Puttalam Online
puttalam-news

தசை அழிவு எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு உதவுங்கள்!

  • 1 May 2013
  • 953 views

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் தரம் 3ல் கல்வி பயிலும் முஹம்மது ஆதிப் வயது 11 என்ற மாணவர் கடந்த 7 வருடங்களாக இதயத்தோடு சம்பந்தப்பட்ட தசை அழிவு (Muscular Dystrophy) எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் நிவ்செட்டில்மன்ட் வீதியில் வசிக்கும் ரஹ்மான் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த அலிஅக்பர் அப்துர் ரஹ்மான் என்பவரின் மகனான இம்மாணவருக்கு இந்தியாவில் MAYOPATHI Institute of Muscular Dystrophy & Research Centre ல் ஆறு மாத காலம் தங்கி நின்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான மருத்துவ செலவாக இந்திய வைத்திய குழுவினால் சுமார் இலங்கை ரூபா பதினைந்து இலட்சம் செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாணவரின் தந்தை சர்க்கரை வியாதியினால் அவதியுற்றுவரும் ஒரு நிரந்தர நோயாளியாவார். இவரது நாளாந்த வருமானம் குடும்பச் செலவிற்கு போதுமானதாக இல்லாமையால் இச்சிறுவனுக்குறிய மருத்துவத்தை மேற்கொள்ள முடியாமல் அவதியுறுகிறார்.

மேற்படி மாணவனுக்கு சிறுபராயத்திலேயே இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பிந்தும் பட்சத்தில் உரிய பலனை அடையாமல் போய்விடும்.

ஆகவே மேற்படி மாணவனின் சிகிச்சைக்கு இவரது தந்தை நல்லுள்ளம் படைத்த அனைவரது உதவிகளையும்  நாடி நிற்பதோடு சிறியளவிலாவது பங்களிப்பை செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றார்.

உதவி செய்ய விரும்புவோர் : பின்வரும் கணக்கிற்கு தங்களது பங்களிப்பை வழங்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

கணக்கு இல. 10044-01-6471-2
தேசிய சேமிப்பு வங்கி
புத்தளம் கிளை
PhotoMedcal report Medical Report 02 Medical Report Report 02     16022011086 16022011087 16022011085 16022011084


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All