Puttalam Online
puttalam-news

பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் அர்ஷாத் அலி

cyflogoஇலங்கையில் இடம்பெறவிருக்கும் 23 ஆவது பொதுநலவாய மாநாடு இலங்கையின் அபிவிருத்தி முன்னெடடுப்புகளில் ஒரு மைல்கல். 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டை நடாத்தும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்ட இலங்கை இம் மாநாட்டையும் அதனோடு தொடர்புடைய Peoples Forum, Business Forum, மற்றும் Youth Forum ஆகியவற்றையும் சிறப்பாக நடாத்திக்காட்ட தயாராகிக்கொண்டிருக்கிறது.

 

சர்வதேச பார்வை இலங்கை மீது திரும்பி இருக்கின்ற நிலையில் இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகார முன்னெடுப்புகளை நேரடியாகக் காணக்கூடிய வாய்ப்பு பொதுநலவாய நாட்டுத் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் கிடைக்க இருக்கிறது.

DSCF0962 (2)Millennium Development Goals (MDGs) எதிர்வரும் 2015 ஆம் ஆண்டுடன் நிறைவடையும் தருவாயில், 2015 ஆம் ஆண்டுக்கு பின்னைய திட்டமிடலுக்கான கலந்துரையாடல்கள் இம்மாநாட்டில் இடம்பெற இருப்பதோடு, இளைஞர் விவகாரங்களில் உலக முன்னெடுப்புகளின் திருப்பு முனையாக பொதுநலவாய இளைஞர் மாநாடு அமைய இருக்கிறது. மேலும் பொதுநலவாய நாடுகளின் Commonwealth Youth Council இலும் முதன்முறையாக  நிறுவப்படவிருக்கிறது.

இம்முறை இவ்விளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொதுநலவாய நாடுகளின் இளைஜர் தலைவர்கள் இவ்விருவர் வீதம் கலந்து கொள்வதோடு இலங்கை சார்பாக 30 இளைஞர் பிரதிநிதிகளும் 20 பார்வையாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இம்மாநாட்டில் புத்தளம் சாகிராக் கல்லூரியின் பழைய மாணவனும் வயம்ப பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமான அர்ஷாத் அலி அவர்கள் இலங்கையின் பிரதிநிதிகளுள் ஒருவராக கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

அமீனுல்லாஹ் மற்றும் சித்தி மதீனா தம்பதியினரின் மூத்த புதல்வாரான அர்ஷாத் அலி கற்கும் காலங்களில் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டதோடு, 2006 ஆம் ஆண்டு தேசிய மட்ட தமிழ் மொழித்தின விவாதப்போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட பாடசாலை விவாத அணியின் தலைவராகவும் செயற்பட்டவர் என்பவர் குறிப்பிடத்தக்கது. அறிவிப்புத்துறையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் 2008 ஆம் ஆண்டு சக்தி F M இனால் நடாத்தப்பட்ட Shakthi Super Voices போட்டியில் இறுதி 19 போட்டியாளர்களுக்குள் தெரிவாகியும் இருந்தார்.

பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பற்றி அர்ஷாத் அலி கூறுகையில், இது அல்லாஹ்விவினால் எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய சந்தர்ப்பம்; நாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் வாய்ப்பு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என்றும் தன்னை இந்த நிலைக்கு உயர்த்துவதற்காக உழைத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பாக கலந்து கொள்வதற்கான உடல் ஆரோக்கியத்தையும் அல்லாஹ்வின் அருளையும் பெற்றுக் கொள்வதற்காக தனக்காக பிரார்த்திக்குமாறும் Puttalam Online வாசகர்களையும் அன்பாக வேண்டிக்கொண்டார்.

Puttalam Online இணைய தளத்தின் உத்தியோகபூர்வ வீடியோ படப்பிடிப்பாளரான அர்ஷத் அலி  இவ்விளைஞர் மாநாட்டில் சிறப்பாக கலந்து கொண்டு பல பிரயோசனங்களை அடைந்துகொள்வதோடு சமூகத்திற்கும் அவரால் பல பிரயோசனங்கள் கிடைக்க வேண்டுமென Puttalam Online வாசகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

SAT


3 thoughts on “பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் அர்ஷாத் அலி

  1. s.m.m.nuhumanhaj says:

    உங்களை பார்த்த உடன் நான் சந்தோசம்அடைகிறேன் .நீங்கள் கஷ்டப்பட்டு படித்து ஒரு நல்ல நிலைக்கு வண்த்துல்லீர்கள் .முயற்சி வீணாக வில்லை .தொடர்ந்து உங்கள் முயர்ச்சிக்குஎனது பாராட்டுகள் .அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

  2. arham6214 says:

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சி மேலும் தொடருட்டும் உங்களால் புத்தளம் பெருமை அடைஹிறது

  3. Mohamed SR. Nisthar says:

    congrates Arshath Ali!

Leave a Reply to Mohamed SR. Nisthar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All