Puttalam Online
puttalam-news

குத்ஸ் தினம் என்ற பெயரில் உலக முஸ்லிம்களை ஏமாற்றும் சூழ்ச்சி

சுவைர் மீரான்

MA5முஸ்லிம்களைப் பொறுத்தவரை இஸ்லாம் வழங்கியுள்ள மூன்று புனிதத் தலங்களில் மக்காவில் அமைந்துள்ள கஃபா, மதீனாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நபவி ஆகியவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இருப்பது பலஸ்தீனில் அமைந்திருக்கும் முஸ்லிம்களின் ஆரம்ப கிப்லாவாகிய மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும். இது பைத்துல் முகத்தஸ் எனவும் அழைக்கப் படுகின்றது.

ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமையை “குத்ஸ் தினம்” என்ற பெயரில் முஸ்லிம்களிடம் அறிமுகம் செய்யும் முயற்சிகளும், அதன் பின்னணியில், முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லிம்களிடமிருந்து மறைக்கும் சதிகளும் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

மஸ்ஜிதுல் அக்ஸா என்றதும் பலருக்கும் மனதில் தோன்றுவது, ஜொலிக்கும் தங்க நிற மிஹ்ராப் கொண்ட எட்டு மூலை மஸ்ஜித் ஆகும். உண்மையில் அது மஸ்ஜிதுல் அக்ஸா அல்ல.MA3அது மஸ்ஜிதுல் சக்ரா எனப்படும் பள்ளிவாசல் ஆகும். மஸ்ஜிதுல் அக்ஸாவின் வரலாறு மிகப் பழமையானது, நபி சுலைமான் (அலை) அவர்களால் ஜின்களின் துணையுடன் கட்டப்பட்ட தொன்மையான புகழ்பெற்ற வரலாறு அநேகமான முஸ்லிம்கள்  நன்கறிந்த ஒன்றே.

மஸ்ஜிதுல் சக்ரா என்பது, மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து சற்றுத் தொலைவில், ஐந்தாவது உமையா கலிபா அப்த் அல் மாலிக் இப்னு மர்வான் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாகும்.

அப்துல்லாஹ் இப்னு ஷபா அல் யஹுத் என்ற யூத முனாபிக் மூலம் உருவாக்கப்பட்டவர்களே ஷீஆக்கள். ஷீஆக்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலான இரகசிய தொப்புள்கொடி உறவு இன்றுவரை பேணப்பட்டு வருவதாகவே கருதப் படுகின்றது. 

MA61979 இல் பிரான்சில் இருந்த கொமைனி வழிகாட்டுதலில் ஈரானில் புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட்டபொழுது, அது “இஸ்லாமியப் புரட்சி” என்று உலகெங்கும் அறிமுகம் செய்யப்பட்டது. அது உண்மையில் இஸ்லாமியப் புரட்சி அல்ல, வெறும் ஷீஆ புரட்சிதான் என்பதனை முஸ்லிம்கள் மிகவும் தாமதமாகவே உணர்ந்தனர்.

 
 
1988 ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டி என்ற இந்திய எழுத்தாளர் நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் மனைவியர், தோழர்களைக் குறித்து மிக மோசமாக எழுதி “சாத்தானிய வசனங்கள்” என்ற நாவலை வெளியிட்ட பொழுது, அப்போதைய ஈரானின் ஆட்சியாளர் கொமைனி, சல்மான் ருஷ்டிக்கு பகிரங்கமாக மரண தண்டனை விதிப்பதாக பிரகடனம் செய்ததன் மூலம், முஸ்லிம்களின் தலைவர் என்ற நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள முயன்றார்.MA2எனினும், ஷீஆக்களின் வேத நூல்களில், நபிகளாரின் மனைவியர் குறித்தும், தோழர்கள் குறித்தும், சல்மான் ருஷ்டி எழுதியதை விடவும் மிக மோசமாக எழுதப்பட்டுள்ளது என்ற உண்மைகள் தாமதமாக முஸ்லிம்களுக்குத் தெரிய ஆரம்பித்தபொழுது, கொமைனியின் முகமூடி கிழிந்தது மட்டுமல்ல, ஷீஆக்களின் உண்மை முகமும் வெளிப்பட ஆரம்பித்தது.

காலத்திற்குக் காலம் முஸ்லிம்களை ஏமாற்ற  ஷீஆக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே குத்ஸ் தினம் என்ற பெயரில், மஸ்ஜிதுல் அக்ஸாவை விட்டும் முஸ்லிம்களை திசை திருப்பும் நடவடிக்கையும் அமைந்துள்ளது.

MA7மஸ்ஜிதுல் அக்ஸா என்ற பெயரில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு மஸ்ஜிதுல் சக்ராவை அறிமுகம் செய்து, அதனை நம்ப வைப்பதன் மூலம், நாளை யூதர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை முற்றாக அழித்து நாசம் செய்தாலும், முஸ்லிம் உலகம் மஸ்ஜிதுல் சக்ராவைப் பார்த்து திருப்திப்பட்டுக்கொண்டு, மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு நிகழ்ந்த அநியாயத்தை உணர்ந்து கொள்லாமலே இருக்க வேண்டும் என்பதனைத் தவிர வேறென்னதான் ஷீஆக்களின் திட்டமாக இருக்க முடியும்?

முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் நல்லது செய்வது போன்று நயவஞ்சகமாக நடித்துக் கொண்டு, ஷீஆக்கள் யூதர்களுக்குத் துணை போவது குறித்து முஸ்லிம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

MA8உலகம் முழுவதும் உளவாளிகளை கொண்டுள்ள ஈரான், “தவறுதலாக, தெரியாத்தனமாக (கடந்த 35 வருடங்களாக) பிழையான படத்தை பயன்படுத்தி இருக்க முடியும்தானே” என்று யாராவது ஈரானின் சதியை நியாயப்படுத்த முனைவார்களாக இருந்தால், அவர்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருப்பதே நமக்கு நல்லது.

இஸ்லாத்தின் எதிரிகளின் சதிகளை முறியடித்து, இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.

VAT


2 thoughts on “குத்ஸ் தினம் என்ற பெயரில் உலக முஸ்லிம்களை ஏமாற்றும் சூழ்ச்சி

  1. Thaha Muzammil says:

    முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான். குர்’ஆன் 5:54

  2. Thaha Muzammil says:

    சியோனிச அடிவருடிகள் என்று உங்களை ஒளிவுமறைவின்றி அடையாளம் காட்டியதற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All