Puttalam Online
puttalam-news

பிறைகளை பார்த்து கணக்கிடுவோம்! பிரிவுகளை களைந்திடுவோம்!!

பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

moons

Moons

பரிசுத்த இறைவேதமாம் திருக்குர்ஆன் அஹில்லா என்று பன்மையில்மட்டும் கூறியுள்ள (2:189) பிறைகளின் அனைத்து வடிவங்களையும் கவனமாக பார்த்தும், துல்லியமாக கணக்கிட்டும் வரவேண்டும் என்றும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளைபடி நோன்பையும், பெருநாட்களையும் அந்த அஹில்லாக்களின் அடிப்படையில்தான் அமைத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பல வருடங்களாக பின்பற்றியும், பிரச்சாரம் செய்தும் வருகிறோம் – அல்ஹம்துலில்லாஹ்.

 பிறைகளை கணக்கிடுங்கள் என்று நாம் சொல்வதை ஏதோ ஏசிஅறையில் உட்கார்ந்து கொண்டு மடிக்கணிணியை தட்டி சொல்வதாக சிலர் நினைத்துக் கொண்டுள்ளனர். தமிழக வரலாற்றில் பல வருடங்களாக பிறைகளின் படித்தரங்களை கவனமாக அவதானிப்பவர்கள் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவருமில்லை என்பதை அறியத்தருகிறோம்.

இதை பெருமைக்காக நாம் சொல்லவில்லை. மாறாக பிறைவிஷயத்தில் அடிப்படை அறிவுகூட இல்லாத சிலர் பிறைகளை புறக்ககண்ணால் மட்டுமே பார்க்கவேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் மக்களை குழப்பி பிளவுபடுத்துகின்றனர் என்பதை அனைவரும் அறிவோம். இவ்வாறு பிளவுபடுத்தி பிரித்தாழும் சூழ்ச்சியைவிட்டும் மக்களை மீட்டெடுக்கத்தான் இந்திய ஹிஜ்ரி கமிட்டி பொதுமக்களுக்கு பிரசுரங்கள் வாயிலாகவும் சத்தியத்தை எடுத்துச் சொல்லி வருகிறது – அல்ஹம்துலில்லாஹ்.

 மக்களே! ஒரு மாதத்தின் முதல்நாளை நாம் சரியாக கணக்கிட வேண்டுமென்றால் முந்திய மாதத்தின் பிறையின் படித்தரங்களில் உள்ள தேய்பிறைகளையாவது கண்டிப்பாக பார்த்து வந்திருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடு பிரயாணத்திற்கு செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். விமானம் புறப்படும் அந்த நேரத்தில் நீங்கள் பிரயாணத்திற்கு தயாராக மாட்டீர்கள். மாறாக பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே அதற்காக தயாராகுவீர்கள், விமானம் புறப்பட சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்தை அடைய முயற்சிப்பீர்கள். அதுபோலத்தான் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை நீங்கள் தெரிந்து பெருநாளை சரியான தினத்தில் கொண்டாட வேணடுமெனில் ரமழான் மாதத்தின் இறுதி நாட்களின் பிறைகளையாவது சரியாக கணக்கிட்டு வந்திருக்க வேண்டும்.

சரி நீங்கள் தேய்பிறைகளை பார்க்காமல் விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பார்க்கின்ற பிறை எந்த நாளை காட்டுகிறது என்பதை தோராயமாக அறிந்து கொள்ளும் வழிமுறையையாவது தெரிந்திருக்க வேண்டும்.

அதாவது ஒரு மாதம் எத்தனை நாட்கள் கொண்டது என்பதை முன்கூட்டியே நாம் தோராயமாக அறிய வேண்டுமானால், மாலை சூரியன் முழுமையாக மேற்கு நோக்கி மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90டிகிரியில்) நிலைபெற்றிருந்தால் அந்த பிறை7 அல்லது 8 வது நாளை காட்டுகிறது.

மாலை சூரியன் முழுமையாக மேற்கில் மறையும் போது, பிறை முழுநிலவு அளவில் கிழக்கு திசையில் உதித்துக் கொண்டிருந்தால் அந்த பிறை பெளர்ணமி நாளை தெரிவிக்கிறது. ஒரு மாதத்தில் பௌர்ணமி பெரும்பாலும் 14அல்லது 15 ம் நாளில் வரும். அந்நாளில் மேற்கில் சூரியனின் அஸ்தமனத்தையும் கிழக்கில் சந்திரன் உதிப்பதையும் காணலாம்.

அதிகாலை சூரியன் கிழக்கே உதிக்கும் வேளையில் நாம் நமது தலைக்கு மேல் பார்க்கையில் பிறை பாதி (அரை வட்ட) அளவில் இருந்தால் அந்த பிறை 22 அல்லது 23 வது தேதியை காட்டும் பிறையாகும்.

 இவ்வாறு தேய்ந்து வளரும் பிறைகளை தொடர்ந்து பார்த்து கொண்டிருந்தோமானால் தான், மாதத்தின்  கடைசி நாளுக்கு முந்திய நாளின் பிறையான உர்ஜூஃனில் கதீமை நாம் சரியாக கணக்கிட முடியும். ஒரு மாதத்திற்கு 30நாட்கள் என்றால் 36:39 இறைவசனம் கூறும் உர்ஜூஃனில் கதீம் என்ற பிறையின் இறுதி வடிவம் 29 அன்று ஃபஜ்ரு வேளையில் கிழக்கில் தென்படும். அதுபோல ஒரு மாதத்திற்கு 29 நாட்கள்தான் என்றால், 28ம் நாள் அன்று உர்ஜூஃனில் கதீம் தென்படும்.

 உர்ஜூஃனில் கதீம் என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதி படித்தரத்திற்கு அடுத்தநாள் அமாவாசை தினமாகும். அந்த அமாவாசை தினத்தில் பிறையை பார்க்க இயலாது. அதற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் வளர்பிறை மேற்கில் தெரியும்.

இவ்வாறு புறக்கண்ணால் பிறைகளை தோராயமாக கணக்கிடும் முறைதான் விஞ்ஞான வளர்ச்சியில்லாத காலத்தில் நடைமுறையில் இருந்தது. விஞ்ஞான அறிவு பெற்றிராத சமுதாயமான நபிகளார் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரியனையும் சந்திரனையும் கணக்கீடு செய்வதற்கு புறக்கண்ணால் பார்ப்பது என்ற ஒரு நிலை மட்டும்தான் இருந்தது. எனவே பிறைகளை புறக்கண்ணால் பார்த்து அவர்கள் கணக்கிட்டுக் கொண்டனர். சூரியனின் சுழற்சியை பூமியில் ஒரு குச்சியை நட்டி அதிலிருந்து விழும் நிழலை கணக்கிட்டு நேரங்களை தெரிந்து கொண்டு அமல் செய்தனர்.

ஆனால் இன்று கணிணி துணைகொண்டு நீங்கள் பார்க்கும் பிறை எத்தனை டிகிரியில் நிலை கொண்டுள்ளது,அமாவாசைக்குப் பின்னர் பிறை தெரிந்து எத்தனை மணிநேரங்கள் ஆகின்றது, முதல்பிறை எந்த பகுதியில் தென்படும் என்பதையெல்லாம் துல்லியமாக கணக்கீடு செய்யமுடியும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தோராயமாக அறிந்துகொள்வதைவிட துல்லியமான கணக்கீட்டின்படி ஒப்பிட்டு பார்த்து பின்பற்றுவதை நம் மார்க்கம் ஒருபோதும் தடுக்கவில்லை. மாறாக கணக்கிடுவதை வலியறுத்தியும் ஆர்வமூட்டியும் இருப்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் பிரம்மாண்ட படைப்புகளான சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்கிறது திருக்குர்ஆன் (55:5). நேரத்தையும் காலத்தையும் மனிதர்கள் அறிந்து கொள்வதற்காகவே இவற்றை படைத்துள்ளதாக வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறான். (பார்க்க : 2:189, 6:96, 10:5, 13:2, 21:33, 36:38-40). அறிந்தோ அறியாமலோ கணக்கீட்டு முறையை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றது, அவைகளை நடைமுறையில் நாம் பின்பற்றிதான் வருகிறோம்.

கடமையான ஐந்து வேளை தொழுகைகள் மற்றும் ஜூம்ஆ தொழுகை, இஃப்தார் முடிவு, சஹர் நேரம்  போன்ற நேரங்கள் அனைத்தும் சூரியனை அடிப்படையாக வைத்து பின்பற்ற வேண்டியவைகள்.

நோன்பு, இருபெருநாட்கள், ஹஜ் மற்றும், ஆஷூரா  நோன்பு, மாதமாதம்  வெண்மை நாட்களின் மூன்று நோன்பு, அரஃபா நோன்பு, அனைத்து சந்திர மாதங்களையும் ஆரம்பித்தல், புனித மாதங்களை சரியாக ஆரம்பித்தல் ஆகிய வணக்கங்கள் சந்திரனை மையமாக வைத்து அதன் அடிப்படையில் பின்பற்ற வேண்டிய கடமைகள்.

இங்கு சூரியனை அடிப்படையாக வைத்து செய்யவேண்டிய காரியங்களான தொழுகை நேரங்களை எவரும் சூரியனை புறக்கண்ணால் பார்த்து அறிந்துகொள்வதில்லை. அதுபோல சஹர் நேரத்தை ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் (2:187) என்ற இறைகட்டளையை எவரும் புறக்கண்ணால் பார்த்து நடைமுறைப் படுத்துவதில்லை. மாறாக விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ள நேரங்களின் அடிப்படையில்தான் அட்டவணையிட்டு நாம் அனைவரும் பின்பற்றுகிறோம். இதற்கு எவரும் ஆட்சேபனை தெரிவிப்பதில்லை.

ஆனால் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட அமல்களை செய்வதற்கு மட்டும் நிலவை புறக்கண்ணால்தான் பார்ப்போம் என்று பிடிவாதமாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்? வல்ல அல்லாஹ் சூரியனைப்போலவே சந்திரனையும் சேர்த்துதான் துல்லியமாக இயங்குவதாக சொல்கிறான். சூரியனை நாங்கள் கணக்கிடுவோம்,ஆனால் சந்திரனை கணக்கிட மாட்டோம் என்றால் இதை நாம் எங்கு போய் சொல்வது? ஒருவேளை சந்திரன் துல்லியமாக இயங்கவில்லை என்கின்றனரா?. இவ்வாறு பிறைகளை புறக்கண்ணால்தான் பார்க்கவேண்டும் என்பதிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருக்கின்றார்களா என்றால் அதுவுமில்லை. அவர்கள் பிறைகளை தொடர்ந்து மாதம் முழுவதும் பார்த்து வருவதுமில்லை, பிறைகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இதுதான் பிறையை பார்த்து நோன்பு வைப்போம் என கூறுபவர்களின் உண்மை நிலை மக்களே!.

இந்நிலையில் தத்தம்பகுதி பிறை, அல்லது ஊர்பிறை என்ற நிலைபாட்டை கடந்த வருடம் வரை ஓங்கி உரைத்த சில சகோதரர்கள் நிலைமையை புரிந்து கொண்டு இந்த ரமழானில் மாநிலபிறை என்ற நிலைபாட்டிற்கு வந்துள்ளதை அறிகிறோம். அதாவது தமிழகத்தில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்வோம் என்ற புதிய முடிவிற்கு வந்துள்ளனர். அதுபோல மாநிலபிறை என்ற நிலைபாட்டில் இருந்தவர்கள் இவ்வருடம் சர்வதேச பிறைக்கு மாறியுள்ளனர்.

குர்ஆன் சுன்னா ஒளியில் துல்லியமான பிறை கணக்கீடு என்ற சரியான நிலைபாட்டின் முதற் படியை அவர்கள் எட்டியுள்ளனர் என்று நாம் நல்லெண்ணம் கொள்வோம். இன்னும் ஆய்வு செய்து காலப்போக்கில் தமிழக பிறையிலிருந்து இந்தியப்பிறை, பின்னர் சர்வதேச பிறை என்றும் அவர்கள் தங்கள் நிலைபாடுகளை அறிவிக்கலாம். எனினும் பிறை விஷயத்திற்கு சந்திர நாட்காட்டி (ஹிஜ்ரி நாட்காட்டி)  மூலம் சரியான தீர்வு கிடைத்துவிட்ட பிறகும் இனியும் காலம் தாழ்த்தாமல் மாநில, தேசிய மற்றும் சர்வதேச பிறை நிலைபாடுகளின் உள்ள தவறுகளையும், நடைமுறை சிக்கல்களையும் புரிந்து கொண்டு பிறைகளின் துல்லியமான கணக்கீட்டை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம், அதற்காக அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். அத்தகையை தெளிவை அவர்கள் பெற்றிட வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.

உதாரணமாக தமிழக பிறை என்ற நிலைபாட்டை சரிகாண்பவர்கள், தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக முஸ்லிம்களுக்கு சுமார் 600 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னையில் பிறை தெரிந்தாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தமிழகத்தில் எங்கும் பிறை தென்படாமல் இருந்து தங்கள் ஊருக்கு மிக அருகாமையில் இருக்கும் கேரள பகுதியில் பிறை தென்பட்டால் அதை ஏற்கொள்ள முடியாத துர்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். கூடவே 3 நாட்களில் நோன்பையும், பெருநாட்களையும் அனுசரிக்கும் தவறான நிலைக்குதான் இந்நிலைபாடு இட்டுச்செல்லும்.

இதே நிலைதான் தேசிய பிறைக்கும் பொருந்தும். அதாவது தமிழகத்தில் வசிப்போருக்கு மும்பை, கொல்கத்தா,டெல்லி போன்ற வடஇந்திய நகரங்களைவிட மிக அருகாமையில் இலங்கை உள்ளதை கவனத்தில் கொள்க. பிறைகளை தீர்மானிப்பதில் மனிதன் தன் நிர்வாக வசதிக்காக போட்டுக்கொண்ட மாநில, தேசிய எல்லைக் கோட்டிற்கு இவ்வளவு அதிகாரமா? – சுப்ஹானல்லாஹ்.

மக்களே சர்வதேசபிறை என்ற நிலைபாட்டிலுள்ளவர்களுக்கும் உலக நேரம் 18 UT க்கு அப்பால் உள்ள இடங்களில் பிறையின் பிறப்பு (அமாவாசை) நிகழும்போது இதுபோன்றதொரு பிரச்சனை வரும். காரணம் உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை புறக்கண்ணால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் நோன்பை, பெருநாளை அனுசரிப்போம் என்ற நிலைபாட்டில்தான் சர்வதேசபிறையினரும் இருக்கின்றனர். புரியும்படி சொன்னால் ஆப்பிரிக்காவிற்கு மேற்கிலுள்ள நாடுகளில் முதல் நாளின் பிறை தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம்,இந்தியாவிலுள்ளவர்கள் நள்ளிரவில் இந்த பிறை தகவலை பெறுவார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற கிழக்கத்திய நாடுகளிலுள்ளவர்கள் மறுநாள் காலையில் இருப்பார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் முதல் நோன்பை இழந்து, இரண்டாவது நோன்பையே முதல்நோன்பாக கருதி பின்பற்றி வருகின்றார்கள். என்ன கொடுமை இது?.

முஸ்லிம்களே! அல்லாஹ்வால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கமான தீனுல் இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களான நோன்பு, ஹஜ் மற்றும் பெருநாட்களை அனுசரிப்பதில் அல்குர்ஆனும் சுன்னாவும் தெளிவான வழியை காட்டித்தான் இருக்கும், அதில் முரண்பாடுகளோ, தவறுகளோ, நடைமுறை சிக்கல்களோ இருக்காது என்று முதலில் நம்பிக்கை வையுங்கள்.

ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் மஃரிபு அல்ல. அந்தந்த நாட்களில் தென்படும் பிறை அந்த நாளுக்குரியது,அடுத்த நாளைக்குரியது அல்ல. பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் பார்த்து கணக்கிட்டு வரவேண்டும். மேலும் உலக முஸ்லிம்கள் ரமழானையும், பெருநாட்களையும் ஒரே தினத்தில் அனுசரிக்க இயலும் என்பதற்கு குர்ஆன் சுன்னா கூறும் தெளிவான வழிகாட்டுதலை இந்திய ஹிஜ்ரி கமிட்டி பொதுமக்களுக்கு பலமுறை எத்திவைத்துவிட்டது.

எனவே சுய வெறுப்பு விருப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு பிறை விஷயத்தை திறந்த மனதுடன் ஆய்வு செய்யுங்கள். இறுதியில் பிறைகளின் அனைத்து வடிவங்களையும் கவனமாக பார்க்கவேண்டும், துல்லியமாக கணக்கிட்டும் வரவேண்டும் என்ற நிலைபாட்டிற்குத்தான் நீங்களும் வருவீர்கள் என்பதையும் அடக்கத்துடன் கூறிக்கொள்கிறோம்.

மேலதிக விளக்கங்களுக்கு:Related Post:

இஸ்லாமிய கலண்டர் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு முதற்படியாகும்

உங்கள் சிந்தனைக்கு ஒரு விருந்து!

பிறைகள் தொடர்பில் மற்றுமோர் அவதானம்

நாளின் ஆரம்பம் எப்போது?

 

  நன்றி ,  வஸ்ஸலாம்.

 

வெளியீடு:

இந்திய ஹிஜ்ரி கமிட்டி

Head Office:  7/858B, AWH Building, S.M. Street, Kozhikode, KERALA – 673001.

State Office:  160/101, North Main Road, Eruvadi, TAMILNADU – 627103.

Websites: – www.lunarcalendar.in,  www.hijricalendar.com,  www.hijracalendar.inwww.mooncalendar.in.

Email: hijriindia@gmail.com  Mobile:-  99626 22000, 99626 33000,  99626 44000,  99624 77000, 99626 33844,   95007 94544, 99943 44292, 93440 96221, 94439 55333,  94432 55643,   99524 14885.

 

அனுசரணை:

Viruthodai Islamic Research Foundation (VIRF)

No. 270 D/1, Viruthodai, Madurankuli, Puttalam, Sri Lanka.

Tel. & Fax: 0322268190  Mobile: 0772824691, 0727602999, 0722268062, 0712892353, 0773171726, 0779772938

 

ADM 

 


4 thoughts on “பிறைகளை பார்த்து கணக்கிடுவோம்! பிரிவுகளை களைந்திடுவோம்!!

 1. பிறைகள் says:

  ஒரு பெருநாளை இருநாட்களில் கொண்டாடியது ஏன்?

  நம் நாட்டில் கடந்த பல வருடங்களாக பெருநாட்கள் இரண்டு, அல்லது மூன்று நாட்கள் பல குழுக்களால் கொண்டாடப்பட்டு வந்துள்ளன அது தொடர்பான கருத்து முரண்பாடு தொடர்ந்தும் உள்ளது. ஆனால் இம்முறை நம்நாட்டில் நோன்பையும், பெருநாளையும் நீண்ட காலமாக உத்தியோக பூர்வமாக அறிவித்து வரும் பிறை மாநாட்டு குழுவினரின் செயல்பாட்டால் முஸ்லிம்கள் திக்கு முக்காடி போயினர், மேற்குறித்த நிகழ்வை காய்தல் உவர்த்தல் இன்றி தூய ஷரீஆ கண்ணோட்டத்தில் நாம் பார்த்தால்; இரு நாட்கள் பெருநாள் கொண்டாட அ.இ.ஜ. உலமா அங்கீகாரம் அளிக்க முடியுமா? என்று பலரும் கேட்கின்றனர்.

  அவர்கள் கூறும் காரணம் 07.08.2013 புதன் மாலை பிறை பார்க்க சொன்ன பிறை குழு பிறை தென்பட்டதை உலமாக்கள் உறுதி செய்த பின்னர் வியாழன் பெருநாள் தினமென அறிவித்திருக்க வேண்டும், அக்குழு இவ்வளவு காலமும் பின்பற்றி வந்த பின்பற்றி வந்த வழிமுறைப்படி அதுவே சரியாகும்.

  அதனை இழுத்தடிப்பு செய்து வியாழனும், வெள்ளியும் பெருநாள் என அறிவித்தது எதன் அடிப்படையில், மார்க்கத்தின் ஆதாரமா? அல்லது மனோ இச்சையின் பிரகாரமா? தெளிவான ஒரு பிறை கலண்டர் அவசியம் என்பதை இந்நிகழ்வு உண்மை படுத்துகிறது.
  தற்போதுள்ள மாதத்தை ஆரம்பிக்கும் வழி முறையில் தவறு உண்டென கூறுவோரின் கருத்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்

  நன்றி வஸ்ஸலாம்

 2. EASTMUFTI.. says:

  to our sri lankan muslims , this researched article is published below …

  மவ்லவிகளே, முஸ்லிம்களே நடுநிலையுடன் சிந்தியுங்கள்!

  BY : அபூ அப்தில்லாஹ்……. TRICHY.. India..

  சூரியன், சந்திரன், பூமி இந்த மூன்று கோள்களும் நேர்கோட்டிற்கு வந்து சங்கமம் (Conjunction) ஆகும் நாளே சந்திர மாதத்தின் கடைசி நாள் என்பதில் மவ்லவிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. இதோ 5ம் மத்ஹபு இமாம்(?) கூறுகிறார் படித்துப் பாருங்கள்.

  இங்கு ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வானியல் கணிப்பை (கணக்கீட்டை மனமுரணாக கணிப்பு என்கிறார்) ஏற்று, முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால் கணிக்கவே (கணக்கிடவே) முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது. பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக்கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவு வானியல் வளர்ந்து விட்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம். இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்க இயலும். மேகம் மற்றும் புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும். அவர்களது கணிப்பு சரியானதுதான் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே சமயத்தில் தலைப்பிறையைத் தீர்மானிக்க அதை அளவு கோலாகக் கொள்ளக்கூடாது என்பது தான் நமது வாதம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்குக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்துவிட்டனர். (ஏகத்துவம்: ஏப்ரல் 2009 பக். 31,32)

  ததஜவினரின் இவ்வாதப்படி அறிவியல் அதி முன்னேற்றம் காரணமாக சந்திரனின் சுழற்சியைத் திட்டமாகவும், துல்லியமாகவும் அறிந்து கொள்ள முடியும். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 1434 வருடங்களுக்கு முன்னர் இருந்த துல்லியமற்ற தோராய நிலையை விட இன்று மிகமிகத் துல்லியமாக மாதம் பிறப்பதை அறிந்து கொள்ள முடியும் என்பதையும் அவர்களே ஒப்புக் கொண்டுள்ளதையும் அவர்களின் இந்த வாக்குமூலம் உறுதிப் படுத்துகிறது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் புறக் கண்ணால் தலைப்பிறையைப் பார்த்து மட்டுமே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று வரையறுத்துவிட்டதாக ஓர் அப்பட்ட மான பொய்யைக் கூறியுள்ளனர். எவனொருவன் நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகப் பொய்யைக் கூறுகிறானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் பார்த்துக் கொள்ளட்டும் எனப் பல நபிதோழர்கள் அறிவிக்கும் முத்த வாத்திரான ஹதீஃத் அவர்களை உணர்வு பெறச் செய்யாது. அந்த அளவு அவர்களது உள்ளங்கள் கற்பாறையைவிடக் கடினமாகி விட்டன. (பார்க்க: 2:74,174-176, 5:13, 6:125)

  அவர்கள் தங்களின் இந்தக் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், தலைப்பிறையைப் புறக்கண்ணால் மட்டுமே பார்த்து மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறும், அதுவும் கழிந்து செல்லும் மாதத்தின் கடைசி நாளில், காலையில் உதித்து மாலையில் மறையும் பிறையை மேற்கில் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் துவக்க வேண்டும் என்று கூறும் ஆதாரபூர்வமான ஹதீஃத் அல்ல; பலகீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃதையாவது காட்டுங்கள் என்று கடந்த 18 ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவரை அப்படிப்பட்ட ஓர் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃதைக் கூட அவர்களால் காட்ட முடியவில்லை. ஆம்! அன்றைய குறைஷ் காஃபிர்கள் சத்தியத்தை-நேர்வழியை மறுத்துக் கூறியது போல், எங்களின் உம்மா, வாப்பா காலத்திலிருந்து காலங்காலமாக நாங்கள் மேற்கில் மறையும் பிறையைப் புறக்கண்ணால் மட்டுமே பார்த்து மாதத்தைத் துவக்கி வருகிறோம். பிறை பிறந்துவிட்டது, நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்றும் நடைமுறைப்படுத்துகிறோம் என்றே கூறுகிறோம் என்ற பதிலையே தருகிறார்கள்.

  ஆம்! கி.மு. 383ல் யூதர்கள் 36:39 இறைவாக்குக் கூறும் “உர்ஜூனில் கதீம்” என்ற புறக்கண்ணுக்குத் தெரியும் கடைசிப் பிறையை கிழக்கில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் பார்த்த பின்னர், மாதத்தின் இறுதி நாள் (அமாவாசை) அன்றும் அடுத்த நாள் (மாதத்தில் முதல் நாள்) பிறை கிழக்கிலோ, மேற்கிலோ தென்படாமல் இரண்டாம் நாள் பிறை காலையில் கிழக்கில் பிறந்து மாலையில் மேற்கில் மறையும் பிறையையே முதன் முதலாகப் பார்த்துவிட்டு அதையே முதல் பிறை என்றும், முதன் முதலாகப் பிறையைப் புறக்கண்ணால் மாலையில் பார்த்ததால், நாள் மாலையில் ஆரம்பிக்கிறது என்றும் மூட நம்பிக்கையில் நடைமுறைப் படுத்தினார்கள்.
  நபி(ஸல்) அவர்கள் முன் அறிவிப்புச் செய்தது போல், யூதர்களை ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றும் இந்த மவ்லவிகளும் (பார்க்க புகாரீ(ர.அ) 3456, 7320 முஸ்லிம் (ர.அ.) 5184) அந்த யூத மத கலாச்சாரத்தைப் பின்பற்றிக் கொண்டு அந்தப் பழியை 4:112 இறைவாக்குக் கூறுவது போல் எம்மீது போடுகிறார்கள்.

  அதற்கு மாறாக இந்த மவ்லவிகள் யூத மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றி அவர்களைச் சார்ந்தவர்களாக ஆகாமல் அல்குர்ஆன் 6:96, 7:54, 10:5, 13:2, 14:33, 16:12, 21:33, 29:61, 31:29, 35:13, 36:39,40, 39:5, 55:5 இந்த 13 இறைவாக்குகளையும் நேரடியாகப் படித்து விளங்கினால் சூரியனும், சந்திரனும் மனிதனின் புறக்கண் கட்டுப்பாட்டில் இல்லை; முழுக்க முழுக்க இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல், அவற்றின் வட்டவறைகளில் சுழன்று கொண்டிருக்கின் றன. நாம் வாழும் பூமி முழுமைக்கும் ஒரே ஒரு சந்திரன்தான். இரண்டோ, மூன்றோ அல்ல. அதனால் உலகம் முழுக்க ஒரே பிறைதான். இரண்டு நாளோ, மூன்று நாளோ ஒருபோதும் வரவே முடியாது. சந்திரனின் சுழற்சியை மிகமிகத் துல்லியமாக கணக்கிடும் விண்ணியல் அறிவு நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருக்கவில்லை. அதைத்தான் நபி(ஸல்) அவர்கள் “”லாநக்த்துபு வலாநஹ்சுபு” என்று கூறினார்கள். ஆனால் இன்றோ அந்த கணக்கிடும் ஆற்றலை அல்லாஹ் மனிதகுலத்திற்குக் கொடுத்துள்ளான் என்பதை எல்லாம் திட்டமாக அறிந்து கொள்ள முடியும். எனவே அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளை நிராகரித்து நபி(ஸல்) அவர்கள் சந்திரனின் சுழற்சி மனிதனின் புறக் கண்ணின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று ஒருபோதும் சொல்லி இருக்க முடியாது. இது அப்பட்டமான பொய், நபி(ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் பெரும் பழி, பெருத்த அவதூறு என்பதை எளிதாக விளங்க முடியும். இது மட்டுமா?

  இன்னும் பாருங்கள் இந்த மவ்லவிகளின் மட மையின் ஆழத்தை. மூன்று கோள்களும் நேர் கோட்டுக்கு வந்து சங்கமம் (Conjunction) ஆகி விட்டால் மாதம் முடிந்து புதிய மாதம் ஆரம்பித்து விட்டது என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். சங்கமம் ஆனவுடன் புதிய பிறை பிறந்து மாதம் ஆரம்பித்துவிட்டது என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள். பிறந்த அப்புதுப் பிறை கண்ணுக்குத் தெரியவில்லை. (Non Visible Moon) அதனால் அதை மாதம் ஆரம்பித்துவிட்டதாகக் கொள்ள முடியாது என்றே கூறுகின்றனர்.

  அதே அடிப்படையில் மாதத்தின் இரண்டாம் நாளையும் பிறை புறக்கண்ணுக்குத் தெரியாததால் மாதத்தின் முதல் நாளாகக் கொள்ள முடியாது என்கின்றனர். இரண்டாம் நாள் காலையில் பிறந்த இரண்டாம் பிறை மாலையில் மறையும் போதே அது புறக்கண்ணுக்குத் தெரிகிறது. அப்பிறையையே பிறை பிறந்துவிட்டதாகவும் மாலையில் முதல் நாள் ஆரம்பித்துவிட்டதாகவும் இந்த மவ்லவிகள் கூறுகின்றனர்.

  இந்த அவர்களின் கூற்று எந்த அளவு மடமை நிறைந்தது என்பதை விவரிக்கிறோம். கவனமாகப் படியுங்கள். அல்குர்ஆன் 2:189, 10:5, 36:39 வசனங்களைப் படித்து விளங்குகிறவர்கள் மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு மன்ஜில்-தங்குமிடம் என்பதை உறுதியாக அறிய முடியும். மாதம் 29 நாள்கள் அல்லது 30 நாள்கள் மட்டுமே கொண்டது என்பது நபி(ஸல்) அவர்களின் தெளிவான நேரடியான அறிவிப்பு. எனவே மாதம் 28 நாள்களில் முடியவும் செய்யாது. 31 நாள்கள் நீடிக்கவும் செய்யாது என்பதை ஒப்புக்கொள்கிறவர்கள் மட்டுமே உண்மையான நம்பிக்கையாளர்களாக இருக்க முடியும். அப்படியானால் ஒவ்வொரு நாளும் ஒரு மன்ஜிலாக கண்டிப்பாக இருந்தேயாக வேண்டும். மன்ஜில் இல்லாத வெற்று நாளாக ஒருபோதும் ஒரு நாளும் இருக்கவே முடியாது.

  இப்போது இந்த மவ்லவிகளின் மடமை வாதத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள். சங்க மத்துடன் (அமாவாசை) பழைய மாதம் முடிவுற்றதை அவர்களும் ஏற்கிறார்கள். ஆனால் முதல் நாளாகிய அடுத்த நாள் புதிய பிறை இருக்கிறது. ஆயினும் கண்ணுக்குத் தெரிய வில்லை (Non Visible Moon) அடுத்து இரண்டாம் நாளும் புதிய பிறை இருக்கிறது. கண்ணுக்குத் தெரியவில்லை. (Non Visible Moon) இரண்டாம் நாள் காலையில் கிழக்கில் உதித்து மாலையில் மேற்கில் மறையும் பிறையே கண்ணுக்குத் தெரிகிறது. எனவே அதுவே முதல் பிறை, மாலையில் புதிய மாதம் ஆரம்பிக்கிறது என்பதே இந்த மவ்லவிகளின் நிலைப்பாடு. அறிவீனமான கொள்கை.
  இவர்களின் இந்த நிலைபாட்டின்படி சங்கமத்திற்கு அடுத்த முதல் நாளும், அதற்கடுத்த இரண்டாம் நாளும் அல்லாஹ் 10:5, 36:39 இறைவாக்குகளில் கூறும் மன்ஜில்கள்-தங்கு மிடங்கள் இல்லாத வெற்று நாட்கள். ஆம்! இந்த மவ்லவிகள் இந்த இரண்டு நாள்களையும் ஒரு மாதத்திலுள்ள 29 அல்லது 30மன்ஜில்களான நாள்களின் கணக்கில் எடுக்கவில்லை. எனவே அவர்களின் அகராதிப்படி ஒவ்வொரு மாதமும் 27நாள்களையோ அல்லது 28 நாள்களையோ மட்டுமே கொண்டவை. இந்த மவ்லவிகளின் மடமை வாதம் புரிகிறதா?

  இன்று இந்த மவ்லவிகள் நடைமுறைப்படுத்தும் சங்கமத்திற்குப் பின்னுள்ள புதிய மாதத்தின் முதல் நாளையும், இரண்டாம் நாளையும், கழிந்த மாதத்தின் 29ம் நாளாகவும், 30ம் நாளாக வும் கொள்வது மடமையிலும் கொடிய மடமை என்பதை அவர்களின் வாக்கு மூலமே உறுதிப் படுத்துகிறது.

  ரமழானின் முதல் இரண்டு மன்ஜில்களை- நாள்களை ஷஃபானின் கடைசி இரண்டு மன்ஜில்களாக- நாள்களாகக் கணக்கிட்டும், ரமழானின் கடைசி இரண்டு மன்ஜில்களை- நாள்களை ஷவ்வாலின் முதல் இரண்டு மன்ஜில்களாகக் கணக்கிட்டும், நோன்பு நோற்பது ஹராமான ஷவ்வால் ஒன்றில் நோன்பு நோற்றும் முஸ்லிம்களை அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வைக்கின்றனர். 9:37 இறைவாக்குக் கூறுவது போல் சுயநலத்துடன், ஷஃபானின் நாள் களை ரமழானின் நாள்களாக்கியும், ரமழானின் நாள்களை ஷவ்வாலின் நாள்களாக்கியும் அந்நஸீவு என்ற சுயநலத்துடன் மாதங்களின் நாள்களை முன்பின் ஆக்கி நிராகரிப்பை அதிகப் படுத்துகின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களை நிராகரிப்பவர்களாக்கி வழிகெடுக்கின்றனர்.

  ஆம்! இந்த மவ்லவிகள் 10:5, 36:39 இறை வாக்குகளையும், சந்திர மாதங்கள் 29 அல்லது 30 நாள்களைக் கொண்டவை, சந்திரமாதத்தில் 28 நாள்களும் வரா, 31 நாள்களும் வரா என்ற நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலையும் மறுத்து காஃபிராகிறார்கள் என்பதை அவர்கள் மறுக்க முடியுமா? இவர்களின் இந்த மடமை வாதத்தை வேதவாக்காக ஏற்று ரமழானின் முதல் இரண்டு நோன்புகளையும் நோற்காமல் விடுபவர்களின் நாளை மறுமையின் நிலை என்ன? நோன்பு நோற்பது ஹராமான பெருநாள் தினமாகிய ­வ்வால் பிறை ஒன்றில் நோன்பு நோற்பவர்களின் நாளை மறுமையின் நிலை என்ன? 9:31, 33:36,66-68 இறைவாக்கு களைப் படித்து விளங்கி, உணர்ந்து இந்த மவ்லவிகளின் உடும்புப் பிடியிலிருந்து விடுபடு பவர்களே 3:31, 7:3, 33:21 இறைவாக்குகள் கூறு வது போல் வெற்றியாளர்கள்; சுவர்க்கத்திற்குரி யவர்கள். உண்மையில் அல்லாஹ்வின் மீதும், மறுமையின் மீதும் மிக உறுதியான நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே இது சாத்திய மாகும்.

  அன்று அதாவது 1434 வருடங்களுக்கு முன்னால், விண்ணியல் அறிவியல் முன்னேற்றமோ, தகவல் தொடர்பு வசதிகள் போன்றவையோ இல்லாத அக்காலத்தில், பக்கத்து ஊரில், அல்லது தொலைதூர ஊர்களில் பிறை பார்த்த செய்தியோ, இன்றிருப்பது போல் பல ஆயிரம் மாதங்களின் ஆரம்பமும், முடிவும், சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் நாள்களும் அறவே தெரியாத நிலையில் சந்திரனின் சுழற்சியை அன்றாடம் அதன் வளர்ந்து தேயும் மன்ஜில்களைக் கண்ணால் பார்த்து முடிவு செய்யும் கட்டாயத்தில் இருந்தார்கள். சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதை முன்கூட்டியே அறிய முடியாமல், அவை நிகழும்போது கண்ணால் பார்த்து மட்டுமே செயல்பட்டார்கள்.

  எனவே அன்று கணிப்பின் அடிப்படையிலுள்ளவர்கள் மாதத்தை முன்னரே முடிவு செய்துவிட்டார்கள் என்றோ, தூர, பக்கத்து ஊரில் பிறை பார்த்துவிட்டார்கள், நமக்குத் தான் பிறை தெரியவில்லை என்றோ சச்சரவிட்டுச் சமுதாயம் பிளவுபடும் நிலை அறவே ஏற்படவில்லை. அதாவது பிற ஊர்களின் நிலை அறிந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுச் சச்சரவிட்டுப் பிளவு படும் நிலை அறவே அன்று இல்லவே இல்லை. அதே சமயம் அன்று உள்ளூரிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிளவு படும் ஒரு சந்தர்ப்பம் இருக்கவே செய்தது. அதாவது இன்று போல் யூத மதக்கலாச்சாரத்தைப் பின் பற்றி மாதக் கடைசியில் மட்டும் மேற்கில் பிறை பிறந்து விட்டதா? என்று புறக்கண்ணால் பார்க்கும் மூடப் பழக்கம் நபிதோழர்களிடம் இருக்கவே இல்லை. அதற்கு மாறாக 2:189 இறை வழிகாட்டல்படி அன்றாடம் சந்திரனின் பிறைகளை வளர்ந்து தேய்ந்து இறுதியில் கண் பார்வையை விட்டு மறைந்து போகும் வரை அவதானித்து வந்தார்கள். அப்படி அவதானிக் கும் போது சிலரது அவதானிப்பில் அந்த மாதம் 29ல் முடிகிறது என்றும், வேறு சிலரது அவதா னிப்பில் மாதம் 30ல் முடிகிறது என்றும் கருத்து வேறுபாடுபட்டார்கள். இதனால் சச்சரவும் அது முற்றி உள்ளூரிலேயே சமுதாயப் பிளவும் பகையும் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டது.

  இந்தக் கருத்து வேறுபாட்டைத் தீர்க்க இன்று போல் கணினி கணக்கீட்டு முறைக் கண்டு பிடிக்கப்படவில்லை. சந்திரனின் பிறைகளைப் புறக் கண்ணால் பார்த்து மட்டுமே சமுதாய ஒற்றுமை காக்க முடிந்தது. இதற்காகத் தான் நபி(ஸல்) அவர்கள் “”அதை (சந்திரனின் வளர்ந்து தேயும் படித்தரங்களை) பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள், முடியுங்கள்” என்று கூறி கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைத்தார்கள். மற்றபடி சந்திரனைக் கண்ணால் பார்த்து மட்டும்தான் மாத ஆரம்பத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாகக் கட்டளையைப் பிறப்பிக்க வில்லை. கண்ணால் பார்ப்பது வஹீ என்ற அடிப்படையில் மார்க்கமாக்கவும் இல்லை.

  இன்று இந்த மவ்லவிகள் பிறையைக் கண்ணால் பார்த்து மட்டுமே மாத ஆரம்பத்தை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் பலமான, பலவீனமான செய்திகள் அனைத்தும் “”லாநக்த்துபு வலாநஹ் சுபு” என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய சந்திர ஓட்டம் பற்றிய விண்ணியல் கணக்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலையில் கண்ணால் பார்ப்பதை வலியுறுத்தி சமுதாய ஒற்றுமைக் காக்கக் கூறப்பட்டதே அல்லாமல் கண்ணால் பார்ப்பது வஹியோ கடமையோ அல்ல என்பதே நிதர்சன உண்மையாகும்.

  ஆனால் சமுதாயத்தைப் பிளவுபடுத்தியே அற்பமான உலகியல் ஆதாயங்களை அடைவ தையே குறியாகக் கொண்ட இந்த மவ்லவிகள் அன்று சமுதாய ஒற்றுமைக்காகப் பயன்பட்ட பிறை பார்க்கும் கருவியை இன்று சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதற்கே கையில் எடுப்பது வேதனையிலும் வேதனையான ஒரு செயலாகும். அன்று நபிதோழர்களிடையே மாதம் 29ல் முடிகிறது; இல்லை இல்லை 30ல் முடிகிறது என்று உள்ளூரிலேயே ஏற்பட்ட பிளவைத் தீர்க்க வலியுறுத்தப்பட்ட பிறை பார்த்தலை இன்று உள்ளூரில் மட்டுமல்ல, குடும்பங்களுக்குள்ளேயே இரண்டாக, மூன்றாகப் பிளவு பட இந்த மவ்லவிகள் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால் இவர்கள் மக்களை நேர்வழி நடத்தும் நபிமார்களைப் பின்பற்றுகிறவர்களா? அதற்கு மாறாக வரம்பு மீறிச் செயல்படும் 25:30 இறை வாக்குக் கூறுவது போல் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரிக்கும் தாஃகூத்களா என்பதை நிதானமாகச் சிந்தித்து நடுநிலையுடன் முடிவுக்கு வாருங்கள்.

  வெவ்வேறு ஊர்களை விட்டுத் தள்ளுங்கள். உள்ளூரிலேயே குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கட்டளைகளை ஏற்று அதன்படி துல்லியக் கணக்கீட்டின்படி சரியான நாளில் செயல்படும் ஒரு சாரார், பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும். தொலைதூரத்திலிருந்து பிறை பார்த்தத் தகவல் கிடைத்தாலும் அதை ஏற்கலாம் என சர்வதேச பிறையை ஏற்றுச் செயல்படும் இரண்டாவது சாரார், தகவலையும் ஏற்க முடியாது, தத்தம் பகுதியில் மட்டுமே பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மட்டுமே ஏற்க வேண்டும் என்று மூன்றாவது சாரார் என 21:92, 23:52 இறைவாக்குகளுக்கு மாறாக 21:93, 23:53-56 இறைவாக்குகள் கூறுவது போல் சமுதாயத்தை பிறை விவகாரத்தில் மூன்று பிரிவினர்களாகப் பிரிக்கும் மகாக் கொடுமை-வழிகேடு அதிலும் மகாக் கொடுமை மகன் முதல்நாள், தாய் இரண்டாம் நாள், தந்தை மூன்றாம் நாள், கணவன் ஒரு நாள், மனைவி அடுத்த நாள் எனக் குடும்பத்தையே பிரித்துச் சீரழிக்கும் இவர்கள் நேர்வழி நடப்பவர்களா? நபி(ஸல்) அவர்களின் போத னையை ஏற்று நடப்பவர்களா? ஷைத்தானின் போதனைப்படி நடப்பவர்களா? நடுநிலையுடன் சிந்தியுங்கள்.

  இடைத்தரகர்களாகச் செயல்படும் தாஃகூத்களான இம்மத குருமார்களான புரோகிதர்களான இந்த மவ்லவிகளை 7:3, 33:36,66-68, 59:7 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து அவர்களை முற்றிலும் புறக்கணித்து 3:103 இறைக் கட்டளைப்படி ஜமாஅத்தாக அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் நேரடி வழிகாட்டல்படி நடப்பவர்களே வெற்றியாளர்கள்; அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் நுழைவோர். அவர்களே அறிவாளிகள், நேர்வழி நடப்போர், நன்மாராயம் பெற்றோர். (பார்க்க 39:17,18

 3. Mohamed Razmi says:

  காலாகாலமாக நமக்குக் கற்பிக்கப்பட்ட பல விடயங்களைப் புரட்டிப் போடும் வகையிலும், மிக ஆணித்தரமாகவும் இந்த விளக்கங்கள் இருக்கின்றன. சற்று விரிவாகச் சென்று இதனோடு இணைக்கப்பட்டுள்ள காணொளிகளையும் நோக்கினால் இஸ்லாமியக் கலன்டர் மற்றும் நாள் கணிப்பீட்டில் பல முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் இதன் சாராம்சம் அமைந்துள்ளது.

  கடந்த ரமழானில் பிறை பார்க்கும் விடயத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளையும் வாதப் பிரதிவாதங்களையும் மீண்டும் ஒருமுறை கவனத்திற் கொள்வோம். தனிப்பட்ட – குழுமவாத நலன்களுக்கு அப்பால் , அவை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் நீறு பூத்த நெருப்பாக இருக்கின்றன. பொறுப்புவாய்ந்த தரப்புகள் சரியான – நிலைபேறுமிக்க தீர்வொன்றை இதய சுத்தியுடன் தேடி அணுகாத வரை அடுத்த முறை அது தீவிரமடைவதற்கான வாய்ப்புக்கள்தான் அதிகம்.

  இது புத்தளம் முஹிய்யித்தின் ஜும் ஆப் பள்ளியின் உத்தியோக பூர்வ இணையத்தளம். புத்தளம் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஆன்மிக – லௌகிக விவகாரங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தும் தகைமையில் இருக்கும் ஒரு நிறுவனம் தான் புத்தளம் பெரிய பள்ளி. இந்தப் பள்ளியின் தர்மகர்த்தாக்களில் துறைபோகக் கற்றறிந்த உலமாக்களின் வகிபாகம் மிகவும் இன்றியமையாதது.

  இந்தக் கட்டுரையில் பேசப்படும் விடயங்கள் இதுவரையில் அவர்களின் ஆய்வுக்கு உட்பட்டிருக்கும் என நம்புகிறோம். அத்துடன் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் நிலைப்பாடையும் அறிவதற்கு வாசகர்களாகிய நாம் ஆவலோடு இருக்கிறோம்.

  சாராம்சமாக , அடுத்த ரமழானுக்கு முன்னர் இவ்விவகாரம் சரியான ஒரு தீர்வைக் காணுமா? பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்!

 4. EASTMUFTI.. says:

  Assalamu Alaikkum ..brothers and sisters..

  WE MUSLIMS HAVE ONLY ” ALMIGHTY _ ALLAAH , ONE QUR’AAN , AND ONE EARTH IN WHICH ONLY ONE SUN AND ONE MOON HAVE BEEN CREATED BY ” ALLAAH ” .. Therefore we NEED ONE ” PIRAI ” to start a month for the whole MSLIMS UMMATH…

  FIRST OF ALL BROHTERS, STUDY THE PURPOSE OF CREATING MOON and the stages of ” PIRAI ” ( crescent ) by ALLAAH .. THEN ALL OF OUR MUSLIMS WILL BE ACCEPTING THE UNITED STARTING OF A MONTH AND ENDING A MONTH , WITHOUT ANY TROUBLES…

  Study carefully the below researched article on ‘ PIRAI “..
  .
  பிறை ,இறைவன் ஏற்படுத்தியதன் முக்கிய நோக்கம் , காலங்களை , ஆண்டுகளை , நாட்களை, அறிவதற்கே.. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் இருந்த சமுதாயம் , அது அரபு சமுதயமகட்டும் அல்லது ரோம , அல்லது பாரசீக வல்லரசாகட்டும் , அந்த சமுதாயம் அவர்களுக்கு கிடைத்த அறிவை கொண்டே விசயங்களை செய்தேனர். சில துறைகளில் அவர்கள் மிகுந்த அறிய அறிவை பெற்றிருந்தனர்…( இறந்த உடல்களை கெடாது வருடக் கணக்கில் பாது காக்கும் மருத்துவ தஅறிவு )….சில. துறைகளில் சாதரண அனுமான அறிவை மட்டும் பெற்று இருந்தனர்… ( உலகம் தட்டை என்று நம்பி இருந்தது ) .

  . மேலும் பிறையின் வடிவை வைத்தே அந்த கால மக்கள் நாட்களை மாதங்களை அறிந்தனர். இது பொதுவாக இறை தூதர்களின் காலத்தில் நடை முறையாக இருந்த வழி முறை.. .
  இஸ்லாம் மீண்டும் இறுதி தூதரினால் அரபிகளிடத்தில் முன் வைத்து சில கடமைகளை ஏற்படுத்தியபோது , அதை நிறைவேற்ற மாதம் ,நாள் என்பது மிக அவசியமாக இருந்தது.. இதனால் இறைவனே , சந்திரன், பிறை ஏற்படுத்தபட்ட நோக்கத்தை மக்களுக்கு தெளிவாக வஹி மூலம் அறிவித்தான் . .ஹஜ் , மற்றும் நோன்பு இதன் மூலம் இலகுவாக நடை முறைப்படுத்தப்ப ட்டது…. இதுவே அந்த காலத்து மக்களின் அறிவு தரம் , மற்றும் பிறை நோக்கம் சம்பந்தமான சுருக்க வரலாற்று தகவல்….

  நோன்பு கடமை ஆக்கப்பட்டதும் , நோன்பு ஆரம்பமாகும் மாதத்தை அறிய வேண்டி இருந்த்ததால் , தூதர அவர்கள் அரபியில் கூறினார்கள்……..
  .
  .””. صوموا لرؤيته وأفطروا لرؤيته ” …ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ” ..
  .
  இதுதான் பிறை பார்த்தல் பற்றி வரும் சகல செய்திகளுக்கும் அடிப்படை ஹதீஸ் வாசகம்…

  இந்த் வசனத்தி நபியவர்கள் தெளிவாக , “பார்த்தல்” எனும் பொதுவாக சொல்லப்படும் கருத்தை கொண்ட ., ருஹ்யத் ., என்ற சொல்லை பாவித்து சொல்கின்றார்கள்……

  இது ரசூலுல்லாஹ் சொல்லியபோது , அன்று சஹாபாக்கள் யார் யாருக்கு முடிந்ததோ அவர்கள் பார்த்தார்கள் . பிறை கண்டதும் தூதரிடம் சொன்னார்கள்….. அதை ஏற்று நோன்பை ஆரம்பித்தார்கள்…காரணம் , அன்று கண்ணால் பார்த்தால்தான் பிறை தெரியும் , வேறுவேறு எந்த வழியும் , அறிவும் அவரகளுக்கில்லை என்பது அவரகளுக்கு தெளிவாக தெரிந்திருந்தது……… எனவே கண்ணால் பார்த்தார்கள்.. மாதத்தை தீர்மானித்தார்கள்……..

  இது சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் இருந்த அறிவின் முதிர்ச்சி அடையாத ஒரு சமுதாயத்துக்கு கூறப்பட்டது… இதை நபி அவர்கள் உறுதிப்படுத்தி கூறுகிறார்கள்…….

  “ றஸூலுல்லாஹ அவர்கள் கூறினார்கள், ” நாங்கள் கற்றறியாத மக்கள் ( உம்மி சமுதாயம் ), எழுதவும் கணிக்கவும் நாம் அறியமாட்டோம், சந்திர மாதமானது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டிருக்கும்” ..( புகாரி )..

  இங்கு நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியது , நபி அவர்களின் சமுதாயத்தில் நன்கு ( வஹியை எழுதுவது , மற்றும் வியாபார விசயங்கள் எழுதுவது , ஒப்பந்தங்கள் , கடிதங்கள் எழுதுவது போன்ற ) எழுத படிக்க தெரிந்தவர்கள் இருந்தும் ,நாம் உம்மி சமுதாயம் என கூறி , தொடர்ந்து , சந்திரன் மாதம் பற்றி அதில் வரும் நாட்களை பற்றி கூறுவது , ஏன் ?

  காரணம் நபியவர்கள் , இங்கு பிறை சந்திரனின் தோற்ற வளர்ச்சி படி நிலைகை கனைக்கீட்டு கொள்ள தம் சமுதாயத்தால் முடியாது , அந்த கணக்கிடும் அறிவு தங்களிடம் இல்லை என்பதை சமூகத்துக்கு தெளிவாக எடுத்து சொல்லவே , இப்படி கூறுகிறார்கள் என்பதை நடுநிலையாக ஆழ்ந்து சிந்திப்பவர்கள் ஏற்றுகொள்வார்கள்…….

  அதே நேரம் பிறை சம்பந்தப்பட்ட ஹதீஸ் , என்பது உலக முடிவு வரை உள்ள மக்களுக்கும் பொருந்தும் ஒரு வேண்டுகோள் …. காரணம் இறைவனின் தூதர் கூறியிருக்கிறார்கள்……….. இந்த கட்டளயின் தெளிவான கருத்தை அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட அவர்கள் மிக தெளிவாக அவர்களுக்கு அன்று இருந்த அறிவு க்கேற்றபடி விளங்கி செயல்பட்டனர் அதாவது பிறையை கண்ணால் மட்டும் பார்த்தனர்….

  காலங்கள் உருண்டன , மனிதனின் சிந்தனையை QUR’AAN தூண்டியது. முஸ்லிம்களே ஆராச்சியில் இறங்கினார்கள்..விளைவு இந்த SCINECE , ASTRONOMICAL கண்டுபிடுப்புக்களுக்கு முன்னோடியாயாக் முஸ்லிகள் மாறினார்கள்….. அதன் பின் முஸ்லிகள் தன கடமையை , இறைவனின் காட்டலையை மறந்தனர். ஆட்சி அதிகாரம் மயக்கியது, பலவாறு பிரிந்த்தார்கள் …… இஸ்லாத்தை விட்டும் தூரமானார்கள் ….

  விளைவு….. முஸ்லிம்களுக்கிடையில் போர் , சண்டை……… இதனால் இறைவன் அவர்களை கை விட்டான் … அவர்களில் ஆட்சிகளை பிடுங்கி எறிந்து அவர்கள் தாங்களாக மாறும்வரை விட்டுவிட்டான்..அவர்கள் மாறவில்லை …… இதன் விளைவு அன்று முஸ்லிம்களிடமிருந்த விஞ்சான அறிவை அதன் அடிப்படையை மற்ற யூத ,கிறிஸ்தவர்கள் தெளிவாக கற்று அறிவின் உச்சத்டுக் போய் விட்டனர்….. அதன் கனியை இப்போது நாம் அனுபவித்து கொண்டு இருக்கோம். ………

  எனவே தூதர் அவர்கள் அன்று சொன்ன , “” ஸூமூலி ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி ருஃயத்திஹீ “” , இனை , முதன் முதலில் மொழி பெயர்த்தவர்கள் , தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறு , அரபு சொல்லான , ருஹயத் . என்ற சொல் , முதலில் , இறைவன் எப்படி பயன்படுத்துகின்ற்ரன், நபி அவர்கள் எந்த சந்தர்ப்பத்தில் இதை , எந்த விசயத்துக்கு எப்படி பாவித்தார்கள் , . பாவிக்கப்பட்டது என்ற எந்த ஒரு சிந்தனை ரீதியான ஆய்வின்றி , நேரடியாக , சொல்லுக் சொல் மொழி பெயர்த்து அதை மக்களுக்கு சொன்னதின் விளைவே , இப்போது நாம் அனுபவிக்கும் ஒற்றுமை இல்லா குழப்பத்துக்கு காரணம்..

  முஸ்லிம்கள் எத்தனயும் தீர்மானிக்க முதல் முதல் குர்’ ஆண் கட்டளைகளை அறிந்து அதன் விளக்கங்களை ஆராய்ந்து அதன் பின்னரே அதன் மேலாதிக்க விளக்கமான ஸஹீஹ் ஹதீஸ் களை கவனத்த்தில் எடுக்க வேண்டும்.. பிறை யின் உருவாக்கம் என் இறைவன் எற்ர் படுதித்தி உள்ளான் என்ட குர்’ ஆன் வசனங்கள் பற்றிய அறிவு , , சிந்தனை இல்லாமல் போனதே எல்லா குழப்பத்த்துக்கும் காரணம்…
  நமக்கு சிறு பராயத்த்தில் இருந்து மாவிலவிகளால் சரியான் அறிவுடன் மொழி பெயர்தித்து கூறப்பபட்டதாக இந்த ஹதீஸ் அரபியில் நாம் கேட்டதே இல்லை… மாறாக இந்த ஹதீஸ்ஐ , அன்றைய மவ்லவிகள் ,இன்று , பல SL ஜாமியதுல் உலமா வின் மவ்லவிகள் சொல்வது போல் ,
  , ..பார்த்து நோன்பு பிடி.. பார்த்து நோன்பு திற ….அல்லது …….கண்டு பிடி…….கண்டு திற என்று மொழி பெயர்த்து நம் சமூகத்துக்கு அறிமுகப்படுத்த்டியதால், அன்று இருந்து , இஸ்லாததை தூதர் அவர்கள் கட்டளைப்படி மட்டும் பின்பற்றி வாழவேண்டும் என்ற தூய்மையான சிந்தனை இன்று நம் மனதில் வரும்வரை, …
  இந்த ஹதீஸ் கண்ணால் தான் பிறை பார்த்து அதுவும், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் , ஏன் சில நேரம் வட்டாரத்த்துக்கு வட்டாரம் பிறை பார்க்கணும் , முஸ்லிம் சுதாயம் ஆளுக்காள் பிரிந்து தான் இருக்கணும் என்ற ஒரு நிலயை ஏற்படுத்தி விட்டது……

  ( இந்த ஹதீஸை ஒரு சாதாரண பாடசாலை செல்லாத ஒருவரிடம் கேட்டாலும் , சட்டென சொல்வார்..அந்தளவுக்கு இந்த வசனம் மக்களிடையே சொல்லப்பட்டுள்ளது )

  இப்படி நாம் குழப்பப்பட்டு இருப்பதால், உணமையான் இந்த ஹதீஸ்களின் விரிவான சரியான கருத்துக்கள் , மொழிபெயர்ப்பு பற்றி பாப்போம்.. ,,,,,,,,,,,,

  …… ஸூமூலி ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி ருஃயத்திஹீ …………. இதிலுள்ள , … இங்கு நமக்கு , பல SL ஜாமியதுல் உலமா வின் மவ்லவிகள் சொல்வது போல் , கண்ணால் பார்க்கணும் என்ற சிந்தனையை உருவாக்குவது..மிக முக்கிய சொல்லான் رؤيت ‘ருஃயத்’ , தான் …….

  ஒரு சொல் சரியான பிரயோகத்தை அறிய , முதிலில் அந்த சொல் , QURANN இல் எப்படி இறைவன் பயன்படுத்தி இருக்கிறான் என்பதை அறிய வேண்டும்.. அதன் பின்தான அது ஹதீஸ் இல எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்க முடியும்…. காரணம் இறைவனின் வேதம் மனிதர்களுக்கு வழிக்காட்டும் நூல் . அதன் மூலமாகத்தான் நாம் செய்திகளை தெளிவாக விளங்க முடியும்.

  மக்கள் எந்தளவுக்கு குர்’ஆனுக்கு முதன் முதலான இடம் கொடுத்து அதன் பின் அதன் மேலதிக விளக்கம் தேவை எனும் நிலையில் உண்மையான ஹதீஸ்களை பயன் படுத்தி அந்த குறிப்பிட்ட விஷயத்தை தெளிவாக அறியும் அளவுக்கு , நேரான வழியில் இருப்பார்கள்..

  .அல்குர்ஆனிலேயே சுமார் 336 இடங்களில் இந்த அரபி பதம் பயன்பட்டுள்ளது (கட்டாயம் பார்த்து அறியவும் )

  சூரா : வசனம் ,
  105:1, 37:102, 22:18,63,65, 3:23, 4:44,49, 51,60,77,
  14:9,24,28, 19:83, 24:41,43, 25:45 , 26:225 , 2:243,246,258,260.

  ( சகோதரர்கள், தங்களை குர் ஆனில் ஆய்வு செய்யும் சிந்தனையை தூண்டுவதற்காக எல்லா வசனங்களையும் தேடி பார்க்குமாறு கேட்கின்றேன்.. நிச்சயம் இந்த வழி முறை மீண்டும் மீண்டும் இறைவனின் வசனங்களை பற்றி சிந்திக்க வழி கோலும் என்பதால் எல்லாவற்றையும் இங்கு எழுதவில்லை )

  எல்லா வசனகளையும் ஆய்வு செய்யும்போது , இந்த சொல்லுக்கு கண்ணால் பார்த்தல் என்ற கருத்து மட்டும்தான் என்று கூறுவது மிக மிக தவறான ஒரு விஷயம் என்பது தெளிவாகும்..மாறாக பார்த்தல், தகவல் மூலம் அறிதல், அவதானத்தின் மூலம் அறிதல் போன்ற பல கருத்துக்களில் இறைவன் பயன்படுத்தி இருப்பது தேட்ட தெளிவாக தெரிய வரும்.

  உதரணத்துக்கு விளங்க….

  பார்த்தல் என்பதற்கு,…….சூரா Bakaraa , எண் 166 ,,

  إِذْ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُوا۟ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ وَرَأَوُا۟ ٱلْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ ٱلْأَسْبَابُ}

  “‘ யாரைப் பின்பற்றினார்களோ அவர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் தண்டனையை காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும். “” ( 2 166 )

  ( குறிப்பு …. இது தவறாக வழி நடத்தும் அனைவருக்கும் பொதுவான எச்சரிக்கை )

  இப்படி பல வசனங்கள் பொதுவாக பார்ப்பதை குறிக்கின்றன…….. ஆனால் எல்லாம அல்ல…….. ஆயினும் ,,,,,

  குறிப்பாக , கண்ணால் பார்த்தல் எனும் சொல்லுக்கு இறைவன் மிக தெளிவான ஒரு சொல்லை கூறுகின்றான்……… சூரா 03, al Imraan , வசனம் 13 … , …..இல்

  {قَدْ كَانَ لَكُمْ ءَايَةٌ فِى فِئَتَيْنِ ٱلْتَقَتَا فِئَةٌ تُقَٰتِلُ فِى سَبِيلِ ٱللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْىَ ٱلْعَيْنِ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِۦ مَن يَشَآءُ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ}…

  .””பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர் ( ராய இல் அயீன் ) இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.”” ..

  எனவே , கண்களால் மட்டும் பார்க்கணும் என்று கூறுவது எனில் , அதுவும் இபாதத் சம்பந்தப்பட்ட ஒரு விசயம் எனில் , அது . رَأْىَ ٱلْعَيْنِ..என்னும் சொல் மூலம் கூறப்பட வேண்டும்……….

  கேள்வி 02 .

  நபியவர்கள் முஸ்லிம் உம்மத்தை , கண்களால் பிறையை பாருங்கள் ஏற்று ஏவிய எதாவது ஒரே ஒரு ஹதீஸ் , அது SAHEEH அல்லது பலவீனமான அல்லது ஒரு பொய்யாக இட்டுகட்டப்பட்ட , ஹதீஸ் மூலம் , பிறை கண்ணால் பார்க்க வேண்டும் என்று அர்த்தமுள்ள ராய இல் அயீன் என்ற சொல்லை உள்ளடக்கிய ஹதீஸ் தர முடியுமா ? அதை நீகள் எழுதி நிரூபிக்கும்போது தெளிவு பெறுவோம்…உங்களுக்கும் அந்த நன்மை கிடைக்கும்…..

  ..மேலும்………

  சூரா , 105 இல் வசனம் 01 இல். .. أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ1.

  யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா…..( 105 ; 01 )

  இங்கு நபியவர்கள் பிறப்பதற்கு முதல் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியை இறைவன் சொல்லும்போது , பார்த்தல் என்று கூறும் அதே சொல் ர ஆ வை பயன்படுத்து கின்றான்…..

  இங்கு தான் சிந்திக்க வேண்டும்…….ஒரு வர பிறக்க முன் நடந்த நிகழ்ச்சியை கண்களால் பார்க்க முடியுமா ? ஒரு போதும் முடியாது…. அப்படி எனில் இதன் சரியான் கருத்து , யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் ( தகவல்கள் மூலம் ) அறிந்து கொள்ளவில்லையா என்பது மிக தெளிவு……

  அறிவது எப்படி, அது பற்றிய தகவல்கள் மூலம் , அதை விசாரித்து மட்டுமே அறிய முடியும்…… எனவே இங்கு ர ஆ சொல்லுக்கு பார்த்தல் என்ற கருத்து மிக மிக தவறு என்பது தெளிவு…..

  ( சில மொழிபெயர்ர்ப்புகளில், அவதானித்தல், CONSIDER என இந்த ர அ எனும் சொல்லுக்கு மொழிபெயர்த்துள்ளனர் , எல்லாவற்றயும் எழுதும்போது மிக மிக நீண்டு விடும் )……..

  பொதுவாக எல்லாவற்றையும் ஆராயும்போது , எல்லா வசனங்களும் இந்த சொல் ர அ வுக்கு கண்ணால் பார்த்தல் கருத்தை சொல்லவில்லை…… எனவே ,

  இதிலிருந்து,

  இந்த , …ருஹ்யத் , என வரும் “” ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ” , ஹதீஸ் இன் சரியான மொழிபெயர்ப்பு, …..
  அதை ( பார்த்து, , அவதனத்தால் கணக்கிட்டு , , தகவலால் அறிந்து ) நோன்பை ஆரம்பியுங்கள்…….. அதை ( பார்த்து, அவதனத்தால் கணக்கிட்டு அறிந்து, , தகவலால் அறிந்து ) நோன்பை முடியுங்கள் ….

  இந்த சொல் பிரயோகத்தில் எந்த கருத்து அந்த காலத்துக்கு துல்லியமாக பொருந்துகிறதோ அதையே நாம் சரியான கருத்தாக எடுத்து அமுல் நடத்த வேண்டும்……. அப்போதுதான் மிக சரியாக இதன கருத்து , அந்த கால அறிவுகேட்டபடி பொருந்திபோகும் .

  அன்று , கண்ணால் பார்க்கும் ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது ……எனவே , கண்ணால் பார்த்தல் என்ற படி அவர்கள் விளங்கி , கண்ணால் பார்த்து , சில நேரம் பார்த்தவர்களின் தகவலால் அறிந்து மாதத்தை தீர்மானித்தனர். அதே மாதிரிதான் இந்த காலத்திலும் செய்ய வேண்டிய தேவை என்ன என்பதை நடுநிலையாக சிந்திப்போம்…… மேலும் ,

  சூரா யயூனுஸ் , வசனம் 05 இல் அள்ழாஹ் கூறுகின்றான்…..
  ..

  .هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

  “”அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு (ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விபரிக்கின்றான்.”” ( yoonus , verse 10 )

  இங்கு நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயம்..இறைவன் சந்திரனை படைத்து அதற்கு பல படித்தரங்களை உண்டாக்குகின்றான் என்பதை சொல்லி அதன் காரனத்தை விளக்கும்போது , காலக் கணக்கை அறிவதற்கு என கூறுவதுடன் ., இப்படி அறிவுள்ள மக்களுக்கு தன அத்தாட்ச்சிகளை விபரிப்பதாக கூறுகிறான்……

  அத்துடன், இங்கு …….ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான் , என தெளிவாக ,பொதுவாக அறிந்து கொள்ளுவதற்கு என கூறுகின்றானே தவிர ,
  ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் கண்ணால் பார்த்து அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான், என கூறவே இல்லை………..
  எனவே அறிவுள்ள மக்கள் தன அறிவுக்கேற்ற்ப காலக் கணக்கை அறிந்து கொள்வார்கள் என்பதை இறைவன் தெளிவாக இங்கு நமக்கு தெரிவிக்கின்றான்.

  நாம் ஒவ்வொருவரும் ஆழமாக மனதில் பதித்துக்கொள்ள வேண்டிய விஷயம் ,
  இப்போது நாம் அன்று தூதர் கூறிய ,. உம்மி சமுதயமல்ல ……. மாறாக் சுமார் 1000 வருடங்களின் பின் எந்த நாட்டில் எந்த நேரத்தில் பிறை தோன்றும், கிரகணம் வரும், வால் வெள்ளி தோன்றும், அது வானில் எத்தனை செக் நிற்கும் என பற் பல விசயங்களை இறைவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லும் துல்லிய அறிவை பெற்றுள்ள அறிவுள்ள சமுதாயம்.,

  இந்த நிலையில், , கண்ணால் மட்டும் பர்ர்த்தல் என்ற கருத்து ஒரு போதும் சரியான கருத்தாக ஆக மாட்டாது…. மாறாக, …… மாறும் சந்திர படி நிலைகளை அவதானத்தால் கணக்கிட்டால் ஆய்ந்து துல்லியமாக அறிந்து …. என்பதே மிக மிக சரியான ஒரு கருத்து என்பதை நாம் மறுக்க முடியாது…….

  இப்படி சரியான அறிவு ஆய்வுடன் அந்த நேரமே சரியாக மொழி பெயர்த்து நமக்கு வழங்கியிருந்தால் நாம் இப்போது மிக தெளிவான அறிவின் அடிப்படயில் ஒற்றுமையாக நோன்பு ஆரம்பித்திருப்போம். .ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி , இஸ்லாமிய கலேண்டேர் ஒற்றை உருவாகி மற்ற சமுதயத்துக்கு உதாரண ஒற்றுமை சமுதாய மாக வாழ்ந்திருக்க முடியும்……

  .ஆனால் நாமோ உருக்கூர் , வீட்டுக்கு வீடு பிரிந்த ஒரு கேவல்மான சமுதாயமாக் மாற காரணம் , விரிவான கருத்தை கொண்டுள்ள ஹதீஸ் இல் உள்ள رؤيت ‘ ருஹ்யத் க்கு, பதத்தை எப்போதும், கண்ணால் மட்டும் பார்ப்பதுதான் என்று மிக தவறாகமொழிபெயர்த்து அதுதான் உண்மை ,அதைதான் பின்பற்ற வேண்டும் என நமக்கு திணிக்கப்பட்டதே காரணம்…

  .எனவே……صوموا لرؤيته وأفطروا لرؤيته “ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ” …….. என்ற ஹதீஸ் இன் சரியான் ஏவலின்படி ,
  தற்போதுள்ள அறிவு நிரம்பிய சமுதாயத்துக்கு ஏற்றாபோல் .(அறிவால், ஆய்வால்,, கணக்கீட்டால் , அவதனத்தால் ) அறிந்து, , நோன்பை ஆரம்பித்து அதே வழியில் முடிப்போம்……. முடிக்க வேண்டும்……

  ஆனால் , பல பேர் பல ஹதீஸ்களை வைத்து கண்ணால் பார்க்கணும் கண்ணால் பார்க்கணும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார்களே ஒழியே , உண்மையான ஹதீஸ்க ளின் கருத்தை இறைவனின் வார்த்தைகளுடன் ஒப்பிட்டு விளங்கப்படுத்தி எழுதாது எதை எதையோ
  மக்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள்..அத்துடன் பத்வாவும் எழுதி விடுகின்றனர்…
  மற்ற எல்லா ஹதீஸ்களும் , இந்த மூல ஹதீஸ் முன் , இன்றைய விஞ்சான அறிவுள்ள சமுதாயத்தின் முன் அர்த்தம் அற்றவையாக ஆகிவிடுவதை , சிந்திப்பவர்கள் உணர்வார்கள்……….

  கேள்வி 03 …,
  ஒரு நகரில் சுமார் ஐம்பதாயிரம் பேர் உள்ளனர் என்று வைத்து கொள்வோம்…… இந்த பிறை பற்றி நாம் சொல்வதே சரி என மக்களுக்கு போதித்து அவர்களை சிந்திக்க விடாது , சிந்திக்க சொல்லாது, ஒவ்வொரு குழுவாக பிரிந்து , ஆளுக்கொரு நாள் நோன்பு பிடித்த் பெருநாள் கொண்டாடுவது , உண்மையான இறைவனின் கட்டளையாகவும் , அழகான இஸ்லாமிய வாழ்க்கை நெறியாக இருக்குமா ??
  அல்லது,
  இந்த ஐம்பதாயிரம் பேரும் ஒரே நாளில் நோன்பு பிடித்து ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவது உண்மையான இறைவனின் கட்டளையாகவும் , அழகான இஸ்லாமிய வாழ்க்கை நெறியாக இருக்குமா ??
  .

  சகோதரர்கள், இந்த ஆய் வை ஆழமாக சிந்தித்து ஒரு இஸ்லாமிய கலண்டர் உருவாக்கி இஸ்லாத்த்தின் அறிவியலை இந்த உலகில் நிலை நிறுத்த்த முன்வர வேண்டும் எண்டு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்…
  ……… ……….MAY ALLAAH GUIDE US.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All