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All