Puttalam Online
puttalam-news

பிரசவ முறையை தீர்மானிப்பது எப்படி?

  • 14 September 2013
  • 4,267 views

bb
சாதாரணமாக அநேக குழந்தைகள் பிரசவகாலம் நெருங்கும் போது தலைப்பகுதியை தாயின் வயிற்றின் கீழ்ப்பக்கமாக வைத்திருப்பார்கள்.இதில் 3 சதவீதமான குழந்தைகள்தான் தலையை மேலாகவும் நாரிப்பகுதியை கீழாகவும் வைத்திருப்பார்கள்.ஏழு மாத கர்ப்பகாலத்தை எடுத்தோமானால் 20சதவீதமான குழந்தைகள் நாரியை தாயின் கீழ்ப்பக்கமாக வைத்திருந்தாலும் 17 சதவீதமான குழந்தைகள் பிரசவகாலம் நெருங்கும் போது தாமாகவே திரும்பிவிடுவார்கள்.

எப்பொழுதுமே முழு கர்ப்பகாலத்திலும் ஒரேநிலையில் நாரிப்பகுதியை தாயின் கீழ்ப்பக்கமாகவே வைத்துக்கொண்டிருந்தால் அதற்கு பலகாரணங்கள் இருக்கலாம்.

Hydrocephalus (பெரியதலையுள்ளகுழந்தைகள்) Anencephaly (தலைஉருவாக்கமடையாத குழந்தைகள்)

 கர்ப்பபையிற்குள் உள்ள பன்னீர்க்குட நீரின் அளவு (Liquor) கூடுதலாக அல்லது குறைவாக இருந்தால்

    நாரி எலும்பு கூட்டின் வடிவமைப்பு ஒழுங்கற்றதாக இருப்பின் (Contracted pelvis)

    நஞ்சுக்கொடி கர்ப்பப்பை வாசலை மூடியிருப்பின் (Placenta previa)

    கர்ப்பப்பை ஒழுங்கற்ற அமைப்பாக இருப்பின் உதாரணமாக Bicornuate uteris கர்ப்பப்பையின் மேற்பகுதி இரண்டாக பிளந்து காணப்படல்.

இப்படியானவர்களுக்கு சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கவேண்டும்.
குழந்தை நாரிப்பகுதியை கீழே வைத்திருக்கும் போது வேறுவிதமாக இடுப்பு மூட்டையும், முழங்காலையும் வைத்திருக்கும்

    Complete breech–  முழங்காலை மற்றும் இடுப்பு இரண்டையும் மடக்கி வைத்திருக்கும்

    Frank breech   – முழங்காலை நீட்டி இடுப்பு மூட்டைம டக்கி வைத்திருக்கும்

    Footling breech – முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டை நீட்டிக்கொண்டே இருக்கும்.

கால் அல்லது நாரிப்பக்கத்தை (Breech presentation) தாயின் வயிற்றில் கீழ்ப்பக்கமாக வைத்திருக்கும் குழந்தைகளின் பிரசவத்தை தீர்மானிப்பது எப்படி?

மேற்குறிப்பிட்ட காரணங்களில் அடிப்படையிலேயே எப்படி குழந்தையை பிரசவிக்க வேண்டுமென தீர்மானிக்க வேண்டும். நாரி அல்லது காலை வயிற்றில் கீழ்ப்பக்கமாக வைத்திருக்கும் குழந்தைகளை நிலைமைக்கேற்ப 3 வகையில் பிரசவிக்கலாம்

    Breech delivery –  கால்அல்லது நாரி பக்கமாக பிறக்கும் குழந்தைகள்

    External cephalic version – தாயின் வயிற்றினூடாக குழந்தையின் தலையை கர்ப்பப்பையின் மேற்பகுதியிலிருந்து கீழ்ப்பகுதிக்கு சுழற்றுவது.

    Caesarean section – சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை வெளியெடுப்பது ஒவ்வொன்றையும் ஆராய்வோமானால் Breech Delivery (காலால் குழந்தை பிறப்பது)

காலால் குழந்தையை பிரசவிப்பது என்பது ஒருவகை கலை.சாதாரண பிரசவமென இலகுவாக நினைக்கக் கூடாது.இடுப்பிலிருந்து தலைவரையுள்ள பகுதி கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் போதே உரிய முறையில் எடுக்காவிடில் பல விளைவுகள் குழந்தைக்கு ஏற்படலாம்.அதுமட்டுமல்லாது வயிற்றுவலி ஆரம்பித்தநேரம் தொடக்கமும் அவதானமாக இருக்க வேண்டும்.

Breech Delivery  (நாரிப்பக்கமாக குழந்தை தாயிலிருந்து வெளிவரும்போது  நிகழக்கூடிய விளைவுகள்)

    பன்னீர்குடம் உடைந்தால் (Dribling) தொப்புள் கொடி வெளிவரும் அபாயம் (cord prolapsed) உள்ளது. சில நேரங்களில் குழந்தைக்கு உயிராபத்தும் ஏற்படலாம்.

    Foolting breech – பன்னீர் குடம் உடைந்தால் முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டை நீட்டிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் ஒருகால் வெளியேறிஇமிச்சம் பகுதிகள் வெளிவரமுடியாமல் இறுகி குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.

    இடுப்பு முதலில் வெளிவரும்போது குழந்தையின் முதுகுப் பகுதி தாயின் முன்பக்கத்தை நோக்கி இருக்கிறதா என அவதானிக்க வேண்டும்.இதன் போது நாரியைபிடித்து இழுக்கக்கூடாது.

    குழந்தை தொடர்ந்து வெளிவரும் போது குழந்தையின் தொப்புள் கொடியை இழுபட்டு அறுந்துவிடாமல் இலகுவாக்கி வைத்திருக்கவேண்டும்.சிலநேரத்தில் தொப்புள்கொடி நசுங்கி குழந்தைக்கு போகும் ஒக்சிசன் அளவு குறைந்து ஆபத்துவரலாம்.

    குழந்தையின் கால்கள் வெளிவரும்போது அனேகமாக நீட்டிக்கொண்டே இருக்கும்இஅதனால் முழங்கால் மூட்டில் கால்கள் மடக்கி வெளியெடுக்கும் போது கால்எலும்பு முறியும் சந்தர்ப்பங்களும் உண்டு.

    குழந்தை தோள் பட்டைக்கு மேல் வெளிவரும்போது கைகள் தலைக்கும் பின்னோக்கி நீட்டி காணப்பட்டால் கைகளை வெளியெடுக்கும்போது கை எலும்பு உடைவதற்கு சந்ர்ப்பம் உள்ளது.

    குழந்தையின் உடம்பின் விட்டம் தலைவிட்டத் விட குறைவாக இருப்பின் குறைந்த விட்ட விரிவுள்ள கர்ப்பப்பையை வாசலூடாக குழந்தையின் உடம்பு வெளிவந்தாலும் தலை வெளிவராமல் இறுகலாம்.இதைதான் Head Entrapment என்று சொல்வார்கள். Preterm breech குறைமாத குழந்தையின் தலைவிட்டம் உடம்பு விட்டத்தைவிட கூடுதலாக காணப்படுவதால் காலால் பிறக்கும் போது தலை வெளிவராமல் தாயின் நாரி எலும்புக்கூட்டுக்குள்ளே இறுகலாம்.

    உடம்பு வெளியேறினாலும்இதலை இலகுவாக வெளியேற முடியாது.அதனால் தலையை ஆயுதம் போட்டோ அல்லது விதிக்கப்பட்ட முறை மூலம் எடுக்க வேண்டிவரும்.அதன்போது சரியான முறையில் நடைபெறாவிடில் மூளைக்கு காயங்கள் ஏற்படலாம்.    எனவே அனுபவமுள்ள வைத்தியரால் காலால் பிறக்கும் குழந்தையின் பிரசவம் நடத்தப்பட வேண்டும்.

காலால் குழந்தைபிறப்பதை தவிர்க்க வேண்டிய காரணங்கள்

    Plucenta Previa – நஞ்சுக்கொடி கர்ப்பப்பையை வாசலுக்கருகில் அமைந்திருந்தால்.

    Inadequate Pelvis – குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போது இடுப்பு மூட்டு மற்றும் காலை மடிக்காமல் இருக்காமல்

    Large Baby – நிறை கூடிய குழந்தை

    Hyperextended fetal neck – குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போது கழுத்தை பின்னோக்கி வளைத்து காணப்பட்டால்

    Intrauterine growth restriction (IUGR) – சிறியஇநிறை குறைந்த குழந்தை

    Past section – முதல் குழந்தை சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டிருந்தால்

    First Twin in breech position – இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை கால்பகுதி, தாயின் கர்ப்பப்பை வாசல் பகுதியில் இருந்தால்.

External Cephalic Version (ECV)

    குழந்தையின் தலையை தாயின் வெளிவயிற்றினூடாக திருப்புதல்ECV மூலம் தலையை திருப்புவதற்கு முன்பு அக்குழந்தையை திருப்பமுடியுமா என ஆராயவேண்டும்.
ECV நடத்த முடியாமல் இருப்பதற்குரிய காரணிகள்

    நிpறை கூடிய குழந்தையாக

    முதலில் சத்திரசிகிச்சை செய்திருந்தால்

    நஞ்சுக்கொடி கர்ப்பப்பையின் கீழ்ப்பக்கமாக அமைந்திருந்தால்

ECV யை மேற்கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கும் எல்லா குழந்தைகளுமே சாதாரண சுகப்பிரசவமாக நடைபெறுவதில்லை.காரணம் தாயின் நாரி எலும்புக்கூட்டுக்குள் குழந்தையின் தலை இறங்காவிடில் (Non engaged head) இப்படியானவர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டிவரும்.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All