Puttalam Online
puttalam-news

புத்தளம் நகரமும் நுளம்புப் பெருக்கமும் – தொடர் 6

  • 12 December 2013
  • 1,026 views

[எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்  – புத்தளம்]

டெங்கு நோயை பரப்பும் நுளம்பு

டெங்கு நோயை பரப்பும் நுளம்பு அதன் வாழ்நாளில் 2 முதல் 4 தரங்கள் வரை முட்டைகளை இடும். இந் நுளம்பு ஒரு தரம் முட்டையிடும் போது 100 முதல் 200 வரை முட்டைகளை இடும். அதாவது ஆகக் குறைந்தது 200 முட்டைகளையும் ஆகக்கூடியது 800 முட்டைகளையும் இடும்.

இம் முட்டைகள் நீரற்ற நிலையிலும் ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அழியாது இருக்கும். இம் முட்டைகள் பிசின் போல் ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையது.

நுளம்பானது முட்டையிடும் போது முட்டைகள் நீர் தேங்கியுள்ள பாத்திரத்தில் நீர் மட்டத்திற்கு சிறிது மேலாக ஒட்டி விடும். பாத்திரத்தில் நீர் சேர்ந்ததும் முட்டைகள் வெடித்து குடம்பிகள் உருவாகும். ஏனைய நுளம்புகளை பொறுத்த வரையில் அதன் முட்டையினுள் கிருமிகள் உட்புகுவதில்லை.

ஆனால் டெங்கு நோயை பரப்பும் நுளம்பின் முட்டையினுள் டெங்கு ஒட்டுண்ணிகள் உட்புகுந்து ஏறக்குறைய ஒரு வருடங்கள் உறங்கு நிலையில் இருக்கும். முட்டைகள் நுளம்பாக மாறும் போது அதனுடன் நோய் காரணியான வைரசும் இருக்கும்.

நுளம்பின் வாழ்க்கை வட்டம்

Life_cycle-crop

நுளம்பாரின் வளர்ச்சிக்கட்டங்கள்

நுளம்பு முட்டையானது ஒன்று முதல் இரண்டு தினங்களில் குடம்பி நிலையை அடையும். அதன் பின்னர் ஐந்து முதல் ஏழு தினங்களில் கூட்டுப்புழு நிலையை அடையும். கூட்டுப்புழுவானது ஒன்று முதல் இரண்டு தினங்களில் நுளம்பாக மாறும். முதிர்ந்த நுளம்பு இரண்டு முதல் நான்கு வாரங்கள் உயிர் வாழும்.

ஈடிஸ் வகையைச் சேர்ந்த் ஈடிஸ் ஈஜிப்டை, ஈடிஸ் அல்பபிக்டஸ் என்பவற்றின் பெண் நுளம்புகள் தமது முட்டையிடும் காலத்தில் முட்டை முதிர்ச்சியடைவதற்காக தேவையான புரதத்தை பெற்றுக் கொள்ளும் முகமாக மனிதரையோ அல்லது வேறு யாதேனும் மிருகங்களையோ கடிக்கின்றன.

அதேநேரம் மனித இரத்தத்தில் உள்ள புரதத்தையே அவை அதிகமாக விரும்புகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எம்மைக் கடிக்கின்ற போது அவற்றிலுள்ள டெங்கு வைரஸ் எமது உடலில் உட்புகுந்து நோயை ஏற்படுத்துகின்றன.

இந் நுளம்பானது மிகவும் சுருசுறுப்பானதும், விரைவில் குழப்பம் விளைவிக்கக் கூடியதுமாகும். எனவேதான் ஒருவரை பல முறையோ அல்லது பலரையோ கடித்து இரத்தத்தை உறிச்சிக் குடிக்கிறது.

எமது உடலில் உட்புகும் வைரசானது 3 முதல் 14 நாட்களுக்குள் நோய் அறிகுறிகளை காண்பிக்கும். வைரஸ் உட்புகுந்த அனைவருக்கும் நோய் அறிகுறிகள் தென்படமாட்டாது.

நுளம்பு கடிக்கும் நேரம்

இந் நுளம்பானது காலை ஏழு மணி முதல் காலை பதினொரு மணி வரையும் பின் மாலை இரண்டு மணி முதல் மாலை ஆறு மணி வரையும் கடிக்கின்றது.

இந் நுளம்பானது வீட்டுச்சுற்றுப்புறத்திலே காணப்படுவதால் காலை நேரங்களில் பாடசாலைகளில் மாணவர்களையும், வேலைத்தளங்களில் தொழிலாளர்களையும் கடிப்பது இலகுவான அதேநேரம் மாலை வேலையில் பெண்கள், சிறுவர்களையும் கடிப்பது இலகுவாகின்றது.

இந் நுளம்பானது சுற்றுச்சூழலில் காணப்படுவதால் மருந்து தெளிப்பதன் மூலம் நுளம்புகளை அழிக்க முடியாது. ஆனால் முதிர்ந்த நுளம்புகளை புகை விசுறுவதன் மூலம் அழிக்கின்ற போதும் முட்டைகள் வருடத்திற்கு அழியாது இருப்பதனால் ஆகக் குறைந்தது வருடத்தில் இரு முறை மழை பெய்கின்ற போது மீண்டும் நுளம்புப் பெருக்கம் அதிகமாகும்.

நுளம்பானது நூறு மீற்றர் வீச்சிற்கு பறக்கும் சக்தி கொண்டது. எனவே நீண்ட காலத்திற்கு மருந்தற்ற, பாதுகாப்புப் பெற முடியாத இந் நோய் பரவாமலிருக்க நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதே ஒரே வழி ஆகும்.

நுளம்புபெருகும்இடங்கள்

v  உக்கிப்போகாத வீசியெறியும் பொருட்கள்

டயர், பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பொலித்தீன், றப்பர் பிடவை, சொபின் உறைகள், டின்கள், போத்தல்கள், விளையாட்டுப் பொருட்களின் பகுதிகள், பீங்கான் துண்டுகள், தயிர் சட்டி, ரெஜிபோம், மரப்பெட்டி

dENGE PLACE

நுளம்பு உற்பத்திக்கு உதவும் நீர் நிலை

சிரட்டை, இளநீர் கோம்பை, வில்வம் பழம்/விளாம்பழம் போன்றவற்றின் தோடுகள், சங்கு, சிப்பி, முட்டைக்கோது

v  மழை நீர் தேங்கக்கூடிய பொருட்கள்

அடைப்பட்டுள்ள நீர்ப்பீலி, அடைப்பட்டுள்ள காண், நீர் தேங்கக்கூடிய கொங்ரீட் கூரை

v  மூடி வைக்காத நீர் சேகரிக்கும் இடங்கள்/ பொருட்கள்

சீமெந்துத் தாங்கி, மேல் தாங்கி, பெரல், வாளி, கலன்கள், பீப்பா, சட்டிமுட்டிகள்

v  விஷேட வீட்டு உபகரணங்கள்

குளிர்சாதன பெட்டியில் உள்ள தட்டு, வீட்டு அழகுசாதன தட்டுக்கள்

v  வீட்டிலோ அல்லது வீட்டுக்கு வெளியிலோ நீர் தேங்கி நிற்கும் சிறிய இடம் அல்லது பொருள்.

எறும்புப் புற்று, செல்லபிராணிகளுக்கு நீர் மற்றும் ஆகாரம் வழங்கும் உபகரணங்கள்

v  அழகு சாதன பொருட்கள்/ பூங்கா அலங்கார பொருட்கள்

பறவைகள் நீரருந்தும், நீராடும் தாங்கி, சிறிய குட்டை, மீன்களற்ற தாங்கி, நீர் தேங்கக் கூடிய உருவச் சிலைகள், பூபோச்சியும் அதன் கீழுள்ள தட்டும், பூச்சாடி

v  வீட்டிலோ அல்லது வீட்டுக்கு வெளியிலோ நீர் தேங்கி நிற்கும்  மரங்கள் அல்லது மரப்பகுதிகள்.

இலைகளில் நீர் தேங்கும் அழகு மரங்கள், ஹபரல் மரம், மரப்பொந்துதுகள், வெட்டிய மூங்கில்கள், நீர் தேங்கும் மரக்கிளைகள்

டெங்கு நுளம்பு பெருந்தொகையானோரைத் தாக்குவது, வேகமாக நோய் தொற்று ஏற்படல் இதன் மூலம் மரணத்தை உண்டாக்கும் எனும் போது இது முக்கியமான பிரச்சனையாகின்றது. இந் நோய் நகர மயமாதல், நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்தல், போக்குவரத்து, தொற்று நோயாளர், நுளம்புகளும், முட்டைகளும் மற்றும் சமுதாய ஒத்துழைப்பு குறைவடைதல் போன்ற இன்னோரன்ன காரணங்களால் அதிகரிக்கின்றது.

[நுளம்பு வருவான்…]

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All