Puttalam Online
special-articles

சாஹிரா கல்லூரியில் உயர்தரப் பிரிவில் புதிய பாடநெறி

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக ஆக்குவதற்கு மகிந்த சிந்தனை நடவடிக்கை எடுத்துள்ளது. இன் நோக்கத்துக்காக தேவையான மனித வலுவை உருவாக்கும் வகையில் உயர்தர வகுப்பு பாடத்திட்டத்தில் தொழில் நுட்பவியல் துறை  அறிமுகப்படுத்தப்படுகின்றது.

க.பொ.த  உயர்தர பிரிவில்  தற்போது மாணவர்கள் கற்கும் கலை வர்த்தக விஞ்ஞான பிரிவுகளுக்கு  மேலதிகமாக புதிதாக, தொழில் நுட்ப பாடநெறி (Technology Stream)  என்ற ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கல்வி முறையில் இருந்து மாறி,  பிரயோக அறிவுடன் கூடிய, மாறிவரும் உலகுக்குத் தேவையானவர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

ஆரம்பத்தில்  200 பாடசாலைகளிலேயே இது ஆரம்பிக்கப்படுகின்றது. இவற்றுள் எமது புத்தளம் சாஹிரா கல்லூரியும் ஒன்றாகும். இத்துறை ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள் எதிர்காலத்தில் 1 AB super பாடசாலைகள் என அழைக்கப்படும்.

தற்போது க.பொ.த. உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பிரிவில்  22 சதவீதமானோரும்   வர்த்தகப் பிரிவில் 27 சதவீதமானோரும்,  கலைப் பிரிவில் 51 சதவீதமானோரும் கல்வி கற்கின்றனர். உயர்தர கலைப் பிரிவில் சித்தியடைந்தும் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத அநேகர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். கலைப் பட்டதாரிகளும் வேலையற்றுக் காணப்படுகின்றனர்.

தொழினுட்பவியல் பாடவிதானத்தினை அறிமுகப்படுத்துவதன்மூலம் பல்கலைக்கழகத்தில் அல்லது தொழிநுட்பம்  மற்றும் தொழிசார் கல்வியின் போது  மூன்றாம் நிலைக் கல்விக்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.
2016 இல் க.பொ.த உயர்தர விஞ்ஞான கணித பிரிவில்  கற்கும் மாணவர் தொகையினை 40 வீதமானோராக அதிகரிப்பதற்கும், கலைப்பிரிவில் 25 வீதமானோராக குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாடங்கள்:

 1. கட்டாயப்  பாடம்:

தொழில் நுட்பத்துக்காக விஞ்ஞானம் ( Science for Technology)

2. பின்வரும் இரண்டில் ஒன்று
அ. பொறியியல் தொழில்நுட்பவியல் (Engineering Technology)
ஆ. உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology)
3. பின்வரும் பாடங்களுள் ஒன்று

பொருளியல், வணிகக்கல்வி, கணக்கியல்,தகவல் மற்றும் தொடர்பு சாதன தொழில்நுட்பம் தொடர்புசாதனம் மற்றும் ஊடகக்  கற்கை,  ஆங்கிலம், புவியியல், விவசாயம், மனைப்பொருளியல், சித்திரம்.

இதன்மூலம் க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானத் துறைக்கு தகுதிபெறாத மாணவர்களுக்கும் இத்துறையில் பயில சந்தர்பம் வழங்கப்படுகின்றது.

கற்பதற்கான ஆகக் குறைந்த தகைமை:

சாதாரண தரத்தில், கணிதம் விஞ்ஞானம் உட்பட  ஆகக் குறைந்தது ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல். இவற்றுள் யாதாயினும் மூன்று பாடங்களில் திறமை சித்தி இருக்கவேண்டும்.

கற்கும் காலங்களில் பிரயோகப் பயிற்சியினை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன இதற்கான வளங்களும் பாடசாலைகளுக்கு வழங்கப்படும். பிரயோக செயற்பாடுகளுக்காக தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கும் தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கும் அழைத்துச் செல்லப்படுவர். இறுதி மதிப்பீட்டின் போது 25% புள்ளிகள் பயிற்சி நிறுவனங்களில்  வேலைகளுக்கு வழங்கப்படும்.

மேற்படிப்பு : 
1. பல்கலைக் கழக அனுமதி. 
இதற்காக 2015 இல் சகல பல்கலைக்கழகங்களிலும் தொழில் நுட்ப பீடத்தைத் தொடங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அனுமதி வழங்கியுள்ளது
2. புதிதாக ஆரம்பிக்கப்படவிருக்கும் பல்கலை கழக கல்லூரிகளில் அனுமதி. (University College)
(Diploma , Higher  Diploma & Degree)
3. தொழில் நுட்பக் கல்லூரிகளில் அனுமதி.

Subjects Content of Technology system:

Science for Technology:
Microbiology
Biochemistry
Materials and Industries
Recycling of Plastics
Introduction of Ceramics
Glass and Nano Technology
Industrial chemistry/ chemical based Industries in Sri Lanka
Revision of basic Mathematics
Trigonometry
Geometry
Introductory calculus
Descriptive Statistics
Introduction to vectors
Force
Equilibrium of rigid body
Torque
Pressure
Newton’s law
Gravitation
Rotational motion
Computer software Application
Internet/ E mail
Fundamental of Hardware
Basic operation
System & Administration
Properties of material
Fluids
Electronics
Electromagnetism
Heat
Waves
Bio system Technology:
Introduction to bio system technology
Hydrology & meteorology
Soil & hydro relationship
Post- Harvest technology
food formulations
Animal production technology
Plant protection
water lifting
Surveying
Electronic & instrumentation in Bio systems technology
Project
Engineering technology:
Introduction to Engineering Technology
Basic automobile Technology
Basic electric technology
House wiaring
Basic building construction technology
Basic manufacturing technology/ assembly
Engineering drawing
units & measurements
Motion & power transition elements
Heath & safety for technology
Electric machines and power system
Basic electronic & applications
Domestic water supply & sanitation
Fluids machines pumps, tureens
Engineering standers & quality assurance systems
Surveying
Estimating & preparation
Entrepreneurship & Management

 

 


3 thoughts on “சாஹிரா கல்லூரியில் உயர்தரப் பிரிவில் புதிய பாடநெறி

  1. suuni says:

    Go to I Soft ,ரொம்ப நல்ல படிப்பு…..!

  2. Raza Muhammed says:

    can we study Computer Science via this stream?

  3. AAA says:

    I can teach BIOSYSTEM TECHNOLOGY and SCIENCE FOR TECHNOLOGY SUBJECTS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All