Puttalam Online
puttalam-news

மூத்த ஊடகவியலாளர் கலா பூஷன விருதுக்குத் தெரிவு

புத்தளத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஏ.எஸ் புல்கி அவர்கள் இவ்வாண்டின் (2013) ஊடகத்துறைக்கான கலா பூஷன விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். விருது வழங்கும் நிகழ்வு விரைவில் கொழும்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 1970 முதல் எழுத்துத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதுடன் அன்று முதல் இன்று வரை பல்வேறு பத்திரிகைகளிலும் வானொலி தொலைக் காட்சி என்பனவற்றிலும் தனது தடத்தைப் பதித்துவருபவர்.

Bulki

13 க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ள இவர் ஒரு நாடக நடிகரும் கூட. “புத்தளம் ஒன்லைன்” இம்முறை தனது இரண்டாவது ஆண்டுவிழாவின் போது புத்தளத்தின் இம் மூத்த ஊடகவியலாளரை கெளரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் எழுத்துப் பணி அவரின் இறுதி மூச்சி வரை தொடர பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்!

————————————————————————————————————————————————

எமது மண்ணின் மூத்த ஊடகவியலாளர் புல்கி அவர்கள் பற்றி;

முழுப் பெயர் :- அபுசாலிஹு சஹீஹுல் புல்கி

பிறந்த திகதி :-  1946-04-13.

தந்தை பெயர் :-  கொத்துவால் மரைக்கார் அபுசாலிஹு

தாய் பெயர் :-    மஹ்மூதா உம்மா

மனைவி பெயர் :-  செய்னுல் ஆப்தீன் சித்தி நிஹார்

உடன் பிறந்தோர் :-   03 ஆண், 01பெண்

தொழில் துறை :-  ஊடகம் – 1972 முதல் இன்றுவரை (42வருடங்கள்)

ஊடகம் சம்பந்தமாக :-  

முதல் பத்திரிகைத் தொடர்பு -இன்ஸான் 1970 (தினபதி), தினகரன் 1972, சுடர் ஒளி 1980, மெட்ரோ நியூஸ் 2009, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 1970 – 1994,  ஐ.டி.என் -2009, சக்தி எப்.எம் 2002

பாராட்டுக்கள் பலதை பெற்ற இவரின் சிறுகதைகதைகள்: 

‘காட்சி” – தினபதி 28-06-1968, ”ஒன்றை நினைக்கின்” – தினபதி 11-08-1968,  ‘தக்பீர் முழுக்கம்” – தினபதி 23-12-1968,      ‘மின்மினி” – தினபதி 13-05-1969, ‘கமலா போய்விட்டாள்” – தினபதி 20-11-1969, ‘கடமை” – ராதா – 22-02-1969, ‘யார் குற்றவாளி” –  ராதா – 24-01-1970, ‘தலைப் பெருநாள்” – தினபதி 11-03-1970, ‘வைரநெஞ்சம்” – சிந்தாமணி-09-11-1968,  ‘தியாகத்தின் விலை என்ன?” மித்திரன் – 04-10-1990, ‘எதிரொலி” – மித்திரன் வாரமலர் – 25-01-1992,    ‘அடுத்த வீட்டு ஆயிஷா” – மித்திரன் 19-01-1993, ‘கண்ணால் காண்பதும்”- மித்திரன் 18-04-1993.

SAT

 


5 thoughts on “மூத்த ஊடகவியலாளர் கலா பூஷன விருதுக்குத் தெரிவு

 1. M.N.M. Hijas says:

  வாழ்த்துக்கள், உங்கள் பணி மேலும் தொடரட்டும்.

 2. s.m.m.nuhumanhaji says:

  பத்திரிகை ஆசிரியரான சகோதரர் புல்கி அவர்கள் எத்தனையோ பாராட்டுகளை பெறக்கூடியவர். காலம் கடந்தாலும் புத்தளம் ஒன்லைன் அவரைமுதல் தடவையாக கவ்ருவம் படுத்தி பாராட்டியது நம்மன்னுக்கு பெருமைதரகூடியதாக அமைந்து விட்டது. அல்ஹம்து லில்லாஹ். இன்ஷா அல்லாஹ் எதிர் வரக்கூடிய காலங்களில் தொடர்ந்தும் அவர் நல்ல பணிகளை ஆற்றி இன்னும் பல பாராட்டுகளை பெறகொடியவராக ஆக அல்லாஹ் சரிர சுகத்தை கொடுத்து ரகுமத் செய்வானாக.நற்பணிகளுக்கு என்றும் வாழ்த்துகள்.l

 3. Ibrahim Nihrir says:

  மண் பற்று மிக்க ஒரு புத்தளம் மைந்தர் இவர் என்பதை யாரால்தான் மறுக்க முடியும்…அன்று தொட்டு இன்று வரை சமூகப் பணிகளில் அயராது தம்மை ஈடுபடுத்தி உழைக்கும் அன்னாரின் தேகாரோக்கியம், மன நிம்மதி வல்ல நாயனின் அருளால நிலைத்திருக்க பிரார்த்திக்கிறேன்…

 4. Hisham Hussain says:

  ஏ.எஸ். புல்கி அவர்களின் 40 வருட ஊடகத்துறை வரலாற்றில் வழங்கப்பட்ட முதலாவது விருது Puttalam Online வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
  எவர் மனமும் நோகாமல் பழகும், கலகலப்பாகப் பேசும் புல்கி அவர்களுக்கு நீண்ட ஆயுளுடன் நிலையான சரீர சுகத்துடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றேன், ஆமீன்

 5. ummu nidhaa says:

  இவரது பணிகள் நம் மண்ணின் பெருமை பேசியமை யாவரும் அறிந்ததே.மிகவும் எளிமையானவர்.,வாழ்த்துக்கள்.உங்களது பணிகள் தொடர வல்ல நாயன் அருள் புரியட்டும்.,தனிப்பட்ட முறையில் எனக்கு செய்து தந்த உதவியையும் இங்கு நன்றியுடன் நினைவு கூறுகின்றேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

 • Tuesday,26 May 2020

POEM- Diabetes

 • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

 • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All