புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் 1993 ஆம் ஆண்டு சாதராரண தரம் 1996 ஆம் ஆண்டு உயர்தரத்தில் கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்திருந்த இலவச மருத்துவ முகாம் மற்றும் வைத்திய ஆலோசனை சேவைகள் நிகழ்வொன்று 01.12.2013 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
மேற்படி மாணவர் அணியில் வைத்திய நிபுணர்களாகவுள்ள நான்கு பேரை முன்னிருத்தி இந்த முகாம் காலை 9.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மணல்குன்று, தம்பபன்னி பிரதேசங்களிலிருந்து சுமார் 350 பேர் வரை இம்முகாமினூடாக பயனடைந்துள்ளனர். இந்நிகழ்வின் போது சேவைகளைப் பெற்றுக் கொள்ள வருகை தந்த அனைத்து பயனாளிகளுக்கும் வீட்டுச் சுற்றாடல் சுகாதாரம், டெங்கு நோய் பரவல் தொடர்பான விழிப்புணர்வு அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முகாமில் மற்றுமொரு விஷேட அம்சமாக சாஹிரா கல்லூரியில் மேற்படி மாணவர் அணிக்கு கற்பித்த ஆசிரியர்கள் கணிசமான தொகையினர் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தியமையாகும். ஆசிரியர்கள் அனைவரும் தொடர்ந்தும் இவ்வாறான சமூகப்பணிகள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.
SAT
நல்ல பல சேவைகள் உங்களால் தொடர எனது நல் வாழ்த்துக்கள்.
என்னையும் கலந்து கொள்ளுமாறு வீடு வந்து அழைத்தார்கள். அவர்களது பண்பினை பெரிதும் மதிக்கிறேன். ஆனால் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த ஒரு (அரச ஊழியருக்கான ) வகுப்பு ஒன்றுக்கு செல்ல வேண்டி இருந்ததால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. பெரிதும் மனம் வருந்துகிறேன். அவர்களின் இந்த நற்பணி தொடர அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
படித்த கல்வியை கொண்டு பாமரமக்களுக்கு மருத்துவம் செய்த இவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் பரக்கத் செய்வானாக..
இவர்கள் காட்டிய முன்மாதிரி மூலம் ஏனையோரும் தாம் கற்ற கல்வியை நன்மை பயக்குமாறு உதவி செய்யும் விதத்தில் அமைத்து அல்லாஹ்வின் அருளை பெற முயற்சிப்போமாக..
கந்தசாமி, சேர், சரூக் சேர், நிசார் மௌலவி சேர்…சாஹிராவின் பொற்காலம்…
கண்ணீர் மல்குகின்றது அன்றைய சாஹிராவையும், இன்றைய சாஹிராவையும் ஒப்பிடும் போது…இவர்களைப் போன்ற செயல்வீரர்கள் உருவாகி இருக்கின்றனரா?