Puttalam Online
puttalam-news

வட்டக்கண்டல் வித்தியாலயத்தில் மாபெரும் சேவைப் பாராட்டு விழா

  • 14 November 2013
  • 789 views

(S.I.M.AKRAM)

Wattakkandal 28முஹம்மத் ஆசிரியர் அவர்கள் வட்டக்கண்டலில் மூன்று தலைமுறைகளுக்கு அறிவுப்பணி வழங்கிய அப்பிரதேசத்தின் உயிர்நாடி.

ஓய்வுபெற்றுச் சென்ற முஹம்மத் ஆசிரியரை புத்தளம் வட்டக்கண்டல் வித்தியாலய அதிபர், ஆசிரியர், மாணவர், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலை சமூகம் இணைந்து நேற்று புதன்கிழமை மாபெரும் சேவைப் பாராட்டு விழா வைபவத்தை கோலாகலமாக நடாத்தியது.

பாடசாலை அதிபர் ஜனாப் எச்.யூ.எம்.யஹியா தலைமையில் நேற்று மு.ப. 11.00 மணியளவில் ஆரம்பமான இவ்வைபவத்திற்கு புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் தமிழ்ப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் இஸட்.ஏ.ஸன்ஹீர் ஆசிரியர் பிரதம அதிதியாகவும் வடக்குக் கோட்ட கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.சீ.எம்.மஹ்ருப் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

இவ்வைபவத்தின் மூலம் இப்பாடசாலையிலேயே முதல் நியமனத்தைப் பெற்று அங்கேயே 28 வருட காலம் தொடர்ந்து சேவையாற்றிய பின் ஓய்வு பெற்றுச்சென்ற முஹம்மத்(சில்வா) ஆசிரியருக்கு நினைவுச் சின்னம், பதக்கம் உட்பட சுமார் 1 இலட்சம் ரூபா பெறுமதியான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாடசாலை மாணவ, மாணவிகள் வகுப்பு ரீதியாகவும் பரிசில்களை வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முஹம்மத் ஆசிரியர் பற்றிய மேலதிக விபரங்களைப் பெற புத்தளம் ஓன்லைன் மண்ணின் மைந்தர்கள் பகுதியைப் பார்க்கவும்.

http://puttalamonline.com/2013-01-29/puttalam-star-person/18905/

இப்பாடசாலையில் கடமையாற்றிய பின் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

1.    திருமதி ஐ.எஸ்.எச்.எப். ரிஸானா
குருநாகல் இப்பாகமுவயைச் சேர்ந்த திருமதி ஐ.எஸ்.எச்.எப். ரிஸானா ஆசிரியை ஆரம்பக் கல்வி ஆசிரியையாக 5 வருட காலம் சேவையாற்றிய பின் தற்போது புத்தளம் மணல்குன்று அல்அஷ்ரக் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றுகின்றார்.

2.    திருமதி எஸ்.ஏ. ஹாபிஸா:

மன்னார் பாலக்குளியைச் சேர்ந்தவர்.கணிதப் பாடத்திற்கான ஆசிரிய உதவியாளராக 5 வருடங்கள் கடமையாற்றிய பின் தற்போது மன்னார் மரிச்சிக்கட்டி பாடசாலையில்  கடமையாற்றுகின்றார்.

3.    செல்வி. எம்.கே.சப்ரினா

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட செல்வி எம்.கே.சப்ரினா ஆரம்பக் கல்வி ஆசிரிய உதவியாளராக 5 வருடங்கள் கடமையாற்றிய பின் மன்னார் கரடிக்குளி பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றவர். எனினும் தற்காலிக இணைப்பைப் பெற்று புத்ஃகல் ஃ உளுகாப்பள்ளம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றுகின்றார்.

4.    மௌலவி ஏ.எஸ்.எம்.நஜீப்(ஸலபி)

மன்னார் பாலக்குளியைச் சேர்ந்த மௌலவி ஏ.எஸ்.எம்.நஜீப் இஸ்லாம் பாட ஆசிரிய உதவியாளராக 5 வருடங்கள் கடமையாற்றிய பின் தற்போது மன்னார் மரிச்சிக்கட்டி பாடசாலையில்  கடமையாற்றுகின்றார்.

5.    ஜனாப் எச்.எம்.எம்.கியாஸ்

மன்னார் பாலைக்குளியைச் சேர்ந்த ஜனாப் எச்.எம்.எம்.கியாஸ் ஆங்கிலப் பாட ஆசிரிய உதவியாளராக கடமையாற்றிய பின் தற்போது பாலக்குளி பாடசாலையில் கடமையாற்றுகின்றார்.

6.    ஜனாப் பீ.எஸ்.எம்.நஜீர்

மன்னார் பாலக்குளியைச் சேர்ந்த ஜனாப் பீ.எஸ்.எம்.நஜீர் கணிதப் பாட ஆசிரிய உதவியாளராக கடமையாற்றிய பின் தற்போது பாலக்குளி பாடசாலையில் கடமையாற்றுகின்றார்.

VAT

Fotos: A.R.M.Haseeb

Wattakkandal 1  Wattakkandal 3 Wattakkandal 4 Wattakkandal 5     Wattakkandal 10 Wattakkandal 11 Wattakkandal 12 Wattakkandal 13 Wattakkandal 14 Wattakkandal 15 Wattakkandal 16 Wattakkandal 17அஷ்ஷெய்க். ஏ.ஆர்.எம்.ஹஸீப் (இஸ்லாஹி) – பாடசாலை ஆசிரியர்

Wattakkandal 18எம்.எஸ்.எம். நபீல்( உதவி அதிபர்  வட்டக்கண்டல்.அ.மு.வி)

Wattakkandal 19வண்ணாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர்

Wattakkandal 20முஹம்மத் (W.F.X.DE.சில்வா)

Wattakkandal 21மௌலவி ஏ.எஸ்.எம்.நஜீப்(ஸலபி)

Wattakkandal 22ஜனாப் எச்.எம்.எம்.கியாஸ்

Wattakkandal 23திருமதி எஸ்.ஏ. ஹாபிஸா

Wattakkandal 24செல்வி. எம்.கே.சப்ரினா

Wattakkandal 25திருமதி. ஐ.எஸ்.எச்.எப். ரிஸானா

Wattakkandal 26

Wattakkandal 29பாடசாலை அதிபர் ஜனாப். எச். யூ எம்.யஹியா முஹம்மத் ஆசிரியருக்கு பதக்கம் அணிவிக்கும் போது

  Wattakkandal 31பாடசாலை அதிபர் ஜனாப். எச். யூ எம்.யஹியா முஹம்மத் ஆசிரியருடன்

Wattakkandal 32 Wattakkandal 33 Wattakkandal 34 Wattakkandal 35 Wattakkandal 36 Wattakkandal 37 Wattakkandal 38வண்ணாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர் ஜனாப். எம்.ஆர்.எம். பரிசில் வழங்கும் போது

Wattakkandal 39 Wattakkandal 40தமிழ்ப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் இஸட்.ஏ.ஸன்ஹீர் ஆசிரியர் பிரதம அதிதியாகவும் வடக்குக் கோட்ட கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.சீ.எம்.மஹ்ருப் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.  Wattakkandal 42தமிழ்ப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் இஸட்.ஏ.ஸன்ஹீர் ஆசிரியர்  வடக்குக் கோட்ட கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.சீ.எம்.மஹ்ருப் ஆகியோர் பரிசில் வழங்கும் போது

Wattakkandal 43தமிழ்ப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் இஸட்.ஏ.ஸன்ஹீர் ஆசிரியர் உரையாற்றும் போது

Wattakkandal 44 Wattakkandal 45பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஜனாப் ஏ.ஜே.எம்.இல்ஹாம் பாடசாலையின் உடற்கல்விப் பிரிவு சார்பாக நினைவுச் சின்னம் வழங்கும் போது

Wattakkandal 46பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஜனாப் ஏ.ஜே.எம்.இல்ஹாம் பாடசாலையின் உடற்கல்விப் பிரிவு சார்பாக பரிசில் வழங்கும் போது

Wattakkandal 47பாடசாலையின் அபிவிருத்திக் குழுவினர் பரிசில் வழங்கும் போது

Wattakkandal 48

தரம் 8 மாணவர்கள் மாணவிகள் பரிசில் வழங்கும் போது

Wattakkandal 49தரம் 9  மாணவிகள் பரிசில் வழங்கும் போது

Wattakkandal 50தரம் 10 மாணவர்கள்  பரிசில் வழங்கும் போது

Wattakkandal 51தரம் 10 மாணவர்கள்  பரிசில் வழங்கும் போது

Wattakkandal 52ஆசிரியர்கள் சார்பாக உதவி அதிபர் பரிசில் வழங்கும் போது Wattakkandal 53 Wattakkandal 54 Wattakkandal 55 Wattakkandal 56 Wattakkandal 57 Wattakkandal 58 Wattakkandal 59 Wattakkandal 60


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All