(S.I.M.Akram-Casimi)
இலங்கையில் நடைபெற்று முடிந்த 23 வது பொதுநலவாய மாநாட்டின் போது அம்பாந்தோட்டையில் நடைபெற்ற பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் பல்வேறு அமைப்புகள் ஊடாக புத்தளத்தை பிரநிதித்துவப்படுத்தி புத்தளம் மண்ணிற்கும் புத்தளம் மக்களுக்கும் தேசிய, சர்வதேச மட்டங்களில் அடையாளத்தையும் பெருமையையும் பெற்றுத்தந்த சதாம் திக்ரான் சாஜஹான், அர்ஷத் அலி அமீனுல்லாஹ், முஸ்அப் ஷாதிர் மஹ்பூப் , ஷரீக்கா சலாஹுடீன் , இஷாம் மரிக்கார் ஆகியோருக்கும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தில்(FIFA) பொருளாளராக தெரிவாகியுள்ள ஜவ்சி ஜமால்டீன் , 2013 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புத்தளம் மணல்குன்று அல்-அஷ்ரக் மகா வித்தியாலய மாணவி பஸ்லா பிர்தவ்ஸ் ஆகியோருக்கும் இன்று புத்தளம் மக்களால் மாபெரும் கோலாகல வரவேற்பும் கௌரவிப்பும் அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பு வைபவம் புத்தளம் தபால் நிலைய சந்தியிலிருந்து பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமானது. இவ்வரவேற்பு ஊர்வலத்தை புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளரும் புத்தளம் நகர பிதாவுமான கௌரவ கே.ஏ.பாயிஸ் ஆரம்பித்துவைத்தார்.
முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஐ.எம்.இல்யாஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ், என்.டீ.எம்.தாஹிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
புத்தளம் மண்ணிற்கு பெருமை சேர்த்த இவ்விளைஞர்களுக்கு புத்தளம் மக்களால் பிரதான வீதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்னால் அதன் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஆர்.எம்.முஸம்மில் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.
இலங்கையின் முதலாவது அரபுக் கல்லூரியான அல்மத்ரஸதுல் காஸிமிய்யாவின் அதிபரும் புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவருமான அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், மதுரஸா ஆசிரியர்கள், மாணவர்கள் உற்சாக வரவேற்பளித்து பரிசில்களையும் வழங்கினர். இந்து மக்களின் சார்பில் ஆலய பிரதான நம்பிக்கையாளர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இவர்களை பாராட்டி கௌரவித்தனர்.
இறுதியாக புத்தளம் ஸாஹிரா தேசியப் பாடசாலையின் அஸ்வர் மண்டபத்தில் பிரதான வரவேற்பளிக்கப்பட்டதோடு பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
இவ்வேற்பாடுகளை புத்தளம் நகர பிதாவின் ஆலோசனைக்கிணங்க புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் தமிழ்ப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. இஸட்.ஏ.ஸன்ஹீர்(ஆசிரியர்) சிறப்பான முறையில் நெறிப்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
VAT
FOTOS:M.H.HASNI AHMED
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கலை, கலாச்சார, ஊடகத்துறை தொடர்பாக இந்த நகர சபை, கல்வி குழு, பெரிய பள்ளி, உட்பட பல அமைப்புக்கள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை என்பதினை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அந்த வகையில் புத்தளம் ஒன் லைனினை பாராட்ட வேண்டும்.
முடியுமாயின் ஒன் லைன் நிர்வாகம் இந்த விடயம் தொடர்பில் பெரிய பள்ளி, கல்வி குழு உட்பட ஏற்பாட்டுக்குழுவிடமிருந்து பதிலினை பெற்று பிரசுரித்தால் அனைவருக்கும் பதிலினை பார்த்துக்கொள்ளலாம்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள். தட்டிக்கொடுக்கும் செயல் புத்தளத்தில் அதிகரித்து செல்வது புத்தளத்தின் சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்.
இவ் தட்டிக்கொடுப்பு செயலில் கலை, கலாச்சார, ஊடகம், சமய தொடர்பான விடயங்களிலும் மாகாண, தேசிய மட்டங்களில் வெற்றிப்பெற்றும், விருதுகள் பெற்றும் உள்ளனர். அவர்களினை ஏற்பாட்டுக்குழு மறந்தது சற்று கவலைக்குரியது.
ஆரம்பத்தில் உள்ளுர் ஊடகங்களில் சர்வதேச மட்டத்தில் விருது பெற்றவர்களுக்கே வரவேற்பு என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ் மாற்றம் குறித்து ஏற்கனவே எமக்கு தெரிந்திருப்பின் நாம் மேலும் சிலரினை உள்ளடக்க ஆலோசனை வழங்கியிருக்கலாம்.
எனினும் குறித்த சாதனையாளர்களாவது புத்தளத்தில் கௌரவிக்கப்பட்டது பாரியதொரு விடயமே.
எதிர்காலத்திலாவது பெரிய பள்ளி, கல்வி குழு உள்ளிட்ட ஏற்பாட்டாளர்கள் நான் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களில் தொடர்பில் கவனம் செலுத்துவார்களா????ஃ
சிறந்த விடயங்கள் பாராட்டப்பட வேண்டும். தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இதுவே சிறந்த முன்னேற்றதிற்கு வழிவகுக்கும். எனவே நான் என் அறிவுக்குட்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டுகின்றேன்.
நல்லது செய்ய போய் ஏன் கெட்ட பெயர் என்று ஏற்பாட்டாளர்கள் நினைத்து விட வேண்டாம். நீங்கள் சிறந்ததொரு வேளையே செய்துள்ளீர்கள். மேலும் சிறப்பாக எதிர்காலங்களில் மேற்கொள்ள எனது பங்களிப்பும் கிடைக்கும். (இறுதி நேரத்தில் தீர்மானத்தினை மாற்றினால் சொறி.கொம் தான்.
நீங்கள் கூறுவது சரிதான். உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன்.
சர்வதேச மட்டத்தில் வெற்றி பெற்றவர்களினை மாத்திரம் பாராட்டியிருந்தால் இந் நிலை ஏற்பட்டிருக்காது.
ஏற்பாட்டு குழு இது தொடர்பில் சிந்திக்காமை கவலைக்குரிய விடயமே.
இளைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.ஒவ் ஒரு மாணவர் மாணவிகளுக்கு அல்லாஹ் அவர்களின் முயற்ச்சியின் பிரகாரம் கல்வியின் முன்னேற்றத்தை கொடுப்பான்.அந்த அடிப்படையில் அல்லாஹ் புத்தள மண்ணின் மைந்தர்களான மானவ, மாணவிகளை புகழாரம் சூட்டிஉல்லான். இன்ஷா அல்லாஹ் இவர்கள் இன்னும் பல துறைகளில் முன்னேற வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தி கொடுப்பானாக. உங்கள் அனைவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
வாழ்த்துகள் , மேலும் மேலும் வெற்றிகள் பெற வல்ல அல்லாஹுவின் அருள் கிடைக்க ப்ராதிக்கிரன்
வஸ்ஸலாம்
வாழ்த்துக்கள்
எல்லா புகழும் இறைவனுக்கு ………………….இன்னும் இன்னும் வானோங்கி வளர என் அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும் …
புத்தள மண்ணிற்கு பெருமையை பெற்றுத்தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
இவ் அனைத்து விடயங்களையும் அல்லாஹுத் த ஆலாவும் பொருந்திக் கொண்டு விட்டால்தான் உண்மையான வெற்றி,
வாழ்த்துக்கள்