Puttalam Online
puttalam-news

“நாங்கள் சிறுவர்கள்” நூல் வெளியீடு – ஓர் அழகிய சுன்னா!

DCIM100MEDIA

புத்தளம் மரிக்கார் வீதியைச் சேர்ந்த    நீர்கொழும்பு, அல்  ஹிலால் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் F.H.A.பத்தாஹ், F.H.பஹ்மான், F.H.பக்கீஹ் சகோதரர்களின்  “நாங்கள் சிறுவர்கள்” நூல் வெளியீடு தமது உறவினர்கள் அன்பர்கள் முன்னிலையில் தாய் வழி பாட்டனாரான இஸ்மாயில் அவர்களால் கடந்த 15.௦6.2௦13 சனிக்கிழமை புத்தளத்தில்  வெளியிட்டு வைக்கப்பட்டது.

DCIM100MEDIA

தமது பாடசாலையில் வழங்கப்பட்ட ஒப்படை தலைப்பான  “WE ARE CHILDREN” என்ற மகுடத்தை மையமாகக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டுள்ளதுடன் மிகச்சிறப்பாக  அச்சிடப்பட்டு குடும்ப மட்டத்தில் ஒரு குட்டி வெளியீட்டு விழா நடத்தப்பட்டது புத்தளத்துக்கு புதிய முன்மாதிரியான விடய மொன்றாகும்.

M.U.F.நஸ்ரின் ஆசிரியையின் வழிகாட்டலுடனும், தங்களது பெற்றோரின் ஊக்குவிப்புடனும் அழகிய முறையில் 1௦ உபதலைப்புகளை கொண்டு இந்நூல்  வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறுவர்களான பத்தாஹ், பஹ்மான், பக்கீஹ் ஆகியோரின் கடின உழைப்புக்கு சான்றாகும்.

20130615_172230_663833

20130615_172230_187030

இந்நூல் வெளியீட்டுக்கு தலைமை தாங்கிய மத்ரசதுல் காஸிமியாவின் முதல்வர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ்  மஹ்மூத்ஆலிம் அவர்களால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது.

“காலாகாலமாக எமதூரில் கல்யாணம், கத்தம், தலை பாதிஹா, மௌலீது, கத்னா சடங்கு  போன்ற நிகழ்வுகளின் போது மட்டுமே உற்றார் உறவினர்கள் அழைக்கப்படுவது பாரம்பரியமாக இருந்தது. இதனை மிகைத்து புதிய ஒரு வழிமுறையை இந்நூல் வெளியீடு நமது ஊருக்கு காட்டி, இப்படியும் ஒரு சந்திப்பை மேற்கொள்ள முடியும் என எல்லோரையும் சிந்திக்க தூண்டியுள்ளது. இது ஒர் அழகிய சுன்னாவாகும் என தனது உரையில் சிலாகித்து குறிப்பிட்டார். அவரின்  உரையை தொடர்ந்து முதல் பிரதி வெளியிட்டு வைக்கப்பட்டது.

20130615_165736_44981220130615_172230_838981

இந்நூலுக்கான விமர்சனத்தை ஆசிரியர் அஷ்ஷெய்க் A.H.H.ஹசீன் நளீமி அவர்கள் வழங்கினார்.

சிறுவர் இலக்கியத்துக்கு தமது படைப்பின் மூலம் பங்காற்றிய முன்மாதிரி மிக்க இச்சிறுவர்கள் மூவரும் Dr.பஸ்லுல் ஹக் பார்சானா தம்பதிகளின் புதல்வர்களாவர்.

 புத்தளம் இவ்வாறான இன்னும் பல முன்மாதிரி சிறுவர்களை காணவேண்டும்.

SAT

DCIM100MEDIA DCIM100MEDIA DCIM100MEDIA DCIM100MEDIA DCIM100MEDIA DCIM100MEDIA DCIM100MEDIA DCIM100MEDIA

 


2 thoughts on ““நாங்கள் சிறுவர்கள்” நூல் வெளியீடு – ஓர் அழகிய சுன்னா!

  1. fazil says:

    சிறுவா்களின் திறமைகள் மாணிக்கக் கற்களைப் போன்றன. அவற்றைக் கண்டெடுத்து பட்டை தீட்டுகின்ற வேலையைத்தான் பெற்றோர்கள் செய்ய வேண்டும். அப்படியான ஒரு வேலையாக இதனை நான் பார்க்கின்றேன். வாழ்த்துக்கள்.
    பாதில் பாரூக்
    மள்வானை

  2. AMAR says:

    சிறுவர்களின் வாழ்வு கல்வித்தேடலில் மட்டும் முடங்கிடாது பெற்றோர் முன்னோரின் வழிகாட்டலுடன் பிர திறமைகளும் வளர்க்கப்பட வேண்டும், அப்போதே அவர்களின் தேடல் முழுமைப்பெறும் இம்முயற்றசிக்கு உயிர் கொடுத்தோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Leave a Reply to AMAR Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All