தன்னலமற்ற சேவைக்காக தன்னை அர்ப்பணித்த “ஆசிரியத் திலகம்” ரசீன் மஹ்ரூப் – புத்தளம் மண்ணின் மைந்தர்
அ.) அறிமுகம்
ஆங்கில ஆட்சிக் காலப் பகுதியில் புத்தளத்தின் உடையாராக (கிராமத் தலைவர்) சேவைப்புரிந்த மர்ஹும் முஹம்மது இப்றாஹிம் என்பவரின் பேரராக, மண்ணின் மைந்தர்களின் மணம் கவர்ந்த நல்லாசான் ரசீன் மஹ்ரூப் அவர்கள் 1930.07.28 அன்று பிறந்தாகள். பெற்றோர் யூனூஸ் அப்துல் சமத் – முஹம்மது இப்றாஹிம் செய்னம்பு நாச்சியா ஆவர். உடன் பிறந்தோர் நான்கு சகோதரர்கள். இரண்டு சகோதரிகள்.
1959 ம் ஆண்டு என்பவரை திருமணம் செய்த அவர் பாத்திமா பஸ்லின் – முஹம்மது பவாஸ் ஆகிய இரு பிள்ளைகளுக்கு தந்தையாவார். இவரின் மருமகன் ஆலங்குடவைச் சேர்ந்தவரும் சுப்ரிண்டன் ஒப் சேவயருமான முஹம்மது ரமீஸ் என்பவராவார் மாணவ சமூகத்தின் மேலெழுச்சிக்காத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அன்னார் 1991.12.25 ம் திகதி இவ்வுலகில் இருந்து விடைபெற்றாரகள்.
ஆ) கல்வி மற்றும் விளையாட்டு
நான்கு வயது நிறைவுடன் புத்தளம் சென் என்றூஸ் பாடசாலையில் ஆங்கில போதனா மொழியில் கல்வியை ஆரம்பித்த இளவல் ரசீன் மஹ்ரூப் அவர்கள் ஐந்தாம் வகுப்பு நிறைவுடன் யாழ்ப்பாணம் சென் பெற்றிக்ஸ் கல்லூரியில் தொடர்ந்தார். விளையாட்டு மற்றும் கல்வி என்பவற்றில் தனது முத்திரையைப் பதித்த ரசீன் மஹ்ரூப் அவர்கள் கல்லூரியின் சிறந்த மாணவருககான கௌரவத்தையும் பாராட்டுப் பத்திரத்தையும் அன்றைய பாடசாலை அதிபராக கடமை புரிந்த பிதா லோங் அடிகள் அவர்களிடம் இருந்து பெற்றார்.
எச்.எஸ்.என்.சி பரீட்சையில் நான்கு பாடங்களிலும் முதலாம் பிரிவில் சித்தியடைந்த முதல் மாணவன் என்ற பெருமை எம் புத்தளம் மண்ணின் மைந்தர் ரசின் மஹ்ரூப் அவர்களையே சாரும்.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வியை தொடர அரிதான சந்தர்ப்பம் கிடைத்த போதும் நிறைவு செய்ய முடிய வில்லை. குறுகிய காலம் அகில இலங்ககை பல்கலைக் கழக உதைப் பந்தாட்ட கழகத்திலும் அங்கத்துவம் பெற்றதோடு இந்தியாவில் நடை பெற்ற உதைப்பந்தாட்ட வெற்றிக்காக அரசினால் கௌரவிக்கப்பட்டமையும் இவண் நினைவு கூறத்தக்கது. விளயாட்டிலும் தனது ஆழ்தடத்தை பதித்த அன்னார் தனது தனித்துவமான ஆற்றல்களினால் பழம் பெருமை வாய்ந்த புத்தளம் உதைப் பந்தாட்ட அமைப்பான “திறீஸ்டார்” கழகத்தில் உடன்பிறந்த சகோதரர்களான சலீம்,அஷ்ரப்,பாரூக்,சமத் இணைந்து மின்னும் நட்சத்திரமாக/ தலைவனாக (கப்டன்) சுமார் 2 தசாப்தங்கள் ஜொலித்தார்.
இ) ஆசிரியத் திலகம்
பலாலி ஆசிரியர் பயிற்சிக் க்ல்லூரியில் பயிற்றப்பட்ட முதலாம் தர ஆங்கில ஆசிரியரான ரசீன் மஹ்ரூப் அவர்கள் கொட்ராமுள்ள, கற்பிட்டி,இறுதியாக புத்தளம் சாஹிராக கல்லூரியில் சேவை புரிந்து 1990 ல் ஓய்வு பெற்றார்கள். அதிபர்களுக்கு பக்க பலமாக விளங்கிய அவர் இரு சந்தர்ப்பங்களில் சாஹிராக் கல்லூரியின் கடமை நிறைவேற்று அதிபராக பதவி வகித்து பாடசாலையை வழிநடாத்தினார்கள் காலப்பகுதிகள் : 1.) 14.07.1970 – 06.05. 1971 2) 05..11.1975 – 24.05. 1977
ஆசிரியர் சேவையில் தன்னை அர்ப்பணித்த அன்னாரிடம் 1980 களில் கற்றது நெஞ்சியிருக்கும் வரை நினைவை விட்டகலாது. நேரம் தவறாமை, அர்ப்பணம் மிக்க கற்பித்தல், கற்றல் கற்பித்தல் நுட்பம்,மாணவர் மீதான கவனக் குவிப்பு, பாடசாலை மெம்பாட்டுக்காக ஆற்றிய தன்னலமற்ற வகிபாகம் என்பவற்றை அக்கறையுள்ள மாணவர் சமூகமும் பயனாளிகளும் நன்றியுடன் நினைவு கூறவே செய்வர். என்பதில் ஐயமில்லை. புவியியல் . மற்றும் ஆங்கில, வரலாற்று உணர்வுகள் போன்றவற்றை கற்பித்த அன்னாரின் முன்மாதிரிகள் பாடசாலை முகாமைத்துவம் மற்றும் கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் என் போன்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் தற்போது அமைந்துள்ளன எனின் மிகையன்று.
ஈ) வாசிப்புப் பண்பாடு
“ வாசி தொடர்ந்து வாசி நீ வாசிக்கப்படுவாய் “ ,” வாசிப்புக்காக நேரம் ஒதுக்குங்கள் அது ஞானத்தின் திறவுகோல்” என்பதை உணர்வு பூர்வமாக உள்வாங்கிய ஆசிரியத்திலகம் ரசீன் மஹ்ரூப் சேர் அவர்களின் வாசிப்புப் பண்பாட்டின் அகழ்ச்சியும் நீட்சியும் பரந்துபட்டது. “பெற்ற அறிவைப் பேணி புது அறிவைப் பெறுபவனே நல்லாசிரியன்” என்ற ஞானி கன்பூஷியசின் சிந்தனையை வாழ்வில் பிரதிபலித்த அவர் வாசிப்பினூடாக தனது அறிவாளுமையைப் பொறிவிசையாக உருமாற்றுவதற்கும் வாசிப்பு அனுபவங்களை மாணவர்களிடமும் கற்றல் சமூகத்தினருடனும் உயிர்த்தொடர்பாடலை மேற்கொள்வதற்கும் தலைமுறை இடைவெளியினை சமப்படுத்துவதற்கும் ஊன்றுகோலாய் அமைந்தன எனலாம். புத்தகங்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் வாங்குவதற்கு மாதாந்தம் கணிசமான தொகையை முதலீடு செய்தார். புத்தளம் பொது நூல் நிலையம் மற்றும் பாடசாலை நூல் நிலையங்களில் இரவல் பெற்றும் வாசித்தார். புத்தளத்தில் மிகச்சிலரால் வாசிக்கப்படும் புகழ்பெற்ற இதழான “புரொண்ட்லைன்” வாசகராக விளங்கினார். அவருக்குச் சொந்தமான அவ்விதழ்களில் கணிசமான அளவு தற்போது என்னுடைய உடமையாக உள்ளன நன்றியுடன் பதிவு செய்வது அவ்சியமாகும். அவற்றை வாசிக்க எடுக்கும் தருணங்களில் எல்லாம் ரசீன் மஹ்ரூப் சேர் அவர்களின் நினைவு பிரவாகிப்பதை தவிர்க்க முடிவதில்லை.
உ ) நினைவின் தடம்
அ) பாடசாலை சமூகத்திற்கு அன்னார் ஆற்றிய மகத்தான பங்களிப்பினை நினைவுப் படுத்தும் நோக்கில் ‘அளவையியலும் விஞ்ஞானமும் கற்போர் சங்கம்” (LOGIC ASSOCIATION) அவரின் பெயரில் “ரசீன் மஹ்ரூப் நினைவு விருதினை” வழங்கி வந்தது. இவ்விருதானது விஞ்ஞான/ கணித பிரிவில் சிறந்த பெறுபேற்றினை பெற்றோருக்கு வழங்கப்படுவதாகும்
ஆ) ரசீன் மஹ்ரூப் சேர் வீடு அமைந்துள்ள வீதிக்கு ரசீன் மஹ்ரூப் ஒழுங்கை பெயரிட்டு புத்தளம் நகர சபை அவரின் நினைவின் தடமாக்கியுள்ளமை அவசியம் குறிப்பிடத்தக்க விடயமாகும்
யா அல்லாஹ்! ரசீன் சேர் அவர்களின் சேவைகளை அங்கீகரித்து நல்லடியார்களில் ஒருவராக ஆக்கியருள்வாயாக
VAT
Share the post "தன்னலமற்ற சேவைக்காக தன்னை அர்ப்பணித்த ரசீன் மஹ்ரூப் ஆசிரியர்"
வாசிப்பை உணர்வு பூர்வமாக உணர்ந்த நல்லாசிரியர்.
ரசீன் சேரின் வரலாற்றை கூறிய பைசூர் ரஹ்மான் ஆசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்.