Puttalam Online
puttalam-news

புத்தளம் நகரமும் நுளம்புப் பெருக்கமும் – தொடர் 3

  • 9 November 2013
  • 879 views

[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்  – புத்தளம்]

நுளம்புக்கட்டுப்பாட்டில் சமுதாயத்தின் பங்கு

Puttalamonline Health 3

நான் உங்கள் எதிரி

நுளம்பு கட்டுப்பாட்டில் சமுதாயத்தின் பங்கானது மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதாவது நுளம்பு பெருகுவதை தடுப்பதற்கு நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடுகளும் இதில் உள்வாங்கப்படுகின்றன.

நுளம்பு பெருகுவதை நாம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவோமாயின் எதிர்காலத்தில் நுளம்பினால் பரவக்கூடிய பாரதூரமான கொடிய நோய்களிலிருந்து எம்மை மட்டுமல்லாமல் முழுச்சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இதற்காக நாம் ஒவ்வொருவரும் எம்மால் இயன்ற தனிப்பட்ட, கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகின்றது.

நாம் மேற்கொள்ளதக்க தனிப்பட்ட நடவடிக்கைகள்

  • வீட்டுத்தோட்டங்களில், வயற்காணிகளில் நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு அவற்றை அழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல்.
  • நுளம்பிலிருந்து பாதுகாப்பு பெறக்கூடிய வகையில் நுளம்பு வலைகளை பயன்படுத்தல்.
  • வெற்றுப் பேணிகள், சிரட்டை, இளநீர் கோம்பை, ஆகிய பொருட்களில் நீர் தேங்கி நின்று நுளம்புகள் பெருகுவதற்கு வழிவகுக்கின்ற பொருட்களை அழித்தல்.
  • நுளம்பை விரட்டக்கூடிய பொருட்களை பயன்படுத்தல் (நுளம்பு மட்டை மெட், தெளிப்பான்கள்)

மேற்குறிப்பிட்டவாறு அல்லது இன்னோரன்ன தனிப்பட்ட முறைமைகளில் நாம் ஒவ்வொருவரும் நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

“கட்டுப்படுத்த வேண்டும் ” என்ற எண்ணத்தோடு இந் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன்  மூலம் எம் எதிர்கால சந்ததியினரையும், எம் சமூகத்தையும் கொடிய நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். இதற்காக தற்போது நவீன பல உபகரணங்களும், தெளிப்பான்களும் கண்டுப் பிடிக்கப்பட்டு அறிமுகமும் செய்யப்பட்டிருக்கின்றன.

அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளத்தக்க கூட்டு நடவடிக்கைகள்

  •  சுகாதார பகுதியினரால் அமுல் செய்யப்படும் நோய்க்காவியின் மட்டுப்படுத்தும் திட்டங்கள், மற்றும் நுளம்புகளை அழிப்பதற்கு மூடுபனி போல் மருந்து தெளித்தல்.
  •  நுளம்பின் உற்பத்தியை ஒழிப்பதில் உள்ளூர் ஆட்சியுடன் இணைந்து செயற்படல்.
  •  தொண்டர் படைத்திட்டத்தின் மூலம் நுளம்பு உற்பத்தியாகும் விஸ்தீரமிக்க இடங்களை இணங்கண்டு அவற்றை அழித்தல்.
  •  வாரத்தில் ஒரு நாள் ஒன்றிணைந்து சிரமதானம் அடிப்படையில் நுளம்புகளை கட்டுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளல்.
Puttalamonline Health 1

பாடசாலை மாணவர்களின் சிரமதானம்

பாடசாலை மாணவர்கள் நுளம்பு ஒழிப்பு திட்டத்திற்கு திருப்திகரமாக ஆதரவு அளிக்கும் ஒரு முக்கிய கூட்டமாகும். இவர்களின் மூலம் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முனைவதோடு மட்டுமல்லாது அவர்களின் செயற்பாடுகளும் நுளம்பைக் கட்டுபடுதுவதற்கு மிகப் பெரும் பங்காற்றுகின்றது. இவர்கள் மூலம் அநேக நன்மையான விடயங்கள் சமூகத்திற்கு கிடைக்க பெறுகின்றன.

 பாடசாலை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

1) நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை இணங்கண்டு அவைப் பற்றிய தகவல்களை சேகரித்தல், மற்றும் வரைபடங்கள் மூலம் தெளிவாக காட்டல் இவை முறை திட்டங்களை வகுக்க உதவும்.

2)  தங்களின் ஆசிரியர்கள் மூலம் சமுதாயத்தில் நுளம்பினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் அதனை மட்டுபடுத்துவது பற்றியும் ஒரு விழிப்புணர்வை உண்டாக்குதல்.

3) பாடசாலை பிள்ளைகள் மத்தியில் நுளம்பு மனிதனை எவ்வாறு பாதிக்கின்றது, அதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்றவாறான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளல்.

4) நுளம்பைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், நுளம்பிளிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடனும் கட்டுரை போட்டி, விளம்பர போட்டி கண்காட்சிகள், விவாதங்கள் என்பனவற்றை நடத்துதல்.

5) மாணவர்கள் தங்கள் வீட்டுப்புறங்களில்  நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை இணங்கண்டு அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளை திட்டமிட்டு வேலை செய்தல்.

6) அயலில் உள்ள வீடுகளுக்கும் தோட்டங்களுக்கும் தரிசனம் செய்வதின் மூலம் நுளம்பு வாழிடங்களை அறிவதுடன் நுளம்பைக் கட்டுபடுத்தும் திட்டங்களையும் அமுல்படுத்தல்.

மேற்குறிபிட்ட செயற்பாடுகளை பாடசாலை மாணவர்களினூடாக செயற்படுத்துவதின் ஊடாக கொடூர நோய்களிருந்து எம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Puttalamonline Health 4

நுளம்பு வலை

# நோய் பரவுதல்

டெங்கு, யானைக்கால் போன்ற ஆட்கொல்லி நோய்கள் பரவுவதால் அதனைக் கட்டுபடுத்த வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது ஆகவே இதற்கு பல்வேறு செலவுகள் ஏற்படுகின்றன.

# தனிநபர் செலவுகள் அதிகரிப்பு

நோய்களிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக நுளம்பு வலை, நுளம்பு சுருள் போன்றவற்றை தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தல்

# உடல், உள ரீதியான பாதிப்புக்கள்

காயங்கள், கொப்பளங்கள் போன்றவற்றால் அவதிகள், அசிங்கத் தோற்றங்கள்.

நாம் நுளம்பைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். காரணம் அதனால் தீய விளைவுகளே அதிகம். இதனை கட்டுப்படுத்தும் போது, இது போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி தீர்வு காண வேண்டியுள்ளது. ஆகவே, நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதனால் மேற்கூறிய பிரச்சினைகள் குறைக்கவும், வீண் செலவுகளையும் தவிர்க்கவும் முடியும்.

 

[நுளம்பு வருவான்…]


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All