Puttalam Online
social

தலைப் பிறை விவகாரம் – ஒரு பன்முகப் பார்வை (Updating…..)

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இன்று கதைக்கப்படும் விடயம் தலைப் பிறை தீர்மானம் பற்றியதே. இதுபற்றி பல்வேறு  வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இணையத் தளங்களும் இதற்கு விதி விலக்கல்ல. அவ்வாறான சில இணையத்தள இணைப்புக்களை இங்கு நீங்கள் காணலாம்.

 

  1. கிண்ணியாவில் பிறை கண்டதாக கொழும்பு பெரிய பள்ளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!
  2.  நாட்டில் தலைப் பிறை தென்படவில்லை; வெள்ளிக்கிழமை பெருநாள். – இலங்கை பிறைக் குழு
  3. நாளை பெருநாள் இல்லை; கிண்ணியா, காலி தகவல்கள் நிராகரிப்பு!
  4.  கிண்ணியாவில் பிறை தென்பட்டது உண்மை; இன்று வியாழன் நோன்புப் பெருநாள்! – கிண்ணியா ஜம்மியத்துல் உலமா
  5.  ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிவிப்பு 
  6.  கிண்ணியாவில் பிறை தென்பட்டதாகக் கூறி கிழக்கில் இன்று நோன்புப் பெருநாள் (படங்கள்)
  7.  மக்களிடம் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி கோரிக்கை
  8.  தெளஹீத் ஜமாஅத் பிறை கண்டால் செல்லாதா? 
  9.  பிறை விடயத்தில் தவறு விளைவித்தது யார்?
  10.  பிறை – மார்க்கம் தெரியாதவர்களே சமூகத்தைக் குழப்புகின்றனர்.
  11.  தலைப்பிறை:  சதிவலையில் சிக்கிய உலமா சபை மீது காறித் துப்புவது சரியா ?
  12.  ரவூப் ஹக்கீமுக்கு நோன்புப் பெருநாள் பிறை தொடர்பில் நெருக்கடி!
  13.  பிறை தென்பட்ட சர்ச்சை தொடர்பில் ரிஸ்வி முப்தி அவர்களின் விளக்கம். (Audio)
  14.  வியாழன் பெருநாளா…? நோன்பா…?உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
  15.  நோன்பு பெருநாள்: கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவுக்கு எதிராக நடவடிக்கை
  16.  அது போலியான கடிதம் அல்ல!! – கிண்ணியா ஜம்மியத்துல் உலமா (VIDEO)
  17.  ஷவ்வால் தலைப்பிறை தொடர்பான கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கை!
  18.  ரிஸ்வி முப்தியின் உரைக்கு – கிண்ணியா ஜம்மியத்துல் உலமாவின் பூரண விளக்கம்
  19.  சர்ச்சைக்குள்ளான ஹி1434 ஷவ்வால் தலைப்பிறை விவகாரம் தொடர்பிலான அறிவித்தல்-ஒலிப்பதிவு
  20.  ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத்தினால் இன்று ஜும்ஆவின் பின் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் 
  21.  ரிஸ்வி முப்தி அவர்களின் அறிக்கைக்கு SLTJ யின் மறுப்பு
  22.  ஜம்இய்யதுல் உலமா  பிறைக் குழுவின் விளக்கம் 
  23.  “பிறைக் கணக்கு” ஆகிலுக்கு ஒரு பதில் !
  24.  பிறை விவகாரம்: ஜம்மிய்யதுல் உலமா பிறைக் குழுவின் 2 ஆவது விளக்கம் 
  25.  நீங்கள் கண்ட பிறைக்கு நீங்களே பெருநாள் கொண்டாடுங்கள்? 
  26.  நோன்புப் பெருநாள் பிறை விவகாரம் சில அவதானங்கள்
  27.  ACJU வின் பிறை பார்பதற்கான நிமங்களும் அதன் குறைபாடுகளும் 
  28.  சமூகத்தைப் பிரித்தது யார்  குற்றம் ?
  29.  பெருநாள் விடயத்தில் சமூகத்தை மலினப்படுத்தாது மனப்பாங்குகளை மாற்றுங்கள் 
  30.  பிறை பிரச்சினைக்கு நவீன தீர்வு – உஸ்தாத் MAM மன்ஸூர் 
  31.  தலைப்பிறை: இப்படி அணுகினால் என்ன? ஜுனைத் நளீமி
  32. பிறை விவகாரம் : தவறுகள் நடந்துள்ளன – திருத்தம் வேண்டும்  – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்    
  33. பிறைப் பிரச்சினைகள் தீர இஸ்லாமியக் கலண்டரைப் பின்பற்றுவதே தீர்வாகும்
  34. பிறைத் தீர்மானத்துக்கு எதிரான வாதம் 1
  35. பிறைத் தீர்மானத்துக்கு எதிரான வாதம் 2
  36. மறுக்கப்பட்ட கிண்ணியா தலைப்பிறை ஓர் அலசல் 01
  37. மறுக்கப்பட்ட கிண்ணியா தலைப்பிறை ஓர் அலசல் 02
  38. மறுக்கப்பட்ட கிண்ணியா தலைப்பிறை ஓர் அலசல் 03
  39. பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன. திருத்தம் வேண்டும் – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்  
  40. யூசுப் முப்தியின் விளக்கம் 
  41. இத்துடன் முடித்துக்கொள்கிறேன் – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்   
  42. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடக அறிக்கை
  43. தலைப்பிறை – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதனது கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளையுடன் இணைந்து வெளியிடும் அறிக்கை.
  44. பிறையைத் தீர்­மா­னிக்கும் நியமங்­களை மீள்­ப­ரி­சீ­லிக்க உலமா சபை முடி­வு


13 thoughts on “தலைப் பிறை விவகாரம் – ஒரு பன்முகப் பார்வை (Updating…..)

 1. Mohamed SR. Nisthar says:

  “என் போன்றோர் உங்களை விட்டும் தூரமாகி விடுவோம்,..” என்ன இருந்தாலும் நீங்கள் இப்படி பயங்காட்டுவது சரியில்லை. நீங்கள் இன்று பயங்காட்ட நாளை இன்னொருவர் பயங்காட்ட நம்ம ஊர் இணையம் எப்படி வாழும்?

  மேலும் இன்னும் சுமார் 336 நாட்களில் மீண்டும் நோன்பு வந்துவிடும், இப்போதே அடித்துச் சொல்வேன் அடுத்தவருடமும் இதே பிரச்சினை வரும். இஸ்லாத்தில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கின்றது என்று எல்லாரும் கூடி கூக்குரல் எழுப்புவோம். ஆனால் தீர்வை நோக்கி நகரவே மாட்டோம்.

  எனவே முதலில் இதுவும் சரி, அதுவும் சரி என்று சொல்லுபவர்கள் நளை ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றாலும் சரி, அதுற்கு அடுத்தமாதம் நோன்பு நோற்றாலும் சரி. இங்கு வருடத்தில் ஒருமாதம் நோன்பு நோற்பது முக்கியமே ஒழிய அது இன்ன மாதத்தில் தான் நோற்க வேண்டுமென்பதில்லை என்று சொல்லும் முன்னர் தகுதியில்லாதவர் மரியாதையாக தன் பதவியை துறக்கவேண்டும். இல்லை எனில் எப்படியும் பதவி துறக்கச் செய்யப்படுவார். தலைமை பதவி என்பது தானாக தேடி வரவேண்டுமே தவிர, பலாத்காரத்தில் பிடித்து வைத்திருப்பதில்லை. தலைமைக்கே முன்மாதிரியாக நடக்க தெரியவில்லை என்றால் பின்தொடர்பவர்கள் எப்படி?

 2. இந்த பிறை விடயம் சரியோ பிழையோ இப்போது நம் சமூகம் எதிர் நோக்கி யுள்ள பிரச்சினைகளோடு ஒப்பிடுகையில் இதனை சற்றேனும் பின்போடலாமே என்று தோன்றுகிறது. இதை திரும்ப திரும்ப கதைப்பதில் பிரிவினைகள்தான் அதிகரிக்குமே ஒழிய தீரப் போவதில்லை.சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்ட வேண்டிய உலமாக்கள்தான் இதை பெரிது படுத்தி பிரச்சினையாகுவதாக தோன்றுகிறது. மாற்றானும் இதனை அறிகிறானே என்ற விஷயம் இவர்களுக்கு தெரியாமலில்லை பொது பல சேனாவிலிருந்து தப்பினாலும் ”உலமா சேனா” விலிருந்து நமது சமூகம் தப்புவதுதான் இப்ப உள்ள பெரும் பிரச்சினை. புத்தளம் ஒன லைனுக்கு பணிவான ஒரு வேண்டுகோள். தயவு செய்து பிறை விவகாரம் பற்றிய பதிவை எடுத்து விடுங்கள். அல்லது என் போன்றோர் உங்களை விட்டும் தூரமாகி விடுவோம். அல்லாஹ்வுக்காக அதை செய்யுங்கள். .

  • IBNUHASAN says:

   சமூகத்தை ஒரே இறைவன் ஒரே குர்’ ஆன் ஒரே பிறை என்ற கொடியின் கீழ் கொண்டு வர முடியாத அல்லது அதற்க்காக சிந்தனை செய்து உழைக்காத உங்களைப் போண்ரவர்கள் தூரமாக இருப்பதே முஸ்லிம் சமூகத்த்துக்கு பாதுகாப்பு…….. அதை செய்யுங்கள் …….

 3. EastMufti says:

  பிறை ,,,,
  இறைவன் ஏற்ற்படுத்தியதன் முக்கிய நோக்கம் , காலங்களை , ஆண்டுகளை , நாட்களை, அறிவதற்கே.. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் இருந்த சமுதாயம் , அது அரபு சமுதயமகட்டும் அல்லது ரோம , அல்லது பாரசீக வல்லரசாகட்டும் , அந்த சமுதாயம் அவர்களுக்கு கிடைத்த அறிவை கொண்டே விசயங்களை செய்தேனர். சில துறைகளில் அவர்கள் மிகுந்த அறிய அறிவை பெற்றிருந்தனர்…( இறந்த உடல்களை கெடாது வருடக் கணக்கில் பாது காக்கும் மருத்துவ தஅறிவு )….சில. துறைகளில் சாதரண அனுமான அறிவை மட்டும் பெற்று இருந்தனர்… ( உலகம் தட்டை என்று நம்பி இருந்தது ) .

  . மேலும் பிறையின் வடிவை வைத்தே அந்த கால மக்கள் நாட்களை மாதங்களை அறிந்தனர். இது பொதுவாக இறை தூதர்களின் காலத்தில் நடை முறையாக இருந்த வழி முறை.. .
  இஸ்லாம் மீண்டும் இறுதி தூதரினால் அர்பிகளிடத்தில் முன் வைத்து சில கடமைகளை ஏற்படுத்தியபோது , அதை நிறைவேற்ற மாதம் ,நாள் என்பது மிக அவசியமாக இருந்தது.. இதனால் இறைவனே , சந்திரன், பிறை ஏற்படுத்தபட்ட நோக்கத்தை மக்களுக்கு தெளிவாக வஹி மூலம் அறிவித்தான் . .ஹஜ் , மற்றும் நோன்பு இதன் மூலம் இலகுவாக நடை முறைப்படுத்தப்ப ட்டது…. இதுவே அந்த காலத்து மக்களின் அறிவு தரம் , மற்றும் பிறை நோக்கம் சம்பந்தமான சுருக்க வரலாற்று தகவல்….

  நோன்பு கடமை ஆக்கப்பட்டதும் , நோன்பு ஆரம்பமாகும் மாதத்தை அறிய வேண்டி இருந்த்ததால் , தூதர அவர்கள் அரபியில் கூறினார்கள்……..
  .
  .””. صوموا لرؤيته وأفطروا لرؤيته ” …ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ” ..
  .
  இதுதான் பிறை பார்த்தல் பற்றி வரும் சகல செய்திகளுக்கும் அடிப்படை ஹதீஸ் வாசகம்…

  இந்த் வசனத்தி நபியவர்கள் தெளிவாக , “பார்த்தல்” எனும் பொதுவாக சொல்லப்படும் கருத்தை கொண்ட ., ருஹ்யத் ., என்ற சொல்லை பாவித்து சொல்கின்றார்கள்……

  இது ரசூலுல்லாஹ் சொல்லியபோது , அன்று சஹாபாக்கள் யார் யாருக்கு முடிந்ததோ அவர்கள் பார்த்தார்கள் . பிறை கண்டதும் தூதரிடம் சொன்னார்கள்….. அதை ஏற்று நோன்பை ஆரம்பித்தார்கள்…காரணம் , அன்று கண்ணால் பார்த்தால்தான் பிறை தெரியும் , வேறுவேறு எந்த வழியும் , அறிவும் அவரகளுக்கில்லை என்பது அவரகளுக்கு தெளிவாக தெரிந்திருந்தது……… எனவே கண்ணால் பார்த்தார்கள்.. மாதத்தை தீர்மானித்தார்கள்……..

  இது சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் இருந்த அறிவின் முதிர்ச்சி அடையாத ஒரு சமுதாயத்துக்கு கூறப்பட்டது… இதை நபி அவர்கள் உறுதிப்படுத்தி கூறுகிறார்கள்…….

  “ றஸூலுல்லாஹ அவர்கள் கூறினார்கள், ” நாங்கள் கற்றறியாத மக்கள் ( உம்மி சமுதாயம் ), எழுதவும் கணிக்கவும் நாம் அறியமாட்டோம், சந்திர மாதமானது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டிருக்கும்” ..( புகாரி )..

  இங்கு நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியது , நபி அவர்களின் சமுதாயத்தில் நன்கு ( வஹியை எழுதுவது , மற்றும் வியாபார விசயங்கள் எழுதுவது , ஒப்பந்தங்கள் , கடிதங்கள் எழுதுவது போன்ற ) எழுத படிக்க தெரிந்தவர்கள் இருந்தும் ,நாம் உம்மி சமுதாயம் என கூறி , தொடர்ந்து , சந்திரன் மாதம் பற்றி அதில் வரும் நாட்களை பற்றி கூறுவது , ஏன் ?

  காரணம் நபியவர்கள் , இங்கு பிறை சந்திரனின் தோற்ற வளர்ச்சி படி நிலைகை கனைக்கீட்டு கொள்ள தம் சமுதாயத்தால் முடியாது , அந்த கணக்கிடும் அறிவு தங்களிடம் இல்லை என்பதை சமூகத்துக்கு தெளிவாக எடுத்து சொல்லவே , இப்படி கூறுகிறார்கள் என்பதை நடுநிலையாக ஆழ்ந்து சிந்திப்பவர்கள் ஏற்றுகொள்வார்கள்…….

  அதே நேரம் பிறை சம்பந்தப்பட்ட ஹதீஸ் , என்பது உலக முடிவு வரை உள்ள மக்களுக்கும் பொருந்தும் ஒரு வேண்டுகோள் …. காரணம் இறைவனின் தூதர் கூறியிருக்கிறார்கள்……….. இந்த கட்டளயின் தெளிவான கருத்தை அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட அவர்கள் மிக தெளிவாக அவர்களுக்கு அன்று இருந்த அறிவு க்கேற்றபடி விளங்கி செயல்பட்டனர் அதாவது பிறையை கண்ணால் மட்டும் பார்த்தனர்….

  காலங்கள் உருண்டன , மனிதனின் சிந்தனையை QUR’AAN தூண்டியது. முஸ்லிம்களே ஆராச்சியில் இறங்கினார்கள்..விளைவு இந்த SCINECE , ASTRONOMICAL கண்டுபிடுப்புக்களுக்கு முன்னோடியாயாக் முஸ்லிகள் மாறினார்கள்….. அதன் பின் முஸ்லிகள் தன கடமையை , இறைவனின் காட்டலையை மறந்தனர். ஆட்சி அதிகாரம் மயக்கியது, பலவாறு பிரிந்த்தார்கள் …… இஸ்லாத்தை விட்டும் தூரமானார்கள் ….

  விளைவு….. முஸ்லிம்களுக்கிடையில் போர் , சண்டை……… இதனால் இறைவன் அவர்களை கை விட்டான் … அவர்களில் ஆட்சிகளை பிடுங்கி எறிந்து அவர்கள் தாங்களாக மாறும்வரை விட்டுவிட்டான்..அவர்கள் மாறவில்லை …… இதன் விளைவு அன்று முஸ்லிம்களிடமிருந்த விஞ்சான அறிவை அதன் அடிப்படையை மற்ற யூத ,கிறிஸ்தவர்கள் தெளிவாக கற்று அறிவின் உச்சத்டுக் போய் விட்டனர்….. அதன் கனியை இப்போது நாம் அனுபவித்து கொண்டு இருக்கோம். ………

  எனவே தூதர் அவர்கள் அன்று சொன்ன , “” ஸூமூலி ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி ருஃயத்திஹீ “” , இனை , முதன் முதலில் மொழி பெயர்த்தவர்கள் , தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறு , அரபு சொல்லான , ருஹயத் . என்ற சொல் , முதலில் , இறைவன் எப்படி பயன்படுத்துகின்ற்ரன், நபி அவர்கள் எந்த சந்தர்ப்பத்தில் இதை , எந்த விசயத்துக்கு எப்படி பாவித்தார்கள் , . பாவிக்கப்பட்டது என்ற எந்த ஒரு சிந்தனை ரீதியான ஆய்வின்றி , நேரடியாக , சொல்லுக் சொல் மொழி பெயர்த்து அதை மக்களுக்கு சொன்னதின் விளைவே , இப்போது நாம் அனுபவிக்கும் ஒற்றுமை இல்லா குழப்பத்துக்கு காரணம்..

  முஸ்லிம்கள் எத்தனயும் தீர்மானிக்க முதல் முதல் குர்’ ஆண் கட்டளைகளை அறிந்து அதன் விளக்கங்களை ஆராய்ந்து அதன் பின்னரே அதன் மேலாதிக்க விளக்கமான ஸஹீஹ் ஹதீஸ் களை கவனத்த்தில் எடுக்க வேண்டும்.. பிறை யின் உருவாக்கம் என் இறைவன் எற்ர் படுதித்தி உள்ளான் என்ட குர்’ ஆன் வசனங்கள் பற்றிய அறிவு , , சிந்தனை இல்லாமல் போனதே எல்லா குழப்பத்த்துக்கும் காரணம்…
  நமக்கு சிறு பராயத்த்தில் இருந்து மாவிலவிகளால் சரியான் அறிவுடன் மொழி பெயர்தித்து கூறப்பபட்டதாக இந்த ஹதீஸ் அரபியில் நாம் கேட்டதே இல்லை… மாறாக இந்த ஹதீஸ்ஐ , அன்றைய மவ்லவிகள் ,இன்று , பல SL ஜாமியதுல் உலமா வின் மவ்லவிகள் சொல்வது போல் ,
  , ..பார்த்து நோன்பு பிடி.. பார்த்து நோன்பு திற ….அல்லது …….கண்டு பிடி…….கண்டு திற என்று மொழி பெயர்த்து நம் சமூகத்துக்கு அறிமுகப்படுத்த்டியதால், அன்று இருந்து , இஸ்லாததை தூதர் அவர்கள் கட்டளைப்படி மட்டும் பின்பற்றி வாழவேண்டும் என்ற தூய்மையான சிந்தனை இன்று நம் மனதில் வரும்வரை, …
  இந்த ஹதீஸ் கண்ணால் தான் பிறை பார்த்து அதுவும், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் , ஏன் சில நேரம் வட்டாரத்த்துக்கு வட்டாரம் பிறை பார்க்கணும் , முஸ்லிம் சுதாயம் ஆளுக்காள் பிரிந்து தான் இருக்கணும் என்ற ஒரு நிலயை ஏற்படுத்தி விட்டது…… ( இந்த ஹதீஸை ஒரு சாதாரண பாடசாலை செல்லாத ஒருவரிடம் கேட்டாலும் , சட்டென சொல்வார்..அந்தளவுக்கு இந்த வசனம் மக்களிடையே சொல்லப்பட்டுள்ளது )

  இப்படி நாம் குழப்பப்பட்டு இருப்பதால், உணமையான் இந்த ஹதீஸ்களின் விரிவான சரியான கருத்துக்கள் , மொழிபெயர்ப்பு பற்றி பாப்போம்.. ,,,,,,,,,,,,

  …… ஸூமூலி ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி ருஃயத்திஹீ …………. இதிலுள்ள , … இங்கு நமக்கு , பல SL ஜாமியதுல் உலமா வின் மவ் ; லவிகள் சொல்வது போல் , கண்ணால் பார்க்கணும் என்ற சிந்தனையை உருவாக்குவது..மிக முக்கிய சொல்லான் رؤيت ‘ருஃயத்’ , தான் …….

  ஒரு சொல் சரியான பிரயோகத்தை அறிய , முதிலில் அந்த சொல் , QURANN இல் எப்படி இறைவன் பயன்படுத்தி இருக்கிறான் என்பதை அறிய வேண்டும்.. அதன் பின்தான அது ஹதீஸ் இல எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்க முடியும்…. காரணம் இறைவனின் வேதம் மனிதர்களுக்கு வழிக்காட்டும் நூல் . அதன் மூலமாகத்தான் நாம் செய்திகளை தெளிவாக விளங்க முடியும்.

  மக்கள் எந்தளவுக்கு குர்’ஆனுக்கு முதன் முதலான இடம் கொடுத்து அதன் பின் அதன் மேலதிக விளக்கம் தேவை எனும் நிலையில் உண்மையான ஹதீஸ்களை பயன் படுத்தி அந்த குறிப்பிட்ட விஷயத்தை தெளிவாக அறியும் அளவுக்கு , நேரான வழியில் இருப்பார்கள்..

  .அல்குர்ஆனிலேயே சுமார் 336 இடங்களில் இந்த அரபி பதம் பயன்பட்டுள்ளது (கட்டாயம் பார்த்து அறியவும் )

  சூரா : வசனம் ,
  105:1, 37:102, 22:18,63,65, 3:23, 4:44,49, 51,60,77,
  14:9,24,28, 19:83, 24:41,43, 25:45 , 26:225 , 2:243,246,258,260.

  ( சகோதரர்கள், தங்களை குர் ஆனில் ஆய்வு செய்யும் சிந்தனையை தூண்டுவதற்காக எல்லா வசனங்களையும் தேடி பார்க்குமாறு கேட்கின்றேன்.. நிச்சயம் இந்த வழி முறை மீண்டும் மீண்டும் இறைவனின் வசனங்களை பற்றி சிந்திக்க வழி கோலும் என்பதால் எல்லாவற்றையும் இங்கு எழுதவில்லை )

  எல்லா வசனகளையும் ஆய்வு செய்யும்போது , இந்த சொல்லுக்கு கண்ணால் பார்த்தல் என்ற கருத்து மட்டும்தான் என்று கூறுவது மிக மிக தவறான ஒரு விஷயம் என்பது தெளிவாகும்..மாறாக பார்த்தல், தகவல் மூலம் அறிதல், அவதானத்தின் மூலம் அறிதல் போன்ற பல கருத்துக்களில் இறைவன் பயன்படுத்தி இருப்பது தேட்ட தெளிவாக தெரிய வரும்.

  உதரணத்துக்கு விளங்க….

  பார்த்தல் என்பதற்கு,…….சூரா Bakaraa , எண் 166 ,,

  إِذْ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُوا۟ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ وَرَأَوُا۟ ٱلْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ ٱلْأَسْبَابُ}

  “‘ யாரைப் பின்பற்றினார்களோ அவர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் தண்டனையை காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும். “” ( 2 166 )

  ( குறிப்பு …. இது தவறாக வழி நடத்தும் அனைவருக்கும் பொதுவான எச்சரிக்கை )

  இப்படி பல வசனங்கள் பொதுவாக பார்ப்பதை குறிக்கின்றன…….. ஆனால் எல்லாம அல்ல…….. ஆயினும் ,,,,,

  குறிப்பாக , கண்ணால் பார்த்தல் எனும் சொல்லுக்கு இறைவன் மிக தெளிவான ஒரு சொல்லை கூறுகின்றான்……… சூரா 03, al Imraan , வசனம் 13 … , …..இல்

  {قَدْ كَانَ لَكُمْ ءَايَةٌ فِى فِئَتَيْنِ ٱلْتَقَتَا فِئَةٌ تُقَٰتِلُ فِى سَبِيلِ ٱللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْىَ ٱلْعَيْنِ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِۦ مَن يَشَآءُ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ}…

  .””பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர் ( ராய இல் அயீன் ) இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.”” ..

  எனவே , கண்களால் மட்டும் பார்க்கணும் என்று கூறுவது எனில் , அதுவும் இபாதத் சம்பந்தப்பட்ட ஒரு விசயம் எனில் , அது . رَأْىَ ٱلْعَيْنِ..என்னும் சொல் மூலம் கூறப்பட வேண்டும்……….

  கேள்வி 02 .

  நபியவர்கள் முஸ்லிம் உம்மத்தை , கண்களால் பிறையை பாருங்கள் ஏற்று ஏவிய எதாவது ஒரே ஒரு ஹதீஸ் , அது SAHEEH அல்லது பலவீனமான அல்லது ஒரு பொய்யாக இட்டுகட்டப்பட்ட , ஹதீஸ் மூலம் , பிறை கண்ணால் பார்க்க வேண்டும் என்று அர்த்தமுள்ள ராய இல் அயீன் என்ற சொல்லை உள்ளடக்கிய ஹதீஸ் தர முடியுமா ? அதை நீகள் எழுதி நிரூபிக்கும்போது தெளிவு பெறுவோம்…உங்களுக்கும் அந்த நன்மை கிடைக்கும்…..

  ..மேலும்………

  சூரா , 105 இல் வசனம் 01 இல். .. أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ1.

  யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா…..( 105 ; 01 )

  இங்கு நபியவர்கள் பிறப்பதற்கு முதல் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியை இறைவன் சொல்லும்போது , பார்த்தல் என்று கூறும் அதே சொல் ர ஆ வை பயன்படுத்து கின்றான்…..

  இங்கு தான் சிந்திக்க வேண்டும்…….ஒரு வர பிறக்க முன் நடந்த நிகழ்ச்சியை கண்களால் பார்க்க முடியுமா ? ஒரு போதும் முடியாது…. அப்படி எனில் இதன் சரியான் கருத்து , யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் ( தகவல்கள் மூலம் ) அறிந்து கொள்ளவில்லையா என்பது மிக தெளிவு……

  அறிவது எப்படி, அது பற்றிய தகவல்கள் மூலம் , அதை விசாரித்து மட்டுமே அறிய முடியும்…… எனவே இங்கு ர ஆ சொல்லுக்கு பார்த்தல் என்ற கருத்து மிக மிக தவறு என்பது தெளிவு…..

  ( சில மொழிபெயர்ர்ப்புகளில், அவதானித்தல், CONSIDER என இந்த ர அ எனும் சொல்லுக்கு மொழிபெயர்த்துள்ளனர் , எல்லாவற்றயும் எழுதும்போது மிக மிக நீண்டு விடும் )……..

  பொதுவாக எல்லாவற்றையும் ஆராயும்போது , எல்லா வசனங்களும் இந்த சொல் ர அ வுக்கு கண்ணால் பார்த்தல் கருத்தை சொல்லவில்லை…… எனவே ,

  இதிலிருந்து,

  இந்த , …ருஹ்யத் , என வரும் “” ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ” , ஹதீஸ் இன் சரியான மொழிபெயர்ப்பு, …..
  அதை ( பார்த்து, , அவதனத்தால் கணக்கிட்டு , , தகவலால் அறிந்து ) நோன்பை ஆரம்பியுங்கள்…….. அதை ( பார்த்து, அவதனத்தால் கணக்கிட்டு அறிந்து, , தகவலால் அறிந்து ) நோன்பை முடியுங்கள் ….

  இந்த சொல் பிரயோகத்தில் எந்த கருத்து அந்த காலத்துக்கு துல்லியமாக பொருந்துகிறதோ அதையே நாம் சரியான கருத்தாக எடுத்து அமுல் நடத்த வேண்டும்……. அப்போதுதான் மிக சரியாக இதன கருத்து , அந்த கால அறிவுகேட்டபடி பொருந்திபோகும் .

  அன்று , கண்ணால் பார்க்கும் ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது ……எனவே , கண்ணால் பார்த்தல் என்ற படி அவர்கள் விளங்கி , கண்ணால் பார்த்து , சில நேரம் பார்த்தவர்களின் தகவலால் அறிந்து மாதத்தை தீர்மானித்தனர். அதே மாதிரிதான் இந்த காலத்திலும் செய்ய வேண்டிய தேவை என்ன என்பதை நடுநிலையாக சிந்திப்போம்…… மேலும் ,

  சூரா யயூனுஸ் , வசனம் 05 இல் அள்ழாஹ் கூறுகின்றான்…..
  ..

  .هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

  “”அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு (ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விபரிக்கின்றான்.”” ( yoonus , verse 10 )

  இங்கு நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயம்..இறைவன் சந்திரனை படைத்து அதற்கு பல படித்தரங்களை உண்டாக்குகின்றான் என்பதை சொல்லி அதன் காரனத்தை விளக்கும்போது , காலக் கணக்கை அறிவதற்கு என கூறுவதுடன் ., இப்படி அறிவுள்ள மக்களுக்கு தன அத்தாட்ச்சிகளை விபரிப்பதாக கூறுகிறான்……

  அத்துடன், இங்கு …….ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான் , என தெளிவாக ,பொதுவாக அறிந்து கொள்ளுவதற்கு என கூறுகின்றானே தவிர ,
  ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் கண்ணால் பார்த்து அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான், என கூறவே இல்லை………..
  எனவே அறிவுள்ள மக்கள் தன அறிவுக்கேற்ற்ப காலக் கணக்கை அறிந்து கொள்வார்கள் என்பதை இறைவன் தெளிவாக இங்கு நமக்கு தெரிவிக்கின்றான்.

  நாம் ஒவ்வொருவரும் ஆழமாக மனதில் பதித்துக்கொள்ள வேண்டிய விஷயம் ,
  இப்போது நாம் அன்று தூதர் கூறிய ,. உம்மி சமுதயமல்ல ……. மாறாக் சுமார் 1000 வருடங்களின் பின் எந்த நாட்டில் எந்த நேரத்தில் பிறை தோன்றும், கிரகணம் வரும், வால் வெள்ளி தோன்றும், அது வானில் எத்தனை செக் நிற்கும் என பற் பல விசயங்களை இறைவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லும் துல்லிய அறிவை பெற்றுள்ள அறிவுள்ள சமுதாயம்.,

  இந்த நிலையில், , கண்ணால் மட்டும் பர்ர்த்தல் என்ற கருத்து ஒரு போதும் சரியான கருத்தாக ஆக மாட்டாது…. மாறாக, …… மாறும் சந்திர படி நிலைகளை அவதானத்தால் கணக்கிட்டால் ஆய்ந்து துல்லியமாக அறிந்து …. என்பதே மிக மிக சரியான ஒரு கருத்து என்பதை நாம் மறுக்க முடியாது…….

  இப்படி சரியான அறிவு ஆய்வுடன் அந்த நேரமே சரியாக மொழி பெயர்த்து நமக்கு வழங்கியிருந்தால் நாம் இப்போது மிக தெளிவான அறிவின் அடிப்படயில் ஒற்றுமையாக நோன்பு ஆரம்பித்திருப்போம். .ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி , இஸ்லாமிய கலேண்டேர் ஒற்றை உருவாகி மற்ற சமுதயத்துக்கு உதாரண ஒற்றுமை சமுதாய மாக வாழ்ந்திருக்க முடியும்……

  .ஆனால் நாமோ உருக்கூர் , வீட்டுக்கு வீடு பிரிந்த ஒரு கேவல்மான சமுதாயமாக் மாற காரணம் , விரிவான கருத்தை கொண்டுள்ள ஹதீஸ் இல் உள்ள رؤيت ‘ ருஹ்யத் க்கு, பதத்தை எப்போதும், கண்ணால் மட்டும் பார்ப்பதுதான் என்று மிக தவறாகமொழிபெயர்த்து அதுதான் உண்மை ,அதைதான் பின்பற்ற வேண்டும் என நமக்கு திணிக்கப்பட்டதே காரணம்…

  .எனவே……صوموا لرؤيته وأفطروا لرؤيته “ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ” …….. என்ற ஹதீஸ் இன் சரியான் ஏவலின்படி ,
  தற்போதுள்ள அறிவு நிரம்பிய சமுதாயத்துக்கு ஏற்றாபோல் .(அறிவால், ஆய்வால்,, கணக்கீட்டால் , அவதனத்தால் ) அறிந்து, , நோன்பை ஆரம்பித்து அதே வழியில் முடிப்போம்……. முடிக்க வேண்டும்……

  ஆனால் , பல பேர் பல ஹதீஸ்களை வைத்து கண்ணால் பார்க்கணும் கண்ணால் பார்க்கணும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார்களே ஒழியே , உண்மையான ஹதீஸ்க ளின் கருத்தை இறைவனின் வார்த்தைகளுடன் ஒப்பிட்டு விளங்கப்படுத்தி எழுதாது எதை எதையோ
  மக்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள்..அத்துடன் பத்வாவும் எழுதி விடுகின்றனர்…
  மற்ற எல்லா ஹதீஸ்களும் , இந்த மூல ஹதீஸ் முன் , இன்றைய விஞ்சான அறிவுள்ள சமுதாயத்தின் முன் அர்த்தம் அற்றவையாக ஆகிவிடுவதை , சிந்திப்பவர்கள் உணர்வார்கள்……….

  கேள்வி 03 …,
  ஒரு நகரில் சுமார் ஐம்பதாயிரம் பேர் உள்ளனர் என்று வைத்து கொள்வோம்…… இந்த பிறை பற்றி நாம் சொல்வதே சரி என மக்களுக்கு போதித்து அவர்களை சிந்திக்க விடாது , சிந்திக்க சொல்லாது, ஒவ்வொரு குழுவாக பிரிந்து , ஆளுக்கொரு நாள் நோன்பு பிடித்த் பெருநாள் கொண்டாடுவது , உண்மையான இறைவனின் கட்டளையாகவும் , அழகான இஸ்லாமிய வாழ்க்கை நெறியாக இருக்குமா ??
  அல்லது,
  இந்த ஐம்பதாயிரம் பேரும் ஒரே நாளில் நோன்பு பிடித்து ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவது உண்மையான இறைவனின் கட்டளையாகவும் , அழகான இஸ்லாமிய வாழ்க்கை நெறியாக இருக்குமா ??
  .

  சகோதரர்கள், இந்த ஆய் வை ஆழமாக சிந்தித்து ஒரு இஸ்லாமிய கலண்டர் உருவாக்கி இஸ்லாத்த்தின் அறிவியலை இந்த உலகில் நிலை நிறுத்த்த முன்வர வேண்டும் எண்டு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்…
  ……… ……….MAY ALLAAH GUIDE US…………………

 4. கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
  முஸ்லிம்கள் ரமழான் மாதத்தைத் துவங்கவும், நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் தினங்களை தீர்மானிப்பதற்கும், பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்த்தே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது என்ற தவறான சிந்தனை மக்கள் மனதில் மிகமிக ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது. இப்பிறை பிரச்சனையை மையமாக வைத்து நம் முஸ்லிம் சமுதாயம் பல்வேறு குழுக்களாக சல்லடைபோல இன்று பிரிக்கப்பட்டுவிட்டது.
  இவ்வாறு பிறந்த பிறையை முஸ்லிம்கள் புறக்கண்ணால் மட்டுமே பார்த்து அமல் செய்யவேண்டும் அதுதான் நபிவழி என்றும், அதற்கு ஆதாரமாக சில நபிமொழிகளுக்குத் தவறான விளக்கங்களும், மொழியாக்கங்களும் கொடுக்கப்பட்டு மக்கள் மன்றத்தில் பல ஆண்டுகளாக போதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய நபிமொழிகளை குர்ஆன் சுன்னா வழியில் ஆய்வு செய்து மக்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலை தெரிவிப்பதே இந்திய ஹிஜ்ரி கமிட்டி நோக்கம்.
  இன்னும் இந்த பிறை சம்பந்தமாக ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களும் அவரவருக்கென்று புதிது புதிதான நிலைபாடுகளை உருவாக்கியும், உருவாக்கி கொண்டும் உள்ளனர். பிறையும் புறக்கண்ணும் என்ற இந்த ஆய்விற்குள் நுழைவதற்கு முன்னர், உலக முஸ்லிம்களில் பலர் இஸ்லாமிய மாதங்களை எந்தெந்த முறையில் ஆரம்பிக்கிறார்கள் என்பதை முதலில் அறிய கடமைப்பட்டுள்ளோம்.
  1-வது கருத்து: ஒரு மாதத்தை ஆரம்பிப்பதற்கு பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் காணவேண்டும்,அல்லது சர்வதேச அளவில் எந்தப் பகுதியிலாவது முஸ்லிம்கள் பிறந்த பிறையைப் பார்த்த தகவல் கிடைக்கப் பெறவேண்டும். அவ்வாறு பிறந்த பிறையைக் கண்டாலோ, தகவலைப் பெற்றாலோ அதற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள் ஆகும். இதை சர்வதேசப்பிறை நிலைபாடு (International Sighting) என்று கூறுகின்றனர்.
  2-வது கருத்து: எந்த ஊரில் புறக்கண்ணால் பிறை பார்க்கப்பட்டதோ அது அந்த ஊரைச் சேர்ந்தவர்களை மட்டுமே கட்டுப்படுத்தும். அவரவர்கள் தத்தமது பகுதியில்தான் பிறையை பார்க்கவேண்டும். அவ்வாறு பிறை பார்த்த நாளுக்கு அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாக ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த நிலைபாடு தத்தமதுபகுதி (Local Sighting)பிறை நிலைபாடு என்று அறியத்தருகின்றனர்.
  3-வது கருத்து: இன்னும் நாம் மக்காவை நோக்கியே தொழுகிறோம். ஹஜ்ஜை நிறைவேற்ற நாம் அங்குதான் செல்கிறோம். எனவே மக்காவைத்தான் நாம் பிறைபார்ப்பதற்கு அளவுகோளாகக் கொள்ளவேண்டும். எனவே சவூதி அரேபியா அரசாங்கம் என்றைய தினம் ரமழான் மாதத்தையும், ஹஜ் மாதத்தையும் அறிவிக்கிறதோ அன்றைய தினம்தான் உலக முஸ்லீம்கள் அனைவரும் தங்கள் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். இது சவூதி அரேபியாவின் (Following Saudi Arabia)பிறைத் தகவலை ஏற்று பின்பற்றி வருபவர்களின் நிலைபாடாகும்.
  4-வது கருத்து: சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் சங்கமம் என்ற நிகழ்வு (The geocentric conjunction occurs before Sunset) சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஏற்பட்டு, சவூதி அரேபியாவின் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் (The Moon sets after the Sun) ஏற்பட்டால் அதற்கு அடுத்த நாள் சந்திர மாதத்தின் புதிய நாளாகும். இந்த நிலைபாட்டிற்கு இம்கானே ருஃயத் என்று பெயர். இதை கடந்த ஹிஜ்ரி 1423 ஆம் வருடம் முதல் சவூதி அரசாங்கம் தங்கள் பிறை நிலைபாடுகளில் ஒன்றாக பின்பற்றினர். அதன்பின்னர் நண்பகல் 3.00மணிக்குள் சங்கமம் நிகழ்ந்தால் அதற்கு அடுத்த நாள் மாதத்தின் புதிய நாளாக கணக்கிடவேண்டும் என்ற புதிய நிலைபாட்டையும் பின்பற்றினர
  5-வது கருத்து: பிறையை 29-ஆம் நாள் மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்க்க முயற்சிக்க வேண்டும். அந்தநாளில் மேகமூட்டமாக இருந்து பிறையை பார்க்க முடியவில்லை என்றால் அந்த மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்யவேண்டும். அந்த முப்பதாவது நாளுக்குப் பின்னர் பிறையை புறக்கண்ணால் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு அடுத்தநாள் புதிய மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். நாம் வாழும் நாட்டிற்கு கிழக்கு திசையில் அமைந்திருக்கும் நாடுகளில் பிறைபார்த்த தகவல் கிடைத்தால் ஏற்கலாம். ஆனால் மேற்கு திசையிலிருக்கும் நாடுகளில் பிறைபார்த்த தகவல் வந்தால் ஏற்கக்கூடாது. இப்படி ஒருசாரார் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.
  6-வது கருத்து: ஒரு ஊரில் பார்க்கப்பட்ட பிறை அருகிலுள்ள ஊர்களுக்கு மட்டுமே பொருந்தும், மிக தொலைவிலுள்ள ஊர்களுக்கு அது பொருந்தாது. எனவே எந்த ஊரில் பிறை புறக்கண்ணால் பார்க்கப்பட்டதோ அது அந்த ஊரிலிருந்து குறிப்பிட்ட கிலோமீட்டர் சுற்றளவுள்ள பகுதி மக்கள் மட்டும் அடுத்த நாளை முதல் நாளாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு இன்னொரு சாரார் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.
  7-வது கருத்து: ஒரு ஊரில் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த ஊரைச் சார்ந்தவர்கள் அனைவரும் அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ளலாம் என்று சிலர் மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள்.
  8-வது கருத்து: இன்னும் சிலரோ சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒரு சில நிமிடங்கள் தாமதமாக சந்திர அஸ்தமனம் ஏற்பட்டு அது புறக்கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மாதங்களை ஆரம்பித்து வருகிறார்கள். இந்த நிலைபாட்டிற்கு மக்கா (Makkah Date Line) தேதிக்கோடு என்று கூறிக்கொள்கின்றனர். இதே வழிமுறையை சிலர் அவரவர்கள் பகுதியிலும் தற்போது பின்பற்ற துவங்கிவிட்டனர்.
  9-வது கருத்து: அவரவர்களுடைய நாட்டில் ஃபஜ்ர் நேரத்திற்கு முன் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வரும் சங்கமம் என்ற நிகழ்வு (geocentric Conjunction occurs before Dawn) நடைபெற்றால் ஃபஜ்ருக்கு பிறகு ஆரம்பிக்கும் நாள் மாதத்தின் முதல் நாள் என முடிவு செய்து பின்பற்றி வருகிறார்கள். லிபியா போன்ற அரபு நாடுகள் இந்த முறையை பின்பற்றிவருகிறார்கள்.
  10-வது கருத்து: ரமழான் மாத நோன்பை துவங்குவதற்கும், ஷவ்வால் மாதத்தை துவங்குவதற்கும் சர்வதேச பிறை நிலைபாட்டையும், ஹஜ் மாதத்தை துவங்குவதற்கு சவூதி அரசாங்க முடிவையும் ஏற்று சிலர் செயல்படுகின்றனர்.
  இறுதியாக சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகளை அறிந்து மாதங்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்க வேண்டும் என ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பிரச்சாரம் செய்தும் பின்பற்றியும் வருகிறோம்.
  இதில் எந்த சாராரின் கூற்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த அடிப்படையில் உள்ளது என்பதை நாம் சிந்தித்து ஆராய்ந்து பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம். மேற்கண்ட நிலைபாடுகளில் ஹிஜ்ரி கமிட்டியினராகிய நமது நிலைபாட்டைத் தவிர்த்து மற்றவைகள் அனைத்தும் பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்களால் பார்க்கவேண்டும் என்ற நம்பிக்கையின் விளைவாக ஏற்பட்டவைகளே.
  ஆகவே இத்தனை பிறை நிலைபாடுகளையும் நாம் ஆராய்வதாக இருந்தால் அதுபற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறது? என்பதை அறிந்திட முக்கியமாக ரமழான் மற்றும் பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? என்பதை முதலில் தெளிவாக விளங்கிட வேண்டும். அதைத்தெரிந்து கொண்டாலே எது சத்தியம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கிடும் இன்ஷாஅல்லாஹ்.
  மேலும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வு இருக்கின்றது என இஸ்லாமியர்கள் கூறிவரும் நிலையில், நாட்காட்டி முறையில் பல்லாண்டு காலமாக குழப்பம் நிலவிவருவதை நாம் கண்கூடாக பார்த்தே வருகின்றோம். எனினும் இஸ்லாம் அனைத்து துறைகளிலும் குழப்பமேயில்லாத தெளிவான வழியை மனித சமுதாயத்திற்கு காட்டும் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
  இந்நிலையில் இஸ்லாத்தில் நாட்காட்டி முறையைப்பற்றி கூறப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்தபோது, இஸ்லாத்தில் கூறப்பட்ட நாட்காட்டி முறைமையை, இஸ்லாத்தின் எதிரிகளால் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்ததை நாம் உணர முடிந்தது.
  எனவே குர்ஆன் மற்றும் தூதரின் வழிகாட்டுதல்களை சிந்தித்து, மனித குலத்திற்காக இறைவன் அருளிய சந்திர நாட்காட்டியை ஆய்வு செய்து நடைமுறைபடுத்துவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட கமிட்டிதான் ஹிஜ்ரி கமிட்டி.
  ஹிஜ்ரி கமிட்டி என்பது ஒரு இயக்கமோ, அமைப்போ, அறக்கட்டளையோ, ஆர்ஹனைசேஷனோ, டிரஸ்டோ அல்லது சொசைஸ்டியோ அல்ல. ஹிஜ்ரி கமிட்டி தேவைப்படும் போது மக்களை கூட்டி தற்காலிகமாக ஒரு பொருப்பாளரை ஏற்படுத்தி இஸ்லாம் கூறும் சந்திர நாட்காட்டிபற்றி பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து சரியானதை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கும் ஒரு தற்காலிக குழு தான்.!
  இந்த கமிட்டி பிற ஜமாஅத்துகளை அமைப்புகளை மற்றும் இயக்கங்களை திட்டவோ, கேவலப்படுத்தவோ உருவாக்கப்படவில்லை. ஆய்வுபணிகளை மிகச்சரியாக மேற்கொண்டு அவற்றை அழகிய முறையில், நளினமான வார்த்தையில் எடுத்துரைக்கும் ஒரு கமிட்டி. ஆய்வில் தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் அதை பரீசீலித்து அது சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உடனடியாக முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் ஒரு கமிட்டிதான் இது.
  நாம் எதை செய்கிறோமோ அதை தான் சொல்லவேண்டும் என்ற இறை தத்துவத்திற்கு ஏற்ப அல்லாஹ் திருமறையில் கூறியுள்ள கணக்கின் அடிப்படையில் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளை செய்து வர மக்களுக்கு உதவி செய்து வருகிறது ஹிஜ்ரி கமிட்டி.
  சரியான நாளில் பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சக்திக்கு உட்பட்டு ஹிஜ்ரி கமிட்டி பல இடங்களில் செய்து வருகிறது. அல்லாஹ்வின் மார்க்கம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் ஹிஜ்ரி கமிட்டி செயல்படுகின்றது.
  மேலும் பிறை நிலைபாட்டில் எவ்வகையில் எல்லாம் தமிழ் பேசும் மக்கள் ஆய்வு செய்தார்கள், மக்களிடம் அதை எவ்வாறு பிரச்சாரம் செய்தார்கள், என்பதை எல்லாம் இத்தளத்தின் மூலம் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த இணைய தளத்தை ஹிஜ்ரி கமிட்டி நடத்திவருகின்றது. ஹிஜ்ரி கமிட்டியின் கருத்துக்கு உடன்பட்டோர்கள் எதிர்ப்பாளர்கள் என அனைவரது கருத்துக்களும் இருட்டடிப்பு செய்யாமல் இத்தளத்தில் பதியப்படுவதால் உண்மை எது தவறு எது என்பதை சிந்தித்து விளங்கலாம்.
  எங்கள் ஆய்வுகளை பரீசீலனை செய்து, அது இறைவனின் வார்த்தைகளான குர்ஆனுக்கு உடன்பாடாக இருந்தால், எங்கள் ஆய்வை நீங்களும் சிந்தித்து ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவும். எதை ஆய்வு செய்து உண்மை என அறிந்து கொண்டோமோ, அதை நாங்களும் நடைமுறைப்படுத்துவதோடு, நாங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்லு்ம் இஸ்லாமிய நாட்காட்டி கொள்கையில் ஹிஜ்ரி கமிட்டி கடைசி வரை உறுதியாக நிற்கும். எங்கள் உறுதிக்காகவும், நல்ல முறையில் சத்தியத்தை தெளிவுபடுத்தும் ஞானத்தை எங்களுக்கும் உங்களுக்கும் வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் படி ஹிஜ்ரி கமிட்டி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.
  இப்படிக்கு
  நிர்வாகம்
  ஹிஜ்ரி கமிட்டி
  Head Office: 7/858B, AWH Building, S.M. Street, Kozhikode, KERALA – 673001.
  State Office:-160/101, North Main Road, Eruvadi – 627103, Tirunelveli District., Tamilnadu, India.
  Websites: http://www.mooncalendar.in
  Gmail: hijricommittee@gmail.com

 5. m md mohideen says:

  கிண்ணியாவில் பிறை பார்க்கப்பட்டதாக சொல்லப்படுவது தவறான செய்தியாகும்.
  ஜமாத்துல் உலமா சபையின் முடிவு மிக சரியாகும். அல்ஹம்துலில்லாஹ்.

 6. முகம்மத் says:

  கிண்ணியா உலமா சபை தலைவரினால் நேற்று வெள்ளிக்கிழமை (09.08.2013) மேற்கொள்ளப்பட்ட ஜும்ஆ ஒலிப்பதிவு.

  இதில் ஷவ்வால் மாத தலைப்பிறை கிண்ணியாவில் காணப்பட்டது மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கு அறிவிக்கப் பட்டது அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பித்தலாட்டம் தொடர்பான விளக்கம் தெளிவு படுத்தப் படுகின்றது. ஜும்மா பயானை கேட்க கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்யவும்

  http://kattankudi.info/2013/08/10/5397

 7. A.R.M.Akram says:

  நம் நாட்டுக்கு மட்டும் ஒரு பிறை. அயல் நாட்டில் பிறை கண்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்பது தான் அ.இ.ஜ.உ மாவின் பொலிசியாக இதுவரை காலமும் இதுந்தது. முஸ்லிம் சமூகத்தை பிளவு படுத்த வேண்டாம் என கூறிக்கொண்டே அண்டய நாட்டு முஸ்லிம்களை விட்டும் நம்மை பிரித்தும் பிளவு படித்தியும் வைத்திருந்தது. 30 வருட கால யுத்தத்தின் பின் இலங்கை நாட்டை இரண்டாக பிரிக்க போராடிய பிரிவினை வாதிகளை நம் நாட்டு இராணுவம் தோற்கடித்து நாட்டின் இறமையை பாதுகாத்து தந்துள்ள இவ்வேளையில் ஜமியதுல் உலமா தலைமயகம் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது போல் கின்னியாவை வேரு படுத்தி அங்கே கண்ட பிறையை ஏற்க மறுத்துவிட்டது. ஆக இப்ப கின்னியா,மூதூர் பகுதிகளை நம்மை விட்டும் பிரித்து விட்டு ஒத்துமையைப்பற்றி பேசுகிறது.

 8. muhammad says:

  ரிஸ்வி முப்தியின் உரை ஒரு ஆலிமின் உரை என்பதைவிட ஒரு அரசியல்வாதியின் உரையைப்போன்றே இருந்தது. தனது அதிகாரத்தை யாரும் கேள்விகேட்கக்கூடாது. நாம்தான் சமூகத்தின் அறிவாளிகள். அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ தமது அதிகாரத்துக்கே கட்டுப்பட வேண்டும் என்றுதான் திரும்பத் திரும்பச் சொன்னார்.

  அவரது பிறை நிராகரிப்புக்காக முன்வைத்த காரணங்கள் பல முரண்பாடுகளின் மூட்டையாகவே இருக்கிறது.

  ஒரு ஆலிமிடம் இருக்கவேண்டிய பணிவும் தக்வாவையும்விட ஒரு அரசியல்வாதியிடம் இருக்கும் எதேச்சாதிகாரத் தொனிதான் அவரில் அதிகம் வெளிப்பட்டது.

 9. ashrof says:

  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கிண்ணியா கிளை இன்று வியாழக்கிழமை கிண்ணியாவில் பெருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற முடிவை எடுத்ததற்கான நியாயங்கள்.

  1. நோன்பு 29இல் 07.08.2013 இல் பிறை பார்க்கும் வேண்டுகோளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, கொழும்பு பெரிய பள்ளியும் விடுத்ததற்கிணங்க கிண்ணியாவில் பிறையை கண்ட மக்கள் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையின் பிறைக்குழுப் பொறுப்பாளர் ஏ.எஸ். ஜாபிர் நளீமியிடம் தெரிவித்தனர். இதற்கிணங்க தேசிய பிறைக்குழுச் செயலாளர் அப்துல் அஸீஸ் மௌலவியை கொழும்பு பெரியபள்ளியில் தொடர்பு கொண்டு பி.ப. 6.58 மணியளவில் விடயத்தை தெளிவுபடுத்தினார். இதில் அவர் பிறை கண்டவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கலந்துரையாடவும், சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். பெரியாற்றுமுனையில் பிறை கண்டவர்களுடனான இந்தச் சம்பவத்தை பிறைக்குழு ஏற்கவில்லை.
  2. இதன் பின் இன்னும் பல இடங்களில் பிறைகண்ட பொதுமக்கள் ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளையை நாடினர். இவர்களில் ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளிவாயல் இமாம் மௌலவி எம்.ஏ.எம். றியாஸ் மற்றும் மஹல்லாவாசிகள் 10 பேரும் கண்டதாக குறிப்பிட்டார்கள்.
  3. இவ்வாறு இன்னும் பல இடங்களில் பிறை கண்ட 25க்கு மேற்பட்ட கிண்ணியா பிரதேச மக்கள் பிறைக் குழுவிற்கு அறிவித்தனர்.
  4. இந்நேரத்தில் பெரியாற்றுமுனையில் பிறைகண்ட பொதுமக்களைப் பேட்டிகாணுவதற்காக மேமன் சங்கத்தின் 2 பேர் சமூகம் தந்ததை நளீமி ஜாபிர் உறுதிப்படுத்தினார். மக்களுடன் தமிழில் உரையாடிய இவர்கள் பிறைக்குழுவிற்கு அறிவிக்கும்போது மேமன் (பாய்) மொழியில் பேசியதாகவும் குறிப்பிட்டார். இது மக்களுக்கும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
  5. ஆனால், மேமன் சங்கத்தில் இருந்து வருகை தந்தவர்கள் முக்கிய சாட்சியான றியாஸ் மௌலவியிடம் தகவல் பெறாமலும் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையை சந்திக்காமலும் உடனடியாக கிண்ணியாவை விட்டு வெளியேறி விட்டதை பின்னர் அறிந்தோம்.
  6. இதன் பின்னர் பிறைகண்டதாக உறுதிப்படுத்தி ஐந்து பேரின் பெயரும் தொலைபேசி இலக்கம், வயது போன்ற தகவல்களும் பிறைக்குழுவிற்கு வழங்கப்பட்டது. அவர்களும் இவர்களுடன் போனில் உறையாடினர். இதன் மூலம் நல்ல முடிவு ஒன்றுவரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் இரவு 9.00 மணிக்குப் பிறகு பெருநாள் இல்லை என்ற எதிர்பாராத முடிவு அறிவிக்கப்பட்டது.
  7. இதன் பின்னர் ஊர் பிரமுகர்கள், தஃவா பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க உலமா சபை தனது அலுவலகத்தில் உடனடியாக ஒன்றுகூடலை நடத்தியது.
  8. முக்கியமாக பிறை கண்ட சாட்சிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மௌலவி ஹஸன் அஸ்ஹரி அவர்கள் நேரடியாக கொண்டுவந்து உறுதிப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்று சபை முன்னிலையில் அவர்கள் தாங்கள் பிறைகண்டதை உறுதிப்படுத்தி சத்தியம் செய்வதற்கும் தயார் என எல்லோரும் உறுதியாக கூறினர்.
  9. பிறை விடயத்தில் சபையோர் அனைவருக்கும் உறுதியான நம்பிக்கை ஏற்பட்டதன் பின் பெருநாள் என தீர்மானிக்கப்பட்டது. எமது ஊரில் நாம் பெருநாளைக் கொண்டாட கலந்து கொண்ட பிரதிநிதிகளின் ஒப்பமும் பெறப்பட்டது.
  10. இதன் பின் இந்த முடிவு தொடர்பான அறிக்கை அந்த இரவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு தொலை நகல் (குயஒ) அனுப்பப்பட்டது.
  11. இவ்வறிக்கையில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபை கிளையின் தலைவர் ஜனாப் ஏ.எம். ஹிதாயதுல்லாஹ் (நளீமி) மற்றும் தற்போதைய செயலாளர் எம்.எஸ்.எம். ஷபாஅத் (மதனி) ஆகியோர் ஒப்பமிட்டனர். இந்த முடிவுகள் அனைத்தும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் தலைவர் ஜனாப் ஏ.ஆர்.எம். நஸார் மௌலவி அவர்களின் முன்னிலையில் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.////

 10. பிறை விடயத்தில் திரைமறைவில் என்னதான் நடக்கிறது…?
  http://weligamaenews.blogspot.com/2013/08/blog-post_5736.html#more

 11. Mohamed SR Nisthar says:

  அண்மையில் நிறுவப்பட்ட தேசிய ஸூரா சபை இந்த பிறை விடயத்தில் எல்லாம் தலையிடாதோ? அடடடா, மறந்தே போய்விட்டேன், சின்ன விடயங்களை பெரிது படுத்தினால் ஜனாதிபதிக்கு கோபம் வரும் என்று தெரிந்திருந்தும், முஸ்லிம்களின் மஹியங்கனை, தம்புள்ள போன்ற பள்ளிகள், அதாவது சின்ன சின்ன பிரச்சினை எல்லாம் பெரிதாக்கி ஜனாதிபதிக்கு மகஜர் கொடுக்க அமைக்கப்பட்ட தேசிய சபைக்கு இந்த பிறை விடயம் அற்பம். ஆகவேதான் அதில் தலையிடவில்லை. ஜ. உ.சபையும், த. ஜ மாத்தும் மக்களை குழப்போ குழப்பென்று குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ யூ. கே யில் நாங்கள் இன்று பெருநாள் கொண்டாடி ளுகரும் முடிந்துவிட்டது. புத்தளத்தில் இன்று பெருநாள் கொண்டாடுவோருக்கு பிந்திய வாழ்த்தும், நாளை கொண்டாடுவோருக்கு முனைய வாழ்த்தும் கூறுகிறேன். ஹெப்பி ஈத்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All