Puttalam Online
current

மாபெரும் வரவேற்பு வைபவம் நாளை மாலை 3.30 மணிக்கு

  • 19 November 2013
  • 1,084 views

Commonwelth Yourth Teamஇலங்கையில் நடைபெற்று முடிந்த 23 வது பொதுநலவாய மாநாட்டின் போது நடைபெற்ற பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் பல்வேறு அமைப்புகள் ஊடாக புத்தளத்தை பிரநிதித்துவப்படுத்தி புத்தளம் மண்ணிற்கும் புத்தளம் மக்களுக்கும் தேசிய, சர்வதேச மட்டங்களில் அடையாளத்தையும் பெருமையையும் பெற்றுத்தந்த சதாம் திக்ரான் சாஜஹான், அர்ஷத் அலி அமீனுல்லாஹ், முஸ்அப்  ஷாதிர் மஹ்பூப் , ஷஹீக்கா சலாஹுடீன் , இஷாம் மரிக்கார் ஆகியோரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இன்ஷா அல்லாஹ் இவர்கள் நாளை மாலை 3.30 மணிக்கு புத்தளம் தபால் நிலைய சந்தியிலிருந்து ஊர்வலமாக புத்தளம் பிரதான வீதிகளில் அழைத்துவரப்படவுள்ளனர். பின்னர் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அஸ்வர் மண்டபத்தில் வரவேற்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இவ்வரவேற்பு வைபவத்திற்கு புத்தளத்தில் உள்ள அனைத்து இளைஞர் கழகங்களும் குறிப்பாக க.பொ.த.சா/ தர, உயர் தர மாணவர்கள் கட்டாயம் கலந்து கொண்டு, பேராளர்களாக கலந்துகொண்டவர்களை கௌரவப்படுத்துவதோடு எதிர் காலத்தில் தாங்களும் இவ்வாறான சர்வதேச மாநாடுகளில் பங்குபெறுவதற்கான வழிகாட்டல்களை பெற்றுகொள்ளுமாறு  ஏற்பாட்டாளர்கள் வேண்டுகின்றனர்.
VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All