உணர்விருந்தும் உயிர் இல்லாமல்
கண்ணீர் இருந்தும் கண் இல்லாமல்
பேச்சிருந்தும் நாவில்லாமல் ஜடமாய் வாழும் நாணயமற்ற வாழ்கையிது
வாழ்க்கை எனும் புத்தகத்தில் பக்கங்கள் மட்டும் புரட்டப்படுவதில்லை
மனிதர்களும் தான்.
பொய்யான நேசம் பொய்யான பாசம் இத்தனையும் போலியாக எதற்காக?
வெறும் உலகத்திற்காகத்தானே!
உண்மை அன்பைத்தேடி உழல்கிறது கபடமில்லா உள்ளம் ….
எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் வாழ்க்கையாகின்றன…
எம்மைப்படைத்தவன் உண்மை அன்பைத்தருவான்
அனாதரவற்ற பொய்யுலகிற்கு வாழ்வதை விட
உண்மை அன்பிற்கான உண்மை உலகிற்கான பயணத்தை இன்றே ஆரம்பிப்போம்
அழகான அர்த்தமுள்ள கவிதை …. எழுதியவருக்கு நன்றியும் வாழ்த்துகளும் ….
உண்மை அன்பு அது தாயின் பாசத்தை விட மேலானது
எம்மை படைத்தவனின் அன்பு …..அதை பெற்று வெற்றி
பெற்ற கூட்டத்தில் சேர்ந்து கொள்ள பயணிப்போம்….