(ஹிஷாம் ஹுஸைன்)
ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் மைதான தொழுகையும் கொத்பாவும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி திடலில் இன்று (2013-10-16) ஆம் திகதி அதிகாலை 6:30 மணி முதல் நடைபெற்றது. அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) தொழுகையையும் கொத்பாவையும் நிகழ்த்தினார்.
இரண்டு பெருநாள் தினங்களின் மைதான தொழுகை கொத்பாவை முஹைதீன் ஜும்மா மஸ்ஜித் (பெரியபள்ளி) ஏற்பாடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்: ஹஸ்னி அஹ்மத்
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் மாவட்டக் கிளை தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமுடன் சாஹிரா கல்லூரி அதிபர் எம்.எச்.எம். ராசிக்
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். நியாஸுடன் Knowledge Box சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி, Puttalam Online ஆலோசகர் எஸ்.ஏ. அஸ்கர் கான்
ஆண்டுக்கு ஓரிரு முறை பெருநாட்களில் சந்திக்கும் பாடசாலை கால நண்பர்கள் நினைவுகளை நிழற்படமாக்குகின்றனர்
Share the post "புத்தளத்தில் புனித ஹஜ் பெருநாள் மைதான தொழுகை, கொத்பா புகைப்படங்கள் 16-10-2013 இணைக்கப்பட்டுள்ளது"
அஸ்ஸலாமு அலைக்கும்.அனைவருக்கும் யீத் முபாரக் .புத்தளம் சாஹிரா பாடசாலையில் ஹஜ்ஜு பெருநாள் தொழுகைக்கு மக்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையை பார்க்கும் பொழுது சந்தோசமாக உள்ளது .மாஷா அல்லாஹ் ,அல்ஹம்து லில்லாஹ் . இவ்வாறான ஒற்றுமை எதிர் காலத்தில் வரக்கூடிய எல்லா நல்ல விடயங்களிலும் வாளியுர்தபடவேண்டும் . இவ்வாறான செய்திகளை பல மைல்களுக்கு அப்பால் இருந்து படங்களுடன் பார்பதற்கு ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் புத்தளம் ஒன்லைனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் .
கவித்துவமான புகைப்படங்கள்
நான் புத்தளத்தை விட்டும் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், நான்கற்ற பாடசாலை, இடைவேளை நேரத்தில் ஓடி பிடுத்து விளையாடிய மைதானம், அங்கு கூடி இருந்த எனது நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என பலரும் இந்த மைதானத்தில் கூடி தமது பெருநாள் தொழுகையை நிறைவேற்றி சந்தோசமாக இருப்பதை கண்டு நான் அவ்விடத்தில் இல்லையே என்ற கவலை வாட்டினாலும்…
இந்த இணையதளத்தின் மூலம் இப்புகைப்படங்களை பார்த்து நானும் புத்தளம் வந்து எல்லோருடனும் கட்டித்தழுவி முஆனக்கா செய்த உணர்வைப் பெற்றேன் அல்ஹம்து லில்லாஹ்…
புத்தளம் ஆன்லைன் நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுக்கள்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ்
புத்தளம் ஓன்லைன் மிகச் சிறப்பாக இயங்கிவருவதை முன்னிட்டு அல்லாஹ்விற்கு முதலிலும் அதன் பிறகு அதன் பின்னனியில் இருக்கும் ஆலோசனைக் குழுவிற்கும் செயற் குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
புத்தளம் ஓன்லைன் ஆலோசனைக் குழு விபரம் எம்மைப்பற்றி என்ற பகுதியில் புகைப்படங்களுடன் போடப்பட்டுள்ளது நல்லதுதான் .
எனினும் எவ்வித எதிபார்ப்புமின்றி அயராது உழைக்கும் ஸன்ஹீர் ஆசிரியர் போன்ற ஓன்லைன் புகைப்பிடிப்பாளர் வீடியோ எடுப்பவர் செய்திகளை போடுகின்றவர்கள் என பலர் இருப்பதாக கேள்விப்படுகின்றோம். இவர்களையும் இணைத்து அப்பகுதியில் வெளியிடுவதே அவர்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கும்.
ஆலோசனைகளை யாரும் வழங்க முடியும் தியாகத்தோடு செயற்படுகின்றவர்கள் மிகமிகக் குறைவு இவ்வாறாகவர்களே முதலில் பாராட்டப்படவேண்டும்.
ஏற்பாட்டுக்குழுவின் கவனத்திற்கு,
“போடோக்ராபர்” தோரணையில் ஆங்காங்கே சிலர் கையில் சிறிய, பெரிய காமராக்களுடன் உலாவுகின்றார்கள். இவை எதிர்காலத்தில் கட்டுப்படுத்தப்படவேண்டும்!
நீங்கள் சொல்ல வந்த விடயத்தினை மேலும் விளக்கமாக சொல்லியிருக்கலாம்.
அங்கு போட்டக்கள் எடுத்ததில் பெரும்பான்மையானவர்கள் ஊடகவியலாளர்கள். நீங்கள் ஊடகவியலாளர்களினை கட்டுப்படுத்த சொல்லீர்களா???ஃஃஃ
அல்லது வெளி பிரதேசத்திலிருந்து வந்து போட்ட பிடித்தவர்களை குறிப்பிடுகின்றீர்களா?
எனக்கும் ஆசைதான். ஒரு நாள்தான் சென்றேன். காலை வெய்யிலாயினும் தாங்க முடியவில்லை எனவே பள்ளிக்குத்தான் செல்கிறேன். தவறாகுமா?
அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜா சஹாப்தீன் சர்
தவறா இல்லையா என்று கூறும் அளவுக்கு சன்மார்க்க அறிவு எனக்கு இல்லை.
ஆனால், தொடர்ந்து வரும் காலங்களில் பெருநாள் தொழுகைக்கான மைதான ஏற்பாடுகளின் போது ‘விசேட ஏற்பாடுகள்’ செய்யப்பட வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொள்கின்றேன். சஹாப்தீன் சர் குறிப்பிடும் விடயம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.
அல்லாஹ் கிருபையாளன், அன்பாளன், மிக அறிந்தவன்
உணர்வுகளையும் சிந்தனையையும் சங்கமிக்க வைக்கும் அருமையான அர்த்தமுள்ள முன்வைப்பு. கடைசிப் புகைப்படம் எனக்குள் மிகவும் நெருடல்களை தந்துவிட்டது. ஊடகத்தின் வலிமைக்கு இதுவும் சாட்சி. ஹிஷாம் ஹுசைன் மற்றும் ஹஸ்னி அஹ்மத் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் ஈத் முபாரக்.