பிறைகளை தினமும் அவதானித்து கணக்கிட்டு வந்ததன் அடிப்படையில் இன்று 27.08.2013 செவ்வாய் கிழமை தேய் பிறை 21ம் நாளாகும். நாளை 28.08.2013 தேய் பிறை 22 சூரிய உதயத்திற்கு முன் ஏறத்த்தாழ நடு உச்சியிலும் பாதியை விட சற்று அதிகமான உருவிலும் வானில் தென்படும்.
இன்ஷா அல்லாஹ் எதிவரும் 04.09.2013 புதன் அன்று ஃபஜ்ரின் பின்னர் கிழக்கு வானில் 29ம் நாள் பிறை “உருஜூனில் கதீம்” அதாவது இறுதி பிறை தென்படும். 05.09.2013 அமாவாசை நாளாகும்(CONJUNCTION) 06.09.2013 ல் துல்கஃத முதல் நாள்.
பிறைகளை சர்ச்சையாக பார்கின்ற புத்திஜூவிகல் ஒன்றை சிந்திக்கக்கூடாதா?
இஸ்லாத்தை பரிபூரணமாக்கிய அல்லாஹ், மனித குலத்திற்கான நாட்காட்டியை அஹில்லக்களை கொண்டு அமைத்துள்ளதாக 2:189 ல் கூறுகிறான். இதனை மனித குலத்திற்கு குழறுபடிகள் உள்ளதாக ஆக்கி இருப்பானா (நவூதுபில்லா) “நிச்சயமாக நாம் இந்தக் குர் ஆணை மிக்க எளிதாக்கி வைத்திருக்கிறோம் ஆகவே நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டா?” ஷூரா கமர் (சந்திரன்): 17,22,32,40 ஆகிய நான்கு வசனங்களில் அல்லாஹ் திரும்ப திரும்பக் கூறுவது நம் கண்களை திறக்காதா?
விருதோடை இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம்
ADM
Related Post:
இஸ்லாமிய கலண்டர் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு முதற்படியாகும்