Puttalam Online
puttalam-news

பனை வேலி (Palmyra Fence )

புத்தளம் கரைத்தீவை சேர்ந்த முன்னாள் பிரதேச உதவி விவசாயப் பணிப்பாளர் SMA அஸீஸ் அவர்களின் சிந்தனையில் உருவான  ஒன்றே  பனை வேலியாகும் (Palmyra Fence ).

எமது  நாட்டின் தேசிய சொத்து யானைகள். அவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதேவேளை யானைகளால் அல்லலுறும் கிராமவாசிகள் ஏராளம். இந்நிலையில் யானைகளால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் அதேவேளை யானைகளும் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையில்  உருவானது தான் இந்தப் பனை வேலி.

1978 இல்  மட்டக்களப்பில் வீசிய சூறாவளிக்குத் தாக்குப்பிடித்தது இந்தப் பனை ஒன்றுதான் என அசீஸ் காக்கா தெரிவிக்கின்றார். பனையில் கருக்கு இருப்பதனால் யானை நெருங்காது எனவும் அவர் கூறுகிறார். ஏனெனில் யானைகள் நிறைந்த வில்பத்து காடுகளில் பனைமரங்கள் நிறையவே நிற்கின்றன.

பனை மரங்களை  நான்கு வரிகளாக “ஸிக் ஸேக்” முறையில் நட்டி வேலி அமைப்பதன் மூலம் பாதுகாப்பை வழங்கி இரு தரப்பினரையும் பாதுகாப்பதுடன் இரு சாராரும் பயன்களையும் பெறலாம்.
உலகில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தினை கெளரவ பஸில் ராஜபக்ஸ அவர்களின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் Practical Action என்ற நிறுவனம் ஏற்றுக்கொண்டு இன்று அதனை சர்வதேசமயப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.
நமது Puttalam online காணொளி (Video) பகுதியில் இதனை விளக்கும் ஆவணப்படம் ஒன்றை நீங்கள் பார்வையிடலாம்.
பிரதேச உதவி விவசாயப் பணிப்பாளர் SMA அஸீஸ் அவர்கள் இத்தகைய பல ஆய்வு முயற்சிகளில் ஆர்வமுள்ளவர் என்பது நாம் அறிந்ததே. Puttalam Online அவரிடமிருந்து இத்தகைய பல விடயங்களை மேலும் எதிபார்கின்றது.
mat


2 thoughts on “பனை வேலி (Palmyra Fence )

  1. hb says:

    இவ்வாறான ஆய்வாளர்கள் புத்தளத்தில் இருப்பதால் மரங்களும் பூத்துக் குலுங்கும். புத்தளமும் பூத்துக் குலுங்கும் .

  2. hb says:

    மாஷா அல்லாஹ். உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All