Puttalam Online
ladies

மருந்தும் நாமும்

  • 19 November 2013
  • 1,039 views

மருந்து உள்ளெடுப்பதற்கு அதிகளவு விருப்பத்தை காண்பிக்காமல் இருப்பது உங்கள் மத்தியில் காணப்படக்கூடிய ஒரு சிறந்த பழக்கமாக இருக்கலாம். ஆனாலும் தலைவலி, காய்ச்சல், தடிமன், முதுகுவலி போன்ற வெவ்வேறு நோய் நிலைகள் எங்களுக்கு ஏற்படும் போது மருந்து எடுக்காமலும் இருக்க முடியாது. இது போன்ற நிலைமைகளில் நீங்கள் செய்ய வேண்டியது உள்ளெடுக்க நேரிடும் மருந்துகள் அவற்றில் இருக்கும் குணநலன்களிலிருந்து சிறந்த பயனைப் பெறவும் பக்க விளைவுகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் உறுதி செய்து கொண்டு உள்ளெடுக்க வேண்டும்.

மருந்தை உள்ளெடுக்கும் முறை தொடர்பாக ஒரு மருந்தை முன்னுதாரணமாகக் கொண்டு அறிந்துக்கொள்ள முடியும். இதன் போது தெரிவு செய்வது உலகம் முலுவதும் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் அதிகளவ பேசப்படும் ஒரு மருந்து வகையேயாகும். அது தான் பரசிடமோல். அமெரிக்கா முதற்கொண்டு பல நாடுகளில் இது அசிடமினோபன் என அழைக்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் வலி நிவாரணிகள் மற்றும் காய்சலை விரைவாக கட்டுப்படுத்தும் மருந்து வகை என அதிகளவு பிரபல்யம் பெற்றுள்ள பரசிடமோல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பரசிடமோல் இந்தளவுக்கு பிரபல்யம் பெறுவதற்கு பிரதான காரணங்களாக பாதுகாப்பு மற்றும் குடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் (வயிறு எரிச்சல் வயிற்று வலி வயிறு வீக்கம் மற்றும் வாய்வு போன்ற நிலைமைகளை தோற்றுவிக்காமையால் ) அமைந்துள்ளமையாகும்.

வலி நிவாரணி என பரசிடமோல் கொண்டுள்ள ஆற்றல் மிகவும் பரவலான ஒன்றாகும்.  தலைவலி, ஒற்றைத்தலைவலி, காதுவலி ,பல்வலி, இடுப்பு வலியிலிருந்தும் பெண்களன் மாதவிடாய் வலி, மூட்டு வாதங்களுக்கும் சிறந்த வலி நிவாரணியாக செயற்படுகிறது.

மத்திய நரம்பு தொகுதியை பரசிடமோல் நேரடியாக சென்றடைவதன் மூலம் முழு உடலையும் வலிகளிலிருந்து விடுவிப்பதுடன் குறுகிய காலத்தில் செயற்திறனை வெளிப்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளதாக ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

பரசிடமோலானது உடல் வெப்பத்தை தணிப்பது அல்லது காய்ச்சலை கட்டுப்படுத்துவது என பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வயது வந்தவர்களுக்கான சில வலி நிவாரண மருந்துகளைப்போல அல்லாமல் பரசிடமோல் சிறுவர்களுக்கும் உகந்ததாக அமைந்துள்ளது. இதனை உலக சுகாதார ஸ்தாபனமும் பரிந்துரை செய்துள்ளது. மேலும் இதனை வைரஸ் காய்ச்சல் நிலைகளான டெங்கு காய்ச்சல் இன்புளுவென்சா மற்றும் பொதுவான தடிமன் மற்றும் இருமலுக்கும் பயன்படுத்த முடியும் என்பது யாவரும் அறிந்ததே.

பரசிடமோல் என்பது எந்தவொரு மருந்தகத்திலிருந்தும் வைத்தியரின் நியம முறைக்கமைய கொள்வனவு செய்துக்கொள்ள முடியும். ஆனாலும் எந்த வகையான மருந்து உள்ளெடுப்பின் போதும் முறையான முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சந்தையில் பரசிடமோல் பல்வேறு வர்த்தக நாமங்களில் வில்லைகள் (500மி.கி), பாணி (120மி.கி பரசிடமோல் 5மி.லீ வீதம்) மற்றும் துளிகள் (100மி.கி பரசிடமோல் 1மி.லீ வீதம்) போன்ற நிலைகளில் கிடைக்கின்றது. வாடிக்கையாளர்கள் தமக்கு விரும்பிய தயாரிப்பை கொள்வனவு செய்து கொள்ள முடியும். ஆனாலும் பரசிடமோலின் குணநலனின் மாற்றம் ஏற்படாத வகையில் பாதுகாப்பான பொதி முறையில் செய்யப்பட்ட தயாரிப்பை கொள்வனவு செய்து பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவு நம்பத்தகுந்த தயாரிப்பை கொள்வனவு செய்வது சிறந்தது.

மருந்தியல் வல்லுநர்களின் கருத்தானது குறித்த கால இடைவெளியில் சரியான அளவு பரசிடமோலை உள்ளெடுப்பதானது ஆகக்குறைந்த அளவு பக்க விளைவையே ஏற்படுத்தக்கூடியது என்பதாக அமைந்துள்ளது. வயது வந்தவர்களுக்கான பரிந்துறைக்கப்பட்ட அளவு 2 வில்லைகள் (1000மி.கி) ஒவ்வொரு 6 மணித்தியாலத்திற்கும் ஒரு தடவை (நாளொன்றுக்கு 4 தடவைகள்) ஆகும். ஆனாலும் முதல் தடவை உள்ளெடுப்புக்கு பின்னரும் வலிக்குறையாமல் இருந்தால் நோயாளி அடுத்த தடவைக்கான உள்ளெடுப்பை நான்கு மணித்தியாலங்களில் மேற்கொள்ளலாம். இருப்பினும் நாளாந்த உள்ளெடுப்பின் அளவு எக்காரணத்தைக்கொண்டும் 4000 மி.கி (8 வில்லைகள்) அல்லது 24 மணிநேரத்தினுள் 4தடவைகளை விட அதிகரிக்கக்கூடாது. குழந்தைகளுக்கான அளவு அவர்களின் நிரையை பொறுத்து தீர்மானிக்கப்படும்.

மேலும் வலி அல்லது காய்ச்சல் நிலை 2-3 நாட்களாக தொடர்ந்து காணப்பட்டால் அது பரசிடமோல் அதிகளவு உள்ளெடுப்பின் காரணமாக வாந்தியெடுப்பு வயிற்று வலி அல்லது குமட்டல் போன்ற நிலைகள் ஏற்படின் உடனடியாக வைத்தியர் ஒருவரின் ஆலோசனையை கட்டாயம் நாட வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் வேறு மருந்து வகைகளை உள்ளெடுக்கும் போது அவற்றிலும் பரசிடமோல் சேர்மானம் காணப்படலாம். இச்சந்தேகத்தை குறித்த அளவுக்கு மேலான பரசிடமோல் உள்ளெடுப்பை தவிர்த்துக்கொள்ள வைத்தியர் அல்லது மருந்தக நிபுணர் ஒருவரின் ஆலோசனையை நாடுவது சிறந்ததாகும்.

பரசிடமோல் எவ்வேளையிலும் உள்ளெடுக்க உகந்ததாக காணப்பட்ட போதிலும் சிறந்த பெறுபேறுகளை பெற வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாக உள்ளெடுப்பதுடன் அதிகளவு நீரை பருகுவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நோயாளி ஹெபடைடிஸ் அல்லது ஈரல் தொடர்பான நோய்கள் சிறு நீரக கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது அதிகளவு மது அருந்துபவராக இருந்தால் பரசிடமோலை உள்ளெடுக்கும் முன்னர் வைத்தியர் ஒருவரின் ஆலொசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பரசிடமோல் வில்லைகள் எப்போதும் அறை வெப்பநிலையில் நேரடி சூரிய ஒளி வெளிச்சம் படாத இடத்தில் குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் பேணப்பட வேண்டும.

MMM


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All