Puttalam Online
puttalam-news

பிக்கு தலைமறைவு, சிறுபான்மையினரின் நிலைமை என்ன?: அஸாத் சாலி

  • 20 February 2014
  • 703 views

பொதுபலசேனாவின் அச்சுறுத்தல் காரணமாக மஹிங்கனை விகாரையின் பிரதம தேரர் வடரேக விஜித தேரர் இன்னமும் தலைமறைவான நிலையிலேயே காணப்படுகிறார்.

இந்நிலையில் பௌத்த நாட்டின் பிக்கு ஒருவருக்கு இந்நிலைமையென்றால் நாட்டின் சிறுப்பான்மையினத்தவரின் நிலைமை என்னவாக இருக்கும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி கேள்வியெழுப்பினார்.

இதேவேளை ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்து இந்தியா நீதியை நிலைநாட்டியதுடன் ஜனநாயகத்தை பாதுகாத்திருக்கும் அதேவேளை ஜனநாயக சோசலிச நாடு என்று கூறும் இலங்கையில் ஜனநாயகமும் இல்லை  எனவும் அவர்  தேசிய  குற்றம் சுமத்தினார்.

அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மஹியங்கனை மகாவலி மகா விகாரையின் பிரதம தேரரும் பிரதேச சபை உறுப்பினருமான வடரேக விஜித தேரர் தலை மறைவாகியுள்ளார். பொதுபலசேனாவின் நடவடிக்கை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமே பொலிஸிலும் முறைப்பாடு செய்த போதும் பொதுபலசேனாவின் முறைப்பாடு என்பதினால் அம்முறைப்பாட்டினை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் எடுத்துரைத்த போது இது தொடர்பில் அமைச்சர் பொலிஸ் மா அதிபரிடம் கூறிய வேளையிலேயே குறித்த முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆகவே ஆளும் கட்சியினரை சார்ந்தவர் மாத்திரமின்றி இப்பௌத்த நாட்டின் ஒரு பௌத்த பிக்குவின் நிலைமை இவ்வாறு காணப்படுகின்றது. அத்தோடு பொதுபலசேனாவின் அச்சுறுத்தல்  காரணமாக குறித்த தேரரும்  இன்னமும் தலை மறைவாகியுள்ள நிலையில் அவர் பிரதேச சபைக்கு செல்லவுமில்லை. எனவே ஒரு பிக்குவுக்கே இவ்வாறான நிலைமையெனில் இந்நாட்டின் சிறுபான்மையினரின் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது.

அத்துடன் குழந்தைகளுக்கு பால் மாவினை கூட உரிய விலையில்  வழங்க முடியாத அரசாங்கம் பால்மா விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அவதியுறுகின்றனர். இருப்பினும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 21 கெண்டயினர் தம்மிடம் இருப்பதாக தம்பட்டம் அடிக்கின்றார்.

அது மாத்திரமின்றி 13 ஆம் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் உதய கம்பன்பில கடந்த மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக கடமையாற்றினார். அது போலவே இம்முறையும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய பின்பு தனது மனைவியை பிரத்தியேக செயலாளராக பதவியில் அமர்த்தவுள்ளார்.

இதேவேளை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரை இந்தியா விடுதலை செய்து நீதியை நிலைநாட்டி ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளது. ஆனால் ஜனநாயக சோசலிஷ நாடு என்று கூறும் இலங்கையில் ஜனநாயகமுமில்லை சோசலிஷமுமில்லாத நிலையே காணப்படுகிறது.

அத்துடன் ஜனாதிபதி மஹிந்தவை மின் கதிரையில் அமர்த்த போவதாக கூறி வாக்கு வங்கிகளை அதிகரிப்பது முற்றிலும் தவறானது.

எனவே பைத்தியக்காரர்களை கொண்ட அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றார்.

www.virakesari.lk
SAT


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All