Puttalam Online
puttalam-news

சிறிய கலந்துரையாடல்

  • 20 September 2013
  • 865 views

A. Arshad Ali
B. Sc. Special in Food science and Nutrition
இளம் வயதில் நீரிழிவு நோய்க்கு உள்ளாகும் எமது இளைஜர்களைப் பற்றி கேட்க கிடைக்கும் போது கவலையாக  இருக்கிறது. இன்றைய இளைஜர்களின் உணவுப்பழக்கவழக்கமே இதற்கு காரணம் என்று திடமாக கூற முடியும். நீரிழிவு நோய் சீனியோடு தொடர்புடையது என்ற எமது அறிவு முற்றிலும் உண்மையில்லை.
நீரிழிவு நோய், இன்சுலின் என்ற ஓமோன் குறைவாக அல்லது முழுமையாக சுரக்காமல் இருப்பதால் பிறந்த குழந்தைக்கும், இன்சுலின் சுரக்கும் சுரப்பி செயலிழப்பதால் வயது வந்தவருக்கும் ஏற்படுகிறது. அப்படியிருக்க முப்பது வயதும் தாண்டாத நிலையில் நீரிழிவு நோயால் பீடிக்கப்படுவது கவலைக்கிடமானது. இளம் வயதில் நீரிழிவு நோய்க்கான காரணத்தை இவ்வாறு சொல்லமுடியும். எமது உணவில் அதிகரித்திருக்கின்ற சக்தி அல்லது கலோரி (from cola drinks, soft drinks) அல்லது அதிகரித்துள்ள எண்ணெய் உணவுகள் உடற்கலங்களுக்கு மேலால் படிந்து இன்சுலின் ஓமோனை கலங்களுக்குள் சென்று தொழிற்படவிடாமல் தடுப்பதால் ஏற்படுக்கிறது.
எமது ஊரில் நிலவும் காலநிலையின் காரணமாக எல்லோரும் மென் பானங்களை அதிகம் அருந்துவதாலும் இளைஜர்கள் தமது உடல் வாக்கை  பேணுவதற்காக உடற்பயிற்சி செய்து உடலை மெருக்கூட்டுவதற்காக கலோரி நிறைந்த பானங்களை அதிகம் அருந்துவதனாலும் எமது உடலில் உருவாகும் கொழுப்பு  தான்  இன்றைய இளைஜர்களின் நீரிழிவு நோய்க்கான காரணங்களாகும்.
இதிலிருந்து விடுபடுவது நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All