Puttalam Online
current

ஒளிக்கீற்று பரிசளிப்பும் ‘வாழ்த்தும் உரைகள்’ நூல் வெளியீடும்

book9

(மௌலவி எம்.எஸ்.எம். நஸ்ருதீன்) கடந்த ரமழானில் புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் அகில இலங்கை மட்டத்தில் நடத்திய ஒளிக்கீற்று அறிவுத் திறன் போட்டியின் பரிசளிப்பு 2013.10.27 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:45 மணிக்கு புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அஸ்வர் மண்டபத்தில் நிலையத்தின் தலைவர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் தலைமையில் புகழ்பெற்ற காரி அஷ்-ஷைக் அல்-ஹாஃபில் ஏ.ஆர். அப்துல் ஹலீம் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமாகி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கசீதஹ், கவிதை போன்ற நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டதுடன் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன. போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு முறையே ரூபா 15,000.00, 12,500.00, 10,000.00 பணப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், பாராட்டுப் பரிசில்களாக எழுவருக்கு சான்றிதழ்களுடன் தலா ரூபா 2,000.00மும் வழங்கிவைக்கப்பட்டது.

முதல் பரிசை M.T. ரிப்கான் அவர்களும் இரண்டாம் பரிசை N. லுத்பி அஹ்மத் அவர்களும் மூன்றாம் பரிசை N.M.M. இம்தியாஸ் அவர்களும் தட்டிச்சென்றனர். போட்டியாளர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் நடுவர் குழுவினரால் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

இப்பரிசளிப்பு விழாவின்போது அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்கள் எழுதிய ‘வாழ்த்தும் உரைகள்’ நூலும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வுகளின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரபல எழுத்தாளர், ஆய்வாளர் கலாபூஷனம், இலக்கியச் சுடர் ஏ.ஏ.எம். புவாஜி அவர்கள் நூலாசிரியரிடமிருந்து நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்த அல்-ஸபா இஸ்லாமிய நிதிச் சேவைகள் நிறுவனத்தின் பிரதம முகாமையாளர் அஹமத் இம்ருஸ் காமில் அவர்களும் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்த புத்தளம் நகர பிதா கௌரவ கே.ஏ. பாயிஸ் அவர்களும் நூலாசிரியரிடமிருந்து முறையே நூலின் இரண்டாம், மூன்றாம் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்;.

‘வாழ்த்தும் உரைகள்’ அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் அவர்களின் அச்சாகியுள்ள ஆறாவது நூல் என்பதுடன் அது ஓர் இலவச வெளியீடுமாகும்.

மேற்படி நிகழ்வுகளில் ஆலிம்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், ஏனைய துறைஞர்கள், அரபு மத்ரஸாக்களின் அதிபர்கள் நிறைய கலந்துகொண்டிருந்ததுடன் அஸ்வர் மண்டபம் அவையோரினால் முழு அளவில் நிறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

PHOTOS: M.H. HASNI AHMED
book 20 book1   book4 book5 book6 book7 book8 book10 book11 book12 book13 book14 book15 book16book18   book19
PHOTOS : A.T.M. AZWER
 DSC_0524 DSC_0528 DSC_0532 DSC_0534 DSC_0536 DSC_0542 DSC_0543 DSC_0558


One thought on “ஒளிக்கீற்று பரிசளிப்பும் ‘வாழ்த்தும் உரைகள்’ நூல் வெளியீடும்

  1. Naina marikar sirajdeen siro says:

    வாழ்த்துக்கள்

Leave a Reply to Naina marikar sirajdeen siro Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All