Puttalam Online
puttalam-news

இந்த முரண்பாடு உணரப்படுமா?

fullmoonஅகில இலங்கை ஜமிய்யதுல் உலமா இந்நாட்டு முஸ்லிம்களுக்கு கடந்த 16.10.2013 புதன் அன்று ஹஜ்ஜுப்பெருநாள் என அறிவித்திருந்தது. அன்று தான் துல்ஹிஜ்ஜா பிறை 10 என்பது அவர்கள் தீர்மானம். அப்படியாயின் 17.10.2013, 18.10.2013, 19.10.2013 ஆகிய நாட்கள் அய்யாமுஷ் தஸ் ரீக் உடைய 11ம்,12ம்,13ம் நாட்களாகும்.

மக்களே! நீங்கள் அவதானித்து பாருங்கள்.

இன்ஷா அல்லா 19.10.2013 அன்று மாலை சூரியன் மறைந்ததும் கிழக்கு வானில் பூரண நிலவு தோன்றும். பூரண நிலவு எப்போதும் 29 நாட்களை கொண்ட மாதமாக இருந்தால் பிறை 14 லும், 30 நாட்களை கொண்ட மாதமாக இருந்தால் பிறை 15 லும் ஏற்ற்படும்

இது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஏற்பாடும் அத்தாட்சியுமாகும். இந்த பேருண்மையை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ, புறந்தள்ளவோ முடியுமா? ஒரு போதும் முடியவே முடியாது.

இதனை உறுதி செய்ய அல்லாஹ்வின் மேலும் ஒரு அத்தாட்சி தான் 18.10.2013 ம் திகதி அதிகாலையில் 3:21 முதல் 7:20 வரை நிகழும் சந்திர கிரகணமாகும். சந்திர கிரகணம் எப்போதும் பூரண நிலவின் போதே நிகழும். இதுவும் மறுக்க முடியாத மாபெரும் உண்மையாகும். ஜமிய்யதுல் உலமா 19.10.2013 அதாவது பிறை 14. அஸர் வரை அய்யாமுஷ் தஸ் ரீக் என தீர்மானம் எடுத்தது ஷரிஆ நிலைப்பாட்டில் சரிதானா? விளக்கம் தருவார்களா?

மக்களே புரிந்து கொள்ளுங்கள் இம்மாத துல்ஹிஜ்ஜாவின் முதல் நாள் தீர்மானத்தில் ஜமிய்யதுல் உலமா தவறியுள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகியுள்ளது. ஜமிய்யதுல் உலமா வின் வழிகாட்டலுக்கு ஏற்ப அரபா தின நோன்பு நோற்றதும், பெருநாள் கொண்டாடியதும், சரிதானா? . அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா பின்பற்றும் மாத ஆரம்பத்தை தீர்மானிக்கும் வழி முறை முற்றும் பிழையானது,  என நாங்கள் வலியுறுத்தி கூறி கொள்ள விரும்புகின்றோம். இவ்விடயத்தை பலமுறை எடுத்து கூறியும் அவர்கள் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. கடந்த நோன்பு பெருநாள் தீர்மான கசப்பான உண்மைகளை நீங்கள் அறிந்தே இருக்குறீர்கள். இதனை சிந்திப்பீர்களா?

அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்

10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.

6:104. நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் “நான் உங்களைக் காப்பவன் அல்ல” (என்று நபியே! நீர் கூறும்).

 

 

Related Post:
அவதானித்து பாருங்கள்! 7ம் நாள் பிறை First Quarter (First Quarter)

உங்கள் சிந்தனைக்கு ஒரு விருந்து! (Full Moon)

பிறைகள் தொடர்பில் மற்றுமோர் அவதானம் (Third Quarter)

இஸ்லாமிய கலண்டர் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு முதற்படியாகும்

பிறைகளை பார்த்து கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்!!

இஸ்லாமிய மாதங்களை ஆரம்பிப்பது எப்படி?

நாளின் ஆரம்பம் எப்போது?

அரபா தினம் எப்போது – ஒரு ஆய்வு

 

வெளியீடு:

Viruthodai Islamic Research Foundation (VIRF)

No. 270 D/1, Viruthodai, Madurankuli, Puttalam, Sri Lanka.

Tel. & Fax: 0322268190  Mobile: 0772824691, 0727602999, 0722268062, 0712892353, 0773171726, 0779772938,

Email: virfnet@gmail.com

ADM 

 

 

 


3 thoughts on “இந்த முரண்பாடு உணரப்படுமா?

 1. Mohamed SR. Nisthar says:

  அன்புள்ள ரிஸான்,

  நீங்கள் சொல்லும் இதே சபைதான் நோன்பு பெருநாளை, அதாவது 8ம்திகதி கொண்டாடியவர்களை பிழை என்றது. பிறகு 8ம் சரி 9ம் சரி என்று adjust பண்ணியது. ஒரு முறை பிழை என்றால் மனித இயல்பு என்று விட்டிருக்கலாம், ஹஜ் தினத்தின் பிறை தவறுவதற்கு சாத்தியம் மிக மிக குறைவு. எனவே இம்முறையும் மக்காவில் ஹஜ் முடிய இலங்கையில் பிந்தி கொண்டாடியதும் அதற்கு காரணமாகிய ஜ.உ.சபையும் கண்டிக்கபட வேண்டியது. நபிகள் குதிரையில், ஒட்டகத்தில் தான் ஹஜ் ஜூக்கு சென்றுள்ளார்கள். எனவே நாமும் நபிகள் செய்தது போல் செய்யலாமே? ஏன் நமக்கு ஆகாயவிமானம்? இஸ்லாம் பொது புத்தியுடன் செல்லும் மார்க்கம். பொது புத்தி எப்போதுமே விஞ்ஞான பூர்வமானது. மாதங்கள் என்பது ஒரு வருடத்தில் ஒரு அளவும் இன்னொரு வருடத்தில் இன்னொரு அளவுமாக அமையாது. சூரிய வருடத்தில் லீப் வருடம் என்ற ” adjustment” உண்டு. ஆனால் சந்திர வருடத்தில் இல்லை என்றே நினைக்கின்றேன். எனவே துல்-ஹஜ் மாதம் 29 நாட்களைக் கொண்டதாகவே அமைகின்றது. அதன்படி இந்த வருடம் 15ம் திகதி ஓக்டோபர் மாதமும் 2014ல் ஒக்டோபர் மாதம் 04ம் திகதியும் துல்-ஹஜ் பிறை 10த்தாகும். எனவே 11ம் பிறையில் பெருநாள் கொண்டாடுவது, அதுவும் பிழை என தெரிந்து கொண்டு, அதற்கு ஜ.உ. சபையை துணைக்கழைப்பது இஸ்லாத்தின் எந்த பகுதிக்குள் வருகின்றதோ?

 2. றிஸான் says:

  ஜம்மியதுல் உலமா என்பது அதிக உலமாக்களைக் கொண்ட சபை அவர்கள் குர்ஆனினதும் நபியவர்களின் வழிகாட்டலிலிருந்தும் பிறை பார்த்து மாதத்தை ஆரம்பம் செய்யும் வழிமுறையை நடை முறைப்படுத்துகிறார்கள். அதற்கு ஆதாரமாக பல ஹதீஸ்கள் உள்ளன. வானத்தில் பிறை இருந்தும் மேகத்தின் காரணமாக பிறை தெரியாவிட்டால் கூட மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்யுங்கள் என்று நபியவர்கள் கூறியிருக்கும் போது நாம் ஏன் வீணாக பிரச்சினைப்பட்டுக் கொள்ள வேண்டும்.
  உலமாக்களின் வழிகாட்டலை ஏற்று ஒற்றுமையாக ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவோம். அல்லாஹுத் த ஆலா மிகப் பெரும் கருணையாளன். முஸ்லிம்களின் ஒற்றுமையை விரும்புபவன். நமது தவறுகளை மன்னிக்கக் கூடியவன். பிறையை விட தலைமைக்குக் கட்டுப்படுவதும் ஒற்றுமையாக செயற்படுவதும் மிகப் பெரிய இபாதத். சிறிய காரணங்களைக் கொண்டு முஸ்லிம்களைப் பிரித்தாள்வது ஷைத்தானினதும் எதிரிகளினதும் சூழ்ச்சி

 3. Mohamed SR. Nisthar says:

  அன்பார்ந்த VIRF யினருக்கு!

  அரபா(த்) தில் ஹாஜிகள் நிற்கும் போது உலகத்தின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்கள் நோன்பு நோற்க வேண்டும். அடுத்த நாள் ஹாஜிகளுடன் சேர்ந்து ஒட்டு மொத்த உலகமும் பெருநாள் கொண்டாட வேண்டும். ஆனால் ஹாஜிகள் பெருநாள் கொண்டாடும் போது இலங்கையில் பலர் அரபா(த்) நோன்பு நோற்றது வேடிக்ககையானது. ஆகவே தெரிந்து கொண்டு இலங்கை ஜம்மியத்துல் உலமாவை தங்கள் வழிகாட்டிகளாக நினைத்து பின்பற்றும் மூஸ்லீம்களை நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது. தெரியாமல் செய்வதென்பது மன்னிக்கக் கூடியது. ஆனால் தெரிந்து செய்யும் தவறு என்பது? இருந்தாலும் அடுத்த லைலத்துல் கதர் ஆக இவர்கள் தீர்மாணிக்கும் தினம் ஒன்றில் ” நாம் தெரிந்து செய்த பாவங்களையும் ,…” என்று மூக்கால் அழுது adjust பண்ண காத்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. ஆகவே யார் என்ன சொன்னாலும் இவர்கள் கேட்கமாட்டார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All