Puttalam Online
puttalam-news

புத்தளத்தில் நீர் அடைப்பு வடிகாலமைப்பு – அமைச்சர் உறுதி

  • 11 September 2013
  • 939 views

புத்தளத்திலிருந்து சுமார் 40 KM தூரத்தில் இருக்கும் காலாவி ஆற்றிலிருந்து புத்தளம் நகருக்கும் அதனை சூழவுள்ள கிராமங்களுக்கும் 24 மணித்தியாலமும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் இன்று காலை புத்தளம் நகர மண்டப வளாகத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புத்தளம் நகர பிதாவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் பிரதம அரசாங்க கொரடாவுமான தினேஷ் குணவர்தன அவர்கள் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியதுடன் இன்று புத்தளம் நகரிற்கும் விஜயம் செய்து இப்பாரிய அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார்.
நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் அமைச்சர் சம்பிக ரணவக்க, அமைச்சர் பியங்கர ஜயரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உள்ளிட்ட பெருந்திரளான அதிகாரிகளும் மக்களும் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தினேஷ் குணவர்தன நகர பிதா கே.ஏ, பாயிஸ் சேவையாற்றுவதட்காகவே பிறந்தவர். அவர் பாராளுமன்றத்தில் என்னுடன் நண்பராக இருந்தார். அப்போதிருந்தே புத்தளத்தின் அபிவிருத்தியில் அதிக அக்கறையுடன் செயற்பட்டார். அவரின் முயற்சியின் காரணமாகவே இப்பாரிய அபிவிருத்தித் திட்டம் புத்தளத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் பாரிய நீர் அடைப்பு வடிகாலமைப்பு திட்டத்தை அவர் வேண்டியுள்ளார். அதையும் வெகு விரைவில் புத்தளத்தில் முன்னெடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

wtr17 wtr18 wtr20 wtr16 wtr15 wtr14 wtr13 wtr12 wtr11 wtr10 wtr9 wtr7 wtr6 wtr3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All