Puttalam Online
current

புத்தளம் சாஹிரா கால்பந்தாட்ட அணிக்கு வரவேற்பு

(அபூ முஸ்னா)

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான வயது 15 இன் கீழ் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அணியின் வீரர்களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு இன்று காலை  புத்தளம் நகரில் இடம்பெற்றது. புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வரவேற்பளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இவ்வரவேற்பு நிகழ்வின் பின்னர் மாணவர்கள் புத்தளம் தபாகச் சுற்றுவட்டத்திலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இந்நிகழ்வில் புத்தளம் கல்வி அலுவலகத்தின் தமிழ் பிரிவு உதவிக் கவ்விப் பணிப்பாளர் இஸட். ஏ. ஸன்ஹிர், சாஹிரா தேசிய கல்லூரி அதிபர் எம். எச். எம். ராசிக் உட்பட கல்லூரியின் விளையாட்டுத் துறைப் பொறுப்பாசிரியர்களும் இதன் போது காலந்து கொண்டனர்.

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான வயது 15 இன் கீழ் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மூன்றாமிடத்தைத் தெரிவு செய்வதற்கான போட்டிகள் நேற்று திங்கட்கிழமை அநுராதபுரம், விவேகானந்தா கல்லூரி மைதானத்தில்  இடம்பெற்ற போது ஏறாவூர் அலியார் மு.ம.வி. அணியுடன் போட்டியிட்டதிலேயே  புத்தளம் சாஹிரா அணி மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற போட்டி 2 – 2 என்ற கோல்கள் அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்ததையடுத்து பெனல்ட்டி முறையில் புத்தளம் சாஹிரா அணி 1 – 0 என்ற அடிப்படையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

VATZahira Football 1 Zahira Football 2 Zahira Football 3 Zahira Football 4 Zahira Football 5


One thought on “புத்தளம் சாஹிரா கால்பந்தாட்ட அணிக்கு வரவேற்பு

  1. Wasim Akram MAB says:

    ஊக்கப்படுத்தல் – நாளைய வெற்றிக்கான இன்றைய படிக்கட்டுகளாகும். இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களும் பாராட்டத்தக்கவர்கள்.

Leave a Reply to Wasim Akram MAB Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All