Puttalam Online
current

இளவரசர் சார்ள்ஸ் இலங்கை வந்தார்!

  • 9 November 2013
  • 1,043 views

இளவரசர் சார்ள்ஸ் இலங்கை வந்தார்!

எம்.ஜே.எம். தாஜுதீன்

 

பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கோன்வேல் சீமாட்டி ஆகியோர் இன்று (14) இன்று மாலை இலங்கையை வந்தடைந்தனர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விஷேட விமானம் மூலம் வந்திறங்கிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கோன்வேல் சீமாட்டி ஆகியோரை சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
இளவரசர் சார்ள்ஸ் தம்பதியினருக்கு  சிரேஷ்ட அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்பளி்த்தனர். நினைவுப் புத்தகத்தில் இருவரும் கைச்சாத்திட்டனர்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இளவரசர் சார்ள்ஸ் -இரண்டாவது எலிசபெத் மகா ராணிக்குப் பதிலாக பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை வைபவரீதியாக ஆரம்பித்துவைப்பார்.
charls-1charls-2

———————————————————————————————————————————————————————

ஏழு நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இன்று இலங்கை வந்தனர்! 

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று (11) மாலைவரை ஏழு நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் இலங்கை வந்தனர்.
மாலாவி நாட்டின் உப ஜனாதிபதி , தென் லூசியா , தென்லூசியா, பாபடோஸ், ஸம்பியா, வனுவட்டு ஆகிய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள்  ஆகியோரே இன்று இலங்கை வந்த பிரமுகர்கள் ஆவர்.
பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொது நலவாய மாநாடு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் அநுராதா கே. ஹேரத் தெரிவித்தார்.
VAT
01 02 03

 ———————————————————————————————————————————————————————

 காலியில்  பொது நலவாய மக்கள் மன்றம்!

-எம்.ஜே.எம். தாஜுதீன்

 

நேற்று மாலை காலியில் நடைபெற்ற பொது நலவாய மக்கள் மன்றத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அமைச்சர்களும் உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பிரதமர் தி.மு. ஜயரத்ன வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநாட்டை முன்னிட்டு காலி- ஹிக்கடுவை மற்றும் ஹம்பாந் தோட்டை நகரங்கள் விழாக்கோலம் பூண் டிருந்தன.  விசேட போக் குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் 23 ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இன்று (10)அம்பாந்தோடடையிலும் ஹிக்கடுவையிலும் இரண்டு மாநாடுகள் நடைபெற்றன.

VAT

people-forum-1 PF-2 PF-3 PF-4 PF-6 PF-7 PF-8 PF-9

—————————————————————————————————————————————-

பெறுமதியான சந்தர்ப்பங்களை இளைஞர்கள் தவறவிடக்கூடாது!

எம்.ஜே.எம். தாஜுதீன்

 

சிறுவர்களும் இளைஞர்களும் பெறுமதியான சந்தர்ப்பங்களைத் தவறவிடக்கூடாது என்றும் அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுநலவாய இளைஞர் மாநாடு அம்பாந்தோட்டையிலுள்ள  சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்த மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா ஆகியோர் இம் மாநாட்டில் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

 

இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப் பெரும இம் மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தினார்.இம் மாநாட்டில் பெறப்படும் படிப்பினைகள் மற்றும் எடுக்கப்படும் தீர்மானங்கள் போன்றவற்றை இளைஞர் சமூகம் எதிர்காலத்தல் செயற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

VAT

CHO-1 cho-2 CHO-3 CHO-4 CHO-5 CHO-6 CHO-7 CHO-8 CHO-9  CHO-12

………………………………………………………………………………………………………………………………………………………………………………………

பொதுநலவாய மாநாடு -2013 : உத்தியோகபூர்வ நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் 23 ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இன்று இரண்டு மாநாடுகள் ஆரம்பமாகின்றன.

 உலகத்தை ஒன்றிணைக்கும் தேசம் என்ற மகுடத்தில் இலங்கையில் முதற் தடவையாக நடைபெறும் பொதுநலவாய அமைப்பின் மாநாட்டின் தொடக்கமாக இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டையிலும்- பொதுநலவாய மக்கள் மன்றம் ஹிக்கடுவையிலும் இன்று ஆரம்பமாகின்றன.

indexஇரண்டு மாநாடுகளும் எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவடையவுள்ளன. பொதுநலவாய இளைஞர் மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கிறார்.

இன்று மாலை காலியில் நடைபெறும் பொதுநலவாய மக்கள் மன்றத்திலும் ஜனாதிபதி பங்கேற்கிறார். இவற்றையொட்டி காலி- ஹிக்கடுவை மற்றும் ஹம்பாந்தோட்டை நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளதோடு விசேட போக்கு வரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச மாநாட்டு மண்டபத் திலும் காலி கோட்டை நீதி மன்ற சதுக்கம் மற்றும் ஹிக்கடுவ சாயா டிரான்ஸ் ஹோட்டல்களிலும் நடை பெறவுள்ள இளைஞர் மற்றும் மக்கள் மாநா டுகளில் பொதுநலவாய தலைமை பதவியை ஏற்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சர்கள்- உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பொதுநலவாய இளைஞர் மாநாடு கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு வைபவ ரீதியாக ஆரம்பித்து காலை 11.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் தலைவர்களும்- வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களும் வாய்ப்புக்களும் என்ற தலைப்பில் ஆராயவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பொதுநலவாய இளைஞர்கள் மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விசேட பகல் போசன விருந்துபசாரம் வழங்குகிறார்.

imagesஅதனைத் தொடர்ந்து எதிர்வரும் 14 ஆம் திகதி பல்வேறு மட்ட சந்திப்புக்களும் கூட்டங்களும் நடைபெறவுள்ளன. இதேவேளை பொதுநலவாய மக்கள் மன்றத்தின் மாநாடு இன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு காலி கோட்டையிலுள்ள நீதிமன்ற சதுக்கத்தில் ஆரம்பமாகி இரவு 7.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இலங்கை மற்றும் வெளிநாடுகளின் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளதுடன் பொதுநலவாய நாடுகளில் வாழும் சிவில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் விடயங்கள் தொடர்பாக இந்த மாநாட்டின் போது ஆராயவுள்ளனர்.

imagesஇதேவேளை பொதுநலவாய இளைஞர் மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ருகுனுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிறது. இதில் 53 நாடுகளைச் சேர்ந்த 106 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணி உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். இலங்கையிலிருந்து 25 பிரதிநிதிகளும் 20 கண்காணிப்பாளர்களும் 5 செயலணிக் குழு உறுப்பினர்களும் பங்குபற்றவுள்ளனர்.

எட்டு முக்கிய தலைப்புகளில் இங்கு விடயங்கள் ஆராயப்பவுள்ளதோடு இலங்கை அரச தலைவர்களுக்கும் இளைஞர் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பும் நடைபெறவுள்ளன.

பொதுநலவாய வர்த்தக மாநாடு 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பு சினமன்கிராண்ட் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 1300 முக்கிய வர்த்தகர்கள்- முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

CHOGM_copy_copy_copy_copy_copy

எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று சனிக்கிழமை முதல் அரச தலைவர்களின் வருகை ஆரம்பமானது.

பொதுநலவாய உச்சி மாநாட்டை முன்னிட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் தொடக்கம் அரச தலைவர்கள் கொழும்பில் தங்கியிருக்கவுள்ள ஹோட்டல்கள் வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

images

விசேட பாதுகாப்பு கடமைகளில் மாத்திரம் சுமார் 20,000 பொலிஸார் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் இலங்கை வரும் அரச தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் தங்கு தடையின்றிய பயணத்தை கவனத்திற் கொண்டு மாத்திரம் 5000 போக்குவரத்து பிரிவு பொலிஸார் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் சுமார் ஆயிரம் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.

உள்நாட்டிலிருந்து 535 ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். ஊடகவியலாளர்களுக்குத் தேவையான வசதிகளை வெளிவிவகார அமைச்சும் தகவல் ஊடகத்துறை அமைச்சும் ஏற்படுத்தியுள்ளன.

ஊடகவியலாளர்கள் தங்கும் ஹோட்டல்களிலிருந்து ஊடக மத்திய நிலையத்திற்குச் செல்வதற்கான விசேட பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன. மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலி- ஒளிபரப்புச் செய்யவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

news.lk

———————————————————————————————————————————————————————————

கமலேஷ் சர்மா இலங்கை வந்தடைந்தார்!

எம்.ஜே.எம். தாஜுதீன்

kamala-sharma-1

எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டிற்காக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா இலங்கை வந்தடைந்தார்.

பிரித்தானிய விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இன்று (09) பிற்பகல் 12.32 மணியளவில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All