Puttalam Online
uncategorized

மாகாண சபை ஒரு வெள்ளை யானை – அமைச்சர் தெரிவிப்பு

Faizar Musthafa13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாண சபை முறைமையானது ஒரு ‘வெள்ளையானை’ போன்றது என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரம் , மாகாண சபைப்  பட்டியலுக்குள் வருவது நாட்டின் இறைமை மற்றும் பொலிஸ் சுயாதீனத்திற்குப்  பெரும் இடைஞ்சலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்துவும் கலந்துகொண்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,

மாகாண சபையானது ஒரு வெள்யை யானையைப்  போன்றதாகும். அதிலிருக்கின்ற அதிகாரங்களின் பிரகாரம் தேர்தலை நடத்தினால் அது நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டிற்குப்  பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

அரசியலமைப்பின் பிரகாரம் இரண்டு மாகாண சபைகளை இணைத்து அதனை ஒரு சபையாக நிர்வகிக்கும் உறுப்புரையைத்  திருத்துவதற்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக, வடக்கு தேர்தல் வியூகம் மற்றும் கிழக்கில் தேர்தல் வியூகம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாகாணம் வடக்காகும். கிழக்கில் தமிழ்,சிங்கள ,முஸ்லிம் இன மக்கள் வாழ்கின்றனர்.

இந்நிலையில் இருமாகாணங்களையும் ஒன்றாக இணைப்பது  கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றவர்களின் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக அமையும்.

அத்துடன்.இரு மாகாணங்களையும் இணைப்பதனால்  கிழக்கு மாகாணத்தில் ஒன்றுகொன்று சமமாக வாழ்கின்ற சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் சிறுபான்மை இனத்தவராக மாற்றப்படுவர். அத்துடன் இன விகிதாசாரங்களிலும் மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் சிங்கள , தமிழ் , முஸ்லிம் மக்களின் இன விகிதாசாரமானது வடக்கு-கிழக்கை இணைப்பதனால் மாற்றமடையும் என்றும் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், வடக்கு கிழக்கிலிருந்து பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை.

சர்வதேசத்தைச்  சேர்ந்தவர்கள் தமிழ் மக்களின்  மீள்குடியேற்றம் தொடர்பில் பாரியளவில் குரல் கொடுத்துவருகின்றனர் எனினும், புலிப்  பயங்கரவாதிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அவர்கள் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரிவருகின்றதே தவிர பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை குடியேற்றுமாறு ஒரு தடவையேனும் கூறவில்லை இதுவும் வன்மையாகக்  கண்டிக்கத்தக்க விடயமாகும் என்றார்.       (  தகவல் : தமிழ் மிரர் )

WAD


One thought on “மாகாண சபை ஒரு வெள்ளை யானை – அமைச்சர் தெரிவிப்பு

  1. இப்பதான் அவருக்கு யானை வெள்ளை எண்டு தெரியுது? அது சரி இவர் எப்போது விமல் வீரவன்சட கட்சியில் சேர்ந்தார்? யானை வெள்ளையோ என்னவோ? எங்களுக்கு எப்பவோ பைசர்ட கலர தெரிஞ்சி போச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All