Puttalam Online
puttalam-news

புத்தளத்தில் இரத்த தான முகாம் நடைபெறுகின்றது (Final Updates)

(ஹிஷாம் ஹுஸைன்)

புனித ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து, Puttalam Human Development – PHD (Zahirians 2002) ஏற்பாடு செய்த இரத்த தான முகாம், இன்று (2013.10.20) ஆம் திகதி காலை 9:30 மணி முதல் IBM மண்டபத்தில் நடைபெற்றுக்-கொண்டிருக்கின்றது, அல்ஹம்துலில்லாஹ். அமைப்பினர் இரண்டாவது முறையாகவும் இவ் இரத்த தான முகாமினை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய இரத்த தான முகாமில் வைத்தியர்களாக Dr. Hasitha Abeyrathne (Marawila Base Hospital), Dr. D.N.K. Wijethunge (Kantale Base Hospital), Dr. D.N.A. Mendis (Puttalam Base Hospital) ஆகியோருடன் சிலாபம் இரத்த வங்கியின் ஆண் பெண் தாதிமார் கடமையில் ஈடுபடுகின்றனர்.

இச் செய்தி எழுதப்படும் காலை 10:30 மணியாகும்  போது, இரத்தம் தானம் செய்வதற்காக ஆண்கள் பெண்கள் 70 பேர்வரையில் வருகைசெய்திருந்தனர். சுமார் 40 point இரத்தம் பெறப்பட்டிருந்தது.

Updated news (with pics):

பி.ப. 2:00 மணி – இரத்தம் தானம் செய்வதற்காக வந்திருந்தோர் 230 தாண்டியிருந்ததுடன், இரத்தம் 175 point பெறப்பட்டிருந்தது. பி.ப. 3:00 மணி வரை இரத்த தான முகாம் நடைபெறும் என PHD ஊடக இணைப்பாளர் எம்.என்.எம். ஜஹாஸ் தெரிவிக்கின்றார்.

Final Update இறுதி இற்றைப்படுத்தல்

பி.ப. 10:00 மணி – குறுகிய நேர விஜயமொன்றை மேற்கொண்ட புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் இரத்தம் தானம் வழங்குவோரையும் PHD அமைப்பினரையும் பாராட்டி உற்சாகப்படுத்தினார். பி.ப. 3:00 மணியுடன் இரத்த தானம் வழங்குவோர் பதிவு நிறுத்தப்பட்டது. 3:30 மணியளவில் இரத்தம் சேகரிக்கும் நடவடிக்கை நிறைவுசெய்யப்பட்டது.

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் இரத்த தான முகாமுக்கு விஜயம் செய்த போது

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் விஜயம் செய்த போது

வைத்தியர் குழு சார்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் D.N.A. Mendis (Base Hospital, Puttalam) இரத்த தானம் வழங்கியவர்களின் ஆர்வத்தைப் பாராட்டியதுடன், “சென்ற வருடம் இரத்த தான முகாம் நடத்திய அனுபவம் அனைத்து ஏற்பாடுகளிலும் தெரிகின்றது. இதன் காரணமாக எங்கள் பணிகளைச் செய்வதற்கு வசதியாகவும் வாய்ப்பாகவும் இருந்தது. இனிவரும் காலங்களில் உங்களுடன் வேலை செய்வதற்கு விருப்பமாக இருக்கின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

சிலாபம் இரத்த தான வங்கியின் அதிகாரி குறிப்பிடும் போது, “புத்தளம், சிலாபம், மாதம்பை ஆகிய 3 வைத்தியசாலைகளில் இருந்து வருகை செய்திருந்தோம். இரத்த தான முகாமொன்றில் எதிர்பார்க்கும் அளவை விட அதிகமான தொகை இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது”.

PHD சார்பில் வைத்தியக் குழுவினருக்கு (இக் கட்டுரையாளன்) சிங்கள மொழியில் நன்றியைத் தெரிவித்தார்.

PHD தலைவர் எம்.எஸ்.எம். நமாஸின் நன்றியுரை:

மேற்படி இரத்த தான நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய புத்தளம், சிலாபம், மாதம்பை தள வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் உட்பட வைத்தியர்கள் தாதிமார்களுக்கும் இரத்த தானம் வழங்கிய சகோதரர்கள் சகோதரிகளுக்கும் புத்தளம் பெரியபள்ளி, கெயாரிங் ஹேன்ட்ஸ் (Caring Hands) நிறுவனம், அமானா தகாபுல் (insurance), ஜமாதே இஸ்லாமி – புத்தளம் கிளை உட்பட சகோதர சமூக அமைப்புக்களுக்கும் Puttalam Online வலைத்தளம், வெகுசன ஊடகவியலாளர்கள், முகநூல் குழுக்கள் (facebook groups), ஜும்மாப் பள்ளிவாசல்களுக்கும் ஐ.பி.எம். மண்டப முகாமைத்துவம், தனவந்தர்கள், நலன்விரும்பிகள், ஆர்வளர்கள் அனைவருக்கும் PHDயின் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், எமது எதிர்கால நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க அனைவரின் பூரண ஒத்துழைப்பையும் பிரார்த்தனைகளையும் எதிர்பார்கிறோம்”

முன்னைய பதிவுகள் (பி.ப. 2:00 வரை)

இப்புகைப்படத்தில் இருக்கும் சகோ. பிரியந்த, பாலாவி கூறியதாவது,  “පෝන් කඩේ සජිත් අයියා ලේ දන්දීමේ ව්‍යාපාරයක් තියෙනවාය කිව්වා. ගිය මාර්තු මාසේ පුත්තලම ඉස්පිරිතාලේ ලේ දුන්නා (කාඩ් පත පෙන්වයි). දැන් මාස හයක් පහුවෙලා. ලේ දන්දෙන එක ලොකු පිනක්.”

(போன் கடையின் சஜித் அண்ணா இரத்த தான முகாம் நடைபெறும் எனச் சொன்னார். மார்ச் மாதம் புத்தளம் வைத்தியசாலையில் இரத்தம் கொடுத்தேன் (அட்டையைக் காட்டுகின்றார்). இப்போது ஆறு மாதம் கடந்துவிட்டது. இரத்தம் கொடுப்பது ஒரு பெரிய நன்மை)

இரத்த தானம் செய்வதை நன்மையாகக் கூறிய சகோ. பிரியந்த, பாலாவி

இரத்த தானம் செய்வதை நன்மையாகக் கூறிய சகோ. பிரியந்த, பாலாவி

இரத்த தானம் செய்வோர் பெயர் பதிவு

இரத்த தானம் செய்வோர் பெயர் பதிவு

PHD உறுப்பினர்... i

PHD உறுப்பினர்… i

இரத்த தான முகாமுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நிறுவகங்கள்

இரத்த தான முகாமுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நிறுவகங்கள்

மனங்களில் பதிந்த சின்னம்

மனங்களில் பதிந்த சின்னம்

PHD உறுப்பினர்... ii

PHD உறுப்பினர்… ii

தேசத்திற்காக தானமாக்கப்படும் வாலிப இரத்தம்

தேசத்திற்காக தானமாக்கப்படும் வாலிப இரத்தம்

தேசத்திற்காக தானமாக்கப்படும் வாலிப இரத்தம்

தேசத்திற்காக தானமாக்கப்படும் வாலிப இரத்தம்

தானத்தில் களிப்பு - முகங்களில் சிரிப்பு

தானத்தில் களிப்பு – முகங்களில் சிரிப்பு

இரத்த தான முகாம்

இரத்த தான முகாம்

முன்னைய பதிவுகள் (மு.ப. 10:30 வரை)

இரத்த தானம் செய்வோரின் பெயர் பதிவு செய்தல்

இரத்த தானம் செய்வோரின் பெயர் பதிவு செய்தல்

பெயர் பதிவின் பின் இரத்தம் தானம் செய்ய காத்திருப்போர்

பெயர் பதிவின் பின் இரத்தம் தானம் செய்ய காத்திருக்கின்றார்கள்

Dr. Hasitha Abeyrathna

Dr. Hasitha Abeyrathna

Dr. D.N.K. Wijethunge

Dr. D.N.K. Wijethunge

Dr. D.N.A. Mendis

Dr. D.N.A. Mendis

இரத்த தானம் செய்யும் வாலிபன்

இரத்த தானம் செய்யும் வாலிபன்

இரத்த வங்கி தாதிமார்

இரத்த வங்கி தாதிமார்

இரத்த தான முகாமாக மாறியிருக்கும் ஐபீஎம் மண்டபம்

இரத்த தான முகாமாக மாற்றம் பெற்றிருக்கும் IBM மண்டபம்

இரத்த வங்கி தாதியுடன் PHD தொண்டர்

இரத்த வங்கி தாதியுடன் PHD தொண்டர்

இரத்த தானத்தில் பங்குகொண்ட பெண்கள்

இரத்த தான முகாமில் பெண்களின் தொண்டு…

தன் சிசுக்காக உதிரத்தை பாலாக்கிய தாய்மை, பிறர் நலனுக்காக தானம் செய்யும் தியாகம்

தன் சிசுக்காக உதிரத்தை பாலாக்கிய தாய்மை – பிறர் நலனுக்காக தானம் செய்யும் மேன்மை

இரத்த தானம் செய்யும் நல்மக்கள்

இரத்த தானம் செய்யும் நல்மக்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


One thought on “புத்தளத்தில் இரத்த தான முகாம் நடைபெறுகின்றது (Final Updates)

  1. s.m.m.nuhumanhaj says:

    இரத்த தானம் செய்யும் நிகழ்வில் நானும் பங்க்கு கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காமல் போனது கவலையாக உள்ளது.தற்போது ஹஜ் பயணத்தில் உள்ளேன். இன்ஷா அல்லாஹ் இன்னொரு சந்தரப்பத்தில் தானம் செய்ய கலந்துகொள்வேன்.

    அல்லாஹ் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக.

Leave a Reply to s.m.m.nuhumanhaj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All