Puttalam Online
star-person

புத்தளத்தில் வளர்ந்துவரும் விருட்சம் சதாம் சாஜஹான்

(S.I.M.Akram-Casimi)

IMG_1655எமது பிரதேசத்தில் வாழும் விஷேட ஆற்றல்மிக்கவர்கள், எமது சமூகத்திற்கு பிரத்தியேகமான சேவைகளை வழங்கிவரும் தனித்துவமானவர்கள் எனக்குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாகும். இம்முயற்சி, பிறர் புகழ்பாடும் நோக்கமல்லாது அல்லாஹ் வழங்கிய ஆற்றல்களையும் அருட்கொடைகளையும் பயன்படுத்தி சமூகப்பணி புரிபவர்களை முன்னுதாரணமாக காட்டி, எம்மில் பலரையும் இச்சமூகப் பணிக்காகத் தூண்டுவதாகும். இந்த வகையில் மண்ணின் மைந்தர்கள் பகுதியில் இம்முறை இளம் சமூக ஆர்வலர் ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றோம்.

————————————————————————————————————————————————————————-

IYCSL team was welcomed Honorable Minister Susil Premajayantha Ministry of Environment and renewable Energy 2புத்தளத்திற்கு தேசிய சர்வதேச மட்டத்தில் அறிமுகத்தையும் புகழையும் தேடித்தந்துக்கொண்டிருப்பவர் சதாம் சாஜஹான்.  இவர் பற்றி பல வியத்தகு தகவல்கள் இருந்த போதிலும் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.  இவருடைய இச்செயற்பாட்டிற்கு அவருடைய பெற்றோர்கள் முழு ஒத்துழைப்புக்களையும் உற்சாகத்தையும் வழங்கிவருகின்றமை ஏனைய பெற்றோர்களுக்கு முன்னுதாரணமாகும்.

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறவிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது புத்தளம் மண்ணின் மைந்தர்களும் இதில் தங்களாலான பங்களிப்புகளை செய்துவருவதை புத்தளம் ஓன்லைன் மூலம் அறிந்துவருகின்றோம்.

இவ்வகையில் புத்தளத்தைச் சேர்ந்த சதாம் ஷாஜஹான்  என்பவரை அறிமுகம் செய்கின்றோம். இவர் 1991.02.20 ம் திகதி புத்தளத்தில் ஷாஜஹான் (சாரா டெக்ஸ்) மும்தாஜ் ஆசிரியை தம்பதியினருக்கு இரண்டாம் பிள்ளையாக பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை 1996 ம் ஆண்டு புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் தரம் 2 வரை பூர்த்திசெய்துவிட்ட அவர், 1999 ம் ஆண்டு  தரம் 5 வரை புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பிரிவில் கற்றுக்கொண்டார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்ற சதாம் புத்தளம் மாவட்டத்தில் முதல்Mr Sadham With Mr Partick Sciarratta மாணவனாக தெரிவாகினார். இதனால் கொழும்பிலுள்ள டி.ஸ். சேனநாயக்கா கல்லூரியில் தரம் 6 தொடக்கம் கற்பதற்கான சந்தர்ப்பம் அவருக்கு கிட்டியது.

இது அவரது வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது என்று கூறும் அவர் க.பொ.த.சாதாரண வகுப்பு வரை அங்கு கல்வி கற்றார். இதன் போது பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பல திறமைகளையும் வெளிப்படுத்திய சதாம் டி.எஸ். சேனநாயக்கா கல்லூரியில் உள்ள 25 கழகங்களில் தன்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டார். குறிப்பாக  சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச கிரிக்கட் கவுன்சில் போன்ற கழகங்களில் தன்னை அங்கத்தவராக இணைத்துக்கொண்டு பல சமூகநல செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

டி.எஸ். சேனநாயக்கா கல்லூயில் 150 க்கும் மேற்பட்ட பாடசாலைக் கழகங்கள் உள்ளன.

எனினும்; க.பொ.த உ.த பரீட்சையை புத்தளத்தில் கற்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. தனது தந்தைக்கு கட்டுப்பட்டு புத்தளத்தின் இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் 2008 – 2010 கல்வியாண்டில் உயர் தர கணிதப் பிரிவில் கற்றுக் கொண்டார்.

புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பிரிவில் அவர் தரம் 4 ல் கற்கும் போது மாணவத் தலைவர் பொறுப்பும் தரம் 5 ல் கற்கும் போது சிரேஷ்ட மாணவத் தலைவர் பொறுப்பும் சதாமுக்கு வழங்கப்பட்டதால் தலைமைத்துவ ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கான முதல் சந்தர்ப்பம் அவருக்கு கிட்டியது.

அவருக்கு வழங்கப்பட்ட மாணவத் தலைவர் பொறுப்புக்கள் மூலம் ஆளுமையை வளர்த்துக் கொண்ட சதாம் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென அந்த பிஞ்சு காலத்திலிருந்தே அவரது மனதை உறுத்திக்கொண்டிருந்தது.

Mr Sadham with Mr. Ahmad Alhendawi ( UN Special Envoy for Youth).JPGதனது க.பொ.உயர்தரத்தை பூர்த்திசெய்துகொண்ட சதாம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பக் கல்வியையும், மாலபே சினெக் கல்லூரியில் இயந்திர மற்றும் இலத்திரனியல் பொறியியல் கற்கை நெறியையும் பூர்த்திசெய்துள்ளார். எனினும் தனது இக்கற்கை நெறிக்காக அவர் சமர்ப்பித்த “சூரிய சக்தியைக் கொண்டு மின்சாரத்தை சிக்கனப்படுத்தல்” என்ற ஆய்வு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும் தான் செய்த ஆய்வு சரியானது என 100 வீதம் நம்பிய அவர், தான் செய்த ஆய்வு சரியானதா அல்லது பிழையானதா எனும் தேடலில் இறங்கினார். இதற்கு இணைய உலகம் மிகவும் உதவியது.தனது ஆய்வை மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பித்து வெற்றியும் கண்டார்.

2012 ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனீரியோ நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் “புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான இளைஞர் மாநாட்டில்” கலந்துகொள்ளவருமாறு அழைப்புவந்தது. எனினும் இதற்கான முழு செலவையும் மாநாட்டுக்கு செல்கின்றவர்களே பொறுப்பேற்றாக வேண்டும். இதற்காக 500,000.00 இலங்கை ரூபாய்கள் தேவைப்பட்டது. இதற்காக இளைஞர் விவகார அமைச்சு உட்பட புத்தளத்தின் அதிகார மிக்கவர்கள் போன்றவர்களிடம் இதற்கான அனுசரனையை வழங்குமாறு கோரப்பட்டபோதும் எவருமே இதற்கு செவிசாய்க்கவில்லை. எனினும் தனது தந்தை முழு செலவையும் பொறுப்பேற்று அங்கு அனுப்பிவைத்தாக கூறுகின்றார் சதாம்.

இருவாரங்கள் நடைபெற்ற இம்மாநாடு பல புதிய அனுபவங்களையும் புதிய தொடர்புகளையும் ஏற்படுத்தியது. இதன்போது அங்கு வருகைத்தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரியிடம் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இதன் பயனாக இலங்கை சர்வதேச இளைஞர் மன்றம் (IYCSL) இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டு அதன் தலைவராக சதாம் செயற்படுகின்றார்.

இதற்குமுன் 2007 ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 50 ஓவர்கள் கொண்ட உலகக்கிண்ண கிரிக்கMDG Campaign ( Q & A session was Lead by Mr. Sadham Zarjahan)ட் சுற்றுப்போட்டியில் அனுசரணையாளர்களுக்கு உதவியாளராக செயற்படும் சந்தர்ப்பம் சதாமுக்கு கிடைத்தது. இது சர்வதேச அறிமுகத்தை அவருக்கு முதன்முதலில் பெற்றுக்கொடுத்தது.

அதன் பின் இலங்கையில் நடைபெற்ற 20 க்கு 20 கிரிக்கட் சுற்றுப்போட்டியில் Volunteer team leader ஆக செயற்பட வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து இலங்கையில் இடம்பெற்ற Nation trust Bank   முகாமையாளர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் போது முதலுதவி அலுவலராக செயற்படும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

இவ்வாறான சமூக ஈடுபாடுள்ள சதாம் இந்தோனேசியாவில் நடைபெற்ற Global Youth Forum   மாநாட்டில் கொழும்பிலிருந்து வீடியோ வழியாக கலந்து கொண்டார்.

மலேசியாவிலுள்ள ஐ.நா.விற்கும் இலங்கை IYCSL  க்கும் இடையில் இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் சதாம் மேற்கொண்டுள்ளார்.

அநாதைகளுக்கு கற்பித்தல் போன்ற சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இவர் அமெரிக்காவின் IDEAS for Us உடன் இணைந்து சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுக்கும் செயற்பாடுகளிலும் தீவிரமாக செயற்பட்டுவருகின்றார்.

உலக  இளைஞர் காங்கிரஸின் இலங்கையின் முதலாவது தூதுவராகவும் இவர் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

H E Ambassador Palitha T B Kohona ( Permernant Mission for Sri Lanka to the UNஇவ்வாறாக பல பொது சேவைகள் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட சதாம் டி.ஸ்.சேனநாயக்கா கல்லூரியில் தன்னோடு சாதாரண தரம் கற்ற 10 சகமாணவர்களையும் இணைத்துக்கொண்டு தலா 4500.00 ரூபா வீதம் ஒன்று சேர்த்து Stock Market   ல் 45,000.00 ரூபாயை முதலீடு செய்தனர். இதில் கிடைத்த இலாபத்தைக்கொண்டு முடியுமான சமூகநலத்திட்டங்களை மேற்கொண்டார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம்பெற்றுள்ள சதாமுக்கு ஹிந்தி மொழியை ஓரளவு பேசவும் முடியும். தற்போது அறபு மொழியை கொழும்பில் கற்றும் வருகின்றார்.

புத்தளம் சீமெந்து கூட்டுத்தாபனத்திலும் புத்தளம் காற்றாடி மின் ஆலையிலும் துறைசார்ந்த பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.

இவ்வாறான சமூக புனரமைப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், IYCSL   ஊடாக இச்செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு அனுசரனையும் வழங்கிவருகின்றார்.

தற்கால சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இளைஞர்கள் எவ்வாறு கையாள்வது என்ற தலைப்பிலான செயற்பட்டறை 2013 நவம்பர் 02 ம் திகதி கொழும்பில் இவரது தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறப்பட்டுள்ள வியத்தகு செயற்பாடுகளில் தனது 22 வயதிலேயே சதாம் சாதித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் எமது புத்தளம் சமூகத்திற்கும் முழு மனித சமூகத்திற்கும் பல சேவைகளை செய்ய வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

VAT

              IMG_2819

Our chairperson Sadham Zarjahan giving a token of appreciation for the chief guest Honorable Minister Susil Premajayantha Ministry of Environment and renewable Energy

H E Ambassador Palitha T B Kohona ( Permernant Mission for Sri Lanka to the UN002005 007 014 019 018 017 016 015


23 thoughts on “புத்தளத்தில் வளர்ந்துவரும் விருட்சம் சதாம் சாஜஹான்

 1. masha allah ! We’re really proud of you Sadham. I’m quite proud to say that I’ve taught you when you were small. You’ve done a great job. You can be the role model for our Puttalam boys. The achievements you’ve gained are not simple. I wish you all the best ! Go ahead !

 2. Mohamed Fazeel says:

  உங்கள் இலக்குகளை நோக்கிய பயணத்தை தொடர்க. தேசத்திற்கு மகுடமாய் விளங்கும் நீர் அடுத்த தலைமுறையினை உருவாக்க வழி செய்ய வேண்டும். உம் சேவைக்கு பொருத்தமான உன்னோடு கைகோர்த்து நடக்கும் துணைவி கிடைக்க வாழ்த்துகிறேன்.

 3. Mohamed SR. Nisthar says:

  நன்றி மபாஸ். ரோஸ்மின் பற்றிய எனது சகோதரி மூலம் கிடைத்த செவிவழி செய்திதான் அது. என் வீட்டுக்கு பின்புறமாக அந்த குடும்பம் வசித்து வருகிறது அவர்களுடனான தொடர்பு அறுந்து 25 வருடங்களுக்கு மேலாகியதால் ஏற்பட்டதே இந்த ஆர்வம். அவர்களின் வீட்டுக்கு போய் என்னை அறிமுகப்படுத்தி மேலதிக கேள்விக்களை தொடுத்தேன்.இது 2010 ல். என்னை யார் என்று கண்டுகொண்ட அந்த தாய் தனது மகன் அமெரிக்காவில் இருக்கிறான். “போன்” அடிப்பான். ஆனால் அவன் சொல்லும் விஷயங்களை அல்லது அவன் தொடர்பான விடயங்களை தரக்கூடிய விளக்கம் தனக்கு இல்லை என்றார். இருந்தும் கோப்பி குடித்துட்டு போவேன் “றவுப்” என்று அன்பாக ஆதரிக்க தவறவில்லை. தகப்பனை கண்டு விளக்கம் கேட்க காலம் அனுமதிக்கவில்லை. தகவலுக்கு நன்றி. ரோஸ்மினின் கனவுகள் நினைவாக வாழ்த்துக்களும் பிராத்தைனைகளும். இந்த இளைஞசனாவது நம் “பிறை” பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பான் என நம்புவோம். அவரின் தொலைபேசி இலக்கம் இருந்தால், அவர் அனுமதித்தால், எனது ஈ-மெயிலுக்கு அனுப்பி வைக்க முடியுமா மபாஸ்?.

  • Mafaz says:

   தொலைபேசி எண் எனக்கு கிட்டவில்லை. அந்த சகோதரருடைய மின்னஞ்சல் முகவரியை தங்களின் மின்னஞ்சலிற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

 4. A R ABDUL RAZIK says:

  My best wishes. Keep it up.

 5. Ahmed says:

  பிள்ளைகள வளர உடுங்கப்பா. வாழ்த்தி வீழ்த்திராதீங்க.

  ஊரின் மைந்தன் சாதிக்கும் போது சந்தோஷமாக இருக்குது. ஆனால், அது ஊருக்கு பயனளிக்க அல்லாஹ்வின் உறவும் அவருக்கு அதிகம் தேவை. இல்லாட்டி, நாங்க இந்த பிள்ளைகள இது போன்று website இல் மட்டும்தான் காணமுடியும். ஊரின் வளர்ச்சியில் இல்லை.

  மன்னிச்சுக்கொள்ளுங்க. எனக்க தோணியத சொன்னேன்

 6. s.m.m.nuhumanhaji says:

  அல்ஹம்துலில்லாஹ்.சதாம் சஜஹானின் பணிவான தன்மையும், சாதமான நடத்தையும் தான் அவரின் கல்வின் செயல்பாட்டின் அந்தஸ்தை உயர்த்தி உள்ளது.தொடர்ந்து அவரின் கல்வி இஸ்லாத்தோடு பின்னி பிணைக்கும் போது அல்லாஹ் உயரிய அறிஜனாக ஆக்குவான்.மேலும் இவரின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்த பெற்றோர்களுக்கும், ஆசான்களுக்கும் அல்லா ரகுமத் செய்வானாக. என்றும் வாழ்த்துகள் சதாம்சஜஹான்.

 7. A R ABDUL RAZIK says:

  My Best Wishes. Keep it up.

 8. Mohamed SR. Nisthar says:

  பல்மொழி வித்தகனாக, பல் ஆளுமை கொண்டவனாக, சமூகத்துக்கும்,ஊருக்கும், நாட்டிற்கும் பிரயோசனமானவனாக வளர்ந்து , வாழந்து நலன்கள் பல செய்ய வல்ல இறைவன் சதாமுக்கு அனைத்து பலத்தையும் கொடுக்க வேண்டுகிறேன். சதாமின் பெற்றொருக்கும் அவருக்கு ஆத்ம பலத்தை கொடுத்தோருக்கும் நன்றிகள் பல.

  இந்த இளைஞசரின் அறிமுகத்தை தொடர்ந்து அடுத்த அறிமுகத்துக்கு நான் சொல்லுபவரை தேடி பிடிக்கும் படி புத்தளம் ஒன்லைன் குழுமத்தை அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.

  இந்த இளைஞன் புத்தளம் கே.கே வீதியை சேர்ந்தவன். இப்போது NASA வில் அல்லது அதனோடு தொடர்புடைய பிரிவில் வேலை செய்கின்றான். அவரின் தந்தை போல்ஸ் ரோட்டில் ஒரு மில் வைத்துள்ளார். பெயர் மறந்துவிட்டது. இந்த இளைஞனின் தாயார் ஆமினா அல்லது அமினா. இந்த இளைஞனுக்கு அஸீஸ், மஹீர் என்ற இருவர் தாய் மாமன் மார்கள். ( கூல் முட்டை) மன்னிக்கவும், லதீப் மாஸ்டரின் நெருங்கிய உறவினர்.

  • Mafaz says:

   அவரது பெயர் ரோஸ்மின்…
   சார் அவர் நாசாவிலோ , அதனுடன் தொடர்புடைய எந்த நிறுவனத்திலோ எதிலும் இணையவில்லை. வானவியல் தொடர்பான அவரது ஆராய்ச்சிகள் அவருக்கு அமெரிக்காவில் உயர்கல்வி பயிலக்கூடிய வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க ஏதுவாக இருந்தது. இவர் தற்பொழுது Astro Physics துறையில் இறுதி ஆண்டில் இருக்கின்றார் என நினைக்கின்றேன்.

   இவர் தொடர்பாக நான் சில வருடங்களுக்கு முன்பு “நாசாவில் நம்ம ஊரு ஆள்” என்ற தொனியில் புரிதல் இல்லாமல் சில பொது மின்னஞ்சல் குழுமங்களில் வெளியிட்ட தகவல்கள் பலரது கண்டங்களை சம்பாதிக்க வேண்டி இருந்தது. அதற்கு மேலாக யாரோ ஒருவர் ரூபவாஹினியில் இவரைப் பற்றி சுருக்க விவரணப்படம் எடுத்து, ரோஸ்மின் NASA வில் வைத்து எடுத்த படங்களை வைத்து புகழாரம் வேறு செய்தனர். இது இன்னும் பலரை கொதிக்கச் செய்தது. அதாவது அவர்களது வாதம் “நாசாவில் எவரும், சில டாலர்களுக்கு அங்குள்ள விடயங்களை பார்வையிட வேண்டி சுற்றுலா செல்ல முடியும். இதனை ஏன் இவர்கள் பெரிது படுத்த வேண்டும்???” என்பது தான்.

   இது தொடர்பில் சகோ. ரோஸ்மின் இடமும் வினவ, அவரும் அது தான் உண்மை எனவும் ஒத்துக் கொண்டார். எது எப்படியோ, அவர் அமெரிக்காவுக்கு செல்ல முற்பட்ட போது பொருளாதார ரீதியாக பல்வேறு இன்னல்களை சந்தித்தது உண்மை. இன்ஷா அல்லாஹ் அவர் தேர்ந்து எடுத்திருக்கும் துறையில் அவர் பிரகாசிக்கும் போது நிச்சயம் சமூகம் இனம் கண்டு கொள்ளும்.

 9. இறைவனின் அருளும் உதவியும் நிச்சயம் இவருக்கு உண்டு. சிறிய விடயங்களுக்கே பெருமையடித்து கூவித்திரியும் நம்மவர்களுக்கு இவ்வளவு சாதனைகள புரிந்தும் அமைதியாக, அடக்கமாக இருக்கும் இவரது குடும்பம் நல்லதொரு படிப்பினையாக அமைய வேண்டும். அவ்வாறான குடும்ப பிண்ணனி என்பதால் இன்ஷா அல்லாஹ். புனித இஸ்லாத்தை உலகில் மேலோங்க செய்வதற்காகவும் அல்லாஹ்வின் சட்டங்களை நடமுறை படுத்துவதட்காகவும் பாடுபட வேண்டும் என்ற உயரிய என்னத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் இவருக்கு நிச்சயமாக கொடுப்பான் !

 10. bro மேலும் வளர என் மனமாந்த வாழ்த்துக்கள்.

 11. ahmedrazaa says:

  எல்லாபுகழும் அல்லாஹுக்கே . உத்வேகமுள்ள இளைஜர்களின் சேவை சமூகத்திக்கு இன்றியமையாதது. சதாமின் ஆளுமைமிக்க திறமைகள் இஸ்லாத்தோடு இணைந்து சமூகத்திக்கு பயன்பெற வேண்டும் .எனது வாழ்த்துக்கள்

 12. Afrih says:

  என்னுடன் படித்த நண்பன் என்ற வகையில் மிகவும் சந்தோசப்படுகின்றேன்.

 13. Mohammed Haneefa says:

  அல்ஹம்துலில்லாஹ். உங்களின் கல்வித் தகைமைகள் பற்றியும் திறமைகள் மற்றும் சாதனைகள் பற்றியும் அறிந்து மிகவும் பூரிப்படைகிறோம். புத்தளம் மண்ணுக்கும் இலங்கை தேசத்துக்கும் உங்கள் பணிகளும் பங்களிப்புகளும் நிறையவே தேவை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக. உங்கள் பெற்றோருக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகட்டும். உங்களுக்கு வளமான வாழ்வு அமையட்டும். இஸ்லாமிய வரையறைகளுக்குள் இருந்துகொண்டு இவர் செயட்படுவரனால் இறைவனின் அருளும் உதவியும் நிச்சயம் இவருக்கு உண்டு. புனித இஸ்லாத்தை உலகில் மேலோங்க செய்வதற்காகவும் அல்லாஹ்வின் சட்டங்களை நடைமுரைபடுத்துவதட்காகவும் பாடுபட வேண்டும் என்ற உயரிய என்னத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் இவருக்கு கொடுப்பானாக!

 14. Thowfeek Roshan says:

  இவர் இன்னும் முன்னேற அல்லாஹ்வை பிரார்திக்கிறேன்………….

 15. zakir says:

  bro மேலும் வளர என் மனமாந்த வாழ்த்துக்கள்.

 16. Naina marikar sirajdeen siro says:

  MY dua nd best wishes

 17. Mohamed Muhusi says:

  அல்ஹம்துலில்லாஹ். சதாம் சாஜஹான் உங்களின் கல்வித் தகைமைகள் பற்றியும் திறமைகள் மற்றும் சாதனைகள் பற்றியும் அறிந்து மிகவும் பூரிப்படைகிறோம். புத்தளம் மண்ணுக்கும் இலங்கை தேசத்துக்கும் உங்கள் பணிகளும் பங்களிப்புகளும் நிறையவே தேவை என்பதை நீங்கள் உணர்திருப்பீர்கள். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக. உங்கள் பெற்றோருக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகட்டும். உங்களுக்கு வளமான வாழ்வு அமையட்டும்.

 18. முழுக் குடும்பமுமே பல சாதனைகளை புரிந்து வருவது நாம் அறிவோம் . இஸ்லாமிய வரையறைகளுக்குள் இருந்துகொண்டு இவர் செயட்படுவரானால் இறைவனின் அருளும் உதவியும் நிச்சயம் இவருக்கு உண்டு. சிறிய விடயங்களுக்கே பெருமையடித்து கூவித்திரியும் நம்மவர்களுக்கு இவ்வளவு சாதனைகள புரிந்தும் அமைதியாக, அடக்கமாக இருக்கும் இவரது குடும்பம் நல்லதொரு படிப்பினையாக அமைய வேண்டும். அவ்வாறான குடும்ப பிண்ணனி என்பதால் இன்ஷா அல்லாஹ். புனித இஸ்லாத்தை உலகில் மேலோங்க செய்வதற்காகவும் அல்லாஹ்வின் சட்டங்களை நடமுறை படுத்துவதட்காகவும் பாடுபட வேண்டும் என்ற உயரிய என்னத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் இவருக்கு நிச்சயமாக கொடுப்பான் !

 19. Naseer says:

  மாஷா அல்லாஹ்! எல்லா புகழும் அல்லாஹுக்கே!
  மிகவும் சந்தோசமான விடயம் எமது ஊரில் இப்படி ஒருவர் இருக்கிறார் என்பது. இவர் இன்னும் முன்னேற அல்லாஹ்வை பிரார்திக்கிறேன்.
  இஸ்லாமிய வரையறைகளுக்குள் இருந்துகொண்டு இவர் செயட்படுவரனால் இறைவனின் அருளும் உதவியும் நிச்சயம் இவருக்கு உண்டு. புனித இஸ்லாத்தை உலகில் மேலோங்க செய்வதற்காகவும் அல்லாஹ்வின் சட்டங்களை நடைமுரைபடுத்துவதட்காகவும் பாடுபட வேண்டும் என்ற உயரிய என்னத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் இவருக்கு கொடுப்பானாக!

 20. Anfath Hifans says:

  சதாம் சாஜஹான் உமது சேவை மேலும் மேலும் வளர என் மனமாந்த வாழ்த்துக்கள்.

 21. Ibrahim Nihrir says:

  வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பதற்கொப்ப ஈகை நெஞ்சம் கொண்ட ஒரு தந்தைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வால் வேறென்ன பரிசுதான் தர முடியும்…

Leave a Reply to Haja Sahabdeen Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All