Puttalam Online
current

புத்தளம் ஒன்லைன் – புத்தளத்தின் அரிய பொக்கிஷம்

  • 16 February 2014
  • 1,481 views

Wasim Akram

[எம்.ஏ.பீ.வசீம் அக்ரம் – புத்தளம்]

அகவை மூன்றை பூர்த்தி செய்யும் புத்தளம் ஒன்லைன் புத்தளம் நகரரோடு முற்றுப்பெறாமல் புத்தளத்தை சூழ உள்ள கிராமங்கள், நகரங்கள் என்று புத்தளம் பிரதேசத்தையும் உள்வாங்கி தனது பணியை முன்னெடுத்து செல்கின்றதை நினைக்கையில் பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

விருந்தோம்பல் சமூகத்தின் குரலாக தனது பயணத்தை ஆரம்பித்து பல படிக்கட்டுகள் ஏறி, பல தடைகள் தாண்டி மக்களிடையே வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

புத்தளம் செய்திகளை தாண்டி தேசிய மட்ட செய்திகள், சர்வதேச செய்திகள் என தனது பார்வையை விசாலப்படுத்தி தூரநோக்கோடு செல்லும் புத்தளம் ஒன்லைன் “காணொளி”க்கு என்று ஒருபகுதியையும் “புகைப்படம்” இற்கு என்று ஒருப்பகுதியையும் உருவாக்கி தனது பங்களிப்பை அதிகரித்திருக்கிறது.

Logo.JPEGஅந்தவகையில் புத்தளம் ஒன்லைன் புத்தளம் மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொன்னாலும் மிகையில்லை. எத்தனை எத்தனையோ ஊடகங்கள் இருந்த போதும் புத்தளம் மக்களின் செய்திகள், மக்களின் உரிமைகள் வெளியிடங்களுக்கு, தேசிய சமூகத்துக்கு சென்றடைவதில் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது. அதனை தீர்க்கும் ஒரு முறையாக, புத்தளம் மக்களின் ஒரு குரலாக தன்னை அடையாளப்படுத்துவதில் முதன்மை பெறுகிறது.

புத்தளத்தின் வரலாற்றினை, புத்தளத்தின் கலாசாரத்தினை இன்னும் புத்தளத்தினை பிரதிநிதித்துவம் படுத்தும் விடயங்களை பகிரப்படுத்தும், பாதுகாக்கும் ஒரு நூதனசாலையாக தனது வகிபாகத்தை நிலைநிறுத்தி பயணிக்கும் புத்தளம் ஒன்லைன் அரிய பொக்கிஷமாக கருதப்படவேண்டிய, பாதுகாக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

கடல் கடந்து வாழும் புத்தளத்தின் மகன்கள் தங்கள் தாயோடு இணையும் உறவுப்பாலமாக இதனை பயன்படுத்தும் போது தாய்மண் வாசனை காற்றோடு கலக்கிறது. புத்தளம் ஒன்லைன் முகத்தோடு முகம் பார்க்கும்போது தாய்மண்ணோடு சேர்த்து தாய்நாட்டு தகவல்களையும் ஒருசேர தரிசிக்கும் பாக்கியமும் கிடைக்கிறது.

போட்டி நிறைந்த இச்சூழலில் புத்தளம் ஒன்லைன் தனித்துவம் பேணி புத்தளம் மக்களுக்காக என்று பயணிக்கும், புத்தளத்தின் மூலை முடுக்குகளில் நடைபெறும் சிறு விடயமானாலும் எடுத்துச்செல்லும், புத்தளம் பிரதேசத்திற்காக உழைக்கும் இத்தளம் புத்தளத்தின் ஒரு வளம் என்றே கூறவேண்டும்.

DSC08592-300x224“புத்தளத்திற்கென்று ஒருத்தளம்
புதியத்தோற்றத்தோடு
புதியசிந்தனையோடு
ஒருப்பயணம்..

பழைய ஞாபகங்கள்
பழைய நிழல்த்தடங்களென
வரலாற்றோடு
ஒருப்பயணம்..

தேசம்தாண்டி
எல்லைத்தாண்டி
மண் வாசனையோடு
ஒருப்பயணம்..

Puttalam-Online-Video-Launching-300x2252011-02-16ம் திகதி புத்தளம் ஒன்லைன் தோன்றி இன்று எம்மோடு சேர்ந்து சிரிக்கும் போது அச்சிரிப்பை தந்த பூக்களையும் நாம் மறந்துவிடலாகாது. தத்தமது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் தமது தனிப்பட்ட சந்தோஷம், துக்கம் என்பவற்றுக்கு மத்தியிலும் அல்லும் பகலும் என தமது சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்த, திரைக்கு பின்னால் பின்னணி பாடகர்களாக தங்கள் குரலால் ஒலித்தவர்கள். விருந்தோம்பும் சமூகத்தின் குரலை தேசியம், சர்வதேசம் அறிய செய்தவர்கள் இவர்களின் முயற்சிக்கு வல்ல நாயன் அருள்பாளிப்பானாக.

ஒரு வாசகன் இத்தளத்தை நாடி வரும்போது அவன் ஒரே பார்வையின் கீழாக தனது அறிவினை வளர்த்துக்கொள்வதில் பெரும் பாங்கினை வகிக்கிறது. சிறுவனாகட்டும், பெண்களாகட்டும் எல்லோரும் இதனூடாக பயணிக்கும் போது நாட்டின், சர்வதேசத்தின் அன்றாட தகவல்களோடு சேர்த்து அவர்களுக்கு தேவையான மழலைப்பகுதி, மாதர்பகுதி எனவும் தரிசித்து செல்கின்றனர்.

DSC00697-300x224அதேநேரம் உயர்கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு தமது கல்வி செயற்றிட்டத்திற்கு உசாத்துணையாக என்று உறுதியோடு பயணம் செய்கிறது. புத்தளத் தாய் பெற்றெடுத்த ஒரு முத்தாக மின்னிக்கொண்டிருக்கும் இத்தளத்தின் பயணத்தில் நாமும் ஒரு அங்கத்தவராக, அம்முத்தை ஜொலிக்க செய்யும் பங்காளியாக இணைவோம். சமூக மாற்றத்திற்கு வித்திடுவோம்.

“அகவை மூன்று
அடியோடு அடிவைத்து
அல்லும்பகலும் பாரா
பூத்துக்கொண்டிருக்கும்
மல்லிகையே
செவ்வந்தியே..

விருந்தோம்பல் சமூகத்தின்
உரிமைக்குரல் கொண்டு
உழைத்துக்கொண்டிருக்கும்
உன்னத தளமே
வெற்றிபெற
இத்தருணத்தில்
வாழ்த்துக்கள் குவியட்டும்
உனை வந்து சேரட்டும்..”

புத்தளம் ஒன்லைன் – மண் வாசனை – பொக்கிஷமாக..


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All