Puttalam Online
sports

கால் பந்தாட்டம் அடிப்படை விதிகள் சென்ற வார தொடர்ச்சி

  • 26 May 2013
  • 13,120 views

            A.O.M.Rifai                                  

      FIFAன் தலைமையகம்

1

————————————————————————————————————————————————————————

 

    விதி 1. விளையாட்டு மைதானம்.(The field of play )

2 3

கால் பந்தாட்ட மைதானத்தின் அடிப்படை அமைப்பு இவ்வாறாக இருக்கும்.மைதானத்தின் அளவு ஒவ்வொரு இடத்திலும் வேறுபட்டு இருக்கும். வழமையாக வயதின் அடிப்படையில் மைதானத்தின் அளவு தீர்மானிக்கப்படும்.

விதி 2. பந்து (Ball)  

4

வழமையான பந்தின் அளவு No. 5 ஆகும். இள வயதினர் வித்தியாசமான அளவில்; வயதுக்கேற்ப No. 4, No.3  அளவுகளை பாவிப்பார்.

விதி 3. விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை (Number of Players)

5

ஒவ்வொரு அணியிலும் 11 வீரர்களுக்கு மேலதிகமாக இருக்க கூடாது. ஆகக்குறைந்தது 7 வீரர்கள் இருக்க வேண்டும். ஒருவர் கோல் காப்பாளராக (goal keeper) இருப்பார். அவர் அணியின் மற்ற வீரர்கள் அணிந்திருக்கும் மேலாடையை விட வித்தியாசமான மேலாடை அணிந்திருக்க வேண்டும். இது கோல் காப்பாளரை மற்றைய வீரகளிடமிருந்தும் பிரித்து அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். பெனால்டி ஏரியா (penalty Area) வுக்கு உள்ளே மாத்திரம் goal காப்பாளர் தந்து கையை பாவிக்க முடியும்.

விதி 4. விளையாட்டு வீரர்களின் உபகரணங்கள் (Player’s Equipment)

அணியின் வீரர்கள் ஒரே மாதிரியான ஜேர்சி (Jersey)  அல்லது ஷர்ட் (shirt) அணிந்திருக்க வேண்டும்.6 இள வீரர்களின் போட்டியின்போது எல்லா வீரர்களும் shin guard அணிந்திருக்க வேண்டும்

7 8 9

பாதணியின் கீழ்புறம் . cleats அணிவதாயின் அது கால் பந்தாட்ட cleats என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.  கால் பந்தாட்ட பாதனியில் அதன் முன்புற ஓரத்தில்  cleats இருக்காது.

10 11

விதி 5. மத்தியஸ்தர் ( Referee)

12

மத்தியஸ்தர்கள் விளையாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பர்.

விதி 6. லைன்ஸ் மேன் lines men and lines women.

 14

விளையாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இரண்டு லைன்ஸ் மேன்கள் (Linesmen) உதவி புரிவர். lines men களின் கடமைகளில் மத்தியஸ்தருக்கு கீழ் காணும் வழிகளில் உதவியாயிருப்பார்கள்.

பண்டு வேளே செல்லும்போது; corner kick ஆகும்போது goal kick ன் போது; எந் அணியினர் throw பண்ண வேண்டும் என்று தீர்மானிக்கும்போது; மேலும் off side ஆகும்போது; தகாத நடவடிக்கையின்போது; பதில் வீரர் தேவைப்படும்போது மத்தியஸ்தருக்கு உதவியாக இருப்பார்.

மைதானத்தில் இருக்கும் மத்தியஸ்தரே இறுதி முடிவு எடுப்பார். lines menகள் அவர்களது ஆலோசனைகளை சொல்லுவார்கள்; முடிவு மத்தியஸ்தரே எடுப்பார்.

விதி 7. விளையாட்டு நீடிக்கும் காலம்.(Duration of  the Game)

வயதுக்கு ஏற்ப காலம் தீர்மானிக்கப்படும். மிகவும் இள வயதினர் ஆட்ட நேரத்தை நான்காக பிரித்து விளையாட விரும்புவர், ஏனையோர் அட்ட நேரத்தை இரண்டாக பிரிப்பர். எப்படியாயினும் போட்டியை அல்லது விளையாட்டை ஒழுங்கு பண்ணுபவர்கள் நேரத்தை தீர்மானிப்பர்.

விதி 8. விளையாட்டின் ஆரம்பம்.  ( Start of Play )

Kick off விளையாட்டின் ஆரம்பமாகும். கோல் போடப்பட்டதும் அல்லது இடைவேளை முடிந்ததும் kick off செய்வதன் மூலம் விளையாட்டு ஆரம்பமாகும். kick off செய்யும்போது அணியினர் மைதானத்தின் அரைவாசியில் இருப்பார், எதிர் அணியினர் மற்றைய

1516அரைவாசியில் நிற்பார். பந்து நடு வட்டத்தின்  நடுப்பகுதியில் வைக்கப்பட வேண்டும்.

17எந்த அணியினர் kick off செய்வது என்பதை மத்தியஸ்தர், இரு அணிகளினதும் தலைவர்கள்  toss போடுவதின் மூலம் தீர்மானிப்பர்.kick off செய்யும்போது நேரடியாக கோளுக்கு அடித்து கோல் போட முடியாது. இடைவேளையின் பின்பு முதலில் kick off செய்த அணி இல்லாது அடுத்த அணி kick off செய்யும்.

foul (விதிக்கு முரணான செயல்) போடப்படாமல் வேறு காரணங்களுக்காக விளையாட்டு நிறுத்தப்பட்டால், பந்து மத்தியச்தரால் drop (தூக்கி போடப்படும்). செய்யப்படும்.காயம் ஏற்படும்போது அனேகமாக இது செய்யப்படும்.அப்படி drop பண்ணப்படும்போது இரு அணிகளினதும் வீரர்கள் மத்தியில் மத்தியஸ்தர் செய்வார். drop பண்ணப்படும் பந்து நிலத்தை தொட்ட பின்பே விளையாட வேண்டும்.

18

விதி 9.  விளையாட்டில் பந்து விளையாடும் நிலையும் இல்லாத நிலையும் . ( Ball In and Out of Play)

வெளிக்கோட்டுக்கு வெளியே பந்து போனால் அல்லது அப்பந்து நிலத்தில் அல்லாது மேலே போய் வெளிக்கோட்டுக்கு வெளியே சென்றாலும்  அது (out of play ) வெளியே சென்றதாக கருதப்படும்;பந்து விளையாடும் நிலையில் இல்லாது போகும்.( The ball is out of play whenever it is completely outside the outside edge of the touchline either on the ground or in the air.)

19எதோ ஒரு காரணத்திற்காக மத்தியஸ்தர் விளையாட்டை நிறுத்தினாலும் பந்து விளையாடும் நிலையில் இல்லாது போகும்.

பந்து line க்கு உள்ளே இருக்கும் போதும், goal கம்பத்தில் அல்லது cross bar ல் பட்டு பந்து உள்ளே வந்தாலும், corner கம்பத்தில் பட்டு உள்ளே வந்தாலும், lines man ல் அல்லது மத்தியஸ்தரில் பட்டு உள்ளே வந்தாலும் தொடர்ந்து  விளையாடும் நிலையில் இருக்கும்.

விதி 1௦. புள்ளிகள் எடுக்கும் முறை ( Method of  scoring )

பந்து முழுமையாக goal line க்கு உள்ளே போனால் மாத்திரமே புள்ளி எடுக்க முடியும். goal காப்பாளர் உட்பட அணியின் எவரும் புள்ளி எடுக்கலாம்; கோல் போடலாம்.

20 21

free kick, throw in, goal kick, penalty kick அல்லது  kick off, ன் போது ஒரு பிளேயர் தனது goal க்கு நேரடியாக அடித்து கோல் போடுவாராயின் அந்த புள்ளி எதிர் அணிக்கு வழங்கப்படும்.

விதி 11. offside

goal போட முன்னேறும் வீரருக்கு பந்து pass பண்ணப்படும் போது அவருக்கும்   goal line க்கும் இடையில்  எதிர் அணியின் goal காப்பாளர் உட்பட இரு வீரர்கள் இருக்க வேண்டும்.இல்லையேல் அது off side  என கொள்ளப்படும்.

22

offside  நிலையும் (off side position ), off side ம் ஒன்றல்ல.off side நிலையில் அதாவது off side position ல் ஒரு வீரர் நின்றால் அது foul அல்ல. அவருக்கு பந்து pass பண்ணப்பட்டால் மாத்திரமே foul ஆகும்.

off side position என்பது: எதிர் அணியின் அரைப்பகுதியில் பந்துக்கு

23

முன்னாள் வீரர் நிற்பது, off side என்பது:  அந்த வீரர் பந்தை விளையாடுவது.

55

25 24

எப்படியாயினும், throw இன் அல்லது corner kick செய்யும் பொது off side ஆக மாட்டார்.

26

 

விதி 12. Foul, தகாத நடத்தை. ( foul and missconduct)

இரண்டு வகையான foulகள் உள்ளன. ஒன்று தண்டனைக்குரிய பெரிய foul மற்றது தண்டனைக்குரியதல்லாத சிறிய foul கள்.

9 வகையான பெரிய தண்டனைக்குரிய foul கள் உள்ளன:

  • வீரர் ஒருவரை உதைப்பது. • Kicking a player.27
  • ஒரு வீரருக்கு மேல் பாய்வது. Jumping up at a player28
  • கடுமையான முறையில் வீரை தாக்குவது (Charging a player in a rough way)29
  • பின்னாலிருந்து வீரரை தாக்குவது. Charging a player from behind.30
  • ஒரு வீரருக்கு மேல் இடறுதல் (கால் போடுதல்) • Tripping a player .31
  •  ஒரு வீரருக்கு அடித்தல் அல்லது துப்புதல் Hitting or spitting at a player.32
  • வீரர் ஒருவரை தள்ளுதல் • Pushing a player.33
  • வீரர் ஒருவரை பிடித்தல். • Holding a player.34
  •  goal காப்பாளர் தவிர்ந்த மற்றவர்கள் பந்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கையால் பிடிப்பது அல்லது பந்தை தட்டுவது. 35Handling the ball. (Except by a goalkeeper). This foul is called if the player is
  •  trying to control the ball with his hands or arms.

இவைகளில் ஒன்றை செய்தால் மத்தியஸ்தர் விசில் ஊதி foul என அறிவித்து எதிர் அணிக்கு  direct free kick கொடுப்பார். direct free kick என்பது, வீரர் நேரடியாக goal க்கு பந்தை அடிக்க முடியும். ஒரு வீரர் தண்டனைக்குரிய பெரிய foul செய்தால் மத்தியஸ்தர் அவருக்கு சிகப்பு அட்டை காண்பிப்பார்.அவர் மைதானத்தை விட்டும் அகல வேண்டும். மீண்டும் அவருக்கு மைதானத்திற்கு வர முடியாது.

தண்டனைக்குரியதல்லாத சிறிய foul கள் 5 உள்ளது: இதற்காக மத்தியஸ்தர் மஞ்சள் அட்டை காண்பிப்பார்.

  • ஆபத்தான விளையாட்டு.உ+ம்: மற்ற வீரருக்கு அருகில் உயர்த்திய உதை அல்லது கோல் காப்பாளர் பந்தை36 படித்திருக்கும் பொது விளையாட முயற்சிப்பது. • Dangerous play. Examples of a dangerous play are: high kicking near another  player’s head, or trying to play a ball held by a goalie.
  • நியாயமான தாக்குதல் ஆனால் பந்து விளையாடும் தூரத்தில் இல்லாதபோது. • Fair charging, but with the ball out of playing distance.37
  • விதிக்கு முரணான தடை செய்தல் ; பந்துக்கும் எதிர் வீரக்கும் மத்தியில் தனது நிலையை (position) எடுத்துக்கொள்ளுவது ஆனால் பந்து விளையாடும் தூரத்தில் இல்லாதபோது. Illegal obstruction. When a player intentionally takes a position between the ball  and an opponent, when not within playing distance of the ball.
  • goal காப்பாளர் எல்லைக்குள் அவரை தாக்குதல். Charging the goalkeeper in the goal area
  • goal காப்பாளர் மீறல்கள் Goalkeeper Infringements
  • goal காப்பாளர் பந்தை கட்டுப்படுத்த நான்கு அடிகளுக்கு மேல் வைத்தல் Goalkeeper taking more than four steps while controlling the ball.
  • goal காப்பாளர் தனது அணியில் ஒருவர் உதைத்த பந்தை கையால் பிடித்தல். Goalkeeper playing the ball with his hands when the ball is kicked by a teammate.
  • வேண்டுமென்றே நேரத்தை தாமதித்தல். Intentionally wasting time38

விதி 13. free kick

இருவகையான free kick கள் உண்டு; நேரடி free kick (direct free kick ) நேரடியற்ற free kick ( Indirect free kick ).

நேரடி free kick – direct free kick: பந்தை நேரடியாக goal போடுவதற்கு அடிக்க முடியும்.  penalty பாக்ஸ் க்குள் அல்லாதபோது,foul நடந்த இடத்தில் வைத்து direct free kick எடுக்கப்பட வேண்டும்.

நேரடியற்ற free kick – Indirect free kick: ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வீரர் மீது பட்ட பின்பே goal போடா முடியும். ( எந்த அணியை சரந்தவராயினும் சரியே) இன்டிர்ச்ட் free kick அடிக்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை:

  • மத்தியஸ்தர் தனது ஒரு கையை உயர்த்தி சைக்கினை செய்வார்.39
  • அடிக்கும் போது பந்து உருளாமல் இருக்க வேண்டும்.
  • எதிர் வீரர்கள் 1௦ யார்களுக்கு அப்பால் நிற்க வேண்டும்.
  • indirect free kick அடிக்கும் வீரர் விரும்புவாராயின் எதிர் அணியினர் 1௦ யார்களுக்குள் நிற்கலாம்.
  • மத்தியஸ்தர் விசில் ஊதும் வரை பந்தை அடிக்க பொறுத்திருக்க வேண்டும்.
  •  1௦ யார்களுக்குள் கோல் line இருக்குமாயின் எதிர் அணியினர் goal line ல் நிற்கலாம்.40
  • goal எல்லைக்குள் (goal area) indirect kick கிடைக்குமாயின், எதிர் அணியினர் அந்த எல்லைக்குள் விரும்பிய இடத்தில் நிற்கலாம்.
  • goal எல்லைக்குள் indirect kick  அடிப்பவர் goal lineல் இருந்து 6 யார் வைத்து அடிக்கலாம்.
  • indirect kick அடிப்பவர், வேறு வீரர் அடிக்குமுன்பு மீண்டும் அவர் விளையாட  முடியாது.

விதி 14. தண்டனை  – penalty

41 42

penalty area க்குள் ஒரு வீரர் பெரிய தண்டனைக்குரிய foul போடுவாராயின் எதிர் அணிக்கு penalty kick அடிக்க சந்தர்ப்பம் கொடுக்கப்படும். penalty kick அடிக்கும் வரையும் கோல் காப்பாளரை தவிர மற்றைய வீரர்கள் penalty அரிக்கும் பெனல்டி Arc க்கும் வெளியே நிற்க வேண்டும்.கோவா காப்பாளர் goal line ல் நிற்க வேண்டும்.பந்தை அடிக்கும் வரையும் அவர் அசையக் கூடாது.அப்படி goal காப்பாளர் அசைந்தால் அது கோல் ஆக கணக்கெடுக்கப்படாது. மீண்டும் penalty kick எடுக்க வேண்டும். penalty kick எடுக்க முன்பு எதிராக அடிக்கப்படும் அணியில் ஒருவர் penalty areaக்குள் அல்லது arc க்குள் வந்தால், அப்போது goal அடித்தால் அது goal ஆக கணக்கெடுக்கப்படும். goal ஆக இல்லாவிட்டால்,மீண்டும் அடிக்க சந்தர்ப்பம் கொடுக்கப்படும். அடிக்கும் அணியில்  ஒருவர் அடிக்குமுன்பு உள்ளே வந்தால், அப்போது goal அடித்தால் அது goal ஆக கணக்கெடுக்கப்பட மாட்டது. மீண்டும் penalty kick எடுக்க வேண்டும்.goal ஆக இல்லாவிட்டால் அடிக்கப்படும் அணிக்கு indirect free kick அடிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.இரு அணிகளினதும் வீர்கள் உள்ளே வந்தால், அது goal ஆக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மீண்டும் penalty kick எடுக்க வேண்டும்.penalty kick முன்னோக்கி அடிக்கப்பட வேண்டும்.அடித்தவருக்கு மற்ற ஒருவர் பந்தை அடிக்கும் முன்பு மீண்டும் அடிக்க முடியாது.

43

விதி 15. உள்ளே வீசுதல் – Throw – in

44

வெளி lineக்கு வழியே பந்து போனால் மீண்டும் விளையாட்டை ஆரம்பிக்க பந்தை கையால் உள்ளே வீச வேண்டும்.பந்து வெளியே போகும் போது தொட்ட அணிக்கு எதிர் அணியின்சர்தான் பந்தை உள்ளே வீச வேண்டும். பந்தை வீசும்போது வீசுபவரின் இரு கால்களும் நிலத்தில் இருக்க வேண்டும். இரு கைகளும் தலைக்கு மேல் தூக்கி வீச வேண்டும்.இரு கால்களும் வெளி lineக்கு மேல் அல்லாது வலி lineக்கு வெளியே இருக்க வேண்டும்.வீசுபவர் தந்து இரு கைகளாலும் தலைக்கு பின்னால் இருந்து கையை எடுத்து தலைக்கு மேலால் வீசவேண்டும். வேறு வீரர் பந்தை தொட முன்பு வீசியவர் பந்தை அடிக்க; தொட முடியாது.நேரடியாக பந்தை goalக்குள் வீசி புள்ளியை பெற முடியாது. off side position லிருந்து வீசிய பந்தை ஒரு வீரர் பெற்றாலும் அது off side ஆக முடியாது.

45

விதி 16. .- Goal kick

46

goalக்கு முன்னாள் இருப்பது goal area. ( நாம் இதை out kick என்று கூறுவதுண்டு சரியான சொற்பிரயோகம் “GOAL KICK என்பதாகும்.).

எந்த ஒரு வீரரும் goal kick எடுக்கலாம். எதிர் அணியின் வீரர் goal lineக்கு  மேலால் அடித்தால் மற்ற அணி goal kick எடுக்க வேண்டும்.

47அறைவட்சிக்கு மேல் எந்தப்பக்கம் பந்து வெளியே சென்றதோ அந்தப்பக்கமிருந்து அடிக்க வேண்டும்.அடிக்கும்போது   பந்து, goal areaக்கு வெளியே செல்லும் வரையும் எதிர் அணி வீரர்கள் பெணல்ட்டி areaக்கு வெளியே நிற்க வேண்டும். அடிக்கப்பட்ட பந்து penalty areaக்கு வெளியே செல்லவில்ல எனின் மீண்டும் goal kick எடுக்க வேண்டும். penalty areaக்கு வெளியே செல்ல முன்பு எந்த ஒரு வீரராவது பந்தை அடித்தாலும், மீண்டும் goal kick எடுக்கப்பட வேண்டும். வேறு ஒரு வீரர் பந்தை அடிக்க முன்பு goal kick எடுத்தால் வீரர் மீண்டும் அப்பந்தை அடிக்க முடியாது.ஒரு வீரர் off side positionலிருந்து நேரடியாக goal kick பந்தை பெற்றாலும் அது off side என கொள்ளப்பட மாட்டாது.

48

விதி 17. Corner kick

49

ஒரு அணியின் வீரர் தனது goal காப்பாளர் இருக்கும் பக்கத்தில் உள்ள goal lineக்கு வெளியே பந்தை அடிப்பாராயின் எதிர் அணியினருக்கு corner kick கொடுக்கப்படும்.எந்தப் பக்கம் வெளியே பந்து சென்றதோ அந்தப்பக்கம் உள்ள corner arc க்கு உள்ளே வைத்து corner kick எடுக்கப்பட வேண்டும்.எந்த ஒரு வீரரும் corner kick எடுக்கலாம். நேரடியாக பந்தை goalக்குள் செலுத்தி புள்ளியை பெறலாம்.corner kick எடுப்பவருக்கு 1௦ யார் பின்னால் எந்த ஒரு வீரரும் நிற்க வேண்டும்.ஒரு வீரர் off side positionலிருந்து corner kickஐ பெறுவாராயின் அது off side என கொள்ளப்படமாட்டாது.

கால் பந்தாட்டம் / உதை பந்தாட்டம் விதிகள் இத்தோடு முடிவடிந்தன,

மைதானத்தில் பல positions உண்டு. இவைகளை கீழே காணலாம்.

 மைதானத்தில் வீரர்களின் நிலையும் அந்த இடங்களின் பெயர்களும்.

 5051

 

 VAT

 

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All