Puttalam Online
current

Puttalam online இல் ‘சுவடிக் கூடம்’

நமது Puttalam online இல் ‘சுவடிக் கூடம்’ என்ற ஓர் அம்சம்  சேர்க்கப்பட்டுள்ளது. மேலேயுள்ள Menu வில் இது உள்ளது.

இதில் புத்தளத்தின் புராதன புகைப்படங்கள், வெளியீடுகள், துண்டுப் பிரசுரங்கள், நம்முன்னோர் பயன்படுத்திய அரபுத்தமிழ் நூல்கள், பழைய சீட்டுக்கள், மற்றும் பெறுமதிமிக்க ஆவணங்கள் போன்றனவற்றைத் தொடர்ந்தும்  நீங்கள் பார்வையிடலாம்.

இத்தகைய பேணிப்  பாதுகாக்கப்படவேண்டியவை என நீங்கள் கருதும் ஆவணங்கள் புகைப்படங்கள் உங்களிடம் இருப்பின் அவற்றை புகைப்படம் எடுத்து அல்லது scan செய்து info@puttalamonline.com  அல்லது  puttalamonline@yahoo.com என்ற எமது மின்னஞ்சல் முகவரிக்கு அதற்கான விளக்கத்துடன் அனுப்பிவையுங்கள். விளக்கங்கள் Unicode இல் Type பண்ணப்படல் வேண்டும்.

இதன்மூலம் அருகிவரும் எமது பழம் பெரும் பொக்கிசங்கள் மின்னாவனப்படுத்தப்படும். அவற்றை நேரடியாக எமக்கு கிடைக்கச் செய்தாலும்   நாம் scan செய்துவிட்டு  மீள ஒப்படைப்போம்.

இங்கு ஏற்கனவே Post பண்ணப்பட்டிருக்கும் புகைப்படங்கள் உட்பட அனைத்துக்குமான விளங்கங்களும் புதிய தகவல்கள் கிடைக்கும்போது அவ்வப்போது இற்றைப்படுத்தப்பட்டு  (Update)  வருகின்றன.

 

சுவடிக்கூடம் பகுதியைப் பார்வையிட கீழே  CLICK பண்ணவும்.

http://puttalamonline.com/archives-2/

 


9 thoughts on “Puttalam online இல் ‘சுவடிக் கூடம்’

  1. faseena farook says:

    ‘இனிதே இனிது இப்பழங்கால முகவரியில்லா முகங்களை காண்பது பேரன்,பேத்திபிள்ளைகளுக்கு பார்த்து சுவைப்பதில் இனிது’
    இதன் மூலம் பழங்குடியினரின் கலாச்சாரம்,கொடுக்கல் வாங்கல்,தொழில்,வியாபாரம்,கொள்கை,நாகரிகம்,சமயம்,கல்வி போன்றவற்றை அறிவதற்கு ஆவலை அதிகரிக்கின்றது .

  2. Ibrahim Nihrir says:

    வேறெங்கும் காணாத புதிய முயற்சி…பழம் பெருமை பேசி பயனில்லை…ஆனால் அதை எண்ணி உவகை கொள்வதும், உத்வேகம் கொள்வதுமே இதனால் கிடைக்கும் பயனாகும்…இதற்கு “காலப் பெட்டகம்” என்று பெயர் வைத்திருக்கலாமோ என்று தோன்றுகின்றது…வாழ்த்துக்கள்…

  3. Rilah Mohideen says:

    உங்கள் முயற்சிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    மண்ணுக்கடியில் மங்கிப்போக தயாராக இருந்த மடல்களுக்கு மதிப்பளித்த புத்தளம் ஒன்லைன் குழுவே!
    மறையா பொக்கிஷங்களாக பாதுகாக்கப்படவேண்டியவை புதிய தலைமுறையினரால் புறக்கணிக்கப்படுகிறதே என்ற ஏக்கத்திற்கு முடிவுகட்டிய உங்கள் முயற்சிக்கு இறைவன் என்றும் துணை நிற்பானாக.

  4. aysha says:

    மேலே புட்லம் டுடே , காணொளி இரண்டுக்கும் பக்கத்தில் சுவடிக்கூடம் வுள்ளது

  5. izzath says:

    வரவேற்கிறோம் …. தேவையான முயற்சி

  6. Wasim Akram MAB says:

    வரவேற்கப்பட வேண்டிய அம்சம்… இதன் மூலம் அறியாத பல விடயங்களை இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்வர்.

    ஜெஸா கல்லாஹ் கைரா..

  7. Fazeel says:

    Soooooooperb ! காலத்தின் தேவை.puttalm online வழி தனி வழி

  8. Akram says:

    இதே Home page இல் மேலே tab இல் சுவடிக் கூடம் என்று புதிதாக ஒரு tab இருக்கு.அதை Click பண்ணிப் பாருங்க Mr Ishthiyaque Ahmed

  9. Ishthiyaque Ahmed says:

    WHERE ARE THE PICTURES??????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All