Puttalam Online
other-news

மீடியா என்ற நிஃமத்தும் இலங்கை முஸ்லிம் சமூகமும்..!

  • 10 December 2013
  • 1,975 views

 SAFRAN BIN SALEEM – AKURANA

அல்லாஹ் நமக்கு தந்துள்ள நிஃமத்துக்கள் ஏராளம் , அதை அளவிடவோ, மட்டிடவோ முடியாது.

imagesமிக முக்கியமான நிஃமத்துக்களில் ஒன்று தான் இன்று காணப்படுகின்ற மீடியாக்கள், தொலை தொடர்பு சாதனங்கள், சமூக வலை தளங்கள், இணையம், கணணி, தொலைபேசிகள் என்பன. ஏனென்னில் உதாரணமாக நவீன கை அடக்க தொலை பேசி அல்லது கணணி, இனையாத்தளங்களில் எங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் உட்பட பல நல்ல விடயங்களினை  சேமிக்கலாம், ஏனையோருடன் அந்த நல்ல விடயங்களை share செய்யலாம். எமக்கும் தேவையான நேரங்களில் அதனை பாவிக்கலாம். உலக நியதிகளில் ஒன்று தான் ஒரு விடத்தில் நலவு என்று ஒன்று இருக்கும் போது அதன் மறு பக்கத்தில் கெடுதி என்ற ஒன்றும் இருக்கின்றது.

அப்படிப்பட்ட ஒன்று தான் இன்றைய தொலை தொடர்பு சாதனங்களான கையடக்கத் தொலைபேசிகள், கணணி, இணையம், சமூக வலைத் தளங்கள் .

இது கத்தியை போன்றது. மனிதனை கொலை செய்தால் கொலையாளியாக மாறிரி விடுவோம். ஆகுமாகாபட்ட பிராணியை அறுத்தால் அது நலவாக அமையும். அது போலத்தான் இன்றைய தொலை தொடர்பு சாதங்களும். அது   பாவிக்கும் விததிதில் தான் அது ஹலால் ஆவதும் ஹராம் ஆவதும்.

இன்று நாளாந்தம் பல லட்சக் கணக்கான இணையத்தளங்கள் திறக்கப் படுகின்றது.

இலங்கை முஸ்ளிம்களாகிய நாம் புனித தீனை பரப்ப எத்தனை இணையத்தளங்களை திறந்துள்ளோம். எத்தனை பள்ளிகளுக்கு, மதரசாக்களுக்கு இணையத்தளங்கள் இருக்கின்றன. இருந்தும் எத்தனை தான் முழுமையாக, தொடராக இயங்குகின்றது.

எமது பிரச்சினைகள், ஆக்கங்கள், திறமைகள், எமது சிறார்களின் ஆக்கங்களை உலகுக்கு அறிமுகம் செய்யலாம். அதற்குரிய தளங்களாக இந்த சாதனங்களை பாவிக்கலாமே.

அந்த வகையில் பார்க்கும் போது இலங்கை முஸ்லிம்கள் இது வரை இந்த சாதனங்களை இஸ்லாமிய மயப்படுத்த வில்லை என்று தான் சொல்ல வேண்டும். இஸ்லாத்திற்ககாக இதை கொண்டு என்ன செய்யலாம் என்று இன்னும் சிந்திக்க வில்லை.

இன்று பொதுவாக புத்தககங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. அதில் இன்றைய இளைஞர் சமூகம் புத்தகங்களை நாடுவது மிகக் குறைவு. இன்று தமது பொழுது போக்கு நேரங்களை தொலை தொடர்பு சாதனங்களை பாவிப்பதிலே கழிக்கின்றனர்.

இன்று நாம் எம்மிடம் காணப்படும் கையடக்கத் தொலை பேசிகளையும், கணணிகளையும் மேலும் கீழும் தட்டிப் பார்கிறார்கள்.  இதில் இன்றைய இளைஞர்கள் நலவுக்கும் பாவிக்கறார்கள் கெடுதிக்கும் பாவிக்கிறார்கள்.

இந்த நிஃமத்துக்களை நல்ல விடயங்களுக்கும் பாவிப்போம் என்று ஒவ்வொரு முஸ்லிமும் சபதம் எடுப்போமாக.. இதன் மூலம் நல்ல விடயங்களினை  share பண்ணுவோம்.

எமது நாட்டில் வாழும் மாற்று மத சகோதரர்கள் கூறுகிறார்கள் “சிங்கள மொழியில் இஸ்லாத்தை பற்றி எழுதப்பட்டது மிகக் குறைவு” என்று கூறுகிறார்கள். வேறு வேறு மொழிகளில் ஏதோ இருக்கிறது. ஆனால் நாம் வாழக் கூடிய இந்த நாட்டில் சுமார் 70% ஆனவர்கள் பௌத்தர்கள், சிங்கள் மொழியை தாய் மொழியாய் கொண்டவர்கள். அவர்களுக்கு இஸ்லாத்தை சொல்லுவது இலங்கை முஸ்லிம்களாகிய எங்களது கடமை. இவ்வாறு அவர்களுக்கு இஸ்லாத்தை சொல்வதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது. என்ன ஆவணம் இருக்கிறது. குர்ஆனை சிங்கள மொழியில் மொழி பெயர்த்து இருக்கிறோம். அது மாத்திரம் போதாது. ஒவ்வொரு தலையங்கத்திலும் இஸ்லாமிய விடயங்களினை பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது என்று சிங்கள மொழியில் எழுத வேண்டும். அதை இந்த மக்களுக்கு கொடுப்பதற்ககுள்ள இன்று காணப்படும் இலகுவான வழி இணையத்தளங்களே. இவைகளை நல்ல விடயங்களுக்கு பாவிக்கலாம்.

பள்ளி வாயல் நிருவாகிகளும் சிந்திக்க வேண்டும், பள்ளிவாயல்களில் ஓதப்படும் குத்பாக்களை பதிவு செய்து தமது பள்ளி வாசல் இணையத்தளங்களில் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு சேமித்து வைப்பதால் அதனை எமது எதிர்கால சந்ததிகளுக்கும் வழங்கலாம். இதற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஓர் சிறந்த உதாரணமாக காணப் படுகின்றது. அல்லாஹ் அவர்களுக்கு அருள் பாளிப்பானாக.

நாம் எத்தனை விடயங்களையோ தவற விட்டு விட்டோம். எத்தனையோ ஆவணப் படுத்த வேண்டிய விடங்களை ஆவணப் படுத்தவில்லை, பதிவு செய்ய வேண்டியதை பதிவு செய்ய வில்லை. இன்னமும்  அந்த தவறினை விடக் கூடாது.

அத்துடன் ஆங்காகங்கே உள்ள மத்ரசாக்கள் அவ்வப் பகுதியில் இடம் பெரும் குத்பா பேருரைகளை ஆங்கில, சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டும்.

இருக்ககூடிய்ய நிஃமத்துக்களை, அதன் குறைகளை  பேசிப் பேசி இருக்காது, அதன் ஊடாக அதன் நலவுகளை எவ்வாறெல்லாம் அடையலாம் என சிந்திப்போம். இந்த விடயத்தில் எமது இன்றைய வாலிப்ர்கள் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும்.

எம்மிடம் காணப்படும் தொலை தொடர்பு சாதனங்களினை இஸ்லாமிய மயப்படுத்துவதோடு, அதற்கான வழிவகைகளை தேட வேண்டியது எம் ஒவ்வொருவருடைய கடமையாகும். மீடியா என்ற நிஃமத்தை அல்லாஹ்விற்கு பொருத்தமான வழியில் பாவிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக.

குறிப்பு: இந்த ஆக்கம் அஷ்-ஷேய்க் யூஸுப் முப்தி அவர்களால் கடந்த 28.11.2013 அன்று கொழும்பு 2 வேகந்த ஜூம்மா மஸ்ஜிதில் இடம் பெற்ற லுஹர் பயானின் ஒரு பகுதியை தழுவி எழுதப்பட்டுள்ளது.

VAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All