Puttalam Online
puttalam-news

உங்கள் சிந்தனைக்கு ஒரு விருந்து!

fullmoon

Full Moon

இன்று (21.08.2013)மக்ரிபில் முழு நிலவு காட்சியளிக்கின்றது 30 நாட்களை கொண்ட மாதத்தில் முழு நிலவு, பிறை 15 ல் தான் தோன்றும், இது அல்லாஹ்வின் ஏற்ற்பாடு, இதன்படி முதல் பிறைக்குரிய நாள் கடந்த 07.08.2013 என்பது நிச்சயம். எனவே முதல் பிறைக்குரிய நாளாகிய 07.08.2013 புதன் கிழமைதான் நோன்பு பெருநாள் தினம், இது தெளிவான உண்மையாகும்.

கடந்த 07.08.2013 புதன் அன்று மாலை மறையும் பிறையைக் கண்டு வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடியதுவும், ஜமியதுல் உலமாவின் அறிவித்தல்படி வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடியதுவும், ஷரியா ப்படி சரியாகுமா? வானில் தெரியும் அல்லாஹ்வின் அத்தாட்சியை மறுக்க முடியுமா?

தெளிவாக ஷவ்வால் பிறை 02லும், 03லும் கொண்டாடிவிட்டு சர்ச்சை வேறு படுகிறோமே கொஞ்சம் சிந்திக்க கூடாதா? கண்ணை திறந்தது வானை நோக்க கூடாதா?

இந்தியாவின் ஹிஜ்ரி கொமிட்டி வெளியிட்டுள்ள கலண்டர் 07..08.2013 அன்றுதான் பெருநாள் என்பதை உறுதி செய்கின்றது 07.08.2013 ல் நோற்ற நோன்பு ஆகுமானதா? 07.08.2013 ல் பெருநாள் கொண்டாடினால் 28 நோன்புதானே வரும் என்ற கேள்வி எழுகிறதா?

உண்மையில் ரமழான் ஆரம்பித்தது 09.07.2013 செவ்வாய் கிழமையாகும் ஆனால் அ. இ. ஜ. உ. 10.07.2013 நோன்பு ஆரம்பிக்கும் என்று கூறியிருந்தது .

தயவு செய்து மதிப்புக்குரிய உலமா பெருமக்கள் விளக்கம் தருவார்களா?

நன்றி

 

விருதோடை இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம்

 

ADM 

 

Related Post:

இஸ்லாமிய கலண்டர் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு முதற்படியாகும்


4 thoughts on “உங்கள் சிந்தனைக்கு ஒரு விருந்து!

 1. Sadiq says:

  தலைப்பிறை சர்ச்சை குறித்து தெளிவு தருகிறார் அஷ்ஷைக் அப்துல் நாசர்.

  செவிமடுக்க:
  http://www.shaikhnazar.net/lectures-HOW-TO-DETERMINE-BEGINNING-AND-END-OF-AN-ISLAMIC-MONTH.php

 2. Hisham Hussain says:

  அடடடடடா … இப்ப நடந்து போச்சு?

  21.07.2013 இல் பிறை 15…. Okay
  இன்ஷாஅல்லாஹ், 06.08.2013 இல் துல் கஃதா பிறை 01…. அதுவும் Okay

  Soooo ….. 05.08.2013 வானத்தை பார்த்தா Problem Solved

  இதுக்குப் போயி அளட்டிக்கலாமா ?

  • Mohamed says:

   சகோதரர், Hisham Hussain

   //அடடடடடா … இப்ப நடந்து போச்சு?
   21.07.2013 இல் பிறை 15…. Okay
   இன்ஷாஅல்லாஹ், 06.08.2013 இல் துல் கஃதா பிறை 01…. அதுவும் Okay
   Soooo ….. 05.08.2013 வானத்தை பார்த்தா Problem Solved
   இதுக்குப் போயி அளட்டிக்கலாமா ?//

   உங்கள் சிந்தனைக்கு சில விடயங்கள்:

   தொடர்ச்சியாக வானத்தை பார்த்திருந்தால் குழப்பம் இருந்திருக்காது! மிக தெளிவாக விளக்கம் கிடைத்திருக்கும்… மேற்குதிசையில் மறையும் பிறையை மட்டும் பார்த்து சர்ச்சை பட்டுக்கொல்கிரோமே….

   நீங்களும் தொடர்ச்சியாக வானத்தை பார்த்திருந்தால்

   ஹிஜ்ரி 1434 – ஷாவ்வல்

   07.08.2013 இல் பிறை 01
   21.08.2013 இல் பிறை 15
   04.09.2013 இல் பிறை 29 (இறுதி பிறை)
   05.09.2013 இல் பிறை (மறைக்கப்பட்டிருக்கும் நாள்)
   ஷாவ்வல் 30 நாட்களை கொண்டிருக்கும்.

   ஹிஜ்ரி 1434 – துல் கஃதா

   06.09.2013 இல் பிறை 01
   20.09.2013 இல் பிறை 15
   04.10.2013 இல் பிறை 29 (இறுதி பிறை)
   05.10.2013 இல் பிறை (மறைக்கப்பட்டிருக்கும் நாள் )
   துல் கஃதா 30 நாட்களை கொண்டிருக்கும்.

   ஹிஜ்ரி 1434 – துல் ஹிஜ்ஜா
   06.10.2013 இல் பிறை 01
   19.10.2013 இல் பிறை 14
   02.11.2013 இல் பிறை 28 (இறுதி பிறை)
   03.11.2013 இல் பிறை (மறைக்கப்பட்டிருக்கும் நாள் )
   துல் ஹிஜ்ஜா 29 நாட்களை கொண்டிருக்கும்

   சகோதரரே அல்குரானையும் சற்று சிந்திப்பீரா!!!

   36:39 وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ
   36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.

   10:5 هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
   10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

   சகோதரரே ஹதீஸ் யும் சற்று சிந்திப்பீரா!!!

   1. ரமழான் மாதத்தை பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நினைவு கூறும் போது அவர்கள் சொன்னார்கள்: பிறையைநீங்கள் கவனிக்காத வரை நோன்பு நோற்காதீர்கள்; மேலும். நீங்கள் அதை கவனிக்காத வரை நோன்பை விடாதீர்கள்;.அது உங்கள் மீது மறைக்கப்படும் போது அதை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். என இப்னு உமர்(ரழி)அவர்கள் அறிவித்துள்ளார்கள். நூல் : புகாரி :1906.

   குறிப்பு : இங்கு கவனிக்காதவரை என்பதற்கு வெறுமனே புறக்கண்களால் பார்க்காதவரை என்று மொழிபெயர்ப்பது தவறாகும்.

   2. ரமழான் மாதத்தை பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நினைவு கூறினார்கள் அப்போது அவர்கள் தன் இரு கைகளை கொண்டு சைகை செய்தார்கள். மாதம் இவ்வாறு இவ்வாறு மேலும் இவ்வாறு இருக்கும் பிறகு மூன்றாவது முறையில் கையின் பெருவிரலை மட்டும் மடக்கி காட்டினார்கள் எனவே நீங்கள் அவைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டு நோன்பு வையுங்கள்; மேலும் நீங்கள் அவைகளின் காட்சியை அடிப்படையாகக் கொண்டு நோன்பை நிறைவு செய்யுங்கள். உங்கள் மீது அது மங்கும் போது அதை நீங்கள் முப்பதாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள். எனஇப்னு உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள். நூல் : முஸ்லிம் :2551.

   குறிப்பு : இங்கு காட்சியை அடிப்படையாகக் கொண்டு என்பதற்கு வெறுமனே புறக்கண்களால் பார்த்து என்று மொழிபெயர்ப்பது தவறாகும்.

 3. Mohamed SR Nisthar says:

  அப்போ லண்டனில இலங்கை போராக்கள் ஆரவாரமின்றி 07.08.13ல் பெருநாள் கொண்ட்டாடியது சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All